Tuesday, October 30, 2007

காதல் குளிர் - 6

சென்ற பகுதிக்கு இங்கே செல்லவும்.

ஓ ஆமோர்
பூ வண்ணம்
சஜோனி கோ
போல மின்னும்

சித்ரா பெங்காலியில் பாடினாள். சப்யா தமிழில் பாடினாள். ரெண்டும் ஒரே மெட்டுதான். தாஜ்மகால் இருவரையும் காதல் காலத்திற்கே அழைத்துச் சென்றது. அதான் டூயட் தொடங்கி விட்டார்கள்.

"ஸ்டாப் ஸ்டாப்... என்ன நடக்குது இங்க? ஃபெராவை எங்க கிட்ட குடுத்துட்டு....ரெண்டு பேரும் டூயட் பாடுறீங்களா? நீ என்ன பி.சுசீலாவா...சப்யா என்ன ஜெயச்சந்திரனா?" வேறு யார்? ரம்யாதான்.

"ஏண்டி....நாங்க டூயட் பாடுனா ஒனக்கென்னடி? ஆக்ரா கோட்டைலயும் நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே வந்தீங்க. தாஜ்மகால்லயாவது எங்களைப் போலக் காதலர்களைத் தனியா விடுவீங்கன்னு பாத்தா....இங்கயும் பின்னாடியே வந்து நின்னா எப்படி?" சித்ரா விடுவாளா.

"என்னது காதலர்களா? இது யாரு? ஒங்க பையன். இவனை எங்க கைல குடுத்துட்டு... காதலர் வேஷமா? அதுல என்னடான்னா நீ பெங்காலில பாடுற. சப்யா தமிழ்ல பாடுறான்....என்ன நடக்குது?"

மனைவியானாலும் காதலிதானே. உதவிக்கு வந்தான் சப்யா. "ஹே ரம்யா...நான் கோலங்கள் அரசி எல்லாம் பாக்குறேன். எனக்குத் தமிழ் படிக்கவும் தெரியும். அ ஆ எல்லாம் படிப்பேன். மொதல் மொதலா...நான் சித்ரா கிட்ட தமிழ்லதான் காதலைச் சொன்னேன். தெரியுமா? அதுக்குச் சித்ரா அமீ துமாக்கே பாலோ பாஷின்னு பெங்காலில காதலைச் சொன்னா......"

"பாத்தியா பிரகாஷா... சப்யா மொதமொதல்ல காதலைச் சொல்றப்போ தமிழ்ல சொல்லீருக்கான். அதான் சித்ரா ஒத்துகிட்டா."

பிரகாஷாவுக்குச் சின்ன குழப்பம். ரம்யா என்ன தன்னையும் காதலைத் தமிழில் சொல்லச் சொல்கிறாளா என்று. அதையும் சொல்லி விட்டான். "ஓ ஆமாவா. ரம்யா நான் உன்னே காதலிக்கிறே"

நெஞ்சில் கை வைத்துக் கொண்டு...இன்னொரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு...குனிந்து ப்ரகாஷா சொன்னது உண்மையிலேயே அழகாக இருந்தது. ரம்யாவிற்கும் அது பிடித்திருந்தது. ஒரு நொடி யோசித்தாள். "காதலிக்கிறே" என்பதில் ன் விட்டு விட்டதைக் கிண்டலடித்து பேச்சைத் திசை திருப்பலாமா எனவும் யோசித்தாள். அடுத்த நொடியே வேறு முடிவெடுத்தாள். சித்ராவும் சப்யாவும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவுமில்லாமல் ப்ரகாஷாவையும் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.

"சரி. ப்ரகாஷா... உக்காரு." சப்யாவையும் சித்ராவையும் உட்காரச் சொல்லி விட்டு தானும் உட்கார்ந்தாள். எல்லாரும் இருக்கையிலேயே பிரச்சனையைத் தீர்த்து விடவும் முடிவு செய்தாள். சப்யாவும் சித்ராவும் ப்ரகாஷாவும் அவள் வாழ்க்கையில் பாகம்தானே.

