Monday, October 22, 2007

காதல் குளிர் - 5

சென்ற பாகத்திற்கு இங்கே சுட்டவும்.

ரம்யா அமைதியாக ப்ரகாஷாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் சொன்னதை முழுமையாக மனசுக்குள் நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த அமைதி ப்ரகாஷாவின் அமைதியைக் குலைத்தது. ஏற்கனவே ஒருமுறை சொல்லி விட்ட துணிவில் மறுபடியும் சொன்னான்.

"ரம்யா, I love you"

"loveனா என்னடா" அந்த டாவில் கொஞ்சல் இருந்தது.

"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."

"ம்ம்ம்ம்ம்." யோசித்தாள் ரம்யா. என்ன சொல்வதென்று தெரியாமல். ஒத்துக்கொள்ளவா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் அப்படிச் சொல்வது அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் "ஏதோ ஒன்னு" தடுத்தது. அத்தோடு ப்ரகாஷாவின் குடும்பச் செல்வாக்கும் அவளுக்கு ஒரு தடுப்பாகத் தெரிந்தது. யோசித்து யோசித்துச் சொன்னாள்.

"டேய். ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் கூட இருக்குறது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதிதான். சப்யா யாரோ! சித்ரா யாரோ! இருந்தாலும் அவங்கள்ளாம் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதியாயிட்டாங்க. அவங்க இல்லாம என்னால என்னோட வாழ்க்கைய நினைக்க முடியாது. அது மாதிரி நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு மறுக்க முடியாத பகுதி. ஆனா வாழ்க்கையே நீதான்னு சொல்றதுக்கு.......தெரியலைடா....நீ வேணும். எனக்கு வேணும். ஆனா எந்த அளவுக்கு வேணும்னு எனக்குப் புரியலை. ஆனா ஒன்னு....எனக்கு ஒங்கிட்ட இருந்து என்னென்ன வேணுமோ....அதையெல்லாம் தேவைப்படுறப்போ தோணுறப்போ எடுத்துக்குவேன். அது நட்பானாலும் சரி... காதலானாலும் சரி...வேற எதுன்னாலும் சரி....நானே கேட்டு எடுத்துக்குவேன். அதோட எனக்கு வேற யார் மேலையும் காதல் கிடையாது. You are obviously special for me."

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "வாடா.....அந்தப் பக்கம் போகலாம்."

என்னதான் செய்வான் ப்ரகாஷா. ஒருவேளை ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான். ஆனால் ரம்யா கதவை மூடவில்லையே. அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதென்ன "Obviously Special"? உண்மையைச் சொன்னால் ரம்யா சொல்ல வந்தது "I love you"தான். அதை நேரடியாகச் சொல்ல அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. என்ன மூளையோ? கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே.

இதையெல்லாம் யோசித்துதான் ப்ரகாஷா ஒரு முடிவுக்கு வந்தான். முன்னை விடவும் ரம்யாவோடு நெருக்கமாகப் பழகுவதென்று. அவளுடனேயே இருந்து அவனுடைய அருகாமையும் தேவையும் அணைப்பும் அவளுக்கு எவ்வளவு விருப்பமானது என்று புரியவைத்து...அவளையே காதலையும் சொல்ல வைக்க முடிவு செய்தான். இனிமேல் அழப்போவதில்லை அவன். பாவம் ரம்யா. அவள்தான் அழப்போகிறாள்.

"OK. சரி ரம்யா. உன்னோட இஷ்டம்." அவளைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு நடந்தான். இத்மத் உத் தௌலா அவர்கள் காதல் ஸ்விட்ச்சை இயக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

"ஏய்...என்னடி...ரொம்ப நேரமா குசுகுசுன்னு....நாங்க மூனு பேரும் இங்க இருக்கோம்." சித்ராதான் ரம்யாவையும் ப்ரகாஷாவையும் அழைத்தான்.

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம் ஒனக்கெதுக்கு? என்னடா...சரிதானே?" கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்..முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.

அவன் விடுவானா. "என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா..." அவளது வலது கையில் கிள்ளி விட்டான். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ"வென்று கத்திக் கொண்டே...."என்னக் கிள்ளீட்ட...என்னக் கிள்ளீட்ட" என்று அவனது நெஞ்சில் படக்கென்று குத்தினாள். அவன் மட்டும் மிதமா? அவளை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு...கிறுகிறுவெனச் சுற்றினான்.

