இந்தச் சுட்டிக்குப் போங்க. அங்க ஒரு வீடியோ இருக்கும். அதப் பாருங்க. ஒரு மலையாளப் பாட்டு. பாத்துட்டு....தமிழ்ல்ல அது என்ன படம் என்ன பாட்டுன்னு கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பாக்கலாம். இது பத்தி நெறைய தகவல் கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும். இந்தப் பாட்டு ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, May 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
load பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P
சாரிங்க.. உங்க கேள்டிக்கு எனக்கு பதில் தெரியலை.. இந்த பாட்டே இப்போதான் முதன் முறை கேட்கிறேன்.
// .:: மை ஃபிரண்ட் ::. zei...
load பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P //
ஆகட்டும். ஆகட்டும். நீங்கதான் முதல்ல வந்தீங்க. ஒத்துக்கிறேன். பாட்டக் கேட்டுட்டு கருத்து சொல்லுங்க.
// .:: மை ஃபிரண்ட் ::. zei...
சாரிங்க.. உங்க கேள்டிக்கு எனக்கு பதில் தெரியலை.. இந்த பாட்டே இப்போதான் முதன் முறை கேட்கிறேன். //
ஆகா! மை ஃபிரண்ட்..கவுத்துட்டீங்களே. இந்தப் பாட்டை இன்னைக்குத்தான் நான் கேக்குறேன். இந்தப் பாட்டு தமிழ்ல வேற இசையமைப்பாளர். வேற பாடகி. வேற மெட்டு. ஆனா பாட்டைக் கேக்கும் போதும் பாக்கும் போதும்...தமிழ்ல என்ன பாட்டுன்னு தெரிஞ்சிருமே...எவ்வளவு ஹிட் பாட்டுங்க அது.
ஓ. ஆமாவா? சரி.. இன்னொரு தடவை கேட்டு பார்க்கிறேன். :-)
திரும்ப வர்றேன். ;-)
Collapse comments
.:: மை ஃபிரண்ட் ::. said...
load பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P
///
:)
நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா?!
பாட்டு நல்லா இருக்கோ இல்லையோ.. ஒன்னு மட்டும் தெரியுது... நாக்கு செத்துப்போய் காய்ஞ்சு கெடக்கறீர் ஓய்! :)
ஆட்டுகார அலமேலு...??
// மின்னுது மின்னல் zei...
:) //
என்னது இது புன்னகை. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. பாட்டக் கேளுங்கய்யா..கண்டுபிடிங்க...
// இளவஞ்சி zei...
நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா?!
பாட்டு நல்லா இருக்கோ இல்லையோ.. ஒன்னு மட்டும் தெரியுது... நாக்கு செத்துப்போய் காய்ஞ்சு கெடக்கறீர் ஓய்! :) //
ஆகா! எளவஞ்சி..கண்டுபிடிச்சிட்டீரே...சூப்பர்....எப்படிங்க இப்பிடி...என்னோட நெலமையும் சேத்துத்தான் கண்டுபிடிச்சிட்டீங்க. தெனத்துக்கும் இந்தூரு வடைதான். கோழியோ கறியோ..அத இதப் போட்டு ஆட்டிப் பொரிச்சுக் குடுக்குறாங்க. நாம் பாட்டுக்க வாய மூடிக்கிட்டு சாப்பிடுறேன்.
எனக்கென்னமோ எஜமான் படத்துல ரஜினியும் கவுண்டம்ணியும் திருடி திருடி சாப்பிட்டுட்டே ஒரு பாட்டு பாடுவாங்களே, அது மாதிரி இருக்கு.. ரைட்டா ரைட்டா ரைட்டா?
@இளவஞ்சி said...
//நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா?!//
ஓ.. இதுதான் அந்த பாடலா?
ஜி.ரா, உங்களை போல பழைய பாடலா கேட்டா எங்களைப்போல சின்ன புள்ளங்க எப்படி பதில் சொல்றது? :-P
அடுத்து கொஞச்ம் புது பாடலா கேளுங்க. நான் திரும்ப வந்து முயற்சிக்கிறேன். :-D
// மின்னுது மின்னல் zei...
