Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை

உருளைக் கிழங்கு போண்டாவை சாஸில் தோய்த்து மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் அந்த சேட்டுப் பெண்மணி. அவுக் அவுக்கென்று வாய் நிறைய அமுக்கிக் கொண்டிருந்தான் அந்த உருண்டைப் பையன். பகலில் ரயிலில் போகின்றவர்கள் பொழுது போக்குவது இப்படி வாங்கித் தின்றுதான். திறந்த கதவருகில் நின்று கொண்டிருந்த சசிக்கு இந்தக் காட்சி புன்னகையை வரவழைத்தது.

"ஹே! போண்டாவாலா! இதர் ஆவோ!" வாங்கிய போண்டா பத்தாமல் இன்னும் வாங்கக் கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. "போண்டா தின்னும் போண்டா" கேணக் கவிதை படித்தது சசியின் மனம்.

இப்படித்தான் சசியின் அம்மாவும் ஊட்டி ஊட்டி வளர்த்தார். சசிக்கு உளுந்த வடை என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்ததை விடக் கடையில் வாங்கினால் இன்னமும் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை பள்ளிக்கூடத்திலிருந்து வருகையில் வாழையிலையில் கட்டித் தெருமுக்கு டீக்கடை வடை காத்திருக்கும். மிளகாயும் புளியும் உப்பும் மட்டும் போட்டரைத்த ரொம்பவும் உறைத்த சண்டாளச் சட்டியினோடு தொட்டுத் தருவாள் அம்மா.

அந்த அம்மா ஒரு நாள் சொன்னாள். "எனக்கு சசிகுமார்னு மகனே பொறக்கலைன்னு நெனச்சுக்கிறேன். எனக்குப் பொறந்தது ஒரு மகதான். ஒனக்கும் எனக்கும் தொடர்பே கெடையாது. நீ வெளியில போடா! நான் செத்தாக் கூட இந்தப் பக்கம் வரக்கூடாது!" நினைக்கையிலேயே சசியின் முகம் இறுகியது. அழுக விரும்பாமல் அந்த சேட்டம்மாவின் மீது பார்வை திரும்பியது.

"தேக்கோ தேக்கோ....பூரா டிரஸ் மே....." மகனின் டிரஸ்சில் விழுந்த சாஸைத் துடைத்து விட்டார் சேட்டப்பா. நீளமான வெள்ளைத் துண்டு சுருண்டு கிடந்தது. பெயரளவில்தான் அது வெள்ளைத் துண்டு. அழுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. துவைக்கவோ மாட்டார்களோ! வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே! அந்த அழுக்குத் துண்டை வைத்து மகனின் சட்டையைத் துடைத்து விட்டார். "பானி தேதோ" மனைவியிடம் மகனுக்குத் தண்ணீர் குடுக்கச் சொன்னார்.

வெளியே போனால் சசிக்கு அப்பா கண்டிப்பாக பழரசம் வாங்கித் தருவார். திருநெல்வேலி ஜங்சனில் ஒரு பழரசக் கடை உண்டு. பழங்களையெல்லாம் ஒன்றாகக் கலக்கி அதோடு கலக்க வேண்டியதைக் கலந்து செக்கச் செவேலென்று பழரசம் கண்ணாடித் தம்ளர்களில் கிடைக்கும். வெயிலுக்குக் குடிக்கக் குளுகுளுவென்றும் இனிப்பாகவும் இருக்கும். குடித்த பிறகு வாயோரத்தில் பழரசம் ஒட்டியிருக்கும். அப்பாதான் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பை எடுத்து வாய் துடைத்து விடுவார். ஏனென்றால் வீட்டில் தெரிந்தால் பழரசம் வாங்கிக் கொடுத்ததற்குத் திட்டு விழுகுமே. பழரசம் வாங்கிக் கொடுத்தால் வீட்டில் சொல்லக் கூடாது என்று அப்பாவுக்கும் மகனுக்கும் எழுதாத ஒப்பந்தம். ஜங்சனில் குடித்த பழரசத்தின் இனிப்பு சமயநல்லூர் வரை இருக்குமாதலாம் சசியும் ஒப்பந்தத்தில் மானசீக கையெழுத்திட்டிருந்தான்.

அந்த அப்பா ஒரு நாள் சொன்னார். "சீச்சீ! மானத்த வாங்கீட்டியேல...ஊரு மூஞ்சீல முழிக்க முடியுமால.....கங்காணாமப் போயிரு.....இருந்து எங்க பேரையும் கெடுக்காத. ஊராரு மூஞ்சீல நாங்களாவது முழிக்கனும். சொத்துல சல்லிக்காசு கெடையாது ஒனக்கு. அப்படித்தாம்ல உயிலும் எழுதப் போறேன். பாசங் கீசம்னு இங்குட்டு வந்துறாத. அப்புறம் அந்தப் பாசத்தக் காட்ட நாங்க இருக்க மாட்டோம்."

லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. ஒரிசாக் காடுகள் மிக அடர்த்தியாக வெளியே தெரிந்தன. ஏதோ ஒரு பட்டிக்காடு அது. ஓலைக்குடிசை வேய்ந்த வீடுகள் நிறைய இருந்தன. வெளியே புழுதியில் பிள்ளைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூடி விளையாடியவள்தாள் சசியின் தங்கை ராஜேஸ்வரி. அம்மாவும் அப்பாவும் திட்டிய அந்த நாளில் அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடியவள்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை. எப்படி இருக்கிறாளோ! கல்யாணம் ஆயிருக்குமோ! குழந்தைகளும் ஆகியிருக்குமோ! பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது!

