Thursday, May 17, 2007

தெலுங்குல கற்றாரைக் கற்றாரே

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு கேள்விப்பட்டிருப்பீங்க. உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருப்பாங்க. அவரு சவுண்டு இஞ்சினியரு...இவரு சுக்குநீருன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க.

இதுல பாருங்க...நம்ம தமிழ் இசையமைப்பாளருங்க ரெண்டு பேரு...தெலுங்குல காமுறுறாங்க. அட...இங்க போய்ப் பாருங்க. இது பத்தி ஒங்க கருத்து என்னன்னு எழுதுங்க.

இதுல மெல்லிசை மன்னரும்..இசைஞானியும் தமிழத்தான் தெலுங்கு மாதிரி பேசுறாங்க. இருந்தாலும் அது புரியாதவங்களுக்காக...கீழ கொடுத்திருக்கிறேன்.

மெல்லிசை மன்னர் : நான் இளையராஜாவின் விசிறி. அவரு நல்லா இசையமைக்கிறாரு. யாராவது நல்லா இசையமைச்சா...அவங்களுக்கு ஃபோன் போட்டு நல்லாயிருந்ததுன்னு சொல்றது என்னோட வழக்கம்.
(இளையராஜாவின் பேட்டியில...மெல்லிசை மன்னர்...அன்னக்கிளி பாட்டக் கேட்டுட்டு நேராவே ஸ்டூடியோவுக்குப் போய் பாராட்டுனதா சொன்னாரு. அது இப்ப நெனைவுக்கு வருது)

இசைஞானி : மெல்லிசை மன்னர் கிட்ட நெறைய ந்ல்லது இருக்கு. அவரப் பாத்து வளந்தவங்க நாங்க...ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்...இசையமைப்பாரு...மெட்டுப் போடுவாரு..இல்லைன்னா கவிஞர் பாட்டெழுதுனா அதுக்கு மெட்டுப் போடுவாரு. மொதல்ல டைரக்டர்...அப்புறம் புரொடுயூசர்...அப்படியே..ஆபீஸ் பாய் வந்தா..ஆபீஸ்பாயண்ணான்னு கூப்புட்டு அவர் கிட்டயும் பாட்டைப் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தாதான் அந்தப் பாட்டு ஓகேயாகும். இல்லைன்னா வேற பாட்டு போடுவாரு. இத இங்க கண்டிப்பாச் சொல்லனும்...இல்லைன்னா..இது யாருக்கும் தெரியாமப் போயிரும். அதான் இங்க சொல்றேன். ஆனா இந்த மாதிரி நல்ல பழக்கத்தை அவர் கிட்ட இருந்து நான் படிக்கலை. நான் மெட்டுப் போட்டா கவிஞருக்கு மட்டுந்தான். அப்புறம் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சப்புறந்தான் மத்தவங்களுக்கு.

மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.

அனைவரும் சிரிக்கின்றார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

57 comments:

said...

நான் வந்துட்டேன். ;-)

said...

இப்படி விடியற்காலையில போஸ்ட் பண்ணி இதை பாருங்க / கேளுங்க & கருத்து சொல்லுங்கன்னு சொல்றீங்க. எனக்கும் பார்க்கத்தான் ஆசை.. ஆனால், என் ரூமி முளிச்சிப்பாளோன்னுதான் பாவமா இருக்கு. :-P

said...

// .:: மை ஃபிரண்ட் ::. zei...
நான் வந்துட்டேன். ;-) //

வாங்க வாங்க. வாங்க மை ஃபிரண்ட். பாத்தீங்களா....தெலுங்குல எப்படி ரெண்டு பேரும் பொளந்து கட்டுறாங்கன்னு.. :-)))))))

said...

//தெலுங்குல எப்படி ரெண்டு பேரும் பொளந்து கட்டுறாங்கன்னு//

லோட் பண்ணிட்டே இருக்கு. ;-)

said...

தொலுங்குன்னு எல்லாம் இருக்கு எங்க வெட்டியை காணோம்? அவரு சு(ம்)மா இல்லையா?

said...

// .:: மை ஃபிரண்ட் ::. zei...
இப்படி விடியற்காலையில போஸ்ட் பண்ணி இதை பாருங்க / கேளுங்க & கருத்து சொல்லுங்கன்னு சொல்றீங்க. எனக்கும் பார்க்கத்தான் ஆசை.. ஆனால், என் ரூமி முளிச்சிப்பாளோன்னுதான் பாவமா இருக்கு. :-P //

முழிச்சிக்கிரட்டும். அதுல என்ன இருக்கு. அவங்களும் தெலுங்கு தெரிஞ்சிக்கிறட்டுமே. :-)

// //தெலுங்குல எப்படி ரெண்டு பேரும் பொளந்து கட்டுறாங்கன்னு//

லோட் பண்ணிட்டே இருக்கு. ;-) //

சூப்பர். அப்புறம் கேட்டுச் சொல்லுங்க.

said...

அங்க அங்க புரிஞ்சது இராகவன். முழுசா புரிஞ்சா இன்னும் இரசிக்கலாம்ன்னு நினைக்கிறேன். தெலுங்குல அவங்க நல்லா பேசறாங்களான்னு தெலுங்கர்கள் தான் சொல்லணும்.

said...

// சந்தோஷ் aka Santhosh zei...
தொலுங்குன்னு எல்லாம் இருக்கு எங்க வெட்டியை காணோம்? அவரு சு(ம்)மா இல்லையா? //

தெரியலையே சந்தோஷ். வெட்டி ரொம்பப் பெரியவரு. அவரு சு(ம்)மா கூட நம்ம பதிவுக்கெல்லாம் வர மாட்டாரு. இதுல தெலுங்குன்னு போட்டிருக்கேன். ஆகையால வர்ரதுக்கு வாய்ப்பிருக்குன்னுதான் நெனைக்கிறேன். பொறுத்திருந்து பாப்பாம்.

said...

