Tuesday, November 27, 2007

வீட்டோடு மருமகளாகப் போகலாமா?

மகாமடமை பொருந்திய தமிழ்ப் பெண்களே!

என்ன மடமைன்னு திட்டுறேன்னு பாக்குறீங்களா? அது பெருமைமிகு தமிழ்ப் பெண்ணின் அருங்குணங்கள்ள ஒன்னு மடமை. அப்படியாகப் பட்ட மடத் தமிழ்ப் பெண்களேன்னு ஒங்களைப் பெருமையால்ல கூப்புடுறேன். சந்தோஷப் படுங்க. அப்படிக் கூப்புட்டு உங்களுக்கு எழுதுனதுதான் இந்தக் கடிதம். ஆகையால அடுத்த அருங்குணமான அச்சத்தோடு இந்தக் கடிதத்தைப் படிங்க.

ஆமா...வீட்டோட மருமகளாப் போகலாமா? அது சரிதானா? மூன்றாவது அருங்குணமான நாணத்தோட அதக் கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. வீட்டோட மருமகனாப் போறதுங்குறது ஒவ்வொரு ஆம்பளைக்கும் எவ்வளவு கவுரவக் கொறைச்ச்சலா இருக்கு. அதக் கிண்டல் செஞ்சு எத்தனையெத்தனை நகைச்சுவைகள். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளையும் ஒரு பெருமை இருக்கு பாத்தீங்களா! அந்தப் பெருமைலயும் சூட்டுலயும் சொரணைலயும் கொஞ்சங்கூடவா ஒங்களுக்கு இல்லை? அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட போய்த் தங்கிக்கிட்டு அங்கயே வேலையையும் செஞ்சு...சமைச்சுப் போட்டு...துணி துவைச்சு அது இதுன்னு இருக்க முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு ஆம்பளை கிடைக்கிறதாலயா?

இதையே ஒரு ஆம்பளைகிட்ட கேட்டுப் பாருங்க. வாங்கய்யா...சோறு கிடைக்கும். "எல்லா" விஷயமும் கிடைக்கும். வீட்டோட வந்து இருங்கன்னு கூப்புடுங்க. ஒங்களைத் திமிர் பிடிச்சவன்னு சொல்வான். நீங்க ஏங்க ஆம்பளைங்களத் திமிர் பிடிச்சவன்னு சொல்ல மாட்டேங்குறீங்க? மடமைக் குணம் நல்லாவே வேலை செய்யுது போல.

இப்பல்லாம் வீட்டுக்கு வர்ர குலமகள்...அட இப்படியெல்லாம் சொன்னாத்தான ஒங்களுக்குப் பெருமையா இருக்கும். அப்பத்தான கேள்வி கேக்க மாட்டீங்க. வீட்டை விளங்க வைக்க வந்தவள்..குலமகள்...தெய்வம்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு. இதையே வீட்டுக்கு வந்த குலமகன்..விளங்க வைக்க வந்தவன்...தெய்வம்னு சொல்லிப் பாருங்க... ஒரு பய கட்டிக்க வர மாட்டான். அது சரி. அவன் மானஸ்தன். நீங்கள்ளாம் வெறும் நாணஸ்தர்கள்தானே.

வீட்டுக்கு வர்ர மருமகள் வேலைக்கும் போனா இப்பல்லாம் சந்தோஷப் படுறாங்களாம். வீட்டு வேலையும் பாத்து....சம்பாதிச்சும் போட ஒரு இளிச்சவாய் கெடைச்சா சந்தோஷப் படாம யார் இருப்பா? அப்படி இளிச்ச வாய்னு நேரடியாச் சொல்லாமத்தான் மகாலட்சுமின்னு சொல்லீர்ராங்க. நீங்க என்னடான்னா ஒங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் செஞ்சு படையலா பொங்கலும் பஞ்சாமிர்தமும் வெச்சாப்புல குளுந்து போய் சிரிச்சிக்கிட்டே எல்லா வேலையும் பாக்குறீங்க.

குடும்ப விளக்கு நீங்கதானாமே? விளக்குன்னா ஏத்தி வைக்கனும்ல....அதான் ஏத்தி வைக்கிறாங்க. எதை? வீட்டுப் பொறுப்பை. அட பொறுப்பை ஏத்துக்குறதும் செய்றதும் நல்லதுதானே. மாமனார் மாமியார் மனங்கோணாம நடந்துக்கிறனுமாமே குடும்ப விளக்கு. ஒங்க அப்பாம்மா மனங்கோணாம ஒங்க கணவரு நடந்துக்குவாரான்னு கேட்டீங்களா? கணவனோட தம்பி தங்கச்சிங்களைப் பாத்துப் படிக்க வைக்கனுமே....ஒங்க தம்பி தங்கச்சிங்கள ஒங்க வீட்டுக்காரர் பாத்துக்குவாரா?

