Friday, June 30, 2006

தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை

முன்பு எப்பொழுதாவது நடக்கும். இப்பொழுது அடிக்கடி நடக்கிறது. அதுவும் இலங்கையில் உள்நாட்டுச் சூழ்நிலை கவலைக்கிடமாக இருக்கும் பொழுது.

இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற அக்கறையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இலங்கை அரசின் கைப்பாவைகள் இப்பொழுது தமிழக மீனவர்களையும் குறிவைத்து விட்டார்கள். இலங்கைக் கடற்படையைத்தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு நாளும் மீனவர்கள் சுடப்பட்டார்கள். ஆனால் நடவடிக்கை என்று ஒன்றும் இருக்காது. உடனே சர்வதேச எல்லை கில்லை என்று நியாயம் பேசுவதற்குப் படை திரண்டு வருவார்கள். ஆனால் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இலங்கையில் நமது தமிழ்ச் சகோதரர்களைக் கைகழுவியாகி விட்டது. தமிழகக் கடைக்கோடித் தமிழனையும் கைகழுவ என்ன காரணத்திற்குக் காத்திருக்கிறார்களோ!

என்னவோ வயிற்றெரிச்சல். :-( பனை மரத்துல தேள் கொட்டினாலும் தென்னை மரத்துல நெறி கட்டுதய்யா.

7 comments:

Jeyapalan said...

சர்வதேச எல்லையில்
சர்வதேசச் சட்டங்கள் இல்லையா?
எல்லையைத் தாண்டினால்
சுடப்பட வேண்டுமா?
இடித்துச் சொல்ல
இந்தியாவுக்குப் பயமா?
கனக்க எழுதினால்,
ஈழ ஆதரவு தேடுகிறேன்
என்பார்கள் இந்தியர்கள்.
ஆனால் நீங்களே
யோசித்துப் பாருங்கள்.

SnackDragon said...

ராகவன் பதிவுக்கு நன்றி. உணர்ப்பூர்வமான பதிவுகள் இடுவதையும் விட சில விவரமான கட்டுரைகளை நீங்கள் வாசிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமும் பரிந்துரையும் (மட்டும்).

ENNAR said...

அவர்களது எல்லலையில் ஏன் நம்மவர்கள் மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள்.
உள் நாட்டு சண்டை நடக்கும் போது அந்தப் பக்கம் போகாமல் இருக்க வேண்டியது தானே டீசல் விடுதலைப்புலிகளுக்கு கொண்டு போதாக நினைத்து அப்படை நம்மவர்களை போட்டுத்தள்ளுகிரார்களா?
என்னமோ போங்க என்னமோ நடக்குது மர்மமாயிருக்கு
ஒன்னுமே தெரியல

வெற்றி said...

இராகவன்,
கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாலும், அவர்களுக்கென பலமான அரசியல் பின்னணி இல்லாததும், அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதும், அரசுகள் பாராமுகமாக இருபதற்கு ஓர் காரணம் என நான் நினைக்கிறேன். அவர்களும் இனித் தங்களுக்கென அரசியல்கட்சி உருவாக்கி வீதியில் இறங்கிப் போராடினால்தான் நியாயம் கிடைக்குமோ என்னவோ?

ஜோ/Joe said...

//கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாலும், அவர்களுக்கென பலமான அரசியல் பின்னணி இல்லாததும், அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதும், அரசுகள் பாராமுகமாக இருபதற்கு ஓர் காரணம் என நான் நினைக்கிறேன். அவர்களும் இனித் தங்களுக்கென அரசியல்கட்சி உருவாக்கி வீதியில் இறங்கிப் போராடினால்தான் நியாயம் கிடைக்குமோ என்னவோ?//

வெற்றி,
அருமையாக சொன்னீர்கள் .இதுவே என் கருத்தும்.

ROSAVASANTH said...

இந்த பதிவின் சுட்டியை இது குறித்த விவாதத்திற்கான என் பதிவு ஒன்றில் சேர்த்திருக்கிறேன். நன்றி.

http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_12.html

Muthu said...

ராகவன்,

சுருக்கமா முடிச்சிட்டீங்க.. அடுத்தவருடமாவது இலங்கைக்கு என்ற உங்க பதிவை மீள்பதிவு பண்ணுங்க...