Thursday, February 22, 2007

கர்நாடகத் தமிழனின் கேள்வி

கர்நாடகத் தமிழனின் கேள்வி என்றதும் அது ஜிராவின் கேள்வி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். ஜிரா கர்நாடகாவில் ஆண்டுக்கணக்கில் இருப்பவர். இன்றைக்கு நினைத்தாலும் சென்னைக்கோ வேறு ஊருக்கோ வேலை வாங்கிக் கொண்டு ஓடிட முடியும். அதுவுமில்லாமல் தமிழகத்தில் நல்ல வலுவான குடும்ப அடிப்படை கொண்டவன். ஆனால் அப்படி எதுவும் செய்ய முடியாத...தமிழகத்தில் யாரையும் தெரியாத....கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனின் கேள்விதான் இது. இவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் பெங்களூர், மைசூர், குடகு சுற்றுவட்டாரங்களுக்குள்ளேயே இருப்பார்கள். தமிழ் உச்சரிப்பே காட்டிக் கொடுத்து விடும். வாங்கியிருக்கும் சொத்து சுகமெல்லாம் கர்நாடகாவிற்குள்ளேயே இருக்கும். இப்படிப் பட்ட கர்நாடகத் தமிழனின் கேள்வி இங்கே.

தமிழ்ப் படத்துல நடிச்ச சரோஜாதேவி கர்நாடகாவுல பந்துக்குப் போகக் கூடாதுன்னு சொல்றீங்க. சரி. அந்தம்மாவும் போக மறுத்திருச்சு. அதே மாதிரி தமிழ்ப் படத்துல நடிக்கிற கர்நாடகாவுல இருந்து வந்த நடிகர்கள் தமிழகத்திற்கு ஆதரவா இருக்கனும்னு சொல்றீங்க. சரி. நாங்க யாருக்கு ஆதரவா இருக்கனும்? பொறந்து வளர்ந்து பொழைச்சது எல்லாம் இங்கதான். சோறு போட்ட ஊருக்கு நன்றியோட நாங்க இருக்கனுமா வேண்டாமா? இல்ல இந்த விதி சினிமாக்கரங்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா? இல்ல நாங்க பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி அடி ஒத வாங்கி அகதியா வரணுமா? அப்படி வந்தா எங்களுக்கு என்ன செய்வீங்க? ஏற்கனவே இலங்கைத் தமிழர்கள் வேற அகதியா வர்ராங்க. வந்திருக்காங்க. அவங்களுக்கு நீங்க ஆதரவு எப்படிக் கொடுக்குறீங்களோ அதே மாதிரிதான் எங்களுக்குக் குடுப்பீங்களா? பின்னாடி எங்கள்ள யாரரவது தப்பு செஞ்சா, கர்நாடகத் தமிழன்னாலே தப்பு செய்றவன், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கிறவன்னு சொல்வீங்களா? இல்ல ஒங்களுக்காக அகதியா வந்ததுக்காக எங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் குடுத்து வேலை வாய்ப்புகள்ல உதவுவீங்களா? சொல்லுங்கங்க.

புரியலைன்னா இங்க போய்ப் பாருங்க

16 comments:

மனதின் ஓசை said...

இந்த அளவுக்கு எதும் உணர்ச்சிவசப்படவேண்டியதில்ல. அமைதியா அவங்கவங்க வேலைய பாத்துகிட்டு இருக்க வேண்டியதுதான்.

கார்த்திக் பிரபு said...

ennalam nadakka pogutho??

ஜோ/Joe said...

ராகவன்,
இந்த கேள்வியெல்லாம் யார் கிட்ட கேக்குறீங்க ?

யார் இப்போ உங்களை கொடிபிடிக்க சொன்னது?

ஜோ/Joe said...