// குமரன் (Kumaran) zei...
அங்க அங்க புரிஞ்சது இராகவன். முழுசா புரிஞ்சா இன்னும் இரசிக்கலாம்ன்னு நினைக்கிறேன். தெலுங்குல அவங்க நல்லா பேசறாங்களான்னு தெலுங்கர்கள் தான் சொல்லணும். //

என்ன குமரன்...விளையாடுறீங்களா? அவங்க பேசுனது தெலுங்கா? தமிழுங்கு-ன்னு வேணும்னா சொல்லலாம். அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதானே. :-)

said...

பார்த்தாச்சு! யாருங்க அந்த அம்மணி? ரொம்ப ஃபீல் பண்ணி அழுவுறாங்க? ;-)

said...

ஆபிஸ்ல இருக்கேன்... வீட்டுக்கு போயிட்டு கேட்டு சொல்றேன்...

என்ன ஒரு முக்கியமான விஷயம்னா நமக்கு SPB, ராஜா ரெண்டு பேருமே ரொம்ப பிடிக்கும்...

அதுலயும் SPB ரொம்ப ஸ்பெஷல்.. காரணம் மனுசனோட தன்னடக்கம் தான்...

said...

சொல் பல (தெலுங்கு) சொல் பதிவு ஏதாவது இருந்தா மொழிபெயர்த்துக்கலாமே.
:)

நம்ம சினிமாக்காரங்க மாறி மாறி புகழ்ந்துக்கிறதுல பெரியவங்க. ஆனா இவங்க நிஜமாவே பெரியவங்க.

said...

ராகவா!
இது தெலுங்குக் கொலை என நினைக்கிறேன். அந்தப் பெண் கண்ணீர் விடுவதைக் கவனித்தீர்களா?

said...

//G.Ragavan said...

// சந்தோஷ் aka Santhosh zei...
தொலுங்குன்னு எல்லாம் இருக்கு எங்க வெட்டியை காணோம்? அவரு சு(ம்)மா இல்லையா? //

தெரியலையே சந்தோஷ். வெட்டி ரொம்பப் பெரியவரு. அவரு சு(ம்)மா கூட நம்ம பதிவுக்கெல்லாம் வர மாட்டாரு. இதுல தெலுங்குன்னு போட்டிருக்கேன். ஆகையால வர்ரதுக்கு வாய்ப்பிருக்குன்னுதான் நெனைக்கிறேன். பொறுத்திருந்து பாப்பாம். //

தெய்வமே,
இதை பார்க்காம நான் பாட்டுனு பின்னூட்டம் போட்டுட்டேன்... ஜி.ரா ப்ளாக்ல நம்ம பேர் வரதுக்கே சந்தோஷப்படனும்...

நான் இங்க வந்து எதுவும் தெரியாம பேசி மாட்டிக்க கூடாதுனு தான் எதுவும் சொல்றதில்லை...

said...

ஏமண்டி ராகவ்காரு,

இப்புடு மீரு ஹைத்ராபாத்லோ உன்னாரா? :-))))

தெலுகு பாக வச்சிந்தா?

said...

அண்ணா, நமக்கு இதெல்லாம் புரியாது. ஆனா ஒரு சந்தேகம். க்ளோசப்பில் காண்பித்த அந்த ரெண்டு அக்காங்க யாரு? இதை மட்டும் சொல்லிடுங்க.

said...

என் பின்னூட்டத்தை அரை மணி நேரமாக வெளியிடாததை காட்டுத்தனமாக கண்டிக்கிறேன்...

said...

சுவையா இருந்தது...
//நம்ம தமிழ் இசையமைப்பாளருங்க ரெண்டு பேரு//
அவங்க ரெண்டு பேருமே தெலுங்கு படங்களுக்கும் இசை அமைச்சிருக்காங்க இல்லையா....

இன்றைக்கும் தெலுங்கு படங்களின் சிறப்பான இசை அமைப்பாளர் இதுவரை இளையராஜா தான் என நம்பும் தெலுங்கர்களும் உண்டு!

உதாரணத்திற்கு:
இங்கே

said...

ஜிரா
எம்.எஸ்.வி.அவர்கள் சுத்த மலயாளி.(சரிகமபதநிச)ஏழு மக்கள் ,முன்று பெண்கள்.இரண்டவது ,பெண்,பேத்தியைதான் இதில் focus செய்யபடுகிறார்கள்.
முதல் பெண்என்னுடைய friend.

said...

இளையராஜா நன்றாகவே மாட்லாடுகிறார்.

விசுவநாதனின் தாய்மொழி மலையாளம் இல்லியோ (பாலக்காடு)?

அதெல்லாம் சரி... அந்த ஒளிப்பதிவாளர் அடிக்கடி காட்டும் அந்த அம்மனிகள் யார்? நடிகைகளா?

அவர்களுடைய முகபாவங்கள் மிக சுவாரசியமாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு வேண்டியவர்கள் போல :-))))))))

said...

// .:: மை ஃபிரண்ட் ::. zei...
பார்த்தாச்சு! யாருங்க அந்த அம்மணி? ரொம்ப ஃபீல் பண்ணி அழுவுறாங்க? ;-) //

// இலவசக்கொத்தனார் zei...
அண்ணா, நமக்கு இதெல்லாம் புரியாது. ஆனா ஒரு சந்தேகம். க்ளோசப்பில் காண்பித்த அந்த ரெண்டு அக்காங்க யாரு? இதை மட்டும் சொல்லிடுங்க. //

// Sridhar Venkat zei...
அதெல்லாம் சரி... அந்த ஒளிப்பதிவாளர் அடிக்கடி காட்டும் அந்த அம்மனிகள் யார்? நடிகைகளா?