"ப்ரகாஷா... காதலிக்கிறேன்னு சொன்ன. நானும் காதலிக்கனும்னு எதிர்பார்க்குற. காதலிக்கிறதுன்னா நான் என்ன செய்யனும்?"

மலையாளக் கலைப்படம் பார்ப்பது போல இருந்தது சப்யாவிற்கும் சித்ராவிற்கும். ஆனாலும் இந்தக் கூத்தையும் பார்த்துவிடுவோம் என்று இருந்தார்கள். ப்ரகாஷா பேசினான். அவனுக்காக. தன் பசிக்குத் தன் கைதான் ஊட்டும் என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தான்.

"ரம்யா... காதல்னா...என் மேலே ப்ரீத்தியா இருக்கனும்."

"ம்ம்ம்...ப்ரீத்தி. அதாவது அன்பு. இப்ப ஒன் மேல எனக்கு அன்பில்லைன்னு நெனைக்கிறயாடா?" அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

அதே கண்களுக்கே பதில் சொன்னான். "இருக்கு. அன்பு இருக்கு. ப்ரீத்தி இருக்கு. ஆனா அது மட்டும் போதாது. அம்ருதம் வேணும். அம்ருத பாத்ரமும் வேணும். ப்ரகாஷா வேற...ரம்யா வேற இல்ல. ரெண்டும் ஒன்னுதான்னு வேணும். மதுவேனோ திருமணமோ கல்யாணமோ....பேரு என்னவும் இருக்கட்டும். ஆனா வேணும்."

இதை அவன் சொல்லட்டும் என்றுதானே காத்திருந்தாள் ரம்யா. "ம்ம்ம்...கல்யாணம். உனக்கும் எனக்கும். ம்ம்ம்..."

சித்ராவால் பொறுக்க முடியவில்லை. "என்னடி யோசிக்கிற. பாரு அவனும் மனசுல இருந்ததச் சொல்லீட்டான். அவனுக்குத் தமிழ் கத்துக் குடுத்திரலாம்டி....இது ஒரு பிரச்சனையா?"

"அவனுக்குத் தமிழ் சரியா வராதது ஒரு பிரச்சனையே இல்லை சித்ரா. அவனுக்குத் தமிழே வரலைன்னாலும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். அதுல பேசிக்கிறோம். ஆனா எல்லாருமே ஒன்னு யோசிக்கலை. ப்ரகாஷா யாரு? எப்படிப்பட்ட குடும்பம். எவ்ளோ வசதி. அதையெல்லாம் யோசிச்சீங்களா? நாங்க ஏழைங்க கெடையாதுதான். ஆனா நடுத்தரவர்க்கம். என்னையும் தம்பியையும் வளக்கவும் படிக்க வைக்கவும் எங்கப்பாம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நானும் வேலை பாக்குறேன். தம்பியும் வேலைக்குப் போகத் தொடங்கீட்டான். அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ?"

சித்ராவிற்கு பொந்தில் இருக்கும் எலியில் வால் தெரிந்தது. அமைதியானாள்.

"சரி. ப்ரகாஷா....நீ வேலைக்கு வரும் போது..ஒங்கப்பா என்ன சொல்லி அனுப்பினாரு? மகனே...நாலஞ்சு வருசம் வேலையப் பாரு...அப்புறமா நாங்க ஒனக்குப் பொண்ணு பாக்குறோம். அந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டு சொத்தப் பாருன்னுதான சொன்னாரு. அதுனால்தான நீ வேலைக்கு வந்தப்பவே ஒரு வீடு எடுத்து.. கார் வாங்கிக் குடுத்து... அட... அந்தக் கார்லதானப்பா நாம ஊர் சுத்துனோம். அப்படியிருக்குறப்போ ஒங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா? எங்கப்பாம்மா என் பக்கம். ஒங்கப்பா? அவர் ஒத்துக்குவாரா?"