ஆட்டுகார அலமேலு...?? //
மின்னல்...இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. அழுதுருவேன். என்னைய வெச்சிக் காமெடி கீமடி செய்யலையே! :-((((((((((((((((
// .:: மை ஃபிரண்ட் ::. zei...
எனக்கென்னமோ எஜமான் படத்துல ரஜினியும் கவுண்டம்ணியும் திருடி திருடி சாப்பிட்டுட்டே ஒரு பாட்டு பாடுவாங்களே, அது மாதிரி இருக்கு.. ரைட்டா ரைட்டா ரைட்டா? //
மலையாளத்துல மதுவும் ஸ்ரீவித்யாவும் வர்ராங்க. இதுல கவுண்டமணி யாரு? ஸ்ரீவித்யாவா? ஆனா மதுவோட பாத்திரத்துல தமிழ்ல நடிச்சது ரஜினிதாங்கோவ்....
@மின்னுது மின்னல்:
//
.:: மை ஃபிரண்ட் ::. said...
load பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P
///
:)
//
மின்னல்,
புரியுது புரியுது!:-)
//மலையாளத்துல மதுவும் ஸ்ரீவித்யாவும் வர்ராங்க. இதுல கவுண்டமணி யாரு? ஸ்ரீவித்யாவா? ஆனா மதுவோட பாத்திரத்துல தமிழ்ல நடிச்சது ரஜினிதாங்கோவ்.... //
:-)))))))
சரி.. பாதி ரைட்டா சொல்லிட்டேன்னு என்னை நானே தேத்திக்கிறேன். :-P
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காய்
நேத்து வச்ச மீன் கொழம்பு
என்னை மயக்குதய்யா
பாட்டு. 'படாபட்' ஜெயலட்சுமி பாடற சீன்.
// .:: மை ஃபிரண்ட் ::. zei...
@இளவஞ்சி said...
//நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா?!//
ஓ.. இதுதான் அந்த பாடலா?
ஜி.ரா, உங்களை போல பழைய பாடலா கேட்டா எங்களைப்போல சின்ன புள்ளங்க எப்படி பதில் சொல்றது? :-P
அடுத்து கொஞச்ம் புது பாடலா கேளுங்க. நான் திரும்ப வந்து முயற்சிக்கிறேன். :-D //
அட புதுப்பாட்டு கேக்கலாம். ஆனா இது ரொம்பவும் வித்தியாசமான சூழல். இளையராஜா இசையமைச்ச படம் மலையாளத்துக்குப் போகுது. அதுக்கு மெல்லிசை மன்னர் இசை. இத்தனைக்கும் அப்ப இளையராஜா தமிழுக்கு வந்த புதுசு. தமிழ்ல அப்ப விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர். அந்தச் சூழல் தெரிஞ்சா இந்தப் பாட்டை ரசிக்கலாம்.
//
மின்னல்...இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. அழுதுருவேன். என்னைய வெச்சிக் காமெடி கீமடி செய்யலையே! :-((((((((((((((((
///
எங்களுக்கு தெரியலனா இப்படிதான் எதாவது சொல்லி எஸ் அடிப்போம்..:)
வர்டா...
// .:: மை ஃபிரண்ட் ::. zei...
//மலையாளத்துல மதுவும் ஸ்ரீவித்யாவும் வர்ராங்க. இதுல கவுண்டமணி யாரு? ஸ்ரீவித்யாவா? ஆனா மதுவோட பாத்திரத்துல தமிழ்ல நடிச்சது ரஜினிதாங்கோவ்.... //
:-)))))))
சரி.. பாதி ரைட்டா சொல்லிட்டேன்னு என்னை நானே தேத்திக்கிறேன். :-P //
பாதி வாழ்த்து சொல்லீரலாமா? :-) அடுத்து ஒங்களுக்கு பாதி மீன் துண்டு கொடுக்கச் சொல்லீரலாம். அயிலா பொறிச்சதுண்டு..கறிமீன் வறுத்ததுண்டு...ரெண்டுலயும் பப்பாதி.
// துளசி கோபால் zei...