அவர்களுடைய முகபாவங்கள் மிக சுவாரசியமாக இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு வேண்டியவர்கள் போல :-)))))))) //

மை ஃபிரண்ட், கொத்ஸ், ஸ்ரீதர்...ஒங்க மூனு பேருக்கும் நான் விடை சொல்ல முடியலை. ஆனா உலகம் சுற்றும் வாலிபி சொல்லீருக்காங்க. இப்படி...

// ulagam sutrum valibi zei...
ஜிரா
எம்.எஸ்.வி.அவர்கள் சுத்த மலயாளி.(சரிகமபதநிச)ஏழு மக்கள் ,முன்று பெண்கள்.இரண்டவது ,பெண்,பேத்தியைதான் இதில் focus செய்யபடுகிறார்கள்.
முதல் பெண்என்னுடைய friend. //

நன்றி உலகம் சுற்றும் வாலிபி. அந்த வீடியோவைப் பார்த்த எல்லாருக்கும் வந்த ஐயம் இது. தமிழ்ச்சங்கத்தின் ஐயத்தைத் தனிவொரு பதிவராக வந்து தீர்த்து வைத்த உலகம் சுற்றும் வாலிபிக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

said...

// வெட்டிப்பயல் zei...
ஆபிஸ்ல இருக்கேன்... வீட்டுக்கு போயிட்டு கேட்டு சொல்றேன்... //

கேளு கேளு. கேட்டுட்டுச் சொல்லு.

// என்ன ஒரு முக்கியமான விஷயம்னா நமக்கு SPB, ராஜா ரெண்டு பேருமே ரொம்ப பிடிக்கும்...

அதுலயும் SPB ரொம்ப ஸ்பெஷல்.. காரணம் மனுசனோட தன்னடக்கம் தான்... //

இளையராஜாவின் இசை பிடிக்கவே பிடிக்காது என்று யார் சொல்ல முடியும். பாலு நல்ல versatile பாடகர். அதிலும் மறுப்பு கிடையாது. தன்னடக்கம் இருக்கலாம். ஆனால் அவரிடம் பிடிக்காதது ஒன்று உண்டு. பாலு ரசிகர்கள் சண்டைக்கு வர வேண்டாம். இது ஒரு சிறிய observation மட்டுமே.

ஒவ்வொரு மேடையிலும் இவர் மெல்லிசை மன்னருக்கு ரத்னா அவார்டோ அந்த அவார்டோ யாராவது வாங்கித் தரக்கூடாதா என்று கதறுவார். இத்தனைக்கும் இவரை ஆரம்பகாலங்களில் வளர்த்து விட்டது அவர்தான். ஆனால் பாலு அதற்கு என்ன செய்தார்? சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதுவுமில்லாமல் அவரது ஸ்டுடியோவிற்கும் கண்டசாலாவின் பெயரையே வைத்தார் என நினைவு.

இதுதான் என்னுடைய வருத்தம். இதனால் பாலுவின் திறமையில் எந்தக் குறைவும் இருப்பதாகச் சொல்வதாகாது.

said...

// சிறில் அலெக்ஸ் zei...
சொல் பல (தெலுங்கு) சொல் பதிவு ஏதாவது இருந்தா மொழிபெயர்த்துக்கலாமே.
:) //

நீங்க வேற சிறில்.....இளையராஜா பேசுனதுல பாதிக்குப் பாதி தமிழ். விஸ்வநாதன் தெரிஞ்சதச் சொன்னாரு. அப்புறம் தமிழைக் கலந்தாரு. நல்லவேளைக்கு இங்கிலீசுக்குத் தாவிட்டாரு. :)

// நம்ம சினிமாக்காரங்க மாறி மாறி புகழ்ந்துக்கிறதுல பெரியவங்க. ஆனா இவங்க நிஜமாவே பெரியவங்க. //

உண்மை. உண்மை. உண்மை.

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) zei...
ராகவா!
இது தெலுங்குக் கொலை என நினைக்கிறேன். அந்தப் பெண் கண்ணீர் விடுவதைக் கவனித்தீர்களா? //

உண்மைதான் ஐயா. இரண்டு இசையமைப்பாளர்களும் செய்தது தெலுங்குக் கொலைதான். :) அந்த இரண்டு பெண்களும் மெல்லிசை மன்னரின் மகளும் பேத்தியுமாம். உலகம் சுற்றும் வாலிபி சொல்லீருக்காங்க.

said...

வணக்கம் ராகவன்

வீடு போய்த்தான் வீடியோ பார்க்கணும்.
பாலு, கண்டசாலாவுக்கு சிலையெழுப்பிக் கெளரவித்தார். தன் முதற்பட இசையமைப்பாளர் கோதண்டபாணி பெயரில் சென்னையில் ஸ்டுடியோ கட்டியிருக்கிறார்.

said...

// வெட்டிப்பயல் zei...
//G.Ragavan said...

