"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே!!!!" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.
அப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.
திடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். "அங்க பாரு"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா "Creamz"னு எழுதீருந்தது. "ஐஸ்கிரீம் கடை"ன்னு சொன்னேன்.
"அதுதான் எனக்குத் தெரியுமே"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா? அன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா..."ஏய்! அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே! இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா! இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க." இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..
ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.
"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"
"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"
நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.
அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"
"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே
"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.
"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.
"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"
இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."
"சரி. அப்ப அது ஒன்னு" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.
எனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.
அதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.
பீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.
அத்தோட விட்டாரா? "பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்." அவசரப்படுத்துனாரு.
"ஹலோ! நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை." எனக்கும் கடுப்பு.
"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு." சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
நீங்க சாப்பிட்டதா சொன்னா கண்ணு பட்டுடும்னு மயிலார் மேல பழிய போட்றது சரி இல்ல:-))
அது சரி என்ன கழுகார் மாதிரி, மயிலார் கூட பயணம், எதாவது அவசியமான கிசுகிசு செய்தி வரப்போகுதா:))
சங்கரன் கோயில்ல, நம்ம வயத்தைப் பார்க்காம மத்தவங்களோட கட்டாயத்துக்கு வேற இடத்துல சாப்பிட மாட்டேன்னு கொள்கைப் பிடிப்போட இருந்த ராகவனுக்கு, ஒரு மயில்கிட்ட இத்தனை பயமா? ம்ம்ம்..
ஜி.ரா, உங்க மயிலைப் பத்தி ஒவ்வொரு முறை சொல்லும் போதும், சிவகாமியின் சபதத்துல ஒரு பாட்டு வரும்.. அது தான் நினைவு வருது.. இந்த சிச்சுவேஷனுக்கு,
"வன்மம் மனதில் கொண்டு, வஞ்சம் தீர்க்க நினைத்து
வழியில் உறங்கினாயோ, வாழி நீ மயிலே.."
தான் நினைவுக்கு வருது :)
பார்த்திபன் கனவில கூட மயில் வரும்னு சொல்றாங்க பொன்ஸ்..
மகரந்த்தில பதிவு போட்டு ரொம்ப நாளாச்சுன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணறதுக்கு முன்னாடி மயிலாருக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்து சமாளிச்சாச்சு. எங்களை எல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க?
அட வயிற்றுயெரிச்சலை கிளப்பாதீங்கப்பா. சூடானில் ஐஸ்கீரிம்(கிடைக்குமா) கேட்டா என்னமோ அவன் சொத்தையே எழுதி கேட்ட மாதிரி பாக்குறான், எல்லா பயலும்.........
நல்லா காட்டுறீங்கப்பா படம்...
//வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம்.//
அட.இது எங்கன இருக்கு...???
//அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.//
உண்மையச் சொல்லுங்க.மயிலார் சாக்கில ரெண்டையும் வெட்டினது யாரு???
உங்க மயிலார் கட்டுரை அருமை. அதைவிட ஐஸ்க்ரீம் படம் ரொம்ப அருமை. இப்பவே சாப்பிடனும் போல இருக்குது. :)
அப்ப நீங்க பனிப்பாலாடையை ருசிச்சீங்களா இல்லையா? :-)
யம்மாடி... பின்னூட்டம் போட வந்தா யானை தொரத்துது. ஓடிப் போயிடலாம். :-)
// நன்மனம் said...
நீங்க சாப்பிட்டதா சொன்னா கண்ணு பட்டுடும்னு மயிலார் மேல பழிய போட்றது சரி இல்ல:-)) //
நான் சொன்னா யார் நம்புறா? மயிலார் சொன்னா எல்லாரும் நம்புறாங்க. ம்ம்ம். வாங்கீட்டு வந்த வரம் அப்படி.
// அது சரி என்ன கழுகார் மாதிரி, மயிலார் கூட பயணம், எதாவது அவசியமான கிசுகிசு செய்தி வரப்போகுதா:)) //
மயிலார் பத்தித் தெரிஞ்சு கேக்குறீங்களோ..தெரியாமக் கேக்குறீங்களோ...மயிலார் மயிலார்தான்.