ஆமா...இன்னோன்னு கேக்கனும்னு நெனச்சேன். எவனாவது கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை விட்டு வர்ரானா? நீங்க மட்டும் ஏங்க கல்யாணம்னா அப்பாம்மாவை விட்டுட்டு அவன் பின்னாலயே போகனும். என்னது? இப்பப்ப மாறிக்கிட்டு வருதா? வேலை பாக்குறவங்க வெவ்வேற ஊர்ல நாட்டுல இருக்காங்களா? அப்படியா...ரொம்ப சந்தோசம். அப்படி வெளியூர்லயோ வெளிநாட்டுலயோ வேல பாக்குற ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்க பொட்டி தூக்குறாங்களா? இல்ல வெளிநாட்டுல வேலை பாக்குற பொம்பளைங்களுக்கு ஆம்பிளைங்க பொட்டி தூக்குறாங்களா? அட...என்ன இருந்தாலும் நீங்க புகுந்தவங்கதான. அதுக்காச்சும் பயிர்ப்புன்னு ஒன்னு வேணும்ல.

என்னது? காலம் மாறுமா? கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருதா? ஹி ஹி. முந்தி வீட்டு வேலை மட்டுந்தான். இப்ப வீட்டு வேலை. அலுவலக வேலை ரெண்டும். அதுல கணவனார் வேற ஊர்ல நல்ல வேலை கெடைச்சிப் போகனும்னு வெச்சுக்கோங்க...நீங்க உங்க வேலையத் தியாகம் செஞ்சுக்கிட்டு பின்னாடியே போகனும். தேவைப்பட்டா அங்க ஒரு வேலையத் தேடிக்கனும். இல்லைன்னா...குடும்பம் என்னத்துக்காகுறது! குடும்பத்திற்காக உழைத்து உழைத்து மெழுகாக உருகும் பெண்மணி அவள் கண்மணீன்னு பட்டம் கெடைக்காதுல்ல.

என்னவோ சொல்வாங்களே...ஆங்....நாற்றாங்கல்ல இருந்து எடுத்து வயல்ல நட்டாத்தான் நெல் செழிக்கும்னு. அது மாதிரி பெண்கள் பிறந்தது ஓரிடம். நெல் போலச் செழிப்பது ஓரிடம்னு பெருமையாச் சொல்வாங்கள்ள. நெல்லுக்கு ஒரே எடத்துல வளர்ர தெறமை இல்லை. வளந்தா ஒழுங்கா நெல்லு குடுக்காது. அது மாதிரித்தான் நீங்கன்னு சொன்னா...அதக் கூடப் பெருமையா ஏத்துக்கிட்டு...அடடா என்ன பெருந்தன்மை..என்ன பெருந்தன்மை... பெண்ணின் பெருந்தக்க யாவுள?

ஆகையால...பெண்களே வெட்கம் சூடு சொரணை ஆகிய தீய பண்புகளை ஆண்களுக்குக் கொடுத்து விடுத்து...மிகவும் பெருமை வாய்ந்த பண்புகளாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்களோடு மகாலட்சுமியாகவும் சரசுவதியாகவும் இருந்து....குடும்ப விளக்காகவும் பொறுமையின் சிகரமாகவும் அடிமைத் திலகமாகவும் இருந்து வரும்படி அனைத்து சாதி மத இன இந்திய ஆண்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க மென்மை என்னும் பெண்மை என்னும் அருங்குணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

39 comments:

Anonymous said...

ஜி.ரா.செமை கோபத்துல இருக்கீங்க போல. கேள்வி ஒவ்வொண்ணும் நச்சுன்னு இருக்கு.

கலக்கல்.

இதையே எனது கேணத்தில் நான் எழுதிய பதிவு.

http://blog.nandhaonline.com/?p=39

ஜோ/Joe said...

இது உண்மையிலே 'பகுத்தறிவு' பதிவு.

மனைவியரை வாழ்க்கை இணை என்று நினைப்பது தான் ஆணுக்கழகு .

ஆயில்யன் said...

//மிகவும் பெருமை வாய்ந்த பண்புகளாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்களோடு மகாலட்சுமியாகவும் சரசுவதியாகவும் இருந்து....குடும்ப விளக்காகவும் பொறுமையின் சிகரமாகவும் அடிமைத் திலகமாகவும் இருந்து வரும்படி அனைத்து சாதி மத இன இந்திய ஆண்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.///

நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா...????!!!!

