Tuesday, October 31, 2006

தேன்கூட்டு விடுதலைக்கு நன்றி

மொதல்ல எல்லா நண்பர்களுக்கும் நன்றி. விடுகதை கதையைப் படிச்சுக் கருத்து சொல்லீட்டு அதுக்காக வாக்களித்த அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றி. எனக்கு வாக்களிக்காதவங்களுக்கும் நன்றி. ஏன்னா உங்களுக்குப் பிடிச்சதுக்கு வாக்களிச்சிருப்பீங்க இல்லையா. அதுக்குதான்.

முதல் பரிசை வென்ற லக்கிலுக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மூன்றாம் பரிசு பெற்ற சுதர்சனனுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே வெற்றிக்கு முதற்படி. ஆகையால் நாம் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.

போட்டியைச் சிறப்பாக நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கும் எனது வாழ்த்துகள் நன்றிகள். இது போன்ற போட்டிகள் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது என்பதில் ஐயமில்லை. தொடரட்டும்.

இதுவரைக்கும் இந்தப் போட்டியில கலந்துகிட்டதில்லை. போன மொற போட்டி முடிஞ்சப்புறம் நடந்த சிலபல நிகழ்ச்சிகளால நான் போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு செஞ்சேன். கலந்துகிட்ட மொதவாட்டியே பரிசு கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. எல்லாப் புகழும் முருகனுக்கே. (வழக்கமாச் சொல்றதுதானங்கிறீங்களா...என்ன செய்ய...அப்படியே பழகீருச்சி.)

இன்னைக்கு (31 அக்டோபர் 2006) காலைல கந்தரநுபூதி பதிச்சிட்டு ஆபீசுக்கு ஓடலாம்னு வந்தேன். அப்ப கொத்ஸ் ஆன்லைன்ல இருந்தாரு. அவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறப்போ மக்ரூனு, அல்வா, பிட்டுன்னு இனிப்புகளா வந்துச்சு. ஆபீசுக்குக் கெளம்புறேன்னு சொன்னப்போ "have a sweet morning"னு வாழ்த்துனாரு.

ஆபீசுக்கு வந்தா வேலை...வேலை..வேலை....திடீர்னு ஒரு செல்பேசி. "ஜீரா"ன்னு. வேறயாரு? இளாதான். வாழ்த்துகள் அப்படீன்னாரு. என்னத்துக்குய்யான்னு கேட்டேன். அப்பத்தான் விவரம் சொன்னாரு. வாழ்த்துச் சொன்ன மொத ஆளு அவருதான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி பெயரிலேயே வெட்கத்த வெச்சிருக்குற ஷைலஜா செல்பேசினாங்க. அவங்களும் வாழ்த்துச் சொன்னாங்க. அதே சமயம் சுதர்சனோட மயில் வந்துச்சு. ஆனா வேலை நெறைய இருந்ததால மயிலார அப்புறம் அனுப்பலாம்னு முடிவு செஞ்சேன்.

அப்புறம் வலைப்பூவுக்கு வந்து பாத்தா, யெஸ்பா...அதாங்க பாலபாரதி, துளசி டீச்சர், ஆவி அண்ணாச்சி, வெட்டிப்பயல், ரவி கண்ணபிரான்னு வாழ்த்துப் பின்னூட்டங்கள். அத்தோட லிவிங் ஸ்மைல் வித்யா. அவங்களுடைய வாழ்த்து நான் கதையில ஓரளவாவது இயல்பாச் சொல்லீருக்கேங்குற நம்பிக்கையைக் குடுத்தது. நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா.

இந்தக் கதைல பலர் கேட்ட கேள்விகள் ரெண்டே ரெண்டு. ஒவ்வொன்னுக்கும் எனக்குத் தெரிஞ்ச விடைகளைச் சொல்லி இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்.

கேள்வி 1. சசிக்குமார் சசிகலாவாக மாறுவது விடுதலையா? சிறையா? இதுதான் வழியா? ரயில்தானா வரவேண்டும்! நல்ல வேலை செய்வது போல வரக்கூடாதா?

விடை 1. சசிகலாவிற்கு வேறுவழியே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதை ஊகத்தின் பேரில்தானே சொல்ல முடியும். பிடிக்காத உடையையே நம்மால் போட்டுக்கொள்ள முடியாத பொழுது...பிடிக்காத உடம்பை எப்படிப் வைத்துக்கொள்வது? அதனால்தான் நிறைய திருநங்கைகள் இந்த விடுதலையை விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்.