பொண்ணைப் பெத்து கட்டிக் கொடுத்த பாவத்துக்காக புகுந்த வீட்டுக்காரங்க என்ன தான் அவமானப்படுத்தினாலும் ,ஐய்யோ நாம எதுவும் சொல்லப் போயி மேலும் மேலும் நம்ம பொண்ண கொடுமைப் படுத்திருவாங்களோண்ணு அதே நேரத்தில் புகுந்த வீட்டுப் பெண் இது எங்க வீட்டு விஷயம் .இதுல நீங்க தலையிடாதீங்கண்னு மிரட்டலுக்கு பயந்து சொல்லுறத பார்த்து ,கைகட்டி வாய்பொத்து நிக்கிற ஒரு ஏழை தகப்பனின் நிலமையில் தமிழ் நாட்டுக் காரங்க இருக்கோமைய்யா ! என்னவோ போங்க.

G.Ragavan said...

// மனதின் ஓசை said...
இந்த அளவுக்கு எதும் உணர்ச்சிவசப்படவேண்டியதில்ல. அமைதியா அவங்கவங்க வேலைய பாத்துகிட்டு இருக்க வேண்டியதுதான். //

உண்மையிலேயே அது போதுங்களா? போதாதுன்னு நெறைய பேரு சொல்றாங்களே!

G.Ragavan said...

// கார்த்திக் பிரபு said...
ennalam nadakka pogutho?? //

தெரியலையே காபி. ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

G.Ragavan said...

// ஜோ / Joe said...
ராகவன்,
இந்த கேள்வியெல்லாம் யார் கிட்ட கேக்குறீங்க ?

யார் இப்போ உங்களை கொடிபிடிக்க சொன்னது? //

அதெப்படி பேரச் சொல்றது ஜோ? மானரோசமில்லாம பம்மிக்கிட்டிருக்குற ஜிராவுக்கு யார் கிட்ட கேக்குறோம்னே தெரியாதே! பேர் தெரிஞ்சா சொல்லீருக்க மாட்டேனா?

ஜோ/Joe said...

//மானரோசமில்லாம பம்மிக்கிட்டிருக்குற ஜிராவுக்கு யார் கிட்ட கேக்குறோம்னே தெரியாதே!//

ராகவன்,
ஏதோ கர்நாடக தமிழர்களின் உணர்வுகளை தமிழக தமிழர்கள் புரியாமல் இருப்பது போல நீங்கள் புலம்புவது ரொம்பவே ஓவர் .தமிழ்நாட்டு தமிழர்களையும் தான் மானம் ரோசம் இல்லாதவங்கண்ணு திட்டுறாங்க .வாயைத் தொறந்தா கர்நாடகாவுல இருக்கிற நம்ம மக்களை ஏதாவது செஞ்சா என்னடா பண்ணுவீங்கண்ணு சொல்லி பொத்திட்டு போங்கடாண்ணு சொல்லுறாங்க .

இப்போ நாங்க என்னாங்க பண்ணிட்டோம் .பேச்சு மூச்சு இல்லாம தானே இருக்கோம் .அதுக்கே உங்களுக்கு இவ்வளவு கோபமா? நாங்க என்ன தான் பண்ணுறது ? ஓசூரை எழுதிக் கொடுத்துடலாமா? அதோட மிரட்டல் முடிஞ்சிடுமா? கேட்டு சொல்லுங்க!

G.Ragavan said...

// ஜோ / Joe said...
பொண்ணைப் பெத்து கட்டிக் கொடுத்த பாவத்துக்காக புகுந்த வீட்டுக்காரங்க என்ன தான் அவமானப்படுத்தினாலும் ,ஐய்யோ நாம எதுவும் சொல்லப் போயி மேலும் மேலும் நம்ம பொண்ண கொடுமைப் படுத்திருவாங்களோண்ணு அதே நேரத்தில் புகுந்த வீட்டுப் பெண் இது எங்க வீட்டு விஷயம் .இதுல நீங்க தலையிடாதீங்கண்னு மிரட்டலுக்கு பயந்து சொல்லுறத பார்த்து ,கைகட்டி வாய்பொத்து நிக்கிற ஒரு ஏழை தகப்பனின் நிலமையில் தமிழ் நாட்டுக் காரங்க இருக்கோமைய்யா ! என்னவோ போங்க. //

உண்மைதான் ஜோ. அதே புகுந்த வீட்டுப் பெண்ணோட நெலமைலதான் கர்நாடகத் தமிழர்களும் இருக்காங்க. இப்ப அவங்க என்னதான் செய்றது?