ப்ரகாஷா ஒன்றுமே பேசவில்லை. என்ன பேசுவதென்று தெரிந்தால்தானே....காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின.

ரம்யா தொடர்ந்தாள். "ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார். எங்க வீட்டுல தயார். எங்க வெச்சி கழுத்தை நீட்டனும்னு மட்டும் நீ சொன்னாப் போதும். ஆனா... ஒத்துக்கலைன்னா...என்ன செய்வ?"

"ரம்யா....சரியாதான் கேக்குற. அப்பா ஒப்பு கொண்டரே கல்யாணம். ஒப்பு கொண்டில்லானாலும் கல்யாணம். நான் கண்டிப்பா ஒன்னையக் கல்யாணம் பண்ணுவேன் ரம்யா. என்ன நம்பு." கெஞ்சினான். முதலில் ஆங்கிலத்தில் ஆசையோடு காதலைச் சொன்னான். பின்னர் கம்பீரத்தோடு தமிழில் சொன்னான். இப்பொழுது கெஞ்சலாகச் சொல்கிறான். எப்படியாவது அவனுக்கு ரம்யா வேண்டுமே.

"சரிப்பா...ஒங்கப்பா சத்தம் போடுவாரு. நீயும் எதுத்துப் பேசீட்டு வந்துருவ. ஒங்கம்மா? ஒங்கம்மா அழுதா? அப்ப என்னப்பா செய்யப் போற?"

தொடரும்...

21 comments:

said...

இன்னுமா இந்த பொண்ணு லவ்'ஐ அக்செப்ட் பண்ணமாட்டேங்கிது??? :(

நல்லாதாங்க தொடருமின்னு போடுறீங்க ஜிரா.... :)

said...

hmmmm
love senti negotiations started-a???
idhukku mudive kedaiyaadhu!! :-P

said...

அந்த பொண்ணுக்கிட்ட இம்புட்டு நிதானமா? நல்லா இருக்கணும் சாமி!!

//"ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார்.//

இப்போ எல்லாம் "நான் தாயார் அதனால ப்ராபளம் அவரை ஒத்துக்க வையி" என்ற வசனம்தான் அதிகம் கேட்குது!! இதுக்கு இந்த பொண்ணு சொல்வது ரொம்பவே தேவலாம்!!

said...

ஹ்ம்ம் சீக்கிரம் ஆவட்டும். எப்படியும் காதலிச்சுருவாங்கதானே?

said...

//காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின//

:-)
ஏன் ஜிரா!
தாஜ் மகாலில் கால் பட்ட பின்னர் தான் காதலின் பிரச்சனை என்ன-ன்னு புரியணும்னு ஒரு 'இது' இருக்கா என்ன? :-))

//சரிப்பா...ஒங்கப்பா சத்தம் போடுவாரு. நீயும் எதுத்துப் பேசீட்டு வந்துருவ. ஒங்கம்மா? ஒங்கம்மா அழுதா? அப்ப என்னப்பா செய்யப் போற//

டேய் பிரகாஷா; நல்ல பொண்ணா இருக்காடா! ஜிரா கையில காலுல வுழுந்தாச்சும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் பாரு மக்கா! :-)

said...

எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது. இந்த தொடர்கதை முடியுறதுக்குள்ள நமக்கு கன்னடமும் வங்காளமும் நல்லா தெரிஞ்சுரும். :-) ஆமாவா இராகவன்? :-)

said...

பரவாயில்லையே.... இப்பெல்லாம் பொண்ணுங்க நல்லா விவரமாத்தான் இருக்குதுங்க.

எங்க காலம் போலயா?

said...

//ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. //

என்ன பஞ்ச் டயலாக்லாம் கலக்கலா இருக்கு. இவ்ளோ பொறுப்பா இருக்குதே பொண்ணு க்ரேட் :)

said...

யோசிப்பதிலேயே காதலைக் கழிக்கப் போகிறாளா இந்தப் பெண்.