ஆயில்யன் said...

//என்னைப்பார் சிரி//

கல்யாணம் ஆயிடுச்சா....?!?!??!

Anonymous said...

உங்களுக்கு கல்யாணம் அகிடுச்சா?
(ஆமாவோ இல்லையோ எதுவாக இருந்தாலும் நீங்க சொன்னதெல்லாம் உங்களுக்கும் பொருந்தும் என்பது தங்கள் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்...)

pudugaithendral said...

நல்ல பதிவு.

பாச மலர் / Paasa Malar said...

ராகவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? இல்லேன்னு நினைக்கிறேன்..
ஆரோக்கியமான கருத்துகள் தந்துள்ளீர்கள்..

ஆழமாக வேரூன்றிய பழக்கங்கள் மாறப் பல மாமாங்கம் ஆகும்...

தற்போது கணவன் மனைவி பரஸ்பரம் புரிந்து கொண்டு வாழும் போது அதுவே போதும் என்றாகி விடும்..இது போன்ற விஷயங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்...

கொடுக்கிற மாதிரி கொடுத்து எதையல்லாம் சாதிக்கிறோம்னு பெண்கள் எங்களுக்குத்தானே தெரியும்..

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் பதிவு என் அடுத்த பதிவுக்கு அடிக்கோலிட்டது..

visit: www.pettagam.blogspot.com
கண்ணியம் காப்பாய் பெண்ணியமே..

மன்னிக்கவும். வலைக்குப் புதுசு என்பதால் link கொடுப்பது போன்ற technical சமாச்சரங்கள் இன்னும் படிக்கவில்லை.

மங்களூர் சிவா said...

//
வீட்டோட மருமகனாப் போறதுங்குறது ஒவ்வொரு ஆம்பளைக்கும் எவ்வளவு கவுரவக் கொறைச்ச்சலா இருக்கு.
//
//
இதையே ஒரு ஆம்பளைகிட்ட கேட்டுப் பாருங்க. வாங்கய்யா...சோறு கிடைக்கும். "எல்லா" விஷயமும் கிடைக்கும். வீட்டோட வந்து இருங்கன்னு கூப்புடுங்க. ஒங்களைத் திமிர் பிடிச்சவன்னு சொல்வான்
//
அண்ணே இப்பிடி யார் கூப்பிடுவாங்கன்னு காத்துகிட்டிருக்கன்னே!!

//
மாமனார் மாமியார் மனங்கோணாம நடந்துக்கிறனுமாமே குடும்ப விளக்கு//

அப்டியா

அப்ப இந்த முதியோர் இல்லம் எல்லாம் எதுக்குன்னே காலியா தெறந்து வெச்சீருக்காங்க!!

//
எவனாவது கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை விட்டு வர்ரானா? நீங்க மட்டும் ஏங்க கல்யாணம்னா அப்பாம்மாவை விட்டுட்டு அவன் பின்னாலயே போகனும்.
//
அண்ணே இந்த தனி குடித்தனம் தனி குடித்தனம் அப்டிங்கறாங்களே அப்டின்றது எல்லாம் ச்சும்மாவா

//
கணவனார் வேற ஊர்ல நல்ல வேலை கெடைச்சிப் போகனும்னு வெச்சுக்கோங்க...
//
//
நீங்க உங்க வேலையத் தியாகம் செஞ்சுக்கிட்டு பின்னாடியே போகனும். தேவைப்பட்டா அங்க ஒரு வேலையத் தேடிக்கனும்.
//
ஆமா எதுக்கு அப்டி போவனும். நீ இந்த ஊர்லயே வேலை பாரும்மா நான் அங்க போயி வேலை பாத்துக்கறேன் போன்ல குடும்பம் நடத்தலாம்னு போகவேண்டியதுதானே!!

G.Ragavan said...

// Collapse comments

நந்தா said...
ஜி.ரா.செமை கோபத்துல இருக்கீங்க போல. கேள்வி ஒவ்வொண்ணும் நச்சுன்னு இருக்கு.

கலக்கல்.

இதையே எனது கேணத்தில் நான் எழுதிய பதிவு.

http://blog.nandhaonline.com/?p=39//

ஆகா...வர்ரேன் நந்தா வர்ரேன். இப்பயே வந்து பாக்குறேன்


// ஜோ / Joe said...
இது உண்மையிலே 'பகுத்தறிவு' பதிவு.

மனைவியரை வாழ்க்கை இணை என்று நினைப்பது தான் ஆணுக்கழகு //

ஒத்துக்கிறேன் ஜோ. எனக்குத் தெரிஞ்ச நண்பர்களும் இந்த விஷயத்துல ஏமாத்தம் தர்ராங்க.