பக்கத்தில் நின்றிருந்த ஏஞ்சல் இடித்தாள். "ஏடி! சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா!" கிக்கிக்கெனச் சிரித்தார்கள் ஏஞ்சலும் சசிகலாவும். காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.

அன்புடன்,
கோ.இராகவன்

62 comments:

said...

உம்ம்ம் யாரோட இன்ஸ்பிரேஷன்னு புரிஞ்சிடுச்சு :-)

said...

அருமை... முதல்ல படிச்சவுடனே புரியல...புரிஞ்சதுக்கு அப்பறம் திரும்ப படிச்சேன்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

இராகவன்,
கதை புரியவில்லை.குழப்பமாக இருக்கிறது. இன்னும் ஒரு தடவை ஆறுதலாக இருந்து வாசித்துவிட்டு வருகிறேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

ராகவன்!

புரிந்தது. பிடித்தது.

said...

முதலில் எனக்கும் புரியல வெட்டிப்பயல் மாதிரி. மறுபடி வாசிச்ச உடனே புரிஞ்சது.

நல்லா இருக்கு. தேவையில்லாத வார்த்தைகளை எடுத்து எழுத வேண்டிய கதையை சாதாரண எழுத்துக்களாலும் அழகாக வெளிப்படுத்த முடியும் என்று நினைக்க வைத்து விட்டீர்கள்.

கதை நன்றாக உள்ளது.

வாழ்த்துக்கள்

said...

புரியல..திரும்பவும் படிச்சி பாக்குறேன்..:-)

said...

// ramachandranusha said...
உம்ம்ம் யாரோட இன்ஸ்பிரேஷன்னு புரிஞ்சிடுச்சு :-) //

வாங்க உஷா. அதென்ன ஸ்மைல் :-)

// நிர்மல் said...
நல்ல கதை ராகவன் //

நன்றி நிர்மல். நீங்கள் படித்துப் பாராட்டியது ஊக்கமளிக்கிறது.

said...

// வெட்டிப்பயல் said...
அருமை... முதல்ல படிச்சவுடனே புரியல...புரிஞ்சதுக்கு அப்பறம் திரும்ப படிச்சேன்...

வெற்றி பெற வாழ்த்துக்கள் //

படிச்சதும் புரியலைன்னா...எப்பப் புரிஞ்சது? ரெண்டாவது வாட்டி படிச்சப்பையா? அப்பா..உங்களுக்குப் புரியிற மாதிரி எழுதத் தொடங்கீட்டேனா? இதுவரைக்கும் புரியாமலே இருந்தது. இன்னைக்குப் புரிஞ்சிருச்சு. :-)

said...

// மலைநாடான் said...
ராகவன்!

புரிந்தது. பிடித்தது. //

நன்றி மலைநாடன்.


// மனதின் ஓசை said...
புரியல..திரும்பவும் படிச்சி பாக்குறேன்..:-) //

ஒங்களுக்குமா :-( சரி படிச்சிட்டுச் சொல்லுங்க.

said...

// வெற்றி said...
இராகவன்,
கதை புரியவில்லை.குழப்பமாக இருக்கிறது. இன்னும் ஒரு தடவை ஆறுதலாக இருந்து வாசித்துவிட்டு வருகிறேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள். //

வெற்றி பெற வெற்றியின் வாழ்த்து :-) நன்றி வெற்றி.

said...

// தம்பி said...
முதலில் எனக்கும் புரியல வெட்டிப்பயல் மாதிரி. மறுபடி வாசிச்ச உடனே புரிஞ்சது. //

வெட்டிக்கு நம்ம எழுத்தெல்லாம் சரியாப் புரியாம இருந்ததாம். இன்னைக்கும் அப்படித்தான். அப்புறம் புரிஞ்சிருச்சு. :-) நல்லவேளை. :-)

// நல்லா இருக்கு. தேவையில்லாத வார்த்தைகளை எடுத்து எழுத வேண்டிய கதையை சாதாரண எழுத்துக்களாலும் அழகாக வெளிப்படுத்த முடியும் என்று நினைக்க வைத்து விட்டீர்கள்.

கதை நன்றாக உள்ளது.

வாழ்த்துக்கள் //

தம்பி...என்னுடைய கருத்து எப்பொழுதும் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்க்கவர்ந்தற்று என்பதுதான். கண்டிப்பாக அது பயன் தரும்.

உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

ஒரு சிறையினின்று மற்றொரு சிறைக்குச் செல்வதா விடுதலை!

சசியை ஒரு சாதாரண நங்கையாக்கி இன்னொரு சிறையில் தள்ளிவிட்டீர்களே ஜி.ரா.

இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கலாம் அவர்களை, வாழும் புன்னகையாய்!

படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிட நான் யார்?

வாழ்த்துகள்!

said...

நல்ல கதை ராகவன். சட்டுன்னு புரியல. இரண்டாம் முறை புரிஞ்சிடுச்சு.

தைரியமாகத்தான் கடைசி பத்திய எழுதியிருக்கீங்க. இதற்கு எதிர்ப்பு வந்தாலும் வரலாம்.

போட்டியில் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

said...