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காய்
நேத்து வச்ச மீன் கொழம்பு
என்னை மயக்குதய்யா
பாட்டு. 'படாபட்' ஜெயலட்சுமி பாடற சீன். //
கரெக்ட்டா பிடிச்சீங்க. டீச்சர் டீச்சர்தான். மெல்லிசா படாபட்டைப் பாத்துட்டு..பூசுனாப்புல ஸ்ரீவித்யாவைப் பாக்க வித்யாசமா இருக்கு. அதே மாதிரி ரஜினி-மது. மத்தபடி மலையாளத்துலயும் பாட்டு நல்லாத்தான் இருக்கு. எல்.ஆர்.ஈசுவரி பாடியிருக்காங்க.
// மின்னுது மின்னல் zei...
//
மின்னல்...இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. அழுதுருவேன். என்னைய வெச்சிக் காமெடி கீமடி செய்யலையே! :-((((((((((((((((
///
எங்களுக்கு தெரியலனா இப்படிதான் எதாவது சொல்லி எஸ் அடிப்போம்..:)
வர்டா... //
வாடாங்குறீங்களா? வர்ட்டாங்குறீங்களா? எப்படியோ..ஒரு முடிவோடதான் இருக்கீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பாத்தா நேத்துதான் காலேஜ்லேந்து வெளியில வந்ததுமாதிரி இருக்கீரு இப்டி பழைய பாட்டெல்லாம் கேட்டா எப்டி...
:)
அப்போ மீன்கறி பாட்டுக்கு இந்த ராகம் சூட்டாகுதுன்னு உங்க ரிசர்ச்ச முடியுங்க.
"நித்தம் நித்தம் நெல்லு சோறு" தானே..... என்ன ராகவன் ரொம்ப ஈசி கேள்விதான்.....வேர ஏதாவது பஞ்ச் இருக்கா?
பாட்டு நல்லா இருக்கு ஜிரா
பாட்டை கேக்கும் போது நம்ம தமிழுக்கும் மளையாலத்துக்கும் இருக்கற ஒற்றுமையை பத்தி இன்னொரு முறை ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
குறிப்பாக "தும்பைப்பூ சோறுண்டு.." என்று பாடும் பொழுது!! :-)
இதே படத்தில் வந்த செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட்டு மலையாளத்தில் எப்படி உருமாறி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.
ஷோபா / சரத்பாபு வேடத்தில் நடித்தவர்கள் யார்?
// சிறில் அலெக்ஸ் zei...
பாத்தா நேத்துதான் காலேஜ்லேந்து வெளியில வந்ததுமாதிரி இருக்கீரு இப்டி பழைய பாட்டெல்லாம் கேட்டா எப்டி...
:) //
நீங்க வேற சிறில்...எங்கப்பா சின்னப்பையனா இருந்தப்ப உள்ள பாட்டுகளும் கேப்பேன். நமக்கு இதெல்லாம் சமீபத்தைய பாட்டுங்க. :-)
// அப்போ மீன்கறி பாட்டுக்கு இந்த ராகம் சூட்டாகுதுன்னு உங்க ரிசர்ச்ச முடியுங்க. //
ராகமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா மீன்கறி தெரியும். அது நமக்கு சூட்டாகுதுன்னு வேணா ரிசர்ச்ச முடிக்கலாம். :-)
// Radha Sriram zei...
"நித்தம் நித்தம் நெல்லு சோறு" தானே..... என்ன ராகவன் ரொம்ப ஈசி கேள்விதான்.....வேர ஏதாவது பஞ்ச் இருக்கா? //
அப்பாடி...நீங்களாவது ஈசின்னு சொன்னீங்களே. ரொம்ப சந்தோஷம். இதுல பஞ்ச் என்னன்னா...எம்.எஸ்.வி, இளையராஜா ரெண்டு பேருமே தமிழ்ல அப்ப பெரிய இசையமைப்பாளர்கள். தமிழ்ல இளையராஜா போட்ட படத்துக்கு மலையாளத்துல எம்.எஸ்.வி. தமிழ்ல வாணி ஜெயராம். மலையாளத்துல எல்.ஆர்.ஈஸ்வரி. அதான். வழக்கமா இந்த மாதிரி ரீமேக் சமயங்கள்ள அதே இசையமைப்பாளரைப் பயன்படுத்துவாங்க. இல்லைன்னா அதே மெட்டுகள். இங்க ரெண்டுமே இல்லை.