அவள் கத்திய கத்தில்...அங்கிருந்த அதிகாரி ஓடிவந்து விட்டார். "க்யா ஹோரா ஹே". வந்தவர் சித்ராவின் கையிலிருந்த ஃபெராவைப் பார்த்து விட்டு ஏதோ குடும்பத்தினர் விளையாட்டு என்று பேசாமல் திரும்பி விட்டார்.

"சரி. விளையாண்டது போதும். வாங்க. அடுத்து எல்லாரும் ஆக்ரா கோட்டைக்குப் போகலாம். நேரமாச்சு." சப்யா அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களை நியாபகப் படுத்தினான்.

காரில் ஏறுகையில் ரம்யாவிற்கு முந்தி ப்ரகாஷா ஏறி பின் சீட்டின் நடுவில் உட்கார்ந்தான். "ஏய்...அது என்னோட இடம்....நகரு...நகரு" என்று வம்படித்தாள் ரம்யா.

"ஹே....இது நின் காரா? வாடகே கார். எங்கயும் உக்காருவேன்." ப்ரகாஷா அடம் பிடித்தான். ரம்யா விடுவாளா? அவள் படக்கென்று காருக்குள் ஏறி ப்ரகாஷாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். ப்ரகாஷா ரம்யாவைத் தள்ள....ரம்யாவோ அவனை இறுகப் பிடித்துக் கொண்டு ஒட்டிக்கொள்ள.... ஒரே தள்ளுமுள்ளுதான்.

"ஆப்கோ ஷாதி ஹோகய்.. ஹி ஹி" கே.ஆர்.எஸ் மூக்கு நுழைந்தது.

"சாதியுமில்ல...பேதியுமில்ல...." கோபத்தில் முணுக்கினாள் ரம்யா. இவன் எவன் குறுக்கே வருவதென்று.

"நீங்க மொதல்ல ஆக்ரா ஃபோர்ட் போங்க" டிரைவரை விரட்டினான் சப்யா. அவர்கள் குதூகலத்தில் கே.ஆர்.எஸ் மூக்கை நுழைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. "சரி. மொதல்ல உக்காருங்க. நம்ம சண்டையை போற எடத்துல வெச்சுக்கலாம்."

அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்.

தொடரும்....

28 comments:

said...

// You are obviously special for me."//
எப்படி இப்படி சொல்லாம சொல்ற மாதிரி எழுதறது. நெறைய அனுபவம் போல.

said...

//தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love//

ஓ, இது தான் love-ஆ ஜிரா!
லவ் சயின்டிஸ்ட் வந்து பாடம் எடுக்குறா மாதிரியே இருக்கே!

//ஆனா ஒன்னு....எனக்கு ஒங்கிட்ட இருந்து என்னென்ன வேணுமோ....அதையெல்லாம் தேவைப்படுறப்போ தோணுறப்போ எடுத்துக்குவேன்//

இப்பிடிச் சொல்லிச் சொல்லியே தான் பசங்களை எல்லாம்...

//ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான்//

Too bad gira! Why do u want to do character assasination of our prakasha? :-)
காதல்-னு வந்துட்டா, காதலிக்கும் போது வேற கணக்கு பாக்க மாட்டாங்க பசங்க!

//என்ன மூளையோ? கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே//

எல்லாம் ஏதோ யாரோ பட்ட ஏக்காமால்ல தெரியுது! :-)
அதுவும் வரிக்கு வரி...

//ஒரு முடிவுக்கு வந்தான். முன்னை விடவும் ரம்யாவோடு நெருக்கமாகப் பழகுவதென்று. அவளுடனேயே இருந்து அவனுடைய அருகாமையும் தேவையும் அணைப்பும் அவளுக்கு எவ்வளவு விருப்பமானது என்று புரியவைத்து.//

இது இது
நல்லா இருங்க ஜிரா!

said...

//அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்//

அவன் என்ன பெரிய இசையமைப்பாளரா? எல்லாரும் அவரவர் இடத்துல உக்காந்த பின்னாடி தான் கம்போசிங் பண்ணறதுக்கு! இதெல்லாம் ஓவரு!

said...

