சென்ற பகுதியை இங்கே படிக்கவும்
"ஆப்கா நாம் கியா ஹேய்" ஹிந்தியில்..இல்லை இல்லை. இந்தியில் கேட்டாள் ரம்யா. சமீபத்தில் ரம்யா பேசிய மிகப் பெரிய இந்திப் பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.
"மேரா நாம் கே.ஆர்.எஸ். மத்லப் கௌஷல் ரகுபீர் ஷர்மா." சொன்னது கார் டிரைவர். தாஜ்மகால் போவதற்காக ஏற்பாடு செய்திருந்த கார் விடியலிலேயே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய பையைப் ப்ரகாஷாவை எடுத்து வரச் சொல்லிவிட்டுக் கீழே காருக்கு வந்தாள் ரம்யா.
அடுத்த வரியை இந்தியில் சொல்ல ரம்யா தடுமாறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கே.ஆர்.எஸ். "ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே."
மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். அதற்குள் எல்லாரும் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். சித்ராவிடமிருந்து ஃபெராவை வாங்கிக் கொண்டாள் ரம்யா. சப்யா வசதியாக டிரைவருக்குப் பக்கத்தில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான்.
பின்னாடி சீட்டில் ப்ரகாஷா வலது ஜன்னலோரமும் சித்ரா இடது ஜன்னலோரமும் உட்கார்ந்து கொள்ள...ரம்யா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். "புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டீங்களே" என்று பொய்யழுகை அழுத சப்யாவின் தலையில் சித்ரா "நறுக்"கினாள். கலகலப்பாகத் அவர்களது ஆக்ரா பயணம் தொடங்கியது.
டிரைவருக்குப் பேரெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது? பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். ம்ம்ம்ம்....சரி. அதை அவன் செய்யும் பொழுது எப்படிச் செய்கிறார் என்பதை அணுவணுவாகப் பார்ப்போம். இப்பொழுதே பேசி மனதை வருத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பயணம் வேறு மகிழ்ச்சியாகத் தொடங்கியிருக்கிறது. அப்படியே நாமும் உடன் செல்வோம். கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்.
"சார். ஒரு உதவி"
சப்யா ஆச்சரியக்குறியோடு பார்த்தான். பயணம் தொடங்கியதும் பணம் கேட்கப் போகிறானோ என்று. ஏற்கனவே முழுப் பணமும் அலுவலகத்தில் கட்டியாகி விட்டது. டிரைவர் கையில் பேட்டா மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.
"ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."
"இது வேறையா?"
"என்ன செய்றது சார். இப்பிடித்தான் போனவாட்டி ஆக்ரா போனப்போ வெள்ளக்காரங்கள ஏத்தி அனுப்புனாங்க. அவங்ககிட்ட நூறுதடவை சொன்னேன். அவங்களுக்குப் புரியவேயில்லை. என்னோட கெட்ட நேரம் போலீஸ் பிடிச்சிட்டாங்க. அங்கிரேசிக்காரன் டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லீட்டான். ரெண்டாயிரம் ரூவா தண்டம். ஆகையால டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லாதீங்க சார்."
"சரி...அவரோட பேர் என்ன நித்தின் நயால்தானே."
"ஆமா சார். அதுவுமில்லாம ஆக்ரா ஊருக்குள்ள நான் சின்னச் சின்ன ரோடு வழியாப் போறேன். எனக்கு எல்லா ரோடும் தெரியும். பெரிய ரோடுகள்ள போலீஸ் இருப்பாங்க சார். போலீஸ் கிட்ட மாட்டாம போய்ட்டு வந்தாப் போதும் சார்."
