திருநெல்வேலீல இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். எட்டேகால் இருக்கும். மணி ஐயர் ஓட்டல்ல ரூம் போட்டோம். ஓரளவுக்கு நல்லாவே இருந்துச்சு. காலைல இருந்து கசகசன்னு அலஞ்சதால குளியல் போட்டோம். அப்படியே கீழ வந்து ராச்சாப்பாட்டை முடிச்சோம். மணி ஐயர் ஓட்டல் நல்லாவே இருக்கும். தரமாவும் இருக்கும். மத்த சில ஓட்டல்களும் சுமாரா இருக்கும். அசோக் பவன்னு ஒரு ஓட்டல். அதுவும் சுமாரா இருக்கும். ஆனா பலகைல பேர் எழுதும் போது அசோக்குன்னு தமிழ்ல எழுதீட்டு இங்கிலீஷ்ல ASSHOK-ன்னு எழுதீருந்தாங்க. :-) அதையும் ஒரு படம் பிடிச்சிக்கிட்டோம். (அடுத்த நாள் காலைலதான்.)
ராச்சாப்பாடு முடிஞ்சதும் கோயிலச் சுத்தீட்டு கடலுக்குப் போனோம். திருச்செந்தூரின் கடலோரத்தின் கதையில சொல்லீருக்குற மாதிரி நேரா சின்னப்பத்தேவர் சுத்து மண்டபத்துல நொழைஞ்சி சுக்குத்தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு நடந்தோம். வழியில ரெண்டு ஆட்டுக்குட்டிங்க படுத்திருந்தது. கடக்காத்துக்கு ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டு. அந்தப் பாசக் காட்சி என்ன என்னவோ பண்ணிச்சி. அந்தப் பாசத்தைப் பிடிக்க முடியாது. ஆனா படத்தைப் பிடிக்கலாம். அதுனால ஒரு படம் எடுத்துக்கிட்டோம்.
நேரா கடல்ல போய் நின்னு விளையாண்டோம். விளையாட விளையாட நான் கடலோட ஒன்றிப் போயிட்டேன். Hallucination அப்படீன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களே...அந்த மாதிரி...கடல் நம்மோட உறவாடுற மாதிரி. உண்மையச் சொல்லப் போனா...என்னோட உள்ளத்த அமைதியாக்கி அதுல மெத்துன்னு ஒரு இன்பத்தக் கடல் கொண்டு வந்துச்சு. அது ஒரு ஒட்டுதல் தானே. நான் வேணுக்குன்னே கொஞ்சம் பின்னால் வந்து "இப்ப என்னத் தொடு பாக்கலாம்னு" சொன்னேன். அலையும் துள்ளிக்கிட்டு வந்து தொட்டுருச்சு. அடன்னு சொல்லிக்கிட்டு இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்து...இப்ப பாக்கலாம்னேன். பாருங்க...அல வந்துருச்சு.....மறுபடியும் பின்னால....அதுவும் வருது....இப்பிடியே நாங் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அலயும் வந்துட்டுது.
அங்க ரெண்டு நண்பர்கள் மண் வீடு கட்டிக்கிட்டிருந்தாங்க. நம்ம கூட வந்த பயகதான். இப்பக் கொஞ்சம் குரூரமா நெனச்சது மனம். இப்பத் தொடுன்னு கடல் கிட்ட சொன்னேன். அப்ப அந்த மண் வீடும் அழிஞ்சிரும்ல. ஆனா பாருங்க கடல் வரல. நான் கடைசியா நின்ன எடம் வரைக்கும் வந்துக்கிட்டிருக்கு. அதுவரைக்கும் முன்ன வந்த கடல் அதுக்கப்புறம் வரவேயில்லை. எனக்குன்னா ஒரு மாதிரி ஆயிருச்சு. இந்தப் பயக படக்குன்னு வீட்டக் கட்டி முடிக்கிறான்களான்னா...அதுவும் இல்லை. நடுவுல கூம்பு எழுப்பிச் சுத்துச் சொவர் வெச்சி ஒரு வாசல் வெச்சின்னு போய்க்கிட்டே இருக்காங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசங் கழிச்சி திருப்தியோட அடுத்த எடத்துக்குப் போயிட்டாங்க. எனக்கு இப்பக் கடல் மேலக் கோவம் இல்லாட்டியும் லேசான வருத்தம். இதுவரைக்கும் கூட விளையாண்டியே...இப்ப விளையாடலையேன்னு....அவனுக எந்திரிச்சிப் போனதுமே கடல் படக்குன்னு வந்து வீட்டத் தட்டி விட்டுட்டு என்னத் தொட்டிருச்சி. எனக்கு ஒரு நிமிசம் ஒரு சிலிர்ப்புச் சந்தோசம்.