ஓய்,
ராட்ஷஸன்யா நீ. ஒரு பேர மாத்தி மொத்த எதிர்பார்ப்பையும் பொரட்டி போட்டுட்டீரே.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளிதரன்.

said...

ஆஹா ஆஹா... ரெண்டாவது தடவை படிச்சதுக்கு அப்புறந்தாம் புரிஞ்சுது.. ஒரு + இப்போ, மத்தது அப்புறம்...

said...

எஸ்.கேயின் கருத்து தான் எனக்கும் தோன்றியது.

கதையின் கருவினில் மாறுபட்டக் கருத்துக் கொண்டாலும், உங்கள் கதைச் சொல்லும் பாங்கு நிச்சயம் நல்லாயிருக்கு. வாசகரைக் கடைசி வரி வரை வேறு திசையில் சிந்திக்க வைத்து சட்டென இன்னொரு புள்ளியில் கதையை முடித்திருக்கும் உங்கள் பாணிக்கு ஒரு சபாஷ்.

முன்னொரு முறை உங்கள் விமானப் பயணக் கதை ஒன்று படித்த ஞாபகம் வருது,, பயணத்தைக் களமாக அமைத்துக் கதைகள் புனைவதில் நீங்கள் கெட்டிக்காரர் தான்.

வாழ்த்துக்கள்

said...

SK, தேவ், உங்களுக்கு சிறு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் லிவிங் ஸ்மைல் வித்யா இந்தக் கதையைப் படித்து விட்டு என்ன புரிந்து கொள்கிறார் என்பதனையும் நான் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். ஆகையால் இரண்டொரு நாள் பார்த்து விட்டு உங்களுக்குக் கண்டிப்பாக விளக்கம் கொடுக்கிறேன். கண்டிப்பாக கொடுக்கவே வேண்டும்.

said...

// murali said...
ஓய்,
ராட்ஷஸன்யா நீ. ஒரு பேர மாத்தி மொத்த எதிர்பார்ப்பையும் பொரட்டி போட்டுட்டீரே.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளிதரன். //

நன்றி முரளி. என்னை ராட்ஷஸன் என்று பாராட்டியதுக்கு :-) ராட்ஷசனாயிட்டதால இனிமே நடையுடை பாவனைகள்ள எதுவும் மாத்தம் தேவையா?

said...

// சிறில் அலெக்ஸ் said...
நல்ல கதை ராகவன். சட்டுன்னு புரியல. இரண்டாம் முறை புரிஞ்சிடுச்சு. //

நல்லவேளை. தப்பிச்சேன். :-) புரியாம எழுதுறதுக்கெல்லாம் அறிவு வேணும் சிறில். நம்ம கிட்ட அதெல்லாம் நீங்க எதிர்பாக்கக் கூடாது.

// தைரியமாகத்தான் கடைசி பத்திய எழுதியிருக்கீங்க. இதற்கு எதிர்ப்பு வந்தாலும் வரலாம். //

வந்தாலும் வரலாம். ஆனால் வராது என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்.

// போட்டியில் வெற்றிக்கு வாழ்த்துக்கள். //
நன்றி சிறில்.

said...

// Udhayakumar said...
ஆஹா ஆஹா... ரெண்டாவது தடவை படிச்சதுக்கு அப்புறந்தாம் புரிஞ்சுது.. ஒரு + இப்போ, மத்தது அப்புறம்... //

நன்றி நன்றி...சரி ஒங்க விடுதலை எங்க?

said...

ஆச்சரியம்தாங்க. எனக்குப் படிச்சவுடனே புரிஞ்சுருச்சு...
சு. சமுத்திரம் "வாடாமல்லி"ன்னு ஆ.வி.ல ஒரு தொடர்கதை எழுதினாரு. சேட்டப்பனும் சேட்டம்மாளும் காட்டியதை விடப் பெரிய பாசம் காட்டிய உறவுகள் என்ன மாதிரி மாறிப் போயின என்று வலிக்க வலிக்கச் சொல்லி இருப்பார்.

எப்பயாச்சும் நேரம் கெடைச்சா வாசிச்சுப் பாருங்க. ஏற்கனவே படிச்சுருந்தா மன்னிச்சுருங்க :D

said...

நல்லாருக்கு ராகவன்..

ஆனா இது விடுதலையா அல்லது சிறைவாசமா?

இன்றைய இந்தியாவில் இது சாத்தியமா என்பதையெல்லாம் நினைத்து மூளையை குடையாமல்..

உங்கள் கற்பனையுலகத்தில் இது சாத்தியமே..

எல்லோரும் சொன்னதைப் போல உங்கள் நடை நன்றாகவே இருக்கிறது..

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

said...

இராகவன். வழக்கம் போல தாள் பிரதி எடுத்து நேற்று வீட்டிற்கு வரும் வழியில் பேருந்தில் இந்தக் கதையைப் படித்தேன். முடித்த போது உங்கள் வழக்கமான பாணியில் பெயரை வைத்து விளையாடியிருப்பது புரிந்தது; ஆனால் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. சரி. இன்னொருமுறை படித்துப் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று பின்னூட்டங்களைப் படித்த பிறகு எனக்குப் புரிந்தது சரி தான் என்று உறுதியானது.