// பொன்ஸ் said...
சங்கரன் கோயில்ல, நம்ம வயத்தைப் பார்க்காம மத்தவங்களோட கட்டாயத்துக்கு வேற இடத்துல சாப்பிட மாட்டேன்னு கொள்கைப் பிடிப்போட இருந்த ராகவனுக்கு, ஒரு மயில்கிட்ட இத்தனை பயமா? ம்ம்ம்.. //
பயமெல்லாம் கெடையாதுங்க. ஒரு மரியாததான் ஹி ஹி
// ஜி.ரா, உங்க மயிலைப் பத்தி ஒவ்வொரு முறை சொல்லும் போதும், சிவகாமியின் சபதத்துல ஒரு பாட்டு வரும்.. அது தான் நினைவு வருது.. இந்த சிச்சுவேஷனுக்கு,
"வன்மம் மனதில் கொண்டு, வஞ்சம் தீர்க்க நினைத்து
வழியில் உறங்கினாயோ, வாழி நீ மயிலே.."
தான் நினைவுக்கு வருது :) //
வந்துருச்சா...வரனுமே. மயிலே மயிலே உன் தோகை எங்கே-ங்குற பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வருது.
// Kuppusamy Chellamuthu said...
பார்த்திபன் கனவில கூட மயில் வரும்னு சொல்றாங்க பொன்ஸ்.. //
அதக் கல்கிய விட கைப்புள்ள தெளிவாச் சொல்ல முடியும்னு நெனைக்கிறேன். ஹா ஹா ஹா
// Kuppusamy Chellamuthu said...
பார்த்திபன் கனவில கூட மயில் வரும்னு சொல்றாங்க பொன்ஸ்.. //
அதக் கல்கிய விட கைப்புள்ள தெளிவாச் சொல்ல முடியும்னு நெனைக்கிறேன். ஹா ஹா ஹா
// இலவசக்கொத்தனார் said...
மகரந்த்தில பதிவு போட்டு ரொம்ப நாளாச்சுன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணறதுக்கு முன்னாடி மயிலாருக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்து சமாளிச்சாச்சு. எங்களை எல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க? //
அதுக்கும் ஒரு வழி கிடைக்காமலா போயிரும் கொத்சு. மயிலாரே சரணம்னா வந்து றெக்கை போட மாட்டாரா?
// நாகை சிவா said...
அட வயிற்றுயெரிச்சலை கிளப்பாதீங்கப்பா. சூடானில் ஐஸ்கீரிம்(கிடைக்குமா) கேட்டா என்னமோ அவன் சொத்தையே எழுதி கேட்ட மாதிரி பாக்குறான், எல்லா பயலும்.........
நல்லா காட்டுறீங்கப்பா படம்... //
அதாவது சிவா, ஊர் பேருலயே சூடு இருக்குறதால...ஐஸ்கிரீம் எல்லாம் உருகீருதாம். அதான் அந்த வெல விக்குது. ரொம்ப ஆசையா இருந்தா, பால நல்லா மிக்சியில போட்டு அடிச்சி, அதுல பழ வகைகளப் போட்டு ஜீனியப் போட்டு அடிச்சி, கப்புல ஊத்தி பிரீசர்ல வெச்சிருந்து சாப்பிடுங்க.
// சுதர்சன்.கோபால் said...
//வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம்.//
அட.இது எங்கன இருக்கு...??? //
சுதர்சன், ஸ்டெர்லிங் ரோடு ஜங்சன்ல நின்னுக்கிட்டு அப்படியே மேல பாருங்க...பன்றிமலைச் சித்தர்னு பெரிய போர்டு போட்டிருக்கும். ஆனா அவர் சமாதியாகி கொள்ள வருசம் இருக்கும்னு நெனைக்கிறேன்.
// //அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.//
உண்மையச் சொல்லுங்க.மயிலார் சாக்கில ரெண்டையும் வெட்டினது யாரு??? //
மயிலாரையாச் சந்தேகப்படுறீங்க? இது மயிலாருக்குத் தெரிஞ்சா என்னாகும்னு தெரியும்தானே?