இதெல்லாம் தற்குறிப்பேற்றல்னு இலக்கியம் படிச்சவங்க சொல்லீருவாங்க. மூடநம்பிக்கைன்னு பகுத்தறிவாளருங்க சொல்லீருவாங்க. ஆனா கடல் எனக்கு ஒரு பாடம் சொன்னதாகவே எனக்குத் தோணிச்சு. மொதல்ல கூப்பிட்டப்ப என்னோட விளையாடக் கூப்பிட்டேன். அதுனால அது வந்துச்சு. அடுத்தடுத்து அப்பிடித்தான். ஆனா அந்த வீட்ட இடிச்சிக்கிட்டு வந்து தொடுன்னு சொன்னது தப்பு. அதுவும் அவங்க கட்டிக்கிட்டு இருக்குறாங்க. அப்பவே வந்து ஒடச்சா அவங்க மனசு வருத்தப்படும். அதுனாலதான் தப்பா நெனைச்ச என்னக் கொஞ்ச நேரம் காக்க வெச்சிக்கிட்டு அவங்க முடிச்சிட்டுப் போனப்புறம் என்னத் தொட்டுச்சி. ஆகையால எதையும் நல்லதுக்கே நெனைக்கனும்னுங்குறதுதான் எனக்குச் சொன்ன பாடம்னு எடுத்துக்கிட்டேன். இத எவ்வளவு தூரம் நான் பின்பற்றுவேன்னு தெரியலை. ஆனா முடிஞ்ச வரைக்கும் பின்பற்றனும்.
மேலெல்லாம் மண்ணாக்கிட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சோம். இன்னொரு குளியல் போட்டுட்டுத் தூங்கினோம். காலைல எந்திரிச்சி மொட்டையெடுக்கனுமே. சீக்கிரமா எந்திரிச்சிக் கோயிலுக்குப் போகலாம்னு நெனச்சோம். ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேளைக்கு எந்திரிச்சி நேரமாயிருச்சி. சரீன்னு குளிக்காம பல்லு மட்டும் வெளக்கீட்டு மொட்டை எடுக்கக் கெளம்புனோம்.
தனியாப் போறப்ப மொட்டை எடுக்க நம்மளே சீட்டு வாங்கிக்கிரலாம். ஆனா ஆளம்போட போகும் போது கூட வந்தவங்க மொட்டச் சீட்டு வாங்குனாத்தான் ஒரு உரிமை. போன வாட்டி இப்பிடி ஊர் சுத்தப் போனப்போ ஒரு நண்பன் மொட்டை போட்டான் சுவாமிமலைல. அவனுக்குச் சீட்டு வாங்கினேன் நான். இந்த வாட்டி அவன் எனக்கு வாங்குனான்.
திருச்செந்தூர்ல கடக்கரைல நாழிக்கிணத்துக்குப் பக்கத்துல இருக்கு முடிக்காணிக்கை மண்டபம். எப்பவும் ஆளுங்களப் பாக்கலாம். சுத்துப் பக்கத்து ஊர்க்காரங்க மட்டுமில்லாம எல்லாப் பக்கத்துல இருந்தும் திருச்செந்தூர் வந்து முடிக்காணிக்கை செலுத்துவாங்க. முருகன் மேல அவ்வளவு பாசம்.
நாளைக்கு வளரப் போற முடியக் குடுக்குறதா பெரிய விஷயம்னு சொல்லலாம். ஆனால் அதில்லை அதோட உட்கருத்து. நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவு வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா! ஆணவம் கொறையுது பாத்தீங்களா! அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்.