மற்றவர்களுக்கு விட்டு கொடுக்கும் முகமாக இதுவரை தேன்கூடு போட்டியில் கலந்து கொள்ளாத நீங்கள் ஏன் இப்போது கலந்து கொள்கிறீர்கள்? எதற்காக இந்த மாற்றம்? :-)

இப்படி ஒரு முறைக்கு இருமுறை எல்லோரையும் படிக்க வைப்பது ஒரு மிகப் பெரிய எழுத்தாளருக்கே கைவந்த கலை. உங்களுக்கும் அது இருப்பதை உங்களின் கதைகள் நிறுவுகின்றன. வாழ்த்துகள். (லேசான பொறாமையுடன்). :-)

said...

//G.Ragavan said...
// வெட்டிப்பயல் said...
அருமை... முதல்ல படிச்சவுடனே புரியல...புரிஞ்சதுக்கு அப்பறம் திரும்ப படிச்சேன்...

வெற்றி பெற வாழ்த்துக்கள் //

படிச்சதும் புரியலைன்னா...எப்பப் புரிஞ்சது? ரெண்டாவது வாட்டி படிச்சப்பையா? அப்பா..உங்களுக்குப் புரியிற மாதிரி எழுதத் தொடங்கீட்டேனா? இதுவரைக்கும் புரியாமலே இருந்தது. இன்னைக்குப் புரிஞ்சிருச்சு. :-)
//
கடைசி பத்தி பட்டும் ரெண்டாவது முறை படிச்சேன்... அதுவும் கடைசி வரில கரெக்டா புரிஞ்சிது...

எனக்கு உங்க கதை எல்லாம் புரியுது... பாட்டுதான்... :-(

said...

போண்டாவும் மிளகாய்ச் சட்டினியும் போல சசியின் கதை

சுவை.
ஏனென்று புரிபடத்தான் இல்லை.
மாறினால் விடுதலையா.

மாறாமல் இருந்திருந்தால்?

said...

எனக்கு புரிந்த மட்டில் மாறினால் விடுதலை அல்ல... தன்னுடைய நிலையை உணராதவர்களிடமிருந்து தன் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களிடம் சென்றடைவதே விடுதலை

said...

// பிரதீப் said...
ஆச்சரியம்தாங்க. எனக்குப் படிச்சவுடனே புரிஞ்சுருச்சு...
சு. சமுத்திரம் "வாடாமல்லி"ன்னு ஆ.வி.ல ஒரு தொடர்கதை எழுதினாரு. சேட்டப்பனும் சேட்டம்மாளும் காட்டியதை விடப் பெரிய பாசம் காட்டிய உறவுகள் என்ன மாதிரி மாறிப் போயின என்று வலிக்க வலிக்கச் சொல்லி இருப்பார்.

எப்பயாச்சும் நேரம் கெடைச்சா வாசிச்சுப் பாருங்க. ஏற்கனவே படிச்சுருந்தா மன்னிச்சுருங்க :D //

வாடாமல்லியா? விகடன்ல வந்ததா? இப்ப புத்தகமாக் கிடைக்குமான்னு தெரியலையே!

said...

ஜோசப் சார், கீழே வெட்டி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள். நானும் ஒரு விளக்கம் கொடுக்க இருக்கிறேன். இன்னும் சில நாட்கள் செல்லட்டும். விளக்கத்தை இடுகிறேன்.

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். வழக்கம் போல தாள் பிரதி எடுத்து நேற்று வீட்டிற்கு வரும் வழியில் பேருந்தில் இந்தக் கதையைப் படித்தேன். முடித்த போது உங்கள் வழக்கமான பாணியில் பெயரை வைத்து விளையாடியிருப்பது புரிந்தது; ஆனால் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. சரி. இன்னொருமுறை படித்துப் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று பின்னூட்டங்களைப் படித்த பிறகு எனக்குப் புரிந்தது சரி தான் என்று உறுதியானது. //

:-) நல்லவேளை உங்களுக்குப் புரிந்தது.

// மற்றவர்களுக்கு விட்டு கொடுக்கும் முகமாக இதுவரை தேன்கூடு போட்டியில் கலந்து கொள்ளாத நீங்கள் ஏன் இப்போது கலந்து கொள்கிறீர்கள்? எதற்காக இந்த மாற்றம்? :-) //

மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் முகமாகவா! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. போட்டி என்றதால் ஒதுங்கிப் போனேன். ஆனால் இந்த முறை போட்டியின் முடிவில் எழுந்த சில சலசலப்புகள் ஒரு தேக்க நிலையைத் தந்திருந்தன. தேக்கத்தை ஆக்கமாக மாற்றத்தான் இந்தக் கதை. அவ்வளவுதாங்க.

// இப்படி ஒரு முறைக்கு இருமுறை எல்லோரையும் படிக்க வைப்பது ஒரு மிகப் பெரிய எழுத்தாளருக்கே கைவந்த கலை. உங்களுக்கும் அது இருப்பதை உங்களின் கதைகள் நிறுவுகின்றன. வாழ்த்துகள். (லேசான பொறாமையுடன்). :-) //

முருகா! என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க. என்னால நடக்குறது ஒன்னுமில்லீங்க. வலைப்பூவில் ஒவ்வொருவர் எழுத்தும் ஒவ்வொரு தரம். நான் பலரை வியந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போய் நீங்கள் வியக்கின்றீர்களே.

said...

// வல்லிசிம்ஹன் said...
போண்டாவும் மிளகாய்ச் சட்டினியும் போல சசியின் கதை //

உண்மைதான் வல்லி.