// அனுசுயா said...
உங்க மயிலார் கட்டுரை அருமை. அதைவிட ஐஸ்க்ரீம் படம் ரொம்ப அருமை. இப்பவே சாப்பிடனும் போல இருக்குது. :) //
விடாதிங்க அனுசுயா, ஒடனே கெளம்பிப் போயி baskin and robbins, arun, kwality...எதையாவது வாங்கி உள்ள தள்ளுங்க. மும்பைல பூவைல ஒரு ஐஸ்கிரீம் கடைல தேங்கா ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். அடடா!
// நாகையன் said...
என்ன ஜீரா, எதாவது தொடராக எழுத உத்தேசமா?
கதை எழுதி ரொம்ப நாளாச்சே? சீக்கிரமே ஒரு கதை எழுதிப் போடுங்க. //
கதைதானே....வருது...வருது...விரைவில்...வித்தியாசமான வடிவில்...புதுமையாக...வருகிறதுன்னு சொல்ல ஆசைதான். முருகன் மனசு வெச்சதும் நல்ல கதை வரும். கண்டிப்பா வரும்.
// குமரன் (Kumaran) said...
அப்ப நீங்க பனிப்பாலாடையை ருசிச்சீங்களா இல்லையா? :-) //
மயிலார் ருசித்தார்.
// குமரன் (Kumaran) said...
யம்மாடி... பின்னூட்டம் போட வந்தா யானை தொரத்துது. ஓடிப் போயிடலாம். :-) //
ஓடாதீங்க குமரன். ஒருவேளை அப்புனமதனிடை இபமாகக் குமரனுக்கு வள்ளியைத் துரத்துதோ என்னவோ!
//யம்மாடி... பின்னூட்டம் போட வந்தா யானை தொரத்துது. ஓடிப் போயிடலாம். :-)//
//
ஓடாதீங்க குமரன். ஒருவேளை அப்புனமதனிடை இபமாகக் குமரனுக்கு வள்ளியைத் துரத்துதோ என்னவோ! //
'குமரன்' கேட்டுக்கிட்டதாலதான் 'யானை' வந்ததுன்னு கதை சொல்றாங்க;
நீங்க என்னன்னா குமரனையே யானை தொரத்துதுன்னு புதுக்கதை விடறீங்க!
அவங்க என்னன்னா, 'மயில்' நினைப்புல இருக்கேன்றாங்க!
:))
ஐஸ்கிரீம் படம் ஜோர். ஆனாக் கொஞ்சமா இருக்காப்புலே இருக்கே!
மயிலாருக்குப் பசி அடங்கி இருக்குமான்னு கவலையா இருக்கேப்பா.
// 'குமரன்' கேட்டுக்கிட்டதாலதான் 'யானை' வந்ததுன்னு கதை சொல்றாங்க;
நீங்க என்னன்னா குமரனையே யானை தொரத்துதுன்னு புதுக்கதை விடறீங்க!
அவங்க என்னன்னா, 'மயில்' நினைப்புல இருக்கேன்றாங்க!
:)) //
SK, அந்தக் கதைய விடுறதும் குமரந்தான். நானில்லை. மயில் நெனப்புல குமரனா? அது புள்ளி மயிலா? வெள்ளி மயிலா? வள்ளி மயிலா? அல்லது மயிலா? மையலா?
// துளசி கோபால் said...
ஐஸ்கிரீம் படம் ஜோர். ஆனாக் கொஞ்சமா இருக்காப்புலே இருக்கே!
மயிலாருக்குப் பசி அடங்கி இருக்குமான்னு கவலையா இருக்கேப்பா. //
அதக் கேக்காதீங்க டீச்சர். ஐஸ்கிரீமோட எங்க முடிஞ்சது? ரிலையன்ஸ் வெப் வேர்ல்டுல போய் cold coffee, coffee world போயி straberry frappe..mmm..இதெல்லாம் சொல்லக் கூடாதுன்னுதான் பாக்குறேன். மனசு ஆறலை. அதான் சொல்றேன்.