Anonymous said...

While on a feministic point of view your points are valid, when we think about our family values and culture, women are in a situation where they have to do these things. I dont think any of us are ready for the western culture, where every person goes out of their home in their late teens, try out different partners before settling down, and sending their parents to nursing homes and eventually end up there themselves. I see this in my profession in the west (doctor) everday, and it pains my heart when I see these 80/90 year olds being visited by their children once in a six months/year's time. My western friend had a girl friend, lived together for a year, and when each of them had to work in different cities, they separated "amicably" and have got a different partner each. Is this what you propose? If not, please tell us your alternative vision in the Indian context.

Saying this, please do not think I am against the emancipation of women. It can happen within our Indian family set up.

மங்கை said...

aahaa...

manasukku ithama irukku Raghavan

aanaa thirundha matoam....hmmm

G.Ragavan said...

//// ஆயில்யன் said...
//மிகவும் பெருமை வாய்ந்த பண்புகளாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்களோடு மகாலட்சுமியாகவும் சரசுவதியாகவும் இருந்து....குடும்ப விளக்காகவும் பொறுமையின் சிகரமாகவும் அடிமைத் திலகமாகவும் இருந்து வரும்படி அனைத்து சாதி மத இன இந்திய ஆண்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.///

நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா...????!!!! //

இதுல என்ன சந்தேகம்...கெட்டவந்தான். அந்தச் சந்தேகம் இனிமே ஒங்களுக்கு வரவே கூடாது. சரியா? :)

// ஆயில்யன் said...
//என்னைப்பார் சிரி//

கல்யாணம் ஆயிடுச்சா....?!?!??! //

யாருக்குங்க? ;)

G.Ragavan said...

// தனு said...
உங்களுக்கு கல்யாணம் அகிடுச்சா?
(ஆமாவோ இல்லையோ எதுவாக இருந்தாலும் நீங்க சொன்னதெல்லாம் உங்களுக்கும் பொருந்தும் என்பது தங்கள் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்...) //

ஆமா ஆமா நினைவில் நல்லாயிருக்கு. அதுனாலதான ஆண்கள் சார்புல பெண்களுக்கு நன்றி சொல்லீருக்கேன். :)

// புதுகைத் தென்றல் said...
நல்ல பதிவு. //

நன்றிங்க

// பாச மலர் said...
ராகவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? இல்லேன்னு நினைக்கிறேன்..
ஆரோக்கியமான கருத்துகள் தந்துள்ளீர்கள்..

ஆழமாக வேரூன்றிய பழக்கங்கள் மாறப் பல மாமாங்கம் ஆகும்...//

நிச்சயம் ஆகும். ஆனால் மாற்ற வேண்டும் என்ற ஆசையாவது முதலில் வர வேண்டும்.

// தற்போது கணவன் மனைவி பரஸ்பரம் புரிந்து கொண்டு வாழும் போது அதுவே போதும் என்றாகி விடும்..இது போன்ற விஷயங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்...

கொடுக்கிற மாதிரி கொடுத்து எதையல்லாம் சாதிக்கிறோம்னு பெண்கள் எங்களுக்குத்தானே தெரியும்.. //

:) எல்லாராலும் அது முடிகிறதா என்ன? அந்தத் திறமை பலருக்கு இல்லை போலத் தெரிகிறதே

அரை பிளேடு said...

இன்னங்க நீங்க.

காலம் மாறிக்கிட்டு வருது.

பொண்ணு H1 ல இருந்தா கல்யாணம் கட்டிக்கிட்டு H4 ல போகறதுக்கு ஏகப்பட்ட ஆண் குல சிங்கங்கள் தயாரா இருக்கு. அங்க H4 ல போயிட்டு அப்புறம் வேலை தேடிப்பாங்களாம்.

:)))

Dreamzz said...

nachunu eludhi irukeenga! puriya vendiyavangalukku puriyuma?

பாச மலர் / Paasa Malar said...

//நிச்சயம் ஆகும். ஆனால் மாற்ற வேண்டும் என்ற ஆசையாவது முதலில் வர வேண்டும்.//

வர ஆரம்பித்து விட்டது ராகவன்...காத்திருப்போம் எல்லா மாற்றங்களுக்கும் இதுவரை காத்திருந்த மாதிரி..

// எல்லாராலும் அது முடிகிறதா என்ன? அந்தத் திறமை பலருக்கு இல்லை போலத் தெரிகிறதே//

விழுக்காடு ஏற்றத் தாழ்வுதான் இதிலும்..

எது எப்படியோ ராகவனின் மனைவி கொடுத்துவைத்தவர்தான்...