மனதின் ஓசை said...

ஜிரா..

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.என்னை பொருத்தவரையில் இது தேவை இல்லாத பதிவு.

மொதல்ல தமிழகத் தமிழன் என்னா பன்றதுன்னு தெரியாம முழிக்கிறானே? அத கவனிக்க சொல்லுங்க.அரசியல் கட்சிங்க விவரம் என்னான்னே புரியும்படி சொல்லாம இவன் தூரோகம் பன்னிட்டான்றதும் உடனே அடுத்தவன் அந்த கூப்பாட்டுக்கு பனிஞ்சி போறதும் அப்பப்பா... விளங்கிடும்.

யாரும் நியாயமான அளவு எவ்வளவு? அடுத்தவனுக்கும் அவன் பங்கை தரனும்னு யோசிக்கிற (யோசிக்க விரும்பர)மாதிரி தெரியல. மக்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆட்டி வைச்சு அத வோட்டா மாத்தறதுன்னு இருக்கங்க. இங்க எதிர்ப்பு வோட்டுதான் ஆட்சியையே நிர்னயிக்குது..

//போதாதுன்னு நெறைய பேரு சொல்றாங்களே! //

யாரது? என்ன பன்னனும்னு அவங்ககிட்டயே கேளுங்க. பதில் என்னன்னு பார்ப்போம்.

G.Ragavan said...

// ஜோ / Joe said...
//மானரோசமில்லாம பம்மிக்கிட்டிருக்குற ஜிராவுக்கு யார் கிட்ட கேக்குறோம்னே தெரியாதே!//

ராகவன்,
ஏதோ கர்நாடக தமிழர்களின் உணர்வுகளை தமிழக தமிழர்கள் புரியாமல் இருப்பது போல நீங்கள் புலம்புவது ரொம்பவே ஓவர் .தமிழ்நாட்டு தமிழர்களையும் தான் மானம் ரோசம் இல்லாதவங்கண்ணு திட்டுறாங்க .வாயைத் தொறந்தா கர்நாடகாவுல இருக்கிற நம்ம மக்களை ஏதாவது செஞ்சா என்னடா பண்ணுவீங்கண்ணு சொல்லி பொத்திட்டு போங்கடாண்ணு சொல்லுறாங்க . //

மன்னிக்கனும் ஜோ. தமிழகத் தமிழர்களின் தன்மையை நான் அறிவேன். கொஞ்சம் பொறுங்க http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_7502.html இந்த லிங்க்கைப் போய்ப் பாருங்க.

// இப்போ நாங்க என்னாங்க பண்ணிட்டோம் .பேச்சு மூச்சு இல்லாம தானே இருக்கோம் .அதுக்கே உங்களுக்கு இவ்வளவு கோபமா? நாங்க என்ன தான் பண்ணுறது ? ஓசூரை எழுதிக் கொடுத்துடலாமா? அதோட மிரட்டல் முடிஞ்சிடுமா? கேட்டு சொல்லுங்க! //

ஜோ, இதென்ன கிழக்குச் சீமையிலே படமா? பத்திரம் பத்திரமா மாத்த மாத்த கதை மாற. கேள்வி கர்நாடகத் தமிழன் சார்பாக கேட்கப்பட்டிருக்கும் கேள்வி. அவன் என்ன செய்ய வேண்டும் இப்பொழுது?

G.Ragavan said...

// மனதின் ஓசை said...
ஜிரா..

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.என்னை பொருத்தவரையில் இது தேவை இல்லாத பதிவு.

மொதல்ல தமிழகத் தமிழன் என்னா பன்றதுன்னு தெரியாம முழிக்கிறானே? அத கவனிக்க சொல்லுங்க.அரசியல் கட்சிங்க விவரம் என்னான்னே புரியும்படி சொல்லாம இவன் தூரோகம் பன்னிட்டான்றதும் உடனே அடுத்தவன் அந்த கூப்பாட்டுக்கு பனிஞ்சி போறதும் அப்பப்பா... விளங்கிடும்.