நானும் காணிக்கை செலுத்த உதவுற ஒருத்தருக்கு முன்னாடி இருக்குற பலகைல உக்காந்தேன். சீட்டையும் அதோட குடுத்த அரப்பிளேடையும் கொடுத்தேன். அவரு பிளேடை செட்டுல மாட்டுனாரு. நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. ஏன் துணுக்கு? அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.
தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
ரசித்தது...
//..ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும்...//
ருசித்தது..
//..நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. ஏன் துணுக்கு? அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.//
:-)
ராகவன்,
வாழ்க்கையிலே நாம் கத்துக்கவேண்டியது இதுதான்னு அந்தக் கடல் அலை வந்து பாடம் சொல்லிட்டுப் போயிருச்சுப்பா.
எனக்கும், எங்க இவருக்கும் ஒரு மொட்டை பாக்கி இருக்கு. எப்பன்னு தெரியலை. அதுக்கு நேரம் வரும்போது தானா நடக்கும்.இல்லே?
//ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். //
அருமையானக் கருத்து
நம்ம கண்ணகி பதிவுல்ல உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வச்சுருக்கேன். உங்கப் பதில் வேணும்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்.
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் பொங்கும் தெய்வாங்கம்.
அருமையான ஊர்.
அருமையான கோவில்.
அருமையான கடல்.
அருமையான காற்று.
எல்லாவற்றிக்கும் மேலாக முருகனின் அருமையான தரிசனம்.
என் பள்ளிக்கூட நாட்களில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோம். நீங்க அத ஞாபகப் படுத்திட்டீங்க...
இன்னும் எழுதுங்க திருச்செந்தூரைப் பத்தி....
//இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். //
என்ன ராகாவன், ஆழ்வார் திருநகரி போகலையா?
பெரிய கொவில், நான் விஸ்வரூப தரிசனத்த ஒரு தடவை பார்த்துள்ளேன் ஒருதடவை திருநெல்வேலி போய் அப்பவே ஆழ்வார் திருநகரில விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. கோயிலின் புளிய மரம்ன்னு, அலுவல் காரணமாக 2001ல் போனது எல்லாம் ஏதோ நேற்று போனது போல் இருந்தது, ஞாபகத்தில் இன்றும் உள்ளது.
கடலாடிய அனுபவத்தை படிக்கும் போது கன்னியாகுமரியில் நான் விளையாடிய ஞாபகங்கள். ஞாபகத்தை கிளறியதற்க்கு மிக்க நன்றி.
இந்த வாரம் என்ன வே ஒரே தத்துவ மழையா பொழிஞ்சுருக்கீரு? செந்திலாண்டவன சந்தன காப்புல அந்த விளக்கு வெளிச்சத்துல பாக்கதுக்கு கண் கோடி வேணுமய்யா...
// நன்மனம் said...
ரசித்தது...
//..ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும்...//
ருசித்தது..
//..நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. ஏன் துணுக்கு? அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.//
:-) //
ரசித்து ருசித்திருக்கீங்க நன்மனம். திருச்செந்தூரு பக்கமெல்லாம் வந்திருக்கீங்களா?
// துளசி கோபால் said...
ராகவன்,
வாழ்க்கையிலே நாம் கத்துக்கவேண்டியது இதுதான்னு அந்தக் கடல் அலை வந்து பாடம் சொல்லிட்டுப் போயிருச்சுப்பா. //
உண்மைதான் டீச்சர். ரொம்ப நல்ல பாடம். எல்லாரும் படிக்க வேண்டிய பாடம்.
// எனக்கும், எங்க இவருக்கும் ஒரு மொட்டை பாக்கி இருக்கு. எப்பன்னு தெரியலை. அதுக்கு நேரம் வரும்போது தானா நடக்கும்.இல்லே? //
கண்டிப்பா நடக்கும். நடக்கனும்னு விரும்பினா, அதை முருகன் நிச்சயம் நடத்தி வைப்பான். என் மனசுலயும் ஒரு கனவு இருக்கு. அத அடுத்த பதிவுல சொல்றேன். அதையும் முருகன் நடத்தி வைப்பான்னு நம்புறேன்.