ரம்யாவுக்கு அந்தப் பக்கத்து ஊர்கள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. நொய்டாவை விட்டு வெளியே வந்தால் பட்டிக்காடுகள்தான். புழுதிக்காடு என்று சொல்லலாம். கரிசல் மண். ஆனாலும் ஏதோ வித்தியாசம் அவளுக்குத் தெரிந்தது. மரங்கள் நெடுநெடு மரங்களாக இருந்தன. ஒரு சாப்பாட்டுக்கடையில் நிறுத்தி ரொட்டி, சப்ஜி, சாய் சாப்பிட்டார்கள். ஃபெர்ரா விழித்துக் கொண்டதால் ரம்யாவும் ப்ரகாஷாவும் சிறிது நேரம் அவனோடு விளையாடினார்கள்.
அந்தப் பயணத்தில் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியில் இருந்தது. சப்யா சற்றுக் களைப்பாக இருந்தான். இரண்டு நாட்களாகக் கடுமையான வேலை. தூக்கமும் குறைவு. ஆனாலும் அனைவரும் இருக்கும் மகிழ்ச்சியில் களைப்பே தெரியவில்லை. சித்ராவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் பயணம் முடிந்து திரும்பி வருவதற்குள் ரம்யாவைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ப்ரகாஷா ஒரு முடிவோடுதான் இருந்தான். எப்படியாவது தன்னுடைய மனதில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பின் என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். சரியான சமயத்திற்கு எதிர்பார்த்திருந்தான். பயணத்தில் ரம்யாவுக்கும் மகிழ்ச்சிதான். நேற்றிரவு சித்ரா சொன்னது இன்னமும் மனதில் இனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சரி. யாராவது மறுபடியும் பேச்செடுப்பார்கள் என்று காத்திருந்தாள். ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்து கொண்டு சுகமான இருந்தாள்.
ஆக்ராவிற்குள் நுழைந்ததுமே கே.ஆர்.எஸ் சந்துகளிலும் பொந்துகளிலும் வண்டியை ஓட்டினான். "மொதல்ல எங்க போறது சார்?"
"இத்மத் உத் தௌலா போங்க. அதான் மொதல்ல பாக்கனும்." சப்யா எங்கெங்கு போக வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தான்.
இத்மத் உத் தௌலாவின் வாசலில் கார் நின்ற பொழுது ஆட்டுப்புழுக்கைகளும் தள்ளுவண்டிகளும் ஓரத்தில் ஓடும் சாக்கடையும்தான் வரவேற்றன. ஆனால் உள்ளே நுழைந்ததும் அழகான பெரிய சலவைக்கல் நகைப்பெட்டி தெரிந்தது. கொஞ்ச நேரம் அதனுடைய அழகில் மயங்கியிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.
ரம்யாவிற்கும் ப்ரகாஷாவிற்கும் வாய்ப்புக் குடுத்து சப்யாவும் சித்ராவும் ஒதுங்கியிருந்தார்கள். ரம்யாவும் ப்ரகாஷாவின் துணையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
"டேய்....என்ன அழகாக் கட்டீருக்காங்க பாரேன். நகைப்பெட்டி மாதிரி இருக்கு. அதுலயும் ஆத்தங்கரை ஓரம். இந்த எடத்துல சந்தோஷமா தங்கீருப்பங்கள்ள."
"முட்டாளா..இது மனே இல்ல. இது சமாதி. இங்கதான் நூர்ஜஹானோட அப்பாவையும் அம்மாவையும் பொதைச்சிருக்காங்க. இத தன்னோட தாயி தந்தைக்கோஸ்கரா நூர்ஜஹான் கட்டீருக்காங்க. அதோட நூர்ஜஹானோட சமாதியும் இதுலதான் இருக்கு."
"ஓ...அப்படியா? நூர்ஜஹானோட சொந்த ஊர் இதுதானா? அதான் இங்க கட்டீருக்காங்க"
"இல்ல. நூர்ஜஹானுக்குப் பெர்ஷியாதான் சொந்த நாடு. இப்ப ஈரான். அப்போ அப்பா இந்தியா வந்தாங்க. வர்ர வழியில நூர்ஜஹான் பொறந்திருக்காங்க. ஆனா வறுமை தாங்காம குழந்தைய விட்டுட்டுக் கெளம்பீருக்காங்க. ஆனா முடியாம திரும்ப வந்து எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் கிட்ட வேலைக்குச் சேந்து ரிச்சாயிட்டாங்க."