பல கோணங்களில் யோசிக்க வைத்த பதிவு...

அரை பிளேடு said...

உஙக பெண்ணிய சிந்தனைக்கு நம்ம எதிரொலி.


http://araiblade.blogspot.com/2007/11/blog-post_29.html

Marutham said...

SRILANKAN Culture theriyumaaa??

Ange elaam pasanga dhan veetoda mapillai!

Marutham said...

GRRRRRRRRR!!!!!
Enaku first time pakrapo oruthara thitra pazhakam elaam ila..but SORRY :D Ungala orey oru vaati kutty'a thitikren.
LOOSU!

//அந்தப் பெருமைலயும் சூட்டுலயும் சொரணைலயும் கொஞ்சங்கூடவா ஒங்களுக்கு இல்லை?//
Ipdi neenga sonadha naan vanmaya kandikren!
Neenga edho peniyam pesradha dhaan pesreenga, but still ipdi offend panradhu nalava iruku :) ?

Marutham said...

Dreamz pota link vazhiya dhan inga vandhe...
Ippo poi avangala odhakanum...

//அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட போய்த் தங்கிக்கிட்டு அங்கயே வேலையையும் செஞ்சு...சமைச்சுப் போட்டு...துணி துவைச்சு அது இதுன்னு இருக்க முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு ஆம்பளை கிடைக்கிறதாலயா?//

Idhu adi mutal thanam! Ungaluku vetkama ila..ipdi ponnungala pathi solradhuku.... soru kedakudhuna kalyanam panikranga..ilati evano(ro) oruthan elathayum pathukuvanu... AM WRONG>. why would I disrespect all men for ur ignorance?!

Ungaluku thirumanathoda punidham therila... One reason why our ancestors would have opted to send the girl to the inlaws place is for - pasangala ishtathuku valathrupanga, ponnunga apdi ila..pakuvama... as u have mentioned... //பெண்ணின் அருங்குணங்கள்// Adhaan.. penuku dhaan ipdi pata nala gunam elam iruku..inoruthar veetuku pona adjust pani nadakra pakkuvam pasangaluku illa... or they were not brought up that way.

Ivlo solreengale...
Ungala kalyanam panikra ponnu veetuku poi thanga neenga ready'a?
VEETODA MAPILAYA?

Endha oru kudumbathulayum..veetuyku vara ponna ungala mari yarum pakradhu illa..she is there to take up her responsibilities...

Anaal unga WIFE pavam dhan!

Marutham said...

//அது சரி. அவன் மானஸ்தன். //

Unmayaana manasthan..oru family'a nala padi nadathravan...!

Ippo elaam perumbalana veetla (YARUM SORU KEDAKUDHUNO, THANGA EDAM KEDAKUDHUNO PORADHILLA...) veetuku vara ponnum sambadhichu kudumbathuku contribute panraanga..which world are u in?
Apdina to be cheap - Kalyanam panikradhu andha extra sambalathuka?

அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட oru ponna kopptu thanga solli அங்கயே வேலையையும் unga veetu velayum Seyya solli... Avanga samachu kudukradha saaptu போட்டு...துணி துவைக்க solli..koosama adha potukitu dhora mari office poga முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு Ponnu கிடைக்கிறதாலயா?

Idhu dhanaya unga kalyanam??
Andha ponavdhu ivlovum panitu andha vetla thangi sapdranga (in addition to these some do go work & earn money for this family ) ..anaal edhume seyama... dhendama irundhuktu..perukradhila(nama veeta nama clean oanumgra puthi kooda ilama), Samakradhu ila(Uppu potu soru podravangalaye damage panrahdu), Thuniya kooda thuvachukradhu ila...idhelam oru...
cha! :P

Marutham said...

//ஆமா...இன்னோன்னு கேக்கனும்னு நெனச்சேன். எவனாவது கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை விட்டு வர்ரானா? நீங்க மட்டும் ஏங்க கல்யாணம்னா அப்பாம்மாவை விட்டுட்டு அவன் பின்னாலயே போகனும். என்னது? இப்பப்ப மாறிக்கிட்டு வருதா?//

Idhu kelvi...
AM single so idhuku i dnt have an answer!

// அப்படியா...ரொம்ப சந்தோசம். அப்படி வெளியூர்லயோ வெளிநாட்டுலயோ வேல பாக்குற ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்க பொட்டி தூக்குறாங்களா? இல்ல வெளிநாட்டுல வேலை பாக்குற பொம்பளைங்களுக்கு ஆம்பிளைங்க பொட்டி தூக்குறாங்களா? அட...என்ன இருந்தாலும் நீங்க புகுந்தவங்கதான. அதுக்காச்சும் பயிர்ப்புன்னு ஒன்னு வேணும்ல.//

:P Solradhuku onumilla

Marutham said...