// CVR zei...
பாட்டு நல்லா இருக்கு ஜிரா
பாட்டை கேக்கும் போது நம்ம தமிழுக்கும் மளையாலத்துக்கும் இருக்கற ஒற்றுமையை பத்தி இன்னொரு முறை ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
குறிப்பாக "தும்பைப்பூ சோறுண்டு.." என்று பாடும் பொழுது!! :-) //
ஆமா CVR. பாட்டு முழுக்கவே நமக்குப் புரியும். ஒன்னு ரெண்டு சொற்கள் வேணா தெரியாம இருக்கலாம். ஆனா பாட்டு புரியுறதுல கஷ்டம் இருக்காது.
// Sridhar Venkat zei...
இதே படத்தில் வந்த செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட்டு மலையாளத்தில் எப்படி உருமாறி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.
ஷோபா / சரத்பாபு வேடத்தில் நடித்தவர்கள் யார்? //
வாங்க ஸ்ரீதர் வெங்கட். எனக்கும் மத்த பாட்டுகளைக் கேக்கனும்னு ஆவலா இருக்கு. இது தற்செயலா மாட்டுன பாட்டு. மத்தத தேடிக்கிட்டிருக்கேன். ஷோபா, சரத்பாபு வேடங்கள்ள நடிச்சது யாருன்னும் தெரியலை...கண்டுபிடிக்கிறேன்.
எதாவது க்ளு தந்தால் கண்டுபிடிக்க முடியும்
:)
A"
ஜிரா,
கன்னடமும்,களி தெலுங்கும்,கவின் மளயாளமும
துளுவும் உன் உதிரத்தே உயிர்த்தேழுந்து ஒன்று
பலவாயிடினும்.....தமிழ் தாயிடம் பிறந்த தெலுங்கு
இசையை போலவும்,மளயாளம் கவிதை போல
என்று கூறும் கவிங்கன் யார் தயவு செய்து கூறுங்கள்.
எனக்கு மறந்து போய்விட்டது.
// Anonymous zei...
எதாவது க்ளு தந்தால் கண்டுபிடிக்க முடியும்
:)
A" //
என்னங்க இது? விடைய எல்லாரும் பின்னூட்டத்துல சொல்லீட்டாங்களே....அப்புறம் என்ன சார் குறிப்பு கொடுக்குறது.
// ulagam sutrum valibi zei...
ஜிரா,
கன்னடமும்,களி தெலுங்கும்,கவின் மளயாளமும
துளுவும் உன் உதிரத்தே உயிர்த்தேழுந்து ஒன்று
பலவாயிடினும்.....தமிழ் தாயிடம் பிறந்த தெலுங்கு
இசையை போலவும்,மளயாளம் கவிதை போல
என்று கூறும் கவிங்கன் யார் தயவு செய்து கூறுங்கள்.
எனக்கு மறந்து போய்விட்டது. //
வாங்க உலகம் சுற்றும் வாலிபி. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைப் பாத்துக்குங்க. ஒற்றுப்பிழையும் இருக்கு. ஆனா நல்ல தமிழ்ப் பாட்டைச் சொல்லீருக்கீங்க. ஆனா யார் எழுதுனதுன்னு தெரியாதே! :-(
ஜிரா,
என்னிடம் ஆங்கில விரல் பதிவுப் பலகை தான் உள்ளது.எழுதுருவை நினைவில் கொள்வது அரிதாய் இருக்கிறது.மேலும் கணிணியைப் பற்றிய அறிவு மிக குறைவு.பதித்த பின் தவற்றை திருத்தக்
கடினமாய் உள்ளது.இசையைப்போலவும்-என்றும்..கவிதையைப்போல-என்றும் சந்திப பிழையைத் தவிர்திருக்கலாம்.மோலும் கவிங்ஞன்-என்பது சரி.என்னைத் தவிர இங்கு எவரும் தமிழ் அறியாதது
வருந்தத்தக்கது.இன்னும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டவம் நன்றி.
Post a Comment