// Dev said...
//ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். //
அருமையானக் கருத்து
நம்ம கண்ணகி பதிவுல்ல உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வச்சுருக்கேன். உங்கப் பதில் வேணும். //
எனக்கு வேண்டுகோளா? இருங்க வந்து பாக்குறேன்.
// Dev said...
//ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். //
அருமையானக் கருத்து
நம்ம கண்ணகி பதிவுல்ல உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வச்சுருக்கேன். உங்கப் பதில் வேணும். //
எனக்கு வேண்டுகோளா? இருங்க வந்து பாக்குறேன்.
//...திருச்செந்தூரு பக்கமெல்லாம் வந்திருக்கீங்களா? //
2004லுல தூத்துக்குடில 20 நாள் இருந்தும் முருகர பாக்கற பாக்கியம் இல்லாம போனது வருத்தமா இருந்துது ஆனா 2005ல இதுக்காகவே ஒரு சந்தர்ப்பத்த ஏற்படுத்தி அந்த அழக ரசிக்க வெச்சிட்டார்.
"//நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவு வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா! ஆணவம் கொறையுது பாத்தீங்களா! அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்."//
அருமையான கருத்து!!பயணங்கள்
தொடர வாழ்த்துக்கள்!!.
அன்புடன்,
(துபாய்)ராஜா.
// சுதாகர் said...
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்.
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் பொங்கும் தெய்வாங்கம்.
அருமையான ஊர்.
அருமையான கோவில்.
அருமையான கடல்.
அருமையான காற்று.
எல்லாவற்றிக்கும் மேலாக முருகனின் அருமையான தரிசனம்.
என் பள்ளிக்கூட நாட்களில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோம். நீங்க அத ஞாபகப் படுத்திட்டீங்க...
இன்னும் எழுதுங்க திருச்செந்தூரைப் பத்தி.... //
சுதாகர், தெக்குல திருச்செந்தூர் கோயிலுக்குப் போகாதது யாரு? பிடிக்காதது யாருக்கு? இன்னைக்குக் கோயில் வியாபாரக் கூடமா ஆனாலும் ஊரையும் கோயிலையும் கடலையும் பிடிக்காதுன்னு ஒதுக்கவே முடியாது.
http://gragavan.blogspot.com/2005_09_01_gragavan_archive.html
இந்த லிங்குக்குப் போங்க. அங்க பன்னீர் இலையில்னு ஒரு பதிவு இருக்கும். அதுல இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லீருப்பேன்.
:-)
ராகவன்! நம்ம ஊருக்கு ஒரு சுத்து போய்ட்டு வந்த மாதிரி இருக்கு. நானும் அங்க தான் எப்பவுமே மொட்டை போடுறது. போன தடவை என் பொண்ணுக்கு மொட்டை போட்டுட்டு வந்தோம். இனி இப்போ போய்ட்டு மறுபடி ஒன்னு போடணும்.
ஆட்டுக்குட்டிய பார்த்தா சந்தோசமா தான் இருக்கு.
அப்படியே கட்டின மணல் வீட்டையும் ஒரு படம் எடுத்து போட்டிருக்கலாமே..
அருமையான பதிவு. மயிலாரே வந்த பிறகு நாமெல்லாம் யாரு ?
எங்க வீட்டுலையும் முதல் மொட்டை செந்திலாண்ட்டவனுக்குத்தான். போன வருசம் எம் பையனைக் கூட்டிக்கிட்டு போயி அடிச்சாச்சு. ரொம்ப அருமையான கோயில். ஆன துப்புறவு குறைஞ்சுகிட்டே வருது. அதான் வருத்தம்.
// சிவமுருகன் said...
//இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். //
என்ன ராகாவன், ஆழ்வார் திருநகரி போகலையா? //
இல்லை சிவமுருகன். ஆழ்வார்த்திருநகரியை இருட்டுல கடந்தோம். நேரமில்லாததால வழியில எறங்கலை.