// சந்தோஷ் aka Santhosh zei...
தொலுங்குன்னு எல்லாம் இருக்கு எங்க வெட்டியை காணோம்? அவரு சு(ம்)மா இல்லையா? //

தெரியலையே சந்தோஷ். வெட்டி ரொம்பப் பெரியவரு. அவரு சு(ம்)மா கூட நம்ம பதிவுக்கெல்லாம் வர மாட்டாரு. இதுல தெலுங்குன்னு போட்டிருக்கேன். ஆகையால வர்ரதுக்கு வாய்ப்பிருக்குன்னுதான் நெனைக்கிறேன். பொறுத்திருந்து பாப்பாம். //

தெய்வமே,
இதை பார்க்காம நான் பாட்டுனு பின்னூட்டம் போட்டுட்டேன்... ஜி.ரா ப்ளாக்ல நம்ம பேர் வரதுக்கே சந்தோஷப்படனும்... //

வாங்க வாங்க வெட்டி. நல்லாயிருக்கீங்களா. :) நீங்க சொன்னது ரொம்பச் சந்தோஷமா இருக்குங்க. இன்னைக்கு ஒங்க பின்னூட்டம் பாத்ததுக்கு ஒரே கொண்டாட்டந்தான் போங்க. முடிவே பண்ணியாச்சு. :-)))))

// நான் இங்க வந்து எதுவும் தெரியாம பேசி மாட்டிக்க கூடாதுனு தான் எதுவும் சொல்றதில்லை... //

என்னப்பா கொடுமை இது....நான் என்ன ராக்கெட் செய்றது பத்தியா பதிவு போடுறேன். கடைசி ரெண்டு பதிவு யூடுயூப் சினிமா பதிவுகள். அதுக்கு முன்னாடி பதிவு போட்டு நாளாச்சு. நீயெல்லாம் வந்துதானே என்னை வளர்த்து விடனும். :)

said...

// துளசி கோபால் zei...
ஏமண்டி ராகவ்காரு,

இப்புடு மீரு ஹைத்ராபாத்லோ உன்னாரா? :-))))

தெலுகு பாக வச்சிந்தா? //

லேது டீச்சர். இப்புடு உண்டேதி நெதர்லாண்ட்ஸு. இங்கட தெலுகு மாட்லாடகே எவரும் லேது. இங்கிலீசே ததிங்கினத்தம். டச்சு நேர்ச்சுகாவாலி.

said...

// வெட்டிப்பயல் zei...
என் பின்னூட்டத்தை அரை மணி நேரமாக வெளியிடாததை காட்டுத்தனமாக கண்டிக்கிறேன்... //

மன்னிச்சுக்கப்பா...நான் தூங்கீட்டேன். 11.30 ஆயிருச்சு. இன்னைக்கு ஆபீஸ் போகனும்ல..அதான் தூங்கீட்டேன். இன்னைக்குப் பிரசுரம் செஞ்சு அதுக்கு ரெண்டு பின்னூட்டமும் போட்டுட்டேன். சரி. நீ வீட்டுக்குப் போய் கேட்டியா?

said...

// ஜீவா (Jeeva Venkataraman) zei...
சுவையா இருந்தது...
//நம்ம தமிழ் இசையமைப்பாளருங்க ரெண்டு பேரு//
அவங்க ரெண்டு பேருமே தெலுங்கு படங்களுக்கும் இசை அமைச்சிருக்காங்க இல்லையா....

இன்றைக்கும் தெலுங்கு படங்களின் சிறப்பான இசை அமைப்பாளர் இதுவரை இளையராஜா தான் என நம்பும் தெலுங்கர்களும் உண்டு!

உதாரணத்திற்கு:
இங்கே //

வாங்க ஜீவா. நல்ல சுட்டியைக் கொடுத்திருக்கீங்க. மாலை உக்காந்து அதப் பாக்குறேன். இளையராஜா தெலுங்கிலும் நல்ல பெயர் வாங்கிய இசையமைப்பாளர்தான். மறுக்கவே முடியாது. கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு இசையமைச்சிருப்பாருன்னு நெனைக்கிறேன். கூடயும் இருக்கலாம்.

said...

// கானா பிரபா zei...
வணக்கம் ராகவன்

வீடு போய்த்தான் வீடியோ பார்க்கணும்.
பாலு, கண்டசாலாவுக்கு சிலையெழுப்பிக் கெளரவித்தார். தன் முதற்பட இசையமைப்பாளர் கோதண்டபாணி பெயரில் சென்னையில் ஸ்டுடியோ கட்டியிருக்கிறார். //

ஓ அப்படியா...ஸ்டூடியோ சென்னைல..சிலை ஐதராபாத்திலா. இசையமைப்பாளர் கோதண்டபாணிதான் ஹோட்டல் ரம்பா படத்துக்கு இசையமைச்சவரா. ஏன்னா அதுதான் அவரோட மொதல் பாட்டுன்னு கேள்விப்பட்டேன். ஆனா படம் வரலையாம். எல்.ஆர்.ஈசுவரி கூடச் சேர்ந்து பாடுன பாட்டுன்னு நெனைக்கிறேன்.

said...

பின்னர் மரியாதை ராமண்ணா என்ற படத்தில் பாடினார், படமும் வந்தது, அதுவே படத்தில் வந்த முதல் பாட்டு

said...

// கானா பிரபா zei...
பின்னர் மரியாதை ராமண்ணா என்ற படத்தில் பாடினார், படமும் வந்தது, அதுவே படத்தில் வந்த முதல் பாட்டு //

ஆகா...தகவல் களஞ்சியமே...தமிழில் முதலில் பாடியது இயற்கை என்னும் இளைய கன்னி பாடலாக இருந்தாலும் வெளி வந்தது அடிமைப் பெண் படத்தில் உள்ள ஆயிரம் நிலவே வா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

said...

விவாத களம்

இளையராஜாவும் எமெஸ்வீயும் அவங்ககளை மாறி மாறி பாராட்டிக்கிறது நல்லா இருக்கா அல்லது ஜிராவும் வெட்டியும் அப்படி பாராட்டுறது நல்லா இருக்கா!

said...