அதுக்கு முன்னால தன் காதலைச் சொல்லி மேற்கொண்டு பேசலாமே???

said...

காதல்ங்கறது மனசு சம்பந்தப் பட்ட விசயம் மட்டுமில்ல அறிவு சம்பந்தப் பட்ட விசயம்ன்னு ரம்யா சொல்லுறாளா ?

said...

Nice...

said...

\\ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ?"\\

ரம்யா தெளிவாக தான் போசுறாங்க...
ஆனா இந்த காதல் தான்...ம்ம்ம் பார்போம்..;))

said...

//அதுக்குச் சித்ரா அமீ துமாக்கே பாலோ பாஷின்னு பெங்காலில காதலைச் சொன்னா......"//

இங்க எனக்கொரு சந்தேகம். உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? இது நீங்களாகவே எழுதியதா அல்லது பெங்காலி நண்பரிடம் கேட்டு வாங்கினீர்களா?

//"பாத்தியா பிரகாஷா... சப்யா மொதமொதல்ல காதலைச் சொல்றப்போ தமிழ்ல சொல்லீருக்கான். அதான் சித்ரா ஒத்துகிட்டா."//

நல்ல ரொமான்ஸ் ட்விஸ்ட். சூப்பர். அப்ப அப்படியே ஒரு ஏக்கப்பார்வை பார்த்துருப்பானே ப்ரகாஷா!! :)


//தன் பசிக்குத் தன் கைதான் ஊட்டும் என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தான்.//

காதலின் ஆழத்தையும், சுய திடத்தையும் சுட்டிக்காட்டும் வரிகள்.

//அதே கண்களுக்கே பதில் சொன்னான்//

ஆனா என்ன கண் வழியே பதில் சொல்லலை.. வாயால சொல்லிட்டான் போங்க! ரசிக்க வைக்கிற வரிகள்.

//அவனுக்குத் தமிழ் கத்துக் குடுத்திரலாம்டி....இது ஒரு பிரச்சனையா?"//

நல்ல நகைச்சுவை ஜுகல்பந்தி போங்க..

//அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. //

நிதர்சனம். மற்றும் நல்ல உறுதியும், தெளிவும் நிரம்பிய கதாபாத்திரம்.


//....காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின.
///

அதானே வாழ்க்கை!

//எப்படியாவது அவனுக்கு ரம்யா வேண்டுமே.//

பின்னே? காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர்மல்கி வந்த உறவு அல்லவா?

//ஒங்கம்மா அழுதா? அப்ப என்னப்பா செய்யப் போற?"//

அதானே.. நல்ல திருப்பம்.. சடன் பிரேக் போங்க..!!


சூப்பர் ஜி.ரா..
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.....

said...

Actually ava avanai kadhalikkaradhukku idhellam thadaiye illa,kalyanam pannikaradhukku thaan idhellam problems.
kadhal idhellam paakama thaana vara vishayam!!
either she loves him,or she does not.indha thinking ellam kadhalicchittu kalyanam pannika mudiyaama poidumonnu vara bayam!
these are not reasons!

said...

கடவுளே....தலய பிச்சுக்க வக்குது. இவங்கள சேத்து வைங்க.இல்ல சேத்து வைங்க.அடுத்த பகுதி வேகமா போடுங்க சார்.

said...

ராகவன் ,

எல்லா பாகத்தையும் படிச்சப்பலாம் அவசரத்துல பின்னூட்டம் போடாம ஓடிறுவேன்...

இந்த பாகத்துல முடியல :)

இப்போதான் உண்மையா கத ஆரம்பிச்சிருக்கிற மாதிரி இருக்கு எனக்கு... அடுத்த பகுதிக்கு ரொம்ம்ம்பவே ஆவலா காத்திருக்கேன்!!!

said...