//You are obviously special for me."//

amamna amamnu sollira vendiyaadhuu thaane!!
ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P

said...

ஜிரா...
காதல் சேட்டைகளையும் கிள்ளுறதையும் தள்ளுறதையும் எல்லாம் கிளுகிளுப்பாத் தான் விவரிக்கறீங்க :-)

கதையின் முடிவில்...
உங்களுக்கு வலையுலகம் சார்பா ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய் பட்டம் தரலாம்-னு முடிவு பண்ணியாச்சேய்ய்ய்ய்ய்!
ஆனா இதே மாதிரி கிளுகிளுப்பா கொண்டு போனாத் தான் கெடைக்கும்! அதையும் சொல்லிட்டேன்! :-)

said...

இதுக்குத்தான் இங்க இருக்கிற மாதிரி நாமளே ஓட்டக்கூடிய வாடகைக்கார்கள் கிடைக்கும் வசதி வேணும். அப்போ இந்த ரவி மாதிரி சாரி சாரி கே.ஆர்.எஸ் மாதிரி ஆளுங்க எல்லாம் மூக்கை நுழைக்க முடியாதில்ல!

said...

//CVR said...
amamna amamnu sollira vendiyaadhuu thaane!!
ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P//

//ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான்//

paatheengala; ithukku thaan ponnungalum aama naa udane aama sollidarathu illa! :-)
kaathalin aazham ennanu avanga therinjikiraangalam! :-)

said...

\\"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."\\

ஒ...இது தான் love வா! ! !

கிள்ளல், துள்ளோடு இந்த வாரம் கிளு கிளுப்பா முடிச்சியிருக்கிங்க...;))

said...

// ILA(a)இளா said...
// You are obviously special for me."//
எப்படி இப்படி சொல்லாம சொல்ற மாதிரி எழுதறது. நெறைய அனுபவம் போல. //

என்ன இளா... இப்பிடி சொல்லீட்டீங்க...நம்ம அனுபவத்தையெல்லாம் எழுதுனா...வலைப்பூக்கள் தாங்குமா? ஹெ ஹெ

// CVR said...
//You are obviously special for me."//

amamna amamnu sollira vendiyaadhuu thaane!!
ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P //

அதெப்படி? காதல் என்ன கணக்குப் பாடமா? கணக்குப் பண்றதுப்பா...இங்க ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது. ;)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்//

அவன் என்ன பெரிய இசையமைப்பாளரா? எல்லாரும் அவரவர் இடத்துல உக்காந்த பின்னாடி தான் கம்போசிங் பண்ணறதுக்கு! இதெல்லாம் ஓவரு! //

இத ஏங்கிட்ட ஏன் கேக்குறீங்க? கே.ஆர்.எஸ்சுக்குத்தான் தெரியும்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா...
காதல் சேட்டைகளையும் கிள்ளுறதையும் தள்ளுறதையும் எல்லாம் கிளுகிளுப்பாத் தான் விவரிக்கறீங்க :-)

கதையின் முடிவில்...
உங்களுக்கு வலையுலகம் சார்பா ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய் பட்டம் தரலாம்-னு முடிவு பண்ணியாச்சேய்ய்ய்ய்ய்!
ஆனா இதே மாதிரி கிளுகிளுப்பா கொண்டு போனாத் தான் கெடைக்கும்! அதையும் சொல்லிட்டேன்! :-)//

தம் பட்டம் என்பது தம்பட்டம் தட்டும் அளவுக்கு இருக்குமா?

// இலவசக்கொத்தனார் said...
இதுக்குத்தான் இங்க இருக்கிற மாதிரி நாமளே ஓட்டக்கூடிய வாடகைக்கார்கள் கிடைக்கும் வசதி வேணும். அப்போ இந்த ரவி மாதிரி சாரி சாரி கே.ஆர்.எஸ் மாதிரி ஆளுங்க எல்லாம் மூக்கை நுழைக்க முடியாதில்ல!//

என்ன பண்றது கொத்ஸ். வீட்ட விட்டு வந்து கல்யாணம் செஞ்சிக்கிட்ட பிள்ளைங்க. நல்லவேளை சம்பாதிக்கிறதால செட்டில் ஆக முடிஞ்சது. அடுத்த கதைல சப்யாவையும் சித்ராவையும் கார் வாங்கச் சொல்லீரலாம். டாலர்ல சம்பாதிச்சாலும் பரவால்ல. ரூவாய்ல சம்பாதிக்காங்கள்ள.

said...

//ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது. ;)/./
இப்படி பாடம் எடுக்கிறவங்க எவ்ளோ அனுபவ சாலியா இருக்கனும். அதைத்தான் சொன்னேன்.

காதல் ஜூரம்னு நானும் ஒரு தொடர் ஆரம்பிச்சு இருக்கேன்.

அது உங்களுக்கு போட்டியாவா? இல்லையா? அடுத்தடுத்த பகுதிகளில் தெரிய வரும்.

said...

// கோபிநாத் said...
\\"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."\\

ஒ...இது தான் love வா! ! !

கிள்ளல், துள்ளோடு இந்த வாரம் கிளு கிளுப்பா முடிச்சியிருக்கிங்க...;)) //

ஹி ஹி....காதல்னா துள்ளலும் கிளுகிளுப்பும் இல்லாமையா? காதல் என்ன புனிதபிம்பமா? பாக்கமலே..பேசாமலேன்னு போறதுக்கு....நம்ம கதைல அப்படி புனிதபிம்பப் பாத்திரங்கள் இருக்காது. எல்லாம் இப்பிடி அப்படித்தான். ;)

// ILA(a)இளா said...
//ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது. ;)/./
இப்படி பாடம் எடுக்கிறவங்க எவ்ளோ அனுபவ சாலியா இருக்கனும். அதைத்தான் சொன்னேன். //

அண்டா அல்வாவை எனக்குக் குடுக்குறீங்க. ஒங்கள என்ன செய்றது?!

// காதல் ஜூரம்னு நானும் ஒரு தொடர் ஆரம்பிச்சு இருக்கேன்.

அது உங்களுக்கு போட்டியாவா? இல்லையா? அடுத்தடுத்த பகுதிகளில் தெரிய வரும். //

ஐயா...காதலோ கூதலோ....மொதல்ல குளிரும்..அப்புறந்தான் காச்சல் வரும். அதான் காதல் குளிர் வந்து அஞ்சு வாரத்துல மொதக் காதல் ஜுரம் வந்துருச்சு.

அப்புறம் கூதல்னாலும் குளிருதான். எங்க பாட்டியெல்லாம் கூதலடிக்குதுன்னுதான் சொல்லுவாங்க. நாங்க குளிருதுன்னு சொல்றோம்.

said...

ரம்யாவ சீக்கிரம் ஓகே சொல்ல வைங்க சார்.கடைசில கல்யாணம் மட்டும் பண்ணி வச்சிடுங்க ரெண்டு பேருக்கும். உங்களுக்கு புண்ணியமா போகும்.அப்படி எதாச்சும் ஆகி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க,நெதர்லாண்ட்ல ஒரு பெரிய கலவரமே நடக்கும்..இப்பயே சொல்லிட்டேன்.

said...

வணக்கம் ராகவரே.

காதல் குளிர் - நல்லாவே போயிட்டிருக்கு..

தமிழ், கன்னடா, பெங்காலி, ஹிந்தி - பன்மொழிக் கலவையோட உணர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கொட்டிக் கொண்டே செல்கிறது வழியெங்கும்.

நேற்றிரவு ஐந்து பாகங்களையும் படித்து முடித்தேன். அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்.....

இதுவும் கள்ளியிலும் பால் மாதிரி முடியுமா? :)

வாழ்த்துக்கள்.


தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

said...

//அவன் விடுவானா. "என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா..." அவளது வலது கையில் கிள்ளி விட்டான். //


thairiyam thaane..

said...

//கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே//

adada..enna oru unmai...:D

said...

Nice one anna.seekirama mudichudunga...kathai romba longggg ah ponna suspense thaangalai

said...