எனக்கு சுத்தமா பிரியல பா!!
ஏதோ நீங்க போட்டு இருக்கீங்கன்னு சு(ம்)மாவேனும் பாத்து வெச்சேன் அம்புட்டுதேன்!! :P

said...

இராகவன் அண்ணா... ஒன்றுமே புரியேல!!!!!
ஏதோ நானு.. நீனு... செப்பு... சூடு..இப்படியெல்லாம் பேசிக்கிறாங்க!!!

said...

என்னா நக்கலு?..ம்.ம்..ம்!!!!!!

said...

சால பாக உந்தி !

நம் தமிழவருக்கே பாசைகளு சென்னாகி ஸ்பஷ்டமாக பருத்தே ! சென்னாகி மாத்தாடுத்தாரு இரடு மியூசிக் டைரக்ரருகளுமே!

:)

said...

என்ன ஜிரா! - உங்க தாய்மொழி தெலுங்கா?! பூந்து வெளாடுறீங்க! ;))

said...

// இலவசக்கொத்தனார் zei...
விவாத களம்

இளையராஜாவும் எமெஸ்வீயும் அவங்ககளை மாறி மாறி பாராட்டிக்கிறது நல்லா இருக்கா அல்லது ஜிராவும் வெட்டியும் அப்படி பாராட்டுறது நல்லா இருக்கா! //

கொத்ஸ்...இது ஒங்களுக்கே நல்லாயிருக்கா...ரெண்டு இசைமேதைகள் ஒருத்தர ஒருத்தர் புகழ்றாங்க....சரி..அப்படியே வெச்சுக்குவோம்...எங்க ரெண்டு பேருல யாரு மெல்லிசைமன்னர், யாரு இசைஞானி?

said...

// CVR zei...
எனக்கு சுத்தமா பிரியல பா!!
ஏதோ நீங்க போட்டு இருக்கீங்கன்னு சு(ம்)மாவேனும் பாத்து வெச்சேன் அம்புட்டுதேன்!! :P //

என்னங்க இது...இப்பிடிச் சொல்லீட்டீங்க....இருங்க..வேற யாரும் இதே மாதிரிக் கேக்குறாங்களான்னு பாக்குறேன்.

// Mayooresan zei...
இராகவன் அண்ணா... ஒன்றுமே புரியேல!!!!!
ஏதோ நானு.. நீனு... செப்பு... சூடு..இப்படியெல்லாம் பேசிக்கிறாங்க!!! //

அடடே! மயூரேசா..ஒனக்குமா...சரி..ஒங்க ரெண்டு பேருக்காகவும்..விளக்கமா சொல்றேன்.

மெல்லிசை மன்னர் : நான் இளையராஜாவின் விசிறி. அவரு நல்லா இசையமைக்கிறாரு. யாராவது நல்லா இசையமைச்சா...அவங்களுக்கு ஃபோன் போட்டு நல்லாயிருந்ததுன்னு சொல்றது என்னோட வழக்கம்.
(இளையராஜாவின் பேட்டியில...மெல்லிசை மன்னர்...அன்னக்கிளி பாட்டக் கேட்டுட்டு நேராவே ஸ்டூடியோவுக்குப் போய் பாராட்டுனதா சொன்னாரு. அது இப்ப நெனைவுக்கு வருது)

இசைஞானி : மெல்லிசை மன்னர் கிட்ட நெறைய ந்ல்லது இருக்கு. அவரப் பாத்து வளந்தவங்க நாங்க...ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்...இசையமைப்பாரு...மெட்டுப் போடுவாரு..இல்லைன்னா கவிஞர் பாட்டெழுதுனா அதுக்கு மெட்டுப் போடுவாரு. மொதல்ல டைரக்டர்...அப்புறம் புரொடுயூசர்...அப்படியே..ஆபீஸ் பாய் வந்தா..ஆபீஸ்பாயண்ணான்னு கூப்புட்டு அவர் கிட்டயும் பாட்டைப் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தாதான் அந்தப் பாட்டு ஓகேயாகும். இல்லைன்னா வேற பாட்டு போடுவாரு. இத இங்க கண்டிப்பாச் சொல்லனும்...இல்லைன்னா..இது யாருக்கும் தெரியாமப் போயிரும். அதான் இங்க சொல்றேன். ஆனா இந்த மாதிரி நல்ல பழக்கத்தை அவர் கிட்ட இருந்து நான் படிக்கலை. நான் மெட்டுப் போட்டா கவிஞருக்கு மட்டுந்தான். அப்புறம் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சப்புறந்தான் மத்தவங்களுக்கு.

மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.

அனைவரும் சிரிக்கின்றார்கள்.

said...

// ulagam sutrum valibi zei...
என்னா நக்கலு?..ம்.ம்..ம்!!!!!! //

எதைச் சொல்றீங்க வாலிபி? வெளக்கமாச் சொல்லுங்களேன்...எனக்கு வெளக்கமா வெளக்குனாத்தான் புரியும். கொஞ்சம் மண்டு. :)

// கோவி.கண்ணன் zei...
சால பாக உந்தி !

நம் தமிழவருக்கே பாசைகளு சென்னாகி ஸ்பஷ்டமாக பருத்தே ! சென்னாகி மாத்தாடுத்தாரு இரடு மியூசிக் டைரக்ரருகளுமே!

:) //

என்னமா மாத்தாடுறாங்க பாத்தீங்களா கோவி. விட்டா தெலுங்கு காப்பியங்களே எழுதீருவாங்க போல.

said...

//மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.//

இவ்வளவு தன்னடக்கமா???