// சுவை.
ஏனென்று புரிபடத்தான் இல்லை.
மாறினால் விடுதலையா.

மாறாமல் இருந்திருந்தால்? //

நிச்சயம் சிறைதான் என்று தோன்றுகிறது. பசித்தால் புசிக்காமல் இருக்க முடியுமா என்று தோன்றவில்லை. விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். நான் சொல்வது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.

said...

ஜிரா, கதை வந்தவுடன் படிச்சாச்சு. இந்த மர மண்டைக்கு புரியவும் புரிஞ்சுது. ஆனா என்ன பின்னூட்டம் போடறதுன்னு கொஞ்சம் குழப்பம். அதான் போடாமலேயே இருந்தேன்.

கதை எழுதறது உங்களுக்கு கை வந்த கலை. அதை விமர்சனம் பண்ணற அளவுக்கு எனக்கு தெரியாது. ஆனா தடங்கலில்லாமல் படிக்க முடிஞ்சுது. அந்த அப்பாவின் பேச்சில் மட்டும் இருந்த வட்டாரத் தமிழ் மற்ற இடங்களில் இல்லாமல் போனது எனக்கு ஏமாற்றம்தான். அது நான் எதிர்பார்த்ததை காண முடியவில்லை என்பதால்தான். ஆனால் அவ்வட்டாரத்தில் இருந்து வராத அனேகம் பேருக்கு அது குறையாய் தெரிந்திருக்காதென்றே நினைக்கிறேன்.

ஒரு நல்ல சிறுகதைக்கு வேண்டிய கடைசி வரி திருப்பமும், அதை வெளிப்படையாகச் சொல்லாமல் கோடிட்டுக் காட்டும் உத்தியும் உங்களுக்கு நன்றாகவே வருகிறது. விரைவில் உங்களிடமிருந்து ஒரு சிறுகதை தொகுப்பை எதிர்பார்க்கிறேன். நீங்கள் Jeffrey Archer எழுதிய சிறுகதை தொகுப்புகளைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

கதையின் ஒரு கேரக்டராக நம்மை நினைத்துக் கொண்டு (பொதுவாக கதாநாயகனாய்!) கதையைப் படிப்பதுதான் பலர் செய்வது. எனக்கு இங்கு அந்த ஒட்டுதல் வரவில்லை. ஏன் எனத் தெரியவில்லை.

கதை முடிவில், நல்ல திருப்பமாய் இருந்தால் கூட ஒரு திருப்தியின்மை. அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. குறை கூறக் கிளம்பவில்லை ஜிரா, எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

கொத்ஸ்,உங்களை நான் அப்படி அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.

மனசு அதில் ஒன்றுவதற்கு அதே உணர்ச்சிகள் தேவை இல்லையா.
அதுதான் சாதா(ரண ) அசாதா(ரணக் ) கதைகளில் வேறுபடும் என்று தோன்றுகிறது. ஜயகாந்தன் சார் கதைகளை நான் விருப்பம் காட்டினால் என் பெற்றோருக்கு அவ்வளவு இஷ்டம் இருக்காது. நான் வேறு விதமாகப் புரிந்து கொள்வேனொ (அந்த நாளில்) என்று நினைத்து இருப்பார்கள்.:-)0

said...

// இலவசக்கொத்தனார் said...

ஜிரா, கதை வந்தவுடன் படிச்சாச்சு. இந்த மர மண்டைக்கு புரியவும் புரிஞ்சுது. ஆனா என்ன பின்னூட்டம் போடறதுன்னு கொஞ்சம் குழப்பம். அதான் போடாமலேயே இருந்தேன். //

பின்னூட்டம் போடுறதுல கொத்சுக்கே கொழப்பம்னா....மத்தவங்கள்ளாம் என்ன செய்றது? :-)

// கதை எழுதறது உங்களுக்கு கை வந்த கலை. அதை விமர்சனம் பண்ணற அளவுக்கு எனக்கு தெரியாது. ஆனா தடங்கலில்லாமல் படிக்க முடிஞ்சுது. அந்த அப்பாவின் பேச்சில் மட்டும் இருந்த வட்டாரத் தமிழ் மற்ற இடங்களில் இல்லாமல் போனது எனக்கு ஏமாற்றம்தான். அது நான் எதிர்பார்த்ததை காண முடியவில்லை என்பதால்தான். ஆனால் அவ்வட்டாரத்தில் இருந்து வராத அனேகம் பேருக்கு அது குறையாய் தெரிந்திருக்காதென்றே நினைக்கிறேன். //

அந்த வட்டார வழக்கு பேசுகின்றவர்கள் அப்பாவும் அம்மாவும் மட்டுமே. சசிதான் ஒரு பேச்சும் பேசவில்லையே. சேட்டம்மாவும் சேட்டப்பாவும் தமிழிலேயே பேச முடியாது. அதனால்தான் தேவையான இடங்களில் மட்டும் வட்டார வழக்கு.

// ஒரு நல்ல சிறுகதைக்கு வேண்டிய கடைசி வரி திருப்பமும், அதை வெளிப்படையாகச் சொல்லாமல் கோடிட்டுக் காட்டும் உத்தியும் உங்களுக்கு நன்றாகவே வருகிறது. விரைவில் உங்களிடமிருந்து ஒரு சிறுகதை தொகுப்பை எதிர்பார்க்கிறேன். நீங்கள் Jeffrey Archer எழுதிய சிறுகதை தொகுப்புகளைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். //

சிறுகதைத் தொகுப்பா? அதெல்லாம் நெறைய எழுதுறவங்க செய்றது. ஆறேழு கதை வெச்சுக்கிட்டுத் தொகுப்பு போட்டா நல்லாவா இருக்கும்!