ரயிலிலா இருக்க வேண்டும் என்பதும் நல்ல கேள்வி? ரயிலில் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ரயிலில் அவர்களும் பயணம் போகிறவர்களாக இருக்கலாமே. உட்கார்ந்து கொண்டே இருக்கப் பிடிக்காமல் கதவோரம் நின்றிருக்கலாமே! அதை படிப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டு விட்டேன்.

கேள்வி 2. அதென்ன எல்லா போட்டிகளிலும் திருநங்கைக் கதை ஒன்று வந்து விடுகிறதே!

விடை 2. எல்லாப் போட்டிகளிலும் ஆண்களையும் பெண்களையும் பற்றிக் கதை வந்து விடுகிறதே. அது ஏன் உறுத்தவில்லை? காரணம் என்னவென்றால் அவர்கள் பொதுநீரோட்டத்தில் (mainstream) கலந்திருக்கிறார்கள். ஆகையால் நமக்கு உறுத்துவதில்லை. கதையில் வருகின்ற பெற்றோர்களைப் போல உண்மையிலும் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போவதுதான் நடக்கிறது. ஆக திருநங்கைகளை இன்னும் பொதுநீரோட்டத்தில் நாம் சேர்த்துக்கொள்ளவில்லை.

பொதுநீரோட்டத்தில் புதிதாகச் சேரவரும் ஒரு திருநங்கை தன்னுடைய உணர்வுகளைத்தான் முதலில் அள்ளிக்கொட்ட முடியும். ஏனென்றால் அப்பொழுதுதான் மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அதை விடுத்து மகிழ்ச்சி பொங்க எழுது...வேறு ஏதாவது எழுது என்பதெல்லாம் கவைக்குதவாது. அவர்களுக்கு விளம்பரம் தேவையோ இல்லையோ.....அவர்களை எழுத விடுங்கள்....குமுறல்கள் எல்லாம் கொட்டியபின் எழுத்துகள் மெருகேறும். புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்த தேன்கூடு + தமிழோவியம் குழுவினருக்கு எனது நன்றி. போட்டியில் கலந்து கொண்ட வாக்களித்த கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்,
கோ.இராகவன்

23 comments:

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் ஜீரா!!!

Arunkumar said...

unga blogku adikkadi vandurken... comment ippo thaan first podarennu nenaikiren..

viduthalai pottiku neenga anuppina kadaya naanum padichen.. second time purinjadu... :)

time kedacha findarun.blogspot.com vandu commentungalen...

-Arun

G.Ragavan said...

// நிர்மல் said...
நன்றி சொல்றதையே ஒரு கதை போல எழுதறிங்க ராகவன்.

வாழ்த்துகள் //

நன்றி நிர்மல். சொல்ல வேண்டியதச் சொல்லித்தானே தீரனும். :-)

G.Ragavan said...

// ராம் said...
வாழ்த்துக்கள் ஜீரா!!! //

நன்றி ராம். கதையைப் படித்தீர்களா? பிடித்திருந்ததா?

Anonymous said...

நல்லா சொல்லிருக்கீங்க ராகவன்... வாழ்த்துக்கள்..

G.Ragavan said...

// Arunkumar said...
unga blogku adikkadi vandurken... comment ippo thaan first podarennu nenaikiren.. //

ஆமாம் அருண். நீங்க அடிக்கடி வாங்க. மனசில பட்டதச் சொல்லுங்க.

// viduthalai pottiku neenga anuppina kadaya naanum padichen.. second time purinjadu... :)

time kedacha findarun.blogspot.com vandu commentungalen...

-Arun //

கண்டிப்பா வர்ரேன் அருண், நிச்சயமா வருவேன்.

மலைநாடான் said...

//புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.//

ராகவன்!
வெற்றிக்கு வாழ்த்துக்கள். மேலேயுள்ள வார்த்தைகளுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி!

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் ராகவன்!

நான் மொத்தம் 3 பேருக்கு ஓட்டு போட்டேன். அதில் நீங்க ஒருத்தர்.

வல்லிசிம்ஹன் said...

ஜி.ரா.வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.

enRenRum-anbudan.BALA said...

வாழ்த்துக்கள் ஜீரா!!! Keep it up :)

Sivabalan said...

வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//குமுறல்கள் எல்லாம் கொட்டியபின் எழுத்துகள் மெருகேறும். புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.
//

சூப்பர்...

தெளிவான சிந்தனை!!!

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் ராகவன்!

✪சிந்தாநதி said...

தேன்கூடு வெற்றிக்கு

வாழ்த்துக்கள்!

மதுமிதா said...