//. தேவைப்பட்டா அங்க ஒரு வேலையத் தேடிக்கனும். இல்லைன்னா...குடும்பம் என்னத்துக்காகுறது! குடும்பத்திற்காக உழைத்து உழைத்து மெழுகாக உருகும் பெண்மணி அவள் கண்மணீன்னு பட்டம் கெடைக்காதுல்ல.//

U try asking this to married women... Namma oorla women are dependent, and adhuvum becoz of the men... idhula change irukadhu..it may take another decade. Adhula thapu ila... Indha maari seendi vitu dhan sila kudumbam nadutherula nikkidhu...pulangaluku neengalum nanuma soru poduvom(udane soru soru'nu aramikadheenga...)
Idhelaam generalise pana mudiyadhu..it depends on the husband & wife..
they shud have good understanding, i have seen men who support thier wife to live the way she wants..have u seen couple working in two different cities? I have! I know the problems they face..Men too have issues with this. Vazhra kalathula ipdi edhum sothapitu pinadi sagra kalathula vazha asaipadum silara paakrapo..mana varutham dhaan micham. Oru age'ku mela idhelam out of focus... the couple & thier understanding dhaan life long. :)
Ponnu'kaga payan vitu kodukradho..payanukaga ponnu vitukudukradho..depends on the couple, their understanding, respect,love,mutual concern & family .

Dreamzz said...

//Dreamz pota link vazhiya dhan inga vandhe...
Ippo poi avangala odhakanum...
//
idhu veraya! enna koduma ithu!

Dreamzz said...

ok! alasi aaranjathil! (marutham madam thittuku bayandhu illa! ada nijama)
naan en mudiva mathikiren pa!

I agree with the part where implicitly means against the male chauvinistic society! Of course that should change!

I dont agree completely tho with this raghav anna!

First, I dont believe in men women equality. i think you are trying to measure a womens success by a mens scale. So u can ask who decided men and womens scale?
And I answer God. avara koodilethunga. Why is women designed to be a care giver and men the hunter?

Sivan peritha? sakthi peritha? isnt it morel ike they are dependent on each other, not equal in one sense but equally important for a almighty god!

similarly, for a society, both men and women and their respective roles are...

The only problem is, slowly we have come to value men's success more than women's and value this. so now all women feminist revolutionaries
want women to play the modern man to measure up in the scales..

I agree with marutham, this is completely wrong!

the solution is not killing the patient, but treating him!

By this very post, where u measure a women by mens standards, i think you unknowingly have succumbed to the male chauvinism prevalent in our society.

Unknown said...

ஜி.ரா., நல்லா எழுதிருக்கீங்க. பாயின்டா தான் எழுதியிருக்கீங்க. இன்னும் நான் பெண் என்ற முறையில் சந்தித்த மற்ற தடைகளையும் தரலாம்... அதான் நாற்குணமும் பயில சொல்லிட்டீங்களே... நாலாவது அருங்குணத்தைப் பயின்று மௌனிக்கிறேன்...

மங்களூர் சிவா சொன்னார்: "அப்ப இந்த முதியோர் இல்லம் எல்லாம் எதுக்குன்னே காலியா தெறந்து வெச்சீருக்காங்க".. ன்னு. முதியோர் இல்லத்தில் இருப்பவர்களில் பெண்ணைப் பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்கள் துன்பம் எந்த விதத்தில் குறைவு? (இங்கே சம்பந்தமில்லாமல் வாஸந்தி தீராநதியில் எழுதிய 'பெண் சிசுவைக் கொன்றால் சாமி குத்தம்' ‍- 'சாமியை யாரு பாத்தா' நினைவுக்கு வேறு வந்து தொலைகிறது.)

எந்த காலத்திலும் இது மாறும் எனத் தோன்றவில்லை. கண்ணாடி கூரை, பெண் குடும்பத்தினர் தான் முக்கால்வாசி திருமணச் செலவு, சமுதாய எதிர்பார்ப்புச் செலவுகள் (அழகுச் செலவுகள், குழந்தை வளர்ப்புக்காக வேலையைச் சில காலம் விடுதல் அல்லது பார்ட்டைமாகச் செய்தல்) - மேலைச் சமுதாயங்களிலும் உண்டு.

எதிர்பார்ப்புகளில் கழிந்து விடுகிறது எங்கள் காலம் - அதனால் தானோ என்னவோ தாய்மை எளிதாகிவிடுகிறது...

நாகை சிவா said...

ஜி.ரா.

கைய கொடுங்க...