Jeffrey Archer படித்ததேயில்லை. ஒரு புத்தகம் படிக்கத் தொடங்கினேன். பிறகு ஏனோ உள்ளே போகாமல் வைத்து விட்டேன். இனிமேல் ஏதேனும் கிடைத்தால் கண்டிப்பாக முயன்று பார்க்கிறேன்.

// கதையின் ஒரு கேரக்டராக நம்மை நினைத்துக் கொண்டு (பொதுவாக கதாநாயகனாய்!) கதையைப் படிப்பதுதான் பலர் செய்வது. எனக்கு இங்கு அந்த ஒட்டுதல் வரவில்லை. ஏன் எனத் தெரியவில்லை. //

இதில் கதாபாத்திரம் கதை சொல்லவில்லை. காதாபாத்திரத்தின் எண்ண ஓட்டங்களை நாம் மாடியிலிருந்து பார்க்கிறோம். அல்லது பக்கத்தில் நின்று பார்க்கிறோம். இந்தக் கதையில் சேட்டம்மா சேட்டப்பா தவிர எந்தப் பாத்திரத்திலும் எளிதாக நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

// கதை முடிவில், நல்ல திருப்பமாய் இருந்தால் கூட ஒரு திருப்தியின்மை. அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. குறை கூறக் கிளம்பவில்லை ஜிரா, எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். //

கொத்ஸ், கதையில் திருப்பம் எனப்படுவது சசி எடுத்த முடிவு. அது சரியா தவறா என்று யாராலும் சொல்ல முடியாது. சரி அல்லது தவறு என்று சொல்கிறவர்கள் அறியாதவர்கள். ஏனென்றால் சசியின் இடத்திலிருந்து யோசிப்பது பொதுவாகவே அனைவருக்கும் மிகக் கடினம். காக்கைக் கூட்டில் பிறந்தாலும் குயிலுக்குக் காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை தேவை என்பதுதான் கருத்து. காக்கையும் இருக்க விடாது. குயிலாலும் இருக்க முடியாது.

// போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். //

நன்றி கொத்ஸ்.

said...

// வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,உங்களை நான் அப்படி அழைக்கலாம் என்று நினைக்கிறேன். //

எல்லாருமே அப்படித்தான் கூப்புடுறோம். நீங்களும் கூப்புடுங்க. அப்படிக் கூப்புடலைன்னாத்தான் அவரு சங்கடப்படுவாரு.

// மனசு அதில் ஒன்றுவதற்கு அதே உணர்ச்சிகள் தேவை இல்லையா.

அதுதான் சாதா(ரண ) அசாதா(ரணக் ) கதைகளில் வேறுபடும் என்று தோன்றுகிறது. ஜயகாந்தன் சார் கதைகளை நான் விருப்பம் காட்டினால் என் பெற்றோருக்கு அவ்வளவு இஷ்டம் இருக்காது. நான் வேறு விதமாகப் புரிந்து கொள்வேனொ (அந்த நாளில்) என்று நினைத்து இருப்பார்கள்.:-)0 //

சரியாகச் சொன்னீர்கள் வல்லி. நமக்குப் பழக்கமே இல்லாத ஒரு தளத்தில் கதை சொல்வது அப்படிப்பட்ட நிலையத்தான் உருவாக்கும். என்னடா இது...இப்படியும் நடக்குமா..நம்மள்ளாம் இல்லையா...அதென்ன இங்க மட்டும்...நிறைய எண்ணங்கள் எழும். ஏற்றுக் கொள்வது சற்றுக் கடினப்படும். புளியோதரையே அமுக்கிக் கொண்டிருந்தவனுக்கு பன்பட்டர்ஜாம் குடுத்தது போல. சரிதானா?

said...

நல்ல கதை.வெற்றிபெற வாழ்த்துக்கள்..

said...

//வாடாமல்லியா? விகடன்ல வந்ததா? இப்ப புத்தகமாக் கிடைக்குமான்னு தெரியலையே!//

புத்தகமாகக் கிடைக்குது.
என்கிட்டயும் இருக்கே :)

said...

முற்றிலும் எதிர்பாரா முடிவு, இயன்றளவு குயிலின் வலி அறிந்து படைக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

எனினும் குயில் கூவினால் உண்மைதானா என்பதும் புலப்படும். உங்களோடு நாங்களும் காத்திருக்கிறோம்!

நல்ல கதை, வாழ்த்துக்கள் போட்டிக்கு

said...

சசி,சசிகுமார், சசிகலா என்னும் முப்பரிமாணம் கொண்ட முக்கோணத்தில் ஒரு கதை. கதை ஆரம்பத்துல புரியலைன்னாலும் புரிஞ்சதுக்கப்புறம் குயில், காக்கை என்ற உவமையும் சொன்ன விதம் அருமை. போட்டிக்கான வாழ்த்துக்கள்.

said...

I second Ramachandran Usha's opinion :) Good work Raghavan

said...