அவருக்கு நகைச்சுவை மன்னருனு பேரு வெச்சிருக்கலாம் ;)

said...

// நியோ / neo zei...
என்ன ஜிரா! - உங்க தாய்மொழி தெலுங்கா?! பூந்து வெளாடுறீங்க! ;)) //

என்னங்க இது..இப்பிடி அவசரப்பட்டு முடிவு பண்றீங்க? போன பதிவு பாத்தீங்களா? மலையாளம். அடுத்து வங்காளத்துல ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன். அப்புறம் யாராவது துய் பங்களான்னு கேட்டுருவாங்களோ! :) மானச மைனே வரு என்ற மலையாளப் பாட்ட வங்காளத்துல கேட்டா எப்படி இருக்கும்னு பதிவு போட இருந்தேன். இப்ப போடலை.

said...

// வெட்டிப்பயல் zei...
//மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.//

இவ்வளவு தன்னடக்கமா???

அவருக்கு நகைச்சுவை மன்னருனு பேரு வெச்சிருக்கலாம் ;) //

தாராளமா வைக்கலாம். காதலா காதலா பாத்தியா? காதல் மன்னன்...நகைச்சுவைல கலக்கியிருப்பாரு. மேல அவரு அப்படிச் சொல்லீட்டு..அவரே சிரிக்கிறாரு. தன்னடக்கம்னு சொல்றத விட வெளிப்படையா பேசுறவரு. ஒரு நிகழ்ச்சி சொல்வாங்க. தேவர் தெரியுந்தானே. அவருடைய மொதப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைச்சிருக்காரு. அந்த சமயத்துலதான் இவரு இசைத்துறைல நுழைஞ்சு கலக்கத் தொடங்கீருக்காரு. ரெண்டாவது படத்துக்கு தேவர் இவர் கிட்ட வந்திருக்காரு. இவரும் பணத்த வாங்கீட்டு அம்மா கிட்ட போய் குடுத்திருக்காரு. விஷயத்தைச் சொன்னதும் அவங்கம்மா பளார்னு அறைஞ்சுட்டாங்களாம். ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை செஞ்சிருக்காரு. அப்ப இவருக்கு அவர் வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து காசு கொடுத்தாராம். அந்த நன்றிய மறந்துட்டு...எப்படித் துரோகம் செய்யலாம்னு அவங்கம்மா அறைஞ்சுட்டாங்களாம். கடைசி வரைக்கும் தேவர் பிலிம்சுக்கு இவர் இசையமைக்கவே இல்லையே. கே.வி.எம்கு அப்புறம் சங்கர்-கணேஷ், இளையராஜான்னு இசையமைச்சாலும்....தேவரோட நல்ல நட்பு இருந்தாலும்..இவர் இசையமைக்கவேயில்லை.

said...

//ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை செஞ்சிருக்காரு.//

ஒரு சின்ன சந்தேகம்,
மகாதேவன்கிட்ட வேலை செய்தது மெல்லிசை மன்னரா இல்லை தேவரா?

said...

ஜிரா!

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!

>> என்னங்க இது..இப்பிடி அவசரப்பட்டு முடிவு பண்றீங்க? >>

சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்!

அப்புறம் இன்னொரு சங்கதி - இது சீரியசானது. கோவி கண்ணன் பதிவுல (சிதம்பரம் - தேவாரம்) "நான் போய்ப் பாடினா விடுவாங்களா? இல்ல அதையும் தடுப்பாங்களா"-னு கேட்டிருக்கிங்க.

எனக்கு உண்மையிலேயே - சமயப் பற்றுள்ள பதிவர்கள் - ஒரு குழாமாகப் போயி சிதம்பரம் கோவிலில் - தேவாரம், பாட முயற்சி செய்தால் என்ன ? - என்று தோன்றுகிறது.

'சமயப் பற்றுள்ள'- என்று எச்சரிக்கையாகத்தான் சொல்லியிருக்கிறேன். இல்லாவிட்டால் 'புனிதப் பசுக்கள்' அதற்கும் 'அய்யய்ய்யோ! இந்து விரோதிகள் கோவிலை அசிங்கம் பண்றாளே'னு சொல்லிருங்க!

உண்மையிலேயே, சமய நம்பிக்கை உள்ளவர்கள், நீங்கள், குமரன், இன்னும் வேறு யாரும் வர விருப்பம் இருந்தால் - வலையுலகப் பதிவர்கள் - இதை ஒரு சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம்.

Social Experiment என்பது நேரிடையாக பரிசோதித்துப் பார்க்கும்போது - இவ்விடயத்தின் ஆழம் இன்னும் புரிதலைக் கொடுக்கலாம்.

இது ஒரு ஆலோசனை மட்டுமே :)

அப்புறம் அந்த வங்காள மொழிப்பாடலைப் போடுங்கள்!

'மொழி'யின் பேரால் - ஒரு தனிதேசமே அமைத்த மாவீரர்களின் மொழி - இனிமையாகத்தான் இருக்கும்.

உங்களை யாராவது நீ வங்காளியா என்றால் அது பாராட்டே; அதற்காக வருந்த வேண்டியதில்லை :)

said...