//எதாச்சும் ஆகி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க,நெதர்லாண்ட்ல ஒரு பெரிய கலவரமே நடக்கும்..இப்பயே சொல்லிட்டேன்.
//

naanum athathai solluren.enna vendumnalum pannunga,kadaisiyilla avanga rendu perum seranum.avangala yaaraiyavathu neega konna,sg ku neega varum pothu oru kolai kandipa velum sollithen...
ippadiku,
anbu thangai
thurgah :))

said...

@CVR
//ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P
//

oiii yean ponnugalai kutham solluringa.intha kathai ezuthurathu GIRA anna.avaruthaan eppadi ellam kaya vidurathu.ponnunga ellam romba nallavanga solliten.
CVR anna pesuratha paartha,experience talking mathiri irruke!!!

said...

இப்பத்தான் நிதானமா இந்த அஞ்சு பாகத்தையும் படிச்சேன்.

ரொம்ப 'அனுபவம்' தெரியுது.

கடைசியில் 'உண்மைக்கதை'ன்னு
'கார்டு' போடுவீங்களா?:-)

said...

super kadhal kulir 5 chapter is super

said...

ரோஜா ஜூசு நல்ல அமைதியான வாழ்க்கை வாழறது இருக்கட்டும்.நீங்க ப்ராகாஷாவ மட்டும் நிம்மதியான வாழ்க்கை வாழ வச்சுருங்க சார்.ப்ளீஸ்ஸ்.

said...

ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு மட்டும் பொண்ணுகளுக்கு பல காரணங்கள் இருக்குய்யா... :)

said...

போன கமெண்ட் யாராவது Quote எடுத்து லந்து பண்ணீங்கன்னா கடிச்சு வைச்சிருவேன் ஆமாம்... :)

said...

//இராம்/Raam said...
ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு மட்டும் பொண்ணுகளுக்கு பல காரணங்கள் இருக்குய்யா... :)//

வணக்கம் ராம்.

ஆண்களுக்கு லவ்வ மறுக்க லட்சக்கணக்காகவும் கோடிக்கணக்காகவும் காரணங்களிருக்கும் போது, பாவம் அப்பாவி பெண்கள் அட்லீஸ் சில-பல காரணங்களையாவது சொல்லலாமல்லவா!!!

இல்லனா நீங்க வியர்வை சிந்தி போராடி கொடுத்த அந்த 33%ன் அழகே போய்விடுமே! இந்தளவாது பெண்கள் வாய திறந்து பேசட்டுமே!!

சரி. கடிச்சு வைக்காதீங்க நான் வலி தாங்க மாட்டேன்.

நன்றி, வணக்கம்

said...

// ooviyaa said...

//இராம்/Raam said...
ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு மட்டும் பொண்ணுகளுக்கு பல காரணங்கள் இருக்குய்யா... :)//

வணக்கம் ராம்.

ஆண்களுக்கு லவ்வ மறுக்க லட்சக்கணக்காகவும் கோடிக்கணக்காகவும் காரணங்களிருக்கும் போது, பாவம் அப்பாவி பெண்கள் அட்லீஸ் சில-பல காரணங்களையாவது சொல்லலாமல்லவா!!!//

ஆஹா.... இப்பிடி கூட சொல்லாலாமா??? அப்போ காரணங்கள் இருக்குமின்னு சொல்லவர்றீங்க அப்பிடிதானே?? :)

// இல்லனா நீங்க வியர்வை சிந்தி போராடி கொடுத்த அந்த 33%ன் அழகே போய்விடுமே! இந்தளவாது பெண்கள் வாய திறந்து பேசட்டுமே!!//

ஆஹா... அங்கன போயாச்சா? 33'கிட்டே இருந்து பச்சை சிக்னல் வாங்கிறது 67 ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா இருக்கே??? :))

// சரி. கடிச்சு வைக்காதீங்க நான் வலி தாங்க மாட்டேன்.

நன்றி, வணக்கம்//

ஹி ஹி......

said...

:))) itha itha ithathaan naanga ethir paathom :))

said...

\\எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம் ஒனக்கெதுக்கு? என்னடா...சரிதானே?" கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்..முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.\\

ரம்யா எங்கே தட்டினான்னு லோகேஷன் எல்லாம் இவ்வளவு விபரமா , அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க.......

ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு உங்அ தொடர், அடுத்த பகுதி படிச்சுட்டு பின்னூட்டமிடுகிறேன்!!