இதை இரண்டு விதமா பெண்கள் எடுத்துப்பாங்க.. நமக்கு ஒரே விதம் தான். நேர் வழி..

உங்களை போலவே நானும் ரெடி... :)

Divya said...

\\இதையே ஒரு ஆம்பளைகிட்ட கேட்டுப் பாருங்க. வாங்கய்யா...சோறு கிடைக்கும். "எல்லா" விஷயமும் கிடைக்கும். வீட்டோட வந்து இருங்கன்னு கூப்புடுங்க. ஒங்களைத் திமிர் பிடிச்சவன்னு சொல்வான்\\\

வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆம்பளை சம்மதித்தாலும் , நாங்க ஒத்துக்க மாட்டோம்,ஏன்னா கணவனோட தன் மானத்தை எங்க தன் மானமா கருதுகிறோம்.
ஆனா ஆம்பளைங்க பெண்களுக்கும் தன் மானம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதுமில்லை, புரிந்துக்கொள்வதுமில்லை.

\\அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட போய்த் தங்கிக்கிட்டு அங்கயே வேலையையும் செஞ்சு...சமைச்சுப் போட்டு...துணி துவைச்சு அது இதுன்னு இருக்க முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு ஆம்பளை கிடைக்கிறதாலயா?\\

வீட்டு வேலைகளை பொறுப்போடு செய்வது ஒரு பெண்ணின் இயற்க்கை குணம், இதில் வெட்கப்பட என்ன இருக்கு?

"எல்லா" -> இதில் எதெல்லாம் அடக்கம் என்று தெரியவில்லை,
ஆனா அந்த ' எல்லா' கிடைக்கிறதுங்கிறதுக்காக மட்டுமா திருமணம் பண்ணிக்கிறாங்க,
அப்படி சொன்னா திருமண பந்தத்தையே அசிங்க படுத்துவதாக இருக்காதா???

G.Ragavan said...

// Anonymous said...
I see this in my profession in the west (doctor) everday, and it pains my heart when I see these 80/90 year olds being visited by their children once in a six months/year's time.//

அனானி, என்னுடைய கேள்விகளை மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பெற்றோரைப் பேணல் எல்லாம் சரிதான். ஒரு ஆணுக்குத் தனது பெற்றோரைப் பேணப் பொறுப்புண்டு. ஆனால் ஒரு பெண்ணுக்கு தன்னுடைய மாமனார் மாமியாரைப் பேணப் பொறுப்புண்டு. என்ன நியாயம் சார் இது.... இந்த சமநிலையின்மையைச் சுட்டிக்காட்டுகிறேன் நான். மேற்கத்திய பண்பாட்டுக்கு மாறுங்கள் என்று நான் சொல்லவில்லையே.

// My western friend had a girl friend, lived together for a year, and when each of them had to work in different cities, they separated "amicably" and have got a different partner each. Is this what you propose? If not, please tell us your alternative vision in the Indian context. //

Ananoy, where did I speak about relationships and living together? please read the post again. i question the "so called sacred indian culture" which imposes imbalance and injustice against women. whatz ur answer for that question? பெண் ஏன் புகனும்? பெண் ஏன் தன்னுடைய பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் விட்டுப் போகனும்? அது எழுதப்படாத சட்டமாயிருச்சுல்ல. ஒரு நடுநிலமைப் பண்பாடா இருந்தா...ரெண்டு பக்கத்துக்கும்ல வாய்ப்பு குடுத்திருக்கனும். பொண்ணு சம்பாத்யத்துல உக்காந்து திங்குறது கவுரவக் குறைச்சல்னும்.. பொண்ணு சம்பாதிக்கிறது மாப்பிள்ளைக்குன்னுதான இன்னைக்கும் பலர் நெனைக்கிறாங்க. அந்த நெனைப்பை நான் கேள்வி கேக்குறேன். இங்கே பதில் சொல்ல வேண்டியது நீங்க. நானில்லை.


// மங்கை said...
aahaa...

manasukku ithama irukku Raghavan

aanaa thirundha matoam....hmmm //

:) அது தெரிஞ்ச விஷயந்தானுங்களே. அதுனாலதா ஆண்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு ஆணாகிய நான் நன்றி சொல்லீட்டேனே. ஆண்களை வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்க. இப்பிடியே வாழ்க வாழ்க. :)

Divya said...

Actually if your wife is not respected at your home, men u dont care abt it, rather u ask her to get used / adjusted with it,

But if you are iltreated & not respected by our parents at our home, we will definetly fight for ur respect & dignity. We wont give up our soulmate's self respect that easily!

Thats why we dont accept you - men being a 'வீட்டோடு மாப்பிள்ளை'!!