"ஆகா...இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்க. பெரிய ஆளுதான்."
"ஹா ஹா ஹா..இன்னொந்து சொல்றேன். யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி. மொகல்ஸ் இந்த நதிக்கரைலதான் ரொமாண்ஸ் பண்ணீருக்காங்க. தாஜ்மகால் கூட யமுனா ஓரத்துலே இருக்குல்ல."
"ம்ம்ம்......" ப்ரகாஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஏதோ ஒரு ஈர்ப்பு. சலவைக் கல் கட்டிடத்தின் குளிர்ச்சியும் அழகும் அவள் உள்ளத்தை "என்னவோ செஞ்சு" வைத்தன. ப்ரகாஷா சொன்ன ரொமாண்டிக் அவளுக்குள் வேலையத் தொடங்கியிருந்தது. அவன் ஏற்கனவே காதல் ஊறுகாய். இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"ரம்யா. I love you."
தொடரும்...
Monday, October 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
ippo dhaan kadhai soodaatirukku!!
nacchunu vecchanya oru proposalu!! B-)
கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :)
//"ரம்யா. I love you."
தொடரும்...///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த ஒத்த வார்த்தைய சொல்ல ஆம்பிள எத்தனை கஷ்டப்படறான் பாருங்கய்யா......
ஜிரா,அம்புட்டு கஷ்டமா அந்த ஒத்த வார்த்தைய சொல்லுறதுக்கு??? :))
//கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :?//
அவுங்க அவுங்களா எப்படி முடிவு பண்ணலாம். அப்போ கேஆர்எஸ் என்ன கடவுளா?
//இந்த ஒத்த வார்த்தைய//
மூனு வார்த்தையாச்சே. ஓஹ் காதல் ராம் கண்ண மறைச்சிருச்சோ?
//ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."//
ஜி.ரா, நல்ல விஷயம். டில்லி, நொய்டாவில நடக்குற வழக்கமான விஷயம்தான் இது, ஞாபகப் படுத்தி விட்டுட்டீங்க. நல்ல கவுனிச்சு எழுதி இருக்கீங்க.
// CVR said...
ippo dhaan kadhai soodaatirukku!!
nacchunu vecchanya oru proposalu!! B-) //
ஏன் இப்பத்தான் கதைய அடுப்புல ஏத்தி வெச்சிருக்கா? சூடாகுறதுக்கு. ;)
// இலவசக்கொத்தனார் said...
கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :) //
என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)
//யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி//
அட ஆமாம் ஜிரா. கண்ணன் செய்யாத காதல் விளையாட்டுக்களா யமுனையில்! அது எப்படித் தான் கண்ணனைக் கரீட்டா ஞாபகம் வச்சிருந்து யமுனாவுல ரொமான்ஸைக் கலக்கறீங்களோ? :-)
போதாக்குறைக்கு மொகாலயர்களின் ரொமான்சும், தாஜ் மஹாலும் யமுனா ஓரத்துல! அதான் யமுனான்னா ஜாமூனா இனிக்குது!ச்ச்ச்சும்மா கலக்குறீங்க ஜிரா!
//இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"ரம்யா. I love you."/
சொன்னது யாரு ஜிரா? அதைச் சொல்லாமலேயே மாஜிக் மூன்றெழுத்தைச் (அதான் ILU) சொல்லி நிறுத்தி விட்டீங்களே!சொன்னது பிரகாஷா-வா? இல்லை கதை ஆசிரியரா? :-)
//CVR said...
ippo dhaan kadhai soodaatirukku!!//
என்னங்க சீவீஆர்; கதையில் கே.ஆர்.எஸ் வந்தவுடனா? :-)
//கே.ஆர்.எஸ். "ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே."//
கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்//
பரவாயில்லையே...இவ்வளவு தமிழ்ப் பற்றா அவனுக்கு! நம்மள போல நல்லவங்க வசதிக்காக நற்றமிழ் பேசப்போறானா?
//பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான்//
அடப்பாவீ...அப்படி எல்லாம் அவன் செஞ்சா அவனைச் சும்மா வுடாதீங்க ஜிரா! பயமாயிருந்தா என்னைய கூப்பிடுங்க! நான் வந்து நாலு போடு போடறேன்!
//ILA(a)இளா said...
அவுங்க அவுங்களா எப்படி முடிவு பண்ணலாம். அப்போ கேஆர்எஸ் என்ன கடவுளா?//
இளா, அதான் காரோட்டின்னு சொல்லிட்டாரே! தேரோட்டின்னா தான் கடவுளா? காரோட்டி இருக்கக்கூடாதா?
படகுல கடக்கறா மாதிரி, மக்களை ஒரு இடத்தில இருந்து இன்னொரு கடந்து வுடறவன் தானே! அதான் கடவுள்-னு சொல்லாம சொல்லறாரு எங்க ஜிரா! :-)
\"மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். \"
சிரிக்க வைத்தன இந்த வரிகள்,
அருமையாக கதையை நகர்த்த ஆரம்பித்திருக்கிறீர்கள்,
அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்!!
\\"ரம்யா. I love you."
தொடரும்...\\
ஆஹா...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க...;-))
\\என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)\
இது கூட நல்ல ஜடியாவா இருக்கே...அந்த ரெண்டவது யாருன்னு அடுத்த பதிவுல சொல்லிடுவிங்க ;-)))
//என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன்.//
அப்போ குமரன் அப்படின்னு ஒரு காரக்டர் கண்டிப்பாக உண்டுங்கறீங்க.... :-)
//
கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :)
//
//
என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)
//
:-)))))))
கலாட்டா,கலாட்டா,
மேலும் கலாட்டா.
இதில கே.ஆர்.எஸ் ஐ வேற இழுத்தாச்சு.
இந்த ரேட்ல போனால் இவங்களுக்கு எப்பக் கல்யாணம் ஆகும்?
கதா தும்பா சென்னாங்கதே :)
// இராம்/Raam said...
//"ரம்யா. I love you."
தொடரும்...///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த ஒத்த வார்த்தைய சொல்ல ஆம்பிள எத்தனை கஷ்டப்படறான் பாருங்கய்யா......
ஜிரா,அம்புட்டு கஷ்டமா அந்த ஒத்த வார்த்தைய சொல்லுறதுக்கு??? :)) //
ராமு, அதச் சொல்றதுக்கு ஒனக்கு ரொம்ப லேசா இருக்கலாம். பாக்குற பொண்ணுக கிட்டையெல்லாம் ஐ லவ் சொல்றதுக்கு லேசா இருக்கலாம்ப்பா...இந்தப் ப்ரகாஷா உண்மையிலேயே காதலிக்கான் போலயே!
// ILA(a)இளா said...
//கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :?//
அவுங்க அவுங்களா எப்படி முடிவு பண்ணலாம். அப்போ கேஆர்எஸ் என்ன கடவுளா? //
அதான? அவர் கடவுளா? இளாவின் கேள்விக்கு என்ன பதில்?