// செந்தழல் ரவி said...
நல்ல கதை.வெற்றிபெற வாழ்த்துக்கள்.. //

நன்றி ரவி

// பிரதீப் said...
//வாடாமல்லியா? விகடன்ல வந்ததா? இப்ப புத்தகமாக் கிடைக்குமான்னு தெரியலையே!//

புத்தகமாகக் கிடைக்குது.
என்கிட்டயும் இருக்கே :) //

அப்ப ஒங்ககிட்டயே வாங்கிக்கிறேன். பெங்களூருல இந்தப் புத்தகமெல்லாம் தேடினாலும் கெடைக்காது.

// ஜெய. சந்திரசேகரன் said...
I second Ramachandran Usha's opinion :) Good work Raghavan //

நன்றி மரபூராரே. உங்கள் வாழ்த்திற்கு நன்றி பல.

said...

// ராசுக்குட்டி said...
முற்றிலும் எதிர்பாரா முடிவு, இயன்றளவு குயிலின் வலி அறிந்து படைக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

எனினும் குயில் கூவினால் உண்மைதானா என்பதும் புலப்படும். உங்களோடு நாங்களும் காத்திருக்கிறோம்! //

உண்மைதான் ராசுக்குட்டி. கூவாத குயில் கிடையாதுதானே. ஆகையால் காத்திருப்போம்.

// நல்ல கதை, வாழ்த்துக்கள் போட்டிக்கு //

நன்றி ராசுக்குட்டி.

said...

// ILA(a)இளா said...
சசி,சசிகுமார், சசிகலா என்னும் முப்பரிமாணம் கொண்ட முக்கோணத்தில் ஒரு கதை. கதை ஆரம்பத்துல புரியலைன்னாலும் புரிஞ்சதுக்கப்புறம் குயில், காக்கை என்ற உவமையும் சொன்ன விதம் அருமை. போட்டிக்கான வாழ்த்துக்கள். //

நன்றி இளா. ஒங்களுக்கும் கத மொதல்ல புரியலையா! :-) எப்படியோ புரிஞ்சதே...ரொம்ப சந்தோசம்.

அப்புறம் இந்த மட்டன் குனியா எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?

said...

எனக்கும் லேட்டாத் தான் புரிஞ்சது. ஆனா கதை எழுதிய பாங்கு நேர்த்தியாகவும் ஆவலைத் தூண்டும் விதமாகவும் இருந்தது.

said...

நடை ரொம்ப நல்லா இருந்தது ஆனால் எல்லாப் போட்டிகளிலும் திருநங்கை பற்றி ஒரு கதை வருகிறதே ஏன்?

said...

⌠⌠⌠⌠⌠பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமிது. புரியாதவர்கள் மண்டைய பிய்த்துக்கொள்ள வேண்டாம்║╫
//அப்புறம் இந்த மட்டன் குனியா எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?//
இன்னும் மூணே நாள், வந்துருங்க ஐப்பசியையும், நமது குனியா பசியையும் என்னான்னு பார்த்துருவோம். புரியாதவர்கள் மன்னிக்க, ஓமப்பொடியாரே இதெல்லாம் உங்களுக்கு தேவைஇல்லாதது.

said...

// கைப்புள்ள said...
எனக்கும் லேட்டாத் தான் புரிஞ்சது. ஆனா கதை எழுதிய பாங்கு நேர்த்தியாகவும் ஆவலைத் தூண்டும் விதமாகவும் இருந்தது //

நன்றி கைப்புள்ள. கைப்புள்ளைக்கு ஆவலத் தூண்டியிருக்குன்னா...கதையிலோ ஏதோ இருந்துருக்குது. இல்ல?

said...

// குமரன் எண்ணம் said...
நடை ரொம்ப நல்லா இருந்தது ஆனால் எல்லாப் போட்டிகளிலும் திருநங்கை பற்றி ஒரு கதை வருகிறதே ஏன்? //

நன்றி குமரன் எண்ணம்.

குமரன், மொத்தம் முப்பது படைப்புகள் வருகிறது. அதில் 29 படைப்புகள் அவர்களைப் பற்றி வருவதில்லையே என்று சொல்ல முடியுமா? இவர்களும் மனிதர்கள்தான். ஆகையால் அவர்களைப் பற்றிய கதைகள் வருவதும் சரியே! அதுதான் முறையும் கூட. அவர்களைப் பற்றிய செய்தி அல்லது கதை அல்லது கவிதை என்ற உறுத்தல் போக வேண்டும் என்பதே இப்போதைய தேவை.

said...

ரொம்ப தாமதா வந்துட்டேனா?? கலக்கிட்டீங்க...

said...

// Kuppusamy Chellamuthu said...

ரொம்ப தாமதா வந்துட்டேனா?? கலக்கிட்டீங்க... //

அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. நீங்க இப்ப வந்து படிச்சுப் பாராட்டுனதும் மகிழ்ச்சியா இருக்கு. :-)

said...

கொஞ்சம் லேட்டா படிச்சிட்டேனோ...?!

said...

// குமரன் எண்ணம் said...
நடை ரொம்ப நல்லா இருந்தது ஆனால் எல்லாப் போட்டிகளிலும் திருநங்கை பற்றி ஒரு கதை வருகிறதே ஏன்? //

மற்ற எல்லா கதைகளும் ஆண், பெண் பற்றி வருகையில், ஒன்றாவது நங்கைகளைப் பற்றி வரட்டுமே... மக்கள் மனதிலிருந்தும், சமூக தளத்திலிருந்தும் ஒரு விடுதலையைத் தரட்டுமே..