அட என்ன ராகவன் சாப்பிட முடியாத சமாச்சாரத்தையெல்லாம் படமா அதுவும் கலர் கலரா போட்டு வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க?
ஹூம்.. நானும் திரும்பிப் பார்க்கிறேன். ஒங்க வயசுல பாம்பேய்ல அடிச்ச கொட்டத்த..
ஹூம்..அது ஒரு கனாக்காலம்..
மயிலாரின் தோகை = சூடிதாரின் துப்பட்டா அப்டின்னு ஒரு அசரீரி கேக்குதே. அது சரியா?
உங்க பதிவைப்பார்த்தவுடன் கடைசியா நாம எப்ப ஐசு கிரீமு சாப்பிட்டோம்னும் ஞியாபகம் வந்து மண்டைய உடைச்சிக்கிட்டதுல....
ஆங்....
மும்பை ஜுகு பீச்சில் தனியா (உண்மைதாங்க) திரிஞ்சிக்கிட்டிருந்தப்போ 'கோலா' என்ற திருநாமம் உடைய , சர்பத் + ஐஸ் + குச்சி கலந்த நச்சி ஐஸ் ஞியாபகம் வந்து ஜொள்ளை கிளப்பிடுச்சி..
// tbr.joseph said...
அட என்ன ராகவன் சாப்பிட முடியாத சமாச்சாரத்தையெல்லாம் படமா அதுவும் கலர் கலரா போட்டு வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க? //
என்ன சார் இது...ஏதோ ரெண்டு படம் போட்டிருக்கேன். அவ்வளவுதானே. இன்னும் நெறைய இருக்கு.
// ஹூம்.. நானும் திரும்பிப் பார்க்கிறேன். ஒங்க வயசுல பாம்பேய்ல அடிச்ச கொட்டத்த..
ஹூம்..அது ஒரு கனாக்காலம்.. //
அப்ப இந்தப் பதிவாவது என்னோட வயசுக்கேத்த மாதிரி ஜில்லுன்னு இருக்கா?
// Dharumi said...
மயிலாரின் தோகை = சூடிதாரின் துப்பட்டா அப்டின்னு ஒரு அசரீரி கேக்குதே. அது சரியா? //
தருமி சார், தோகை ஆண்மயிலுக்குத்தானே இருக்கும்? அப்படியிருக்க துப்பட்டான்னா எப்படி? தோகையுள்ள பெண்மயில் உண்டா என்ன?
// செந்தழல் ரவி said...
உங்க பதிவைப்பார்த்தவுடன் கடைசியா நாம எப்ப ஐசு கிரீமு சாப்பிட்டோம்னும் ஞியாபகம் வந்து மண்டைய உடைச்சிக்கிட்டதுல.... //
வேண்டாம்...ஒடைக்காதீங்க..ஒடைக்காதீங்க.....
// ஆங்....
மும்பை ஜுகு பீச்சில் தனியா (உண்மைதாங்க) திரிஞ்சிக்கிட்டிருந்தப்போ 'கோலா' என்ற திருநாமம் உடைய , சர்பத் + ஐஸ் + குச்சி கலந்த நச்சி ஐஸ் ஞியாபகம் வந்து ஜொள்ளை கிளப்பிடுச்சி.. //
அடடே! அதுவா......அதுவும் நல்லாத்தான் இருக்கும். ஜுவ்வுன்னு வாயில வெச்சி உறிஞ்சா இனிப்பாஆஆஆஆஆ இருக்கும். கலர் கலரா கெடைக்கும். அதான நீங்க சொல்றது?
//அதக் கல்கிய விட கைப்புள்ள தெளிவாச் சொல்ல முடியும்னு நெனைக்கிறேன்// :-)
அதேதாங்க...சர்பத் தீந்துபோச்சுன்னா கூச்சப்படாம கேட்டு வாங்கி உறியலாம்...கொஞ்சம் உப்புசுவையோட நல்லா நமீதாமாதிரி இருக்கும்...
Post a Comment