// பெரிய கொவில், நான் விஸ்வரூப தரிசனத்த ஒரு தடவை பார்த்துள்ளேன் ஒருதடவை திருநெல்வேலி போய் அப்பவே ஆழ்வார் திருநகரில விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. கோயிலின் புளிய மரம்ன்னு, அலுவல் காரணமாக 2001ல் போனது எல்லாம் ஏதோ நேற்று போனது போல் இருந்தது, ஞாபகத்தில் இன்றும் உள்ளது. //
அதப்பத்தி வெவரமாச் சொல்லுங்களேன்.
// கடலாடிய அனுபவத்தை படிக்கும் போது கன்னியாகுமரியில் நான் விளையாடிய ஞாபகங்கள். ஞாபகத்தை கிளறியதற்க்கு மிக்க நன்றி. //
அட அதையுஞ் சொல்லுங்கய்யா...
// நெல்லைகிறுக்கன் said...
இந்த வாரம் என்ன வே ஒரே தத்துவ மழையா பொழிஞ்சுருக்கீரு? //
ஹி ஹி தத்துத தத்ததாத தத்தத்துததா
// செந்திலாண்டவன சந்தன காப்புல அந்த விளக்கு வெளிச்சத்துல பாக்கதுக்கு கண் கோடி வேணுமய்யா... //
உண்மைதான். ஒரு புன்னகை எப்பொழுதும் தவழும். வாழ்வை மலர வைக்கத்தான் கையில் மலரோடு நிற்கிறான்.
// நன்மனம் said...
//...திருச்செந்தூரு பக்கமெல்லாம் வந்திருக்கீங்களா? //
2004லுல தூத்துக்குடில 20 நாள் இருந்தும் முருகர பாக்கற பாக்கியம் இல்லாம போனது வருத்தமா இருந்துது ஆனா 2005ல இதுக்காகவே ஒரு சந்தர்ப்பத்த ஏற்படுத்தி அந்த அழக ரசிக்க வெச்சிட்டார். //
அதெல்லாஞ் சரியாச் செஞ்சிருவான்.
சரி. சில்லுக்கருப்பட்டி வாங்குனீங்களா? பனங்கெழங்கு?
// ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்."//
அருமையான கருத்து!!பயணங்கள்
தொடர வாழ்த்துக்கள்!!.
அன்புடன்,
(துபாய்)ராஜா. //
நன்றி (துபாய்)ராஜா. இன்னும் ரெண்டு பாகந்தான். சீக்கிரமா முடிக்கப் போறேன். இந்தப் பயணக் கட்டுரையால அடுத்து வேற எதுவும் எழுத இடவெளி கிடைக்க மாட்டேங்குது.
// குமரன் (Kumaran) said...
:-) //
என்ன சிரிப்பு? என்ன சிரிப்புங்குறேன்? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு? இங்க என்ன காமெடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க? சிரிக்கக் காரணம் என்னய்யா குமரா?
// paarvai said...
ராகவா!
திருச்செந்தூர் முடியிறக்கலா???; //
ஆமாம் யோகன். அந்தக் கண்கொள்ளாப் போட்டோ அடுத்த பதிவுல வருது. :-)
// நானும் 2004 ல் இறக்கினேன்; அதொரு கதை; இளமையிலே செந்தூரானின் வாசித்த விடயங்களால் ஒரு ஈடுபாடு உண்டு.2004 ல் ;இந்தியா வர ,தூதரகத்தில் விண்ணப்பம் கொடுக்கக் கொண்டு செல்லும் போது, வீட்டில் காலை வழிபாட்டில் போது. "செந்தூரானே விசாக்கிடத்தால் உன்னட்ட வாறன்". என்று வேண்டிவிட்டே சென்றேன். துண்டெடுத்து முறைவரும் வரை காத்திருந்த போது; சுவரில் தொங்கிய இந்திய வரைபடம் பார்த்த போது; தூக்கி வாரிப் போட்டது.சென்னை எங்கே?,, செந்தூரெங்கே!!, சென்னை சென்றடைந்தேன் .ஈழம்;லண்டனிலிருந்து வந்த உறவுகளுடன் மொத்தம் 19 பேர்;இரு 4 வயதுச் சிறுமிகள் உட்பட; யாத்திரை ஒழுங்கில் செந்தூர் சேர்க்க வேண்டுமென்றேன். முடியிறக்கல் பற்றிக் கூறினேன். எவருமே நம்பவில்லை.
