கொஞ்ச நாளுக்கு முன்னாடி திருக்கரங்குடியைப் பத்தி ஏதோ ஒரு பதிவு வந்தது. சரியாக் கவனிக்கலை. ஆனா எங்க அலுவலகத்துல உள்ள நண்பர்கிட்ட அவங்க ஊரப் பத்திய பதிவு ஒன்னு இருக்குன்னு சொல்லீட்டேன். அவரு அந்த ஊர விட்டு வந்து ரொம்ப காலம் ஆச்சு. அப்பா காலத்திலயே பெங்களூருக்கு வந்துட்டாரு. ஆனா அவரு வீட்டுல போய் அவரோட பாட்டிகிட்ட பதிவைப் பத்திச் சொல்லீட்டாரு. அவங்க அதக் கொண்டாந்து படிச்சுக் காட்டணும்னு சொல்லீட்டாங்களாம். யாராவது அந்தப் பதிவைக் கண்டுபிடிச்சுக் குடுப்பீங்களா?
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அது திருக்குரங்குடி இல்லை ராகவன் திருக்குறுங்குடி. எங்களூருக்கு மிக அருகிலுள்ளா ஊர். டி.வி.ஸ் சுந்தரம் ஐய்யங்காரின் (சாதிப் பெயர் சொல்லலாமில்லையா) சொந்த ஊர். ஊரினுள்ளூம், மலையிலுமிருக்கும் நம்பி கோவில்கள் மிக அழ்காக இருக்கும். இவ்வூர் பற்றிய பதிவுகள் வல்லி சிம்ஹன் தனது நாச்சியார் பதிவில் எழுதியுள்ளார். மேலும் அழகர் என்பவரும் பதிவிட்டுள்ளார்.கூகுள் செய்து பார்த்தேன். சுட்டிகள் கீழே
http://naachiyaar.blogspot.com/2006/10/blog-post_14.html
http://www.pkblogs.com/naachiyaar/2006/10/blog-post_15.html
http://vishnuchittan.blogspot.com/2005_11_01_vishnuchittan_archive.html
மேலும் திருக்குறுங்குடி பற்றிய அழகான புகைபடங்கள் பார்க்க http://www.nellaieruvadi.com ல் பார்க்கவும். நன்றி
Post a Comment