// வெட்டிப்பயல் zei...
//ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை செஞ்சிருக்காரு.//

ஒரு சின்ன சந்தேகம்,
மகாதேவன்கிட்ட வேலை செய்தது மெல்லிசை மன்னரா இல்லை தேவரா? //

ரெண்டு பேரும் இல்லை. மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை பாத்திருக்காரு. அப்ப விஸ்வநாதன் எங்கையோ ஆபீஸ்பாயா இருந்திருக்காரு. அப்படியிருக்குறப்போ ஒரு நாள் ஏதோ பண்டிகைக்கோ என்னவோ வேட்டி துண்டு எடுத்துக் கொடுத்து கையில காசு குடுத்திருக்காரு. அது ஒரு நிகழ்ச்சி. அதுக்கப்புறம் மகாதேவனுக்கு சினிமால மொதல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்புறமா விஸ்வநாதனுக்குக் கிடைச்சிருக்கு. தேவர் மொதப் படம் எடுக்கும் போது விஸ்வநாதனப் போடனும்னு நெனச்சாராம். ஆனா ஏதோ காரணத்தால மகாதேவன் இசையமைச்சிருக்காரு. அடுத்த படத்துக்கு விஸ்வநாதன் கிட்ட தேவர் போயிருக்காரு. இவரும் ஒத்துக்கிட்டு காசயையும் வாங்கி அம்மா கிட்ட குடுத்திருக்காரு. முந்தி மகாதேவன் வேட்டி துண்டு எடுத்துக் குடுத்தத அம்மா கிட்ட ஏற்கனவே சொல்லீருக்காரு. அது தெரிஞ்சதால அந்தம்மா அவரை அறைஞ்சுட்டாங்களாம். புரிஞ்சதா? வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை. :(

said...

// நியோ / neo zei...
ஜிரா!

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!

>> என்னங்க இது..இப்பிடி அவசரப்பட்டு முடிவு பண்றீங்க? >>

சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்!

அப்புறம் இன்னொரு சங்கதி - இது சீரியசானது. கோவி கண்ணன் பதிவுல (சிதம்பரம் - தேவாரம்) "நான் போய்ப் பாடினா விடுவாங்களா? இல்ல அதையும் தடுப்பாங்களா"-னு கேட்டிருக்கிங்க.

எனக்கு உண்மையிலேயே - சமயப் பற்றுள்ள பதிவர்கள் - ஒரு குழாமாகப் போயி சிதம்பரம் கோவிலில் - தேவாரம், பாட முயற்சி செய்தால் என்ன ? - என்று தோன்றுகிறது.

'சமயப் பற்றுள்ள'- என்று எச்சரிக்கையாகத்தான் சொல்லியிருக்கிறேன். இல்லாவிட்டால் 'புனிதப் பசுக்கள்' அதற்கும் 'அய்யய்ய்யோ! இந்து விரோதிகள் கோவிலை அசிங்கம் பண்றாளே'னு சொல்லிருங்க!

உண்மையிலேயே, சமய நம்பிக்கை உள்ளவர்கள், நீங்கள், குமரன், இன்னும் வேறு யாரும் வர விருப்பம் இருந்தால் - வலையுலகப் பதிவர்கள் - இதை ஒரு சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம்.

Social Experiment என்பது நேரிடையாக பரிசோதித்துப் பார்க்கும்போது - இவ்விடயத்தின் ஆழம் இன்னும் புரிதலைக் கொடுக்கலாம்.

இது ஒரு ஆலோசனை மட்டுமே :) //

நல்ல ஆலோசனைதான். தவறில்லை. நான் தயார். மற்ற நம்பிக்கையுள்ள வலைப்பதிவர்கள் ஆயத்தமாக இருந்தால் மற்ற வலைப்பதிவு அன்பர்களின் துணையோடு நிச்சயம் செய்யலாம். எனக்கும் தேவாரம் கொஞ்சம் பழக்கம். திருவாசகமும் கொஞ்சம் பழக்கம். திருப்புகழும் கூட.

// அப்புறம் அந்த வங்காள மொழிப்பாடலைப் போடுங்கள்!

'மொழி'யின் பேரால் - ஒரு தனிதேசமே அமைத்த மாவீரர்களின் மொழி - இனிமையாகத்தான் இருக்கும்.

உங்களை யாராவது நீ வங்காளியா என்றால் அது பாராட்டே; அதற்காக வருந்த வேண்டியதில்லை :) //

இல்லை. நான் கிண்டலாகச் சொன்னேன். தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அது உணர்ச்சியால் ஒப்புக்கொள்வது. அந்த உணர்ச்சி இல்லையென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த வகையில் வங்காளிகளிடம் தமிழர்கள் கற்க வேண்டியது எக்கச்சக்கமாக உள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பர்களும் வங்காளிகளே.

அந்தப் பதிவை பின்னால் இடுகிறேன்.

said...

//உலகம் சுற்றும் வாலிபிக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.//
இது தான் நக்கல்.!இது தான் நக்கல்.!

said...

>> தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அது உணர்ச்சியால் ஒப்புக்கொள்வது. >>

பெரியாரைப் படித்து வளர்ந்தவனுக்கு இது கூடவா புரியாது ஜிரா?

ஆயினும், இந்த வாதம் (குறைந்தபட்சம் தமிழ்ச்சூழலில் என்று வைத்துக் கொள்ளலாம்) - இப்போதெல்லாம், தமிழ்த் தேசிய உணர்வை -அல்லது அதன் முன்னெடுப்பை, வெளிப்பாட்டை - முறியடிக்க நினைக்கும், முனை மழுங்கச் செய்ய நினைக்கும் - அவ்வறான அரசியலை தோற்கடிக்க நினைக்கும் - சிறுமதியாளர்களால் - ஒரு சாமர்த்தியமான 'முகமூடியாய்' பயன்படுத்தப்படுகிறது (அதாவது மொழி என்பது பிறப்பால் மட்டுமன்று; உணர்ச்சியாலும்தான் என்கிற வாதம்).