////இந்த ஒத்த வார்த்தைய//
மூனு வார்த்தையாச்சே. ஓஹ் காதல் ராம் கண்ண மறைச்சிருச்சோ? //
அத ஏன் கேக்குறீங்க இளா. ராமோட தொல்லை கூடிப் போச்சாம். சென்னைக்குப் போனா ராம் சாப்புடுறது சங்கீதால. நகை வாங்குறது லலிதாஸ்ல. படம் பாக்குறது தேவீல. கோயிலுக்குப் போனாலும் அது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில்..இல்லைன்னா பெசண்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில். காலேஜ்னா ஸ்டெல்லா மேரீஸ் இல்லைன்னா குயின் மேரீஸ். பாஸ்ட் புட்டுன்னா மேரி ப்ரவுன். இப்பிடித்தாங்க வம்பு பண்றான்.
// ILA(a)இளா said...
//ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."//
ஜி.ரா, நல்ல விஷயம். டில்லி, நொய்டாவில நடக்குற வழக்கமான விஷயம்தான் இது, ஞாபகப் படுத்தி விட்டுட்டீங்க. நல்ல கவுனிச்சு எழுதி இருக்கீங்க. //
இது அங்க வழக்கமா நடக்குறதுன்னு எனக்குத் தெரியாது. ஒரு தடவை நான் போனா கார் டிரைவர் சொன்னாரு. அத வெச்சு பில்டப் பண்ணதுதான் இது. நீங்களும் பட்டிருப்பீங்க போல....விவரமாச் சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறோம்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி//
அட ஆமாம் ஜிரா. கண்ணன் செய்யாத காதல் விளையாட்டுக்களா யமுனையில்! அது எப்படித் தான் கண்ணனைக் கரீட்டா ஞாபகம் வச்சிருந்து யமுனாவுல ரொமான்ஸைக் கலக்கறீங்களோ? :-) //
அட கண்ணன் ரொமாண்சும் அங்க தான...அது தோணவேயில்ல பாத்தீங்களா.
////இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"ரம்யா. I love you."/
சொன்னது யாரு ஜிரா? அதைச் சொல்லாமலேயே மாஜிக் மூன்றெழுத்தைச் (அதான் ILU) சொல்லி நிறுத்தி விட்டீங்களே!சொன்னது பிரகாஷா-வா? இல்லை கதை ஆசிரியரா? :-) //
ப்ரகாஷாவும் சொல்லியிருக்கலாம். கதாசிரியரும் சொல்லீருக்கலாம். ஆனா கே.ஆர்.எஸ் இல்ல. நான் கௌஷல் ரகுபீர் ஷர்மாவைச் சொன்னேன். ;)
எது எப்படியோ...கடைசில தயவு செஞ்சு ரம்யாவையும்,ப்ரகாஷாவையும் சேத்துவச்சிடுங்க சார்..ப்ளீஸ்.
/ராமு, அதச் சொல்றதுக்கு ஒனக்கு ரொம்ப லேசா இருக்கலாம். பாக்குற பொண்ணுக கிட்டையெல்லாம் ஐ லவ் சொல்றதுக்கு லேசா இருக்கலாம்ப்பா...//
அய்யோடா.... நாமே இருக்கிற அழகுக்கு எல்லாருக்கிட்டேயும் போயி சொல்லிக்கிற அளவுதான் இருக்கு.... :(
//அத ஏன் கேக்குறீங்க இளா. ராமோட தொல்லை கூடிப் போச்சாம். சென்னைக்குப் போனா ராம் சாப்புடுறது சங்கீதால. நகை வாங்குறது லலிதாஸ்ல. படம் பாக்குறது தேவீல. கோயிலுக்குப் போனாலும் அது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில்..இல்லைன்னா பெசண்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில். காலேஜ்னா ஸ்டெல்லா மேரீஸ் இல்லைன்னா குயின் மேரீஸ். பாஸ்ட் புட்டுன்னா மேரி ப்ரவுன். இப்பிடித்தாங்க வம்பு பண்றான்.//
அதுக்கெல்லாம் வக்கிலாமே தானே கதை படிச்சி கமெண்ட் போட்டு அப்புறம் இந்தமாதிரி கமெண்ட்'க்கெல்லாம் ரிப்ளை பண்ணுறேன் பேர்வழி'ன்னு கும்மி அடிச்சிட்டு இருக்கேன்.... :((
ஆனாலும் இதுக்கு நான் ரிவென்ஞ் எடுக்காமே விடமாட்டேன்...... :)
//"ரம்யா. I love you."