யாரும் நியாயமான அளவு எவ்வளவு? அடுத்தவனுக்கும் அவன் பங்கை தரனும்னு யோசிக்கிற (யோசிக்க விரும்பர)மாதிரி தெரியல. மக்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆட்டி வைச்சு அத வோட்டா மாத்தறதுன்னு இருக்கங்க. இங்க எதிர்ப்பு வோட்டுதான் ஆட்சியையே நிர்னயிக்குது..//

முழுக்க முழுக்க ஒத்துக்கிறேன் ஓசை. நம்ம செய்ய இப்போதைக்கு ஒன்னுமில்லை. ஜோவுக்கு நான் கொடுத்திருக்கும் லிங்கைப் பாருங்கள். அதுல இருக்குற பின்னூட்டங்களைப் படியுங்கள்.

Mani - மணிமொழியன் said...

கர்நாடகாவிலிருந்து வந்து தமிழகத்தில் Settle ஆன கன்னட மக்கள் என்ன செய்வார்களோ அதை இவர்கள் செய்ய வேண்டுமோ?
அமைதியா இருந்தா போதும். விசுவாசம் என்பது பெரிய வார்த்தை.

மனதின் ஓசை said...

ஜிரா.. இப்பதான் அந்த லின்க்க பார்த்தேன்.. பதிவிற்கான காரணம் புரிகிறது.. நிங்கள் அங்கு எடுத்துவைத்த கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகிறேன்.
முக்கியமாக இந்த கருத்துடன்

//கருணாநிதியை நான் உத்தமர் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் தீர்ப்பு வந்த பிறகு அவர் சொன்னவை அனைத்துமே எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சொற்கள்.//
//இதற்கெல்லாம் உச்சகட்டமாக தமிழ்நாட்டுக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு ஐநூறு டி.எம்.சி தண்ணீர் வாங்கித் தராத கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று உளறிக் கொட்டினாரே ஜெயலலிதா....அவர் பேச்சு மாதிரி இருந்தால் போதும்....எங்கள் நிலமை உருப்படும்!
//

Unknown said...

தமிழ்நாட்டில் உள்ள கன்னடரும்,கர்னாடகாவில் உள்ள தமிழரும் தாங்கள் குடியிருக்கும் மாநிலத்துக்கு ஆதரவான நிலையை எடுத்தால் போதும். தமிழ்நாட்டில் உள்ள கன்னடரை தமிழராகத்தான் நாம் கருதுகிறோம். கோவையில் கன்னடம் பேசும் கவுடர்கள் ஏராளம் உண்டு. அவர்கள் காவிரி விசயத்தில் தமிழகத்துக்கு தான் ஆதரவு கொடுக்கிறார்கள்.அதே போல் கர்னாடக மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழர் கர்னாடகத்துக்கு ஆதரவு கொடுத்தால் நாம் குறைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.

இரண்டு மொழிகளிலும் நடிக்கும் கலைஞர்கள் இதில் சம்பந்தப்படாமலிருப்பது அவர்களுக்கு நல்லது. கன்னடத்தில் தமிழ் நடிகர் ரவிச்சந்திரன் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.அவர் பிழைப்பை ஏன் நாம் கெடுக்க வேண்டும்?

இது அரசு தீர்க்கவேண்டிய பிரச்சனை.இதை அரசியல் குளிர்காயலுக்கு பயன்படுத்தாமல் சாதுர்யமாக செயல்பட்டு தீர்க்கவேண்டும்.அந்த அனுபவம் கலைஞருக்கு கட்டாயம் உண்டு என நம்புகிறேன்

Unknown said...

I am a Tamil staying in Bnagalore because my disabled daughter will get her treatment here only.I find my kannada neighbours treating me with all love and respect.
During my school days during anti/hindi agitation, we were told we are all dravidians.
Now i find DMK,MDMK,AIADMK,DDMK etc are voicing Tamil sentiments but not DRAVIDIAN sentiments? why?
Tamil channels are banned, Swamijis from Pejeshwar math are agitating instead of calming the emotions.
Let Tamilians show they are the elder brothers of Dravidian movement.