நான் இவ்வாதத்தை முழுமையாக நிராகரிப்பவன் அல்லன்; ஆனால், இதை பயன்படுத்துவோரின் 'அரசியல்' பெரும்பான்மையான சமயங்களில் - "தொழுத கையுள்ளும் படையொடுங்கும்..." என்கிற குறளை நினைவுபடுத்துவதாயிருக்கிறது.

'முத்தநாதன்'களின் 'தோற்றப்பொலிவு' கண்டு மயங்கும் 'மெய்ப்பொருள்நாயனார்களாக' - தமிழர்கள் இருந்து கொண்டே இருந்தால் - அது ஏமாளித்தனமேயன்றி வேறில்லை.

என் கருத்து உங்கள் கருத்துக்குப் பக்கவாட்டில் இருந்தே செயல்படுகிறது; எதிர்ப்புறமாக அன்று என்பதையும் பதிவு செய்கிறேன். :)

said...

//வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை//
நீங்க தெளிவா தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் சரியா புரிஞ்சிக்கல...

இப்ப தெளிவா புரியுது. எல்லாரும் நல்லவங்களா இருந்துருக்காங்க.

said...

// நியோ / neo zei...
>> தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அது உணர்ச்சியால் ஒப்புக்கொள்வது. >>

பெரியாரைப் படித்து வளர்ந்தவனுக்கு இது கூடவா புரியாது ஜிரா?

ஆயினும், இந்த வாதம் (குறைந்தபட்சம் தமிழ்ச்சூழலில் என்று வைத்துக் கொள்ளலாம்) - இப்போதெல்லாம், தமிழ்த் தேசிய உணர்வை -அல்லது அதன் முன்னெடுப்பை, வெளிப்பாட்டை - முறியடிக்க நினைக்கும், முனை மழுங்கச் செய்ய நினைக்கும் - அவ்வறான அரசியலை தோற்கடிக்க நினைக்கும் - சிறுமதியாளர்களால் - ஒரு சாமர்த்தியமான 'முகமூடியாய்' பயன்படுத்தப்படுகிறது (அதாவது மொழி என்பது பிறப்பால் மட்டுமன்று; உணர்ச்சியாலும்தான் என்கிற வாதம்).

நான் இவ்வாதத்தை முழுமையாக நிராகரிப்பவன் அல்லன்; ஆனால், இதை பயன்படுத்துவோரின் 'அரசியல்' பெரும்பான்மையான சமயங்களில் - "தொழுத கையுள்ளும் படையொடுங்கும்..." என்கிற குறளை நினைவுபடுத்துவதாயிருக்கிறது.

'முத்தநாதன்'களின் 'தோற்றப்பொலிவு' கண்டு மயங்கும் 'மெய்ப்பொருள்நாயனார்களாக' - தமிழர்கள் இருந்து கொண்டே இருந்தால் - அது ஏமாளித்தனமேயன்றி வேறில்லை.

என் கருத்து உங்கள் கருத்துக்குப் பக்கவாட்டில் இருந்தே செயல்படுகிறது; எதிர்ப்புறமாக அன்று என்பதையும் பதிவு செய்கிறேன். :) //

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. உண்மை இதுதான். வளைப்பவர்கள் வளைப்பு எப்படி இருக்கோ...அப்படித்தானே. :)

said...

// வெட்டிப்பயல் zei...
//வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை//
நீங்க தெளிவா தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் சரியா புரிஞ்சிக்கல...

இப்ப தெளிவா புரியுது. எல்லாரும் நல்லவங்களா இருந்துருக்காங்க. //

ஆமாம். ஆமாம். இதெல்லாம் பாடம்.

said...

// ulagam sutrum valibi zei...
//உலகம் சுற்றும் வாலிபிக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.//
இது தான் நக்கல்.!இது தான் நக்கல்.! //

நல்லதைச் சொன்னால் நக்கல்னு சொல்றீங்களே. இது முறையா? சரியா? இருந்தாலும் என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கு உண்டு. :)

said...

ராகவன்,

நானும் ஒரு பத்துதரம் ட்ரை பண்ணிபாத்துட்டேன்.. கொஞ்ச நேரம் வருது... நிக்கிது.. முழுசா பாக்க முடியலை..

யூ ட்யூப் காம்லதான் போய் பாக்கணும் போலருக்கு...

பாத்த வரைக்கும் தெலுங்க கொலதான் பண்ணிருக்காங்க... முக்கியமா இ.ராஜா...

said...

நெதர்லாண்ட்லே இலந்தவடை கிடைக்குமா.

said...

// tbr.joseph said...
ராகவன்,

நானும் ஒரு பத்துதரம் ட்ரை பண்ணிபாத்துட்டேன்.. கொஞ்ச நேரம் வருது... நிக்கிது.. முழுசா பாக்க முடியலை..

யூ ட்யூப் காம்லதான் போய் பாக்கணும் போலருக்கு...

பாத்த வரைக்கும் தெலுங்க கொலதான் பண்ணிருக்காங்க... முக்கியமா இ.ராஜா... //

ஆமா ஜோசப் சார். உண்மைதான். விஸ்வநாதன்..படக்குன்னு இங்கிலீசுக்குத் தாவீட்டாரு. இளையராஜா கொஞ்சம் சிரமப்பட்டுட்டாரு. அதுனாலென்ன..நல்ல வீடியோ.

// Anonymous said...
நெதர்லாண்ட்லே இலந்தவடை கிடைக்குமா. //

ஐயோ அனானி...இப்பிடி வயித்தெரிச்சலக் கெளப்புறீங்களே. ம்ம்ம்...ஆசையக் கெளப்பி விடாதீங்கள். ம்ம்ம்..எலந்தவட..எலந்தவட...