சென்றோம்;இறக்கினேன். கடல் நீராடினேன்; காலைக்கடல் தாலாட்டியது. ஓம் எனும் நாதம் எங்கு ஒலிக்கும் ரம்மியமான காலைப்பொழுது, அப்படியே நின்று எதிரே இருக்கும் ஈழத்தில் மன்னார் மாதோட்ட "திருக்கேதீஸ்வரரை" நினைத்தேன்". மனிதப் பிறவியும் வேண்டுவரே! இந்த மாநிலத்தே" எனும் பாடலின் பொருள் புரிந்தேன்;இன்றும் என்னிடம் அவ்விடம் தந்த சந்தணத்தில் பாதி உண்டு." "செந்தூரான் என் வீட்டில் இருக்கிறான்" எனும் உணர்வைத் தந்து கொண்டு.
யோகன் -பாரிஸ் //
நாம் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவன் நம்மை நோக்கிப் பல அடிகள் எடுத்து வைப்பான். நான் நினைக்கவும் அதை அவன் நடத்தவும் கொண்ட ஆனந்த அனுபவங்களில் இதுவும் ஒன்றுதான். நல்ல தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் யோகன்.
// சிவா said...
ராகவன்! நம்ம ஊருக்கு ஒரு சுத்து போய்ட்டு வந்த மாதிரி இருக்கு. நானும் அங்க தான் எப்பவுமே மொட்டை போடுறது. போன தடவை என் பொண்ணுக்கு மொட்டை போட்டுட்டு வந்தோம். இனி இப்போ போய்ட்டு மறுபடி ஒன்னு போடணும். //
ஆகா...நடக்கட்டும் நடக்கட்டும். என்னோட சென்னை தங்கல் இன்னும் ஒரு மாசம் கூடும்னு நெனைக்கிறேன். அதுக்குள்ள இந்தியா வர்ரீரா?
// ஆட்டுக்குட்டிய பார்த்தா சந்தோசமா தான் இருக்கு. //
ஆமா. ரெண்டுமே எளங்குட்டிக. அப்பிடியே ஒட்டிக்கிட்டு என்ன சொகமா தூங்குதுங்க.
// அப்படியே கட்டின மணல் வீட்டையும் ஒரு படம் எடுத்து போட்டிருக்கலாமே.. //
இருட்டுன எங்கள எடுத்த போட்டோவே ஒழுங்கா வரலை. இதுல மணல் வீட்ட வேற எங்க எடுக்கிறது?
// மணியன் said...
அருமையான பதிவு. மயிலாரே வந்த பிறகு நாமெல்லாம் யாரு ? //
அதே அதே சரியாச் சொன்னீங்க மணியன்.
// இலவசக்கொத்தனார் said...
எங்க வீட்டுலையும் முதல் மொட்டை செந்திலாண்ட்டவனுக்குத்தான். போன வருசம் எம் பையனைக் கூட்டிக்கிட்டு போயி அடிச்சாச்சு. ரொம்ப அருமையான கோயில். ஆன துப்புறவு குறைஞ்சுகிட்டே வருது. அதான் வருத்தம். //
உண்மதான் கொத்ஸ். கோயிலுக்குள்ளயுஞ் சரி. வெளியவுஞ் சரி...குப்பைக கூடிக்கிட்டுத்தான் இருக்கு. கூட்டம் வேற. ஆனா இன்னமும் பனங்கெழங்கு கிடைக்குது. பத்து ரூவாய்க்கு அஞ்சுன்னு. மொச்சு மொச்சுன்னு ரெண்டு தின்னேன்.
//என்ன சிரிப்பு? என்ன சிரிப்புங்குறேன்? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு? இங்க என்ன காமெடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க? சிரிக்கக் காரணம் என்னய்யா குமரா?
//
இதற்கு பதில்
//ஒரு புன்னகை எப்பொழுதும் தவழும். வாழ்வை மலர வைக்கத்தான் கையில் மலரோடு நிற்கிறான்.