G.Ragavan said...

// அரை பிளேடு said...
இன்னங்க நீங்க.

காலம் மாறிக்கிட்டு வருது.

பொண்ணு H1 ல இருந்தா கல்யாணம் கட்டிக்கிட்டு H4 ல போகறதுக்கு ஏகப்பட்ட ஆண் குல சிங்கங்கள் தயாரா இருக்கு. அங்க H4 ல போயிட்டு அப்புறம் வேலை தேடிப்பாங்களாம்.

:))) //

ஹா ஹா அரைபிளேடு...சரியான பாயிண்ட்டப் பிடிச்சீங்க. இங்க நெதர்லாந்துக்கும் ஒரு ஜோடி அப்படித்தான் வந்தாங்க இந்தியாவுல இருந்து. இப்ப அக்காவும் திரும்ப இந்தியாவுக்கு ரிட்டர்ன். :)

// Dreamzz said...
nachunu eludhi irukeenga! puriya vendiyavangalukku puriyuma? //

புரியலாம். புரியாமலும் போகலாம். புரிஞ்சும் புரியாமலும் போகலாம். புரியாமலும் புரியலாம். :)

G.Ragavan said...

// அரை பிளேடு said...
உஙக பெண்ணிய சிந்தனைக்கு நம்ம எதிரொலி.


http://araiblade.blogspot.com/2007/11/blog-post_29.html //

உங்கள் கட்டுரையைப் படித்தேன் அரைபிளேடு. சுட்டிக்கு நன்றி. என்னுடைய சிந்தனை பெண்ணிய சிந்தனையா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தோன்றியவைகளைக் கேட்டிருக்கிறேன். அதற்கு நீங்க வைக்கும் பெயரைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

// Marutham said...
SRILANKAN Culture theriyumaaa??

Ange elaam pasanga dhan veetoda mapillai! //

அப்ப அது பெட்டர்னு சொல்றீங்களா?

// Marutham said...
GRRRRRRRRR!!!!!
Enaku first time pakrapo oruthara thitra pazhakam elaam ila..but SORRY :D Ungala orey oru vaati kutty'a thitikren.
LOOSU! //

நன்றிங்க. :)

////அந்தப் பெருமைலயும் சூட்டுலயும் சொரணைலயும் கொஞ்சங்கூடவா ஒங்களுக்கு இல்லை?//
Ipdi neenga sonadha naan vanmaya kandikren!
Neenga edho peniyam pesradha dhaan pesreenga, but still ipdi offend panradhu nalava iruku :) ? ////

:)

உங்க பதில்களை எல்லாம் படிச்சேங்க. நீங்களும் சரி...திவ்யாவும் சரி...என்னைத் திட்டுறீங்க. ஆனா பதிவுக்கு ஆதரவா ஏங்க எழுதுறீங்க :)

Divya said...

\\உங்க பதில்களை எல்லாம் படிச்சேங்க. நீங்களும் சரி...திவ்யாவும் சரி...என்னைத் திட்டுறீங்க. ஆனா பதிவுக்கு ஆதரவா ஏங்க எழுதுறீங்க :)\\

ராகவன், உங்களை யாரும் திட்டல, என் கருத்தை தான் சொன்னேன், தப்பா??

Marutham said...

//பதிவுக்கு ஆதரவா ஏங்க எழுதுறீங்க :)//
Ippo edhai nanga adharichom??

Marutham said...

and naan kuduthruka reply is for the post :) Not attacking you... Thittalai (Other than "Loosu') part.

As divya has put it, this is our humble opinion.

Marutham said...

and naan kuduthruka reply is for the post :) Not attacking you... Thittalai (Other than "Loosu') part.

As divya has put it, this is our humble opinion.

G.Ragavan said...

// Divya said...
\\உங்க பதில்களை எல்லாம் படிச்சேங்க. நீங்களும் சரி...திவ்யாவும் சரி...என்னைத் திட்டுறீங்க. ஆனா பதிவுக்கு ஆதரவா ஏங்க எழுதுறீங்க :)\\

ராகவன், உங்களை யாரும் திட்டல, என் கருத்தை தான் சொன்னேன், தப்பா?? //

தப்பே இல்லைங்க. உங்க கருத்தை நீங்க சொல்லீருக்கீங்க. திட்டுனதுன்னு ஏன் சொன்னேன்னா...என்னை எதுக்குற மாதிரி இருக்கு....ஆனா உங்க கருத்துகள் எனக்கு ஆதரவாத் தெரியுதுன்னுதான். :)

Anonymous said...

oorukku than ubathesama..illa follow pannura idea ethavathu irukkutha