// இராம்/Raam said...
இன்னுமா இந்த பொண்ணு லவ்'ஐ அக்செப்ட் பண்ணமாட்டேங்கிது??? :(

நல்லாதாங்க தொடருமின்னு போடுறீங்க ஜிரா.... :) //

ஒருவேளை கேட்டது ராமாயிருந்தா ரம்யா ஒடனே ஒத்துக்கிட்டிருப்பாளோ ;)

// CVR said...
hmmmm
love senti negotiations started-a???
idhukku mudive kedaiyaadhu!! :-P //

அதெப்படி தம்பி...கதைன்னா முடிவு இருந்துதானே ஆகனும்... முடிச்சித்தானே ஆகனும்.

said...

// இலவசக்கொத்தனார் said...
அந்த பொண்ணுக்கிட்ட இம்புட்டு நிதானமா? நல்லா இருக்கணும் சாமி!! //

ரம்யா நல்லாயிருப்பான்னுதான் எனக்கும் தோணுது :)

////"ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார்.//

இப்போ எல்லாம் "நான் தாயார் அதனால ப்ராபளம் அவரை ஒத்துக்க வையி" என்ற வசனம்தான் அதிகம் கேட்குது!! இதுக்கு இந்த பொண்ணு சொல்வது ரொம்பவே தேவலாம்!!//

:) அதுலயும் என்ன தப்பு சொல்ல முடியும் கொத்ஸ். அதுவும் சரிதான்னு வெச்சுக்கோங்களேன்.

// ILA(a)இளா said...
ஹ்ம்ம் சீக்கிரம் ஆவட்டும். எப்படியும் காதலிச்சுருவாங்கதானே? //

தெரியலைங்களே. அடுத்த பாகத்துலயாவது ஏதாவது தேறுதான்னு பாக்கலாம்.

said...

irunthaalum pona part maathiri varala :)))

said...

காதல் - இருமணங்கள் சம்பத்தபட்டது!
திருமணம்- இரு குடும்பங்கள் சம்பத்தபட்டது........
இதில் தெளிவா இருக்கா ரம்யா!! சபாஷ்!!!

ரொம்ப அழகா தொடரை கொண்டுபோறீங்க ராகவன், பாராட்டுக்கள்!

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்!!

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
:-)
ஏன் ஜிரா!
தாஜ் மகாலில் கால் பட்ட பின்னர் தான் காதலின் பிரச்சனை என்ன-ன்னு புரியணும்னு ஒரு 'இது' இருக்கா என்ன? :-)) //

என்ன செய்றது...அவங்க போனது தாஜ்மகால்தானே. திருப்பரங்குன்றம் போய் புரிஞ்சவங்களும் இருக்காங்க. மாமல்லபுரம் போய் தெரிஞ்சவங்களும் இருக்காங்க.

// டேய் பிரகாஷா; நல்ல பொண்ணா இருக்காடா! ஜிரா கையில காலுல வுழுந்தாச்சும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் பாரு மக்கா! :-) //

இதென்ன நல்ல கூத்தா இருக்கே. என் கால்ல விழுந்தா மட்டும் சேத்து வெச்சிருவேனா? கதைன்னு ஒன்னு இருக்குல்ல. அதுக்குப் போக்குன்னு ஒன்னு இருக்குல்ல. அதுபடிதான் நடக்க முடியும்.

// குமரன் (Kumaran) said...
எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது. இந்த தொடர்கதை முடியுறதுக்குள்ள நமக்கு கன்னடமும் வங்காளமும் நல்லா தெரிஞ்சுரும். :-) ஆமாவா இராகவன்? :-) //

கிழிஞ்சது போங்க. நானே தெரிஞ்ச ரெண்டொரு சொற்கள வெச்சிக்கிட்டு ஒப்பேத்திக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா...

// துளசி கோபால் said...
பரவாயில்லையே.... இப்பெல்லாம் பொண்ணுங்க நல்லா விவரமாத்தான் இருக்குதுங்க.

எங்க காலம் போலயா? //

என்ன டீச்சர்...என்னவோ நெனச்சுச் சொல்றாப்புல இருக்கே. கோபால் நல்லவர்தாங்க. :)