//
ஆட்டுக்குட்டிக செம க்யூட்.. மணல் வீட்டையும் அலையையும் வச்சு வாழ்க்கைத் தத்துவம் சொல்லி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. :)
மயிலார் வந்து என்ன சொன்னாரு? என்னாச்சு அடுத்து? இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே!!
// குமரன் (Kumaran) said...
//என்ன சிரிப்பு? என்ன சிரிப்புங்குறேன்? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு? இங்க என்ன காமெடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க? சிரிக்கக் காரணம் என்னய்யா குமரா?
//
இதற்கு பதில்
//ஒரு புன்னகை எப்பொழுதும் தவழும். வாழ்வை மலர வைக்கத்தான் கையில் மலரோடு நிற்கிறான்.
// //
ஏதோ பூடகமாச் சொல்றீங்கன்னு தெரியுது. ஆனா என்னான்னுதான் தெரியலை.
// பொன்ஸ் said...
ஆட்டுக்குட்டிக செம க்யூட்.. மணல் வீட்டையும் அலையையும் வச்சு வாழ்க்கைத் தத்துவம் சொல்லி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. :)//
ரொம்பவே அழகுல்ல. போட்டோவுல பாத்தாலே மெத்துன்னு எளசாத் தெரியுதே...நேருல எப்பிடி இருந்துச்சுங்குறீங்க.
// மயிலார் வந்து என்ன சொன்னாரு? என்னாச்சு அடுத்து? இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே!! //
திங்கக் கெழமை அந்தப் பதிவைப் போட்டுர்ரேன்.
ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்
சூரபத்மனின் ஆணவத்தை அடக்கிய இடம் அல்லவா திருச்செந்தூர்.ஆனால் அங்கு சென்றும் சிலருக்கு ஆணவம் அடங்க மறுக்கிறது.தி.ரா.ச
நான் பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு வருடம் போல நல்ல வேலை கிடைக்காமல் சுமரான வேலையில் தொடர்ந்தேன். அப்போது 1993ல் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பார்க்க வாய்த்தது. எங்கள் அப்பா பல வருடங்களாக 6நாளும் தண்ணீர் கூட குடிக்காமல் சஷ்டி விரதம் இருப்பார். சம்ஹாரத்துக்கு ஒரு நாள் முன்பே போய் சத்திரத்தில் தங்கிக்கொண்டோம். மறுநாள் காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களோடு நானும் அப்பாவும் அங்கப்பிரதட்சணம் செய்தோம். எனக்கு மனதில் இரண்டே நினைவுகள். ஒன்று நல்ல வேலை வெண்டும் என்பது மற்றொன்று ரகசியம். நல்ல வேலை கிடைத்தால் வேல் காணிக்கை தருவதாக வேண்டிக்கோண்டேன்.
வேலைக்கு திரும்பிய ஓரிரு நாட்களில், என்னோடு சிறிதளவே பளக்கமான நண்பர், என் வீட்டிற்கு வந்து சிங்கப்பூரில் இருக்கும் அவருக்குத்தெரிந்த நண்பர் ங்கே வேலைக்கு மேலும் ஆட்கள் எடுப்பதாக எழுதியக் கடிதத்தை கொண்டுவந்தார். அதில் கண்ட சென்னை தொலைபேசி ஏண்ணைக் கூப்பிட்டால் மேலும் விபரம் சொல்வார்கள். விசாரித்து வையுங்கள் நாம் இருவரும் போவோம் என்று சொன்னார்.
அந்த சிங்கை வேலை பின் அமெரிக்கா என்று நான் எதிர்பாராத வளர்ச்சியடைந்தேன். விடுமுறையில் ஊர்த்திரும்பி, முருகனுக்கு தங்க வேல் (கடைக்காரர் கூலி வாங்கவில்லை) காணிக்கை செலுத்தி மனதார தரிசித்துவிட்டு வந்தேன். அந்த முருகன் தரிசனத்தை மீண்டும் உங்கள் பதிவில் படித்து மகிழ்ச்சியடைந்தேன்.
என்னுடைய புதிய இடுகையில் உங்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது.
நன்றி,
குலவுசனப்பிரியன்
Post a Comment