தொடரும்...///
grrrr ithu enna serial paarkura effect..next part seekirama poodunga :)))
//கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். //
KRS the villain ah??hehe poruthamana peru anna..perulaiye villathanam theriyuthu..
//என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)///
avanga perum 3 letter word ah?for example
CVR,VCR :)))
:))) இப்பவாவது சொன்னானே... ஒருவேளை படம் மாதிரி அடுத்தப் பகுதில அவன் சொல்லும்போது அவ அத கேக்கல... இல்ல... அது கனவு அப்படி இப்படின்னு ரெண்டு மூன்னு சீன்ஸ் கடத்திடாதீங்க ஜிரா....
கதை நன்றாக நகருகிறது. நோய்டா. குர்கான் இங்கெல்லாம் நடப்பது தான் - டூரிஸ்டு வண்டி இல்லைன்னு சொல்றது. தப்புக்கு எல்லோருமே உடந்தைதான். ஆக்ராவிலே காதலை வெளிப்படுத்திய விதம் நல்லாவே இருக்கு - தொடர்க
ஆமாம் ஏங்க KRS னு ஓட்டுனருக்குப் பேர் வைச்சீங்க - வலயிலே ஒரு கேயாரெஸ் இருக்காருல்லே - பழி வாங்குரீங்களா
// Divya said...
அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்!! //
நானுந்தான் திவ்யா...அடுத்த திங்கள் மாலை...
// வல்லிசிம்ஹன் said...
இந்த ரேட்ல போனால் இவங்களுக்கு எப்பக் கல்யாணம் ஆகும்? //
கதை முடியும் போது தெரிஞ்சு போகுது...
// அனுசுயா said...
கதா தும்பா சென்னாங்கதே :)//
தன்யவாதைகளு மேடம்
// வைதேகி said...
எது எப்படியோ...கடைசில தயவு செஞ்சு ரம்யாவையும்,ப்ரகாஷாவையும் சேத்துவச்சிடுங்க சார்..ப்ளீஸ். //
என்னங்க வைதேகி என்னைய தருமசங்கடத்துல மாட்டி விடுறீங்களே...சரி கதை போற போக்குல பாப்போம். நீங்க சொன்னதையும் மனசுல வெச்சுக்கிறேன். :)
// ஜி said...
:))) இப்பவாவது சொன்னானே... ஒருவேளை படம் மாதிரி அடுத்தப் பகுதில அவன் சொல்லும்போது அவ அத கேக்கல... இல்ல... அது கனவு அப்படி இப்படின்னு ரெண்டு மூன்னு சீன்ஸ் கடத்திடாதீங்க ஜிரா.... //
ரொம்ப இழுக்காதீங்கன்னு மறைமுகமாச் சொல்ற..புரியுது புரியுது
// cheena (சீனா) said...
ஆமாம் ஏங்க KRS னு ஓட்டுனருக்குப் பேர் வைச்சீங்க - வலயிலே ஒரு கேயாரெஸ் இருக்காருல்லே - பழி வாங்குரீங்களா //
பழி வாங்குறேனா? எதுக்குங்க? அவர எதுக்கு நான் பழி வாங்கனும் ;)
டூருக்கு டூரும் போனா மாதிரி ஆச்சு.. கதையும் கேட்ட மாதிரி ஆச்சு... ம்ம்ம்ம் காதல் குளிர்.. தாஜ்மகால் எல்லாம் சேர்த்து மவுன ராகத்துல்ல வர்ற பனி விழும் இரவு பாட்டு ஞாபகம் வந்துருச்சு :))
Post a Comment