என்ன இப்ப....?!

said...

// லிவிங் ஸ்மைல் said...

கொஞ்சம் லேட்டா படிச்சிட்டேனோ...?! //

ம்ம்ம்...இருக்கலாம். ஆனாலும் இப்பொழுதும் உங்கள் கருத்துகளைக் கூறலாம். ஏனென்றால் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று ஊகித்து எழுதுவது உண்மைக்கு எவ்வளவு அருகில் இருக்குமென்று தெரியவில்லை.

இந்தக் கதையைப் பற்றிய உங்கள் கருத்துகளை உள்ளதுள்ளபடி சொன்னால் மகிழ்ச்சி அடைவோம்.

said...

ஓட்டுப்போட முந்தி இன்னொருக்காப் படிக்கணுமுன்னு இருந்து அப்படியெ விட்டுப்போயிருச்சு(-:

கலக்கிட்டீங்க.
போட்டியில் வென்றதுக்கு வாழ்த்து(க்)கள்.

said...

வாழ்த்துக்கள் கோ.இரா.

said...

மொதல்லேயே சொல்ல நினைத்தேன்.
வாழ்த்துக்கள்.

said...

வாக்களிக்க தவறிவிட்டேன்..

இருந்தாலும் வெற்றிதானே

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

said...

படித்தபிறகு மனசு கனத்ததால் 'தம்டீ' அடிக்க சென்றேன். அதே சமயத்தில் டீக்கடையில் ஓர் திருநங்கை காசுக்காய் கையேந்த.. 100ரூபாயும் ஒரு டீயும் வாங்கித்தந்தேன்.. கூடியிருந்தவர்கள் அதிசயமாய்ப் பார்த்தார்கள்.
ஏனோ நேற்று புரண்டு புரண்டு படுத்தேன்.. எப்போது தூங்கினேன் என்று தெரியாது.
ப்ச்.. வாழ்க நீவீர்.

said...

ராகவன், வாழ்த்துகள்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தனிமெயில் போட உங்க ஈமெயில் விலாசம் தெரியாது.

எழுத்தால் எல்லோருக்கும் நல்லது செய்யும் நீங்களும் குமரனும் நன்றாக இருக்கவேண்டும்.

said...

// துளசி கோபால் said...
ஓட்டுப்போட முந்தி இன்னொருக்காப் படிக்கணுமுன்னு இருந்து அப்படியெ விட்டுப்போயிருச்சு(-:

கலக்கிட்டீங்க.
போட்டியில் வென்றதுக்கு வாழ்த்து(க்)கள். //

நன்றி டீச்சர். அதுனால என்ன..நேரம் கிடைக்குறப்போ படிச்சாப் போகுது.

// ஆவி அண்ணாச்சி said...
வாழ்த்துக்கள் கோ.இரா. //

நன்றி ஆவி அண்ணாச்சி. மொத வாட்டி நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. எல்லாரும் ஜிராங்குறத நீங்க கோ.இரான்னு சொல்றீங்க. :-) அதுனால என்ன.

// யெஸ்.பாலபாரதி said...
மொதல்லேயே சொல்ல நினைத்தேன்.
வாழ்த்துக்கள். //

நன்றி யெஸ்பா. மொதலோ கடைசியோ...நீங்க சொல்லாம விடைலையே. :-)

// லிவிங் ஸ்மைல் said...
வாக்களிக்க தவறிவிட்டேன்..

இருந்தாலும் வெற்றிதானே

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் //

நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா.

said...

// கவிப்ரியன் said...
படித்தபிறகு மனசு கனத்ததால் 'தம்டீ' அடிக்க சென்றேன். அதே சமயத்தில் டீக்கடையில் ஓர் திருநங்கை காசுக்காய் கையேந்த.. 100ரூபாயும் ஒரு டீயும் வாங்கித்தந்தேன்.. கூடியிருந்தவர்கள் அதிசயமாய்ப் பார்த்தார்கள்.
ஏனோ நேற்று புரண்டு புரண்டு படுத்தேன்.. எப்போது தூங்கினேன் என்று தெரியாது.
ப்ச்.. வாழ்க நீவீர். //

என்ன ஒரு ஒற்றுமை நிகழ்வு கவிப்பிரியன். நீங்கள் காசு குடுத்த அன்ற அந்தப் பெண் ஒழுங்காகச் சாப்பிட்டிருப்பாள் என்று நம்புகிறேன். இந்த உலகம் மெஜாரிட்டிகளால் கொடுங்கோலாட்சி செய்யப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். நீங்கள் அந்தத் திருநங்கைக்குச் செய்த உதவிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

// வல்லிசிம்ஹன் said...
ராகவன், வாழ்த்துகள்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தனிமெயில் போட உங்க ஈமெயில் விலாசம் தெரியாது. //

நன்றி வல்லி. உங்கள் வாழ்த்துகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. என்னை gragavan@gmail.comல் தொடர்பு கொள்ளுன்ங்கள்

// எழுத்தால் எல்லோருக்கும் நல்லது செய்யும் நீங்களும் குமரனும் நன்றாக இருக்கவேண்டும். //

நன்றி வல்லி. உங்கள் வாழ்த்துதான் ஊக்கம்.

// நிர்மல் said...
வாழ்த்துகள் ராகவன் //

நன்றி நிர்மல்.

said...

மனமார்ந்த வாழ்த்துகள் ஜீரா