வாழ்த்துகள் ஜீரா
உங்கள் தொலைபேசி எண் இல்லாததால்
இங்கே வாழ்த்து.

கேல்வியும் பதில் விளக்கமும் அருமை

கோபிநாத் said...

Dear Ragavan Sir,

Congratulation,
I am also same like a Arunkumar. (oru china thyaikcom)
This is my first comment. I read the "விடுதலை" Simply super sir.

Gopinath

G.Ragavan said...

// பொன்ஸ் said...
நல்லா சொல்லிருக்கீங்க ராகவன்... வாழ்த்துக்கள்.. //

நன்றி பொன்ஸ்

// மலைநாடான் said...
//புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.//

ராகவன்!
வெற்றிக்கு வாழ்த்துக்கள். மேலேயுள்ள வார்த்தைகளுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி! //

நன்றி மலைநாடன். அந்த வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வந்தவையே.

// luckylook said...
வாழ்த்துக்கள் ராகவன்!

நான் மொத்தம் 3 பேருக்கு ஓட்டு போட்டேன். அதில் நீங்க ஒருத்தர். //

நன்றி லக்கி லுக். :-)

G.Ragavan said...

// வல்லிசிம்ஹன் said...
ஜி.ரா.வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள். //

நன்றி வல்லி. கண்டிப்பாக இன்னமும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.

// enRenRum-anbudan.BALA said...
வாழ்த்துக்கள் ஜீரா!!! Keep it up :) //

நன்றி பாலா.


// Sivabalan said...
வாழ்த்துக்கள். //

நன்றி சிவா.


// வெட்டிப்பயல் said...
//குமுறல்கள் எல்லாம் கொட்டியபின் எழுத்துகள் மெருகேறும். புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.
//

சூப்பர்...

தெளிவான சிந்தனை!!! //

வெட்டீன்னு பேர் மட்டும் வெச்சுக்கிட்டு தெளிவும் தெளிவில்லாததும் தெரிஞ்சி வெச்சிருக்கீங்களே....சூப்பருங்கோவ்.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

G.Ragavan said...

// கப்பி பய said...
வாழ்த்துக்கள் ராகவன்! //

நன்றி கப்பி

// சிந்தாநதி said...
தேன்கூடு வெற்றிக்கு

வாழ்த்துக்கள்! //

சிந்தாநதி...மிகவும் அழகான ஆழமான பெயர். நதியின் போக்கே அணை மீறுவதுதான். அந்த அணை மீறாமல் அழகாய் கரைக்குட்பட்டு தெளிவாக வெளியே சிந்தாமல் ஓடும் நதியே சிந்தாநதி. நீங்கள் அப்படித்தானா? இல்லை பெயருக்கு வேறு விளக்கம் இருக்கிறதா?

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

// மதுமிதா said...
வாழ்த்துகள் ஜீரா
உங்கள் தொலைபேசி எண் இல்லாததால்
இங்கே வாழ்த்து. //

அதனால் என்ன மதுமிதா. வாழ்த்த வேண்டும் என்ற எண்ணமே வாழ்த்துதான். இங்கு வாழ்த்தியதும் எனக்கு மகிழ்ச்சியே.

// கேல்வியும் பதில் விளக்கமும் அருமை //

நன்றி மதுமிதா

// Gopinath said...
Dear Ragavan Sir,

Congratulation,
I am also same like a Arunkumar. (oru china thyaikcom)
This is my first comment. I read the "விடுதலை" Simply super sir.

Gopinath //

நன்றி கோபிநாத். உங்கள் பாராட்டிற்கும் நன்றி. உங்கள் வலைப்பூவிற்கு மிகவிரைவிலேயே வருகிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

முதல் தேர்விலேயே வெற்றிகண்ட வலையுலக கவுன்சிலர் ஜிரா அவர்களுக்கே துணை மேயர் பதவியை விட்டுத்தர வேண்டுகிறோம்.

வாழ்த்துக்கள் ராகவன்.

நாமக்கல் சிபி said...

Top 4 வந்ததற்கும் வாழ்த்துக்கள் :-)

வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும்...
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம்....

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ராகவன், தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Sud Gopal said...

வாழ்த்துகள் ஜீரா.

கொஞ்சம் லேட்டா வந்திட்டேனோ??
அது சரி,வாழ்த்து சொல்ல நாளெதுக்கு,கெழமையெதுக்கு...

அப்படியே உங்க கீபோர்டைக் கொஞ்ச நாளைக்கு இரவல் கொடுத்தா நாங்களும் உபயோகப்படுத்திகிடுவோம்லா??