Tuesday, November 20, 2007

பெருமிகு தமிழ்ப் பண்பாட்டின் இன்னொரு முகம்

இந்த வீடியோவைப் பாருங்க. நம்மூரு ஆளுங்கதான். என்ன சொல்றதுன்னே தெரியலை...

அடுத்தவன் சோத்துல திங்க வெக்கமா இல்லை...எப்படிடா காசு குடுன்னு வெக்கமில்லாம கேக்குறீங்க? சீச்சீ மானங்கெட்ட மடையங்களா! வரதட்சண வாங்குன ஒவ்வொரு கணவனும் கண்ண மூடிக்கோங்க. இல்லைன்னா வெக்கமாயிருக்கும்.

இந்தச் சுட்டிக்குப் போங்க வெவரம் புரியும்.

வெறுப்புடன்,
கோ.இராகவன்

21 comments:

மாசிலா said...

எனக்கு ஆங்கிலம் அவ்வளவு புரியாது. இருந்தாலும், அனைத்து மனிதகுல மொழியான வலிகளின் மொழி மிகுந்த வேதனையுடன் புரிந்தது.

மிகவும் பரிதாபத்திற்குரிய நெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள்.

:-(

இவனெல்லாம் ஒரு பெண்ணிற்கு பிறந்தவந்தானே? பின் ஏன் இப்படி மாறுகிறார்கள்?

? ? ? ...

G.Ragavan said...

// மாசிலா said...
எனக்கு ஆங்கிலம் அவ்வளவு புரியாது. இருந்தாலும், அனைத்து மனிதகுல மொழியான வலிகளின் மொழி மிகுந்த வேதனையுடன் புரிந்தது.

மிகவும் பரிதாபத்திற்குரிய நெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள்.

:-( //

உண்மை. நான் பாத்துட்டு ரொம்பவே டென்ஷன் ஆயிட்டேன்.

// இவனெல்லாம் ஒரு பெண்ணிற்கு பிறந்தவந்தானே? பின் ஏன் இப்படி மாறுகிறார்கள்? //

அட... இது தெரியாதா? இந்தக் கூத்துல அவனப் பெத்தவன்னு ஒரு பொண்ணு இருப்பாள்ள...அந்த அம்மாளும் ஒடந்தை. கேடு கெட்ட கூட்டம். வாங்குறது பிச்சை. அதுக்குப் பேரு அன்பளிப்பு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிருகங்கள் கூட கருணை மிக்கதாக உள்ளன. இவர்களை என்ன?? என்பது
வெட்டகமாக உள்ளது.

Divya said...

ஜெனிட்டாவின் இந்த கோரமான நிலைக்கு முக்கிய காரணம் அவளது 'மாமியார்' மற்றும் 'நாத்தனார்' ,

பெண்களே ஒரு பெண்ணை இத்தனை சித்திரவதை செய்கிறார்கள் என அறியும் போது வெறுப்பாகவும், வேதனையாகவும் உள்ளது,

ஜெனிட்டாவின் பெற்றோரின் மனம் எவ்வளவு பாடு படும் என நினைக்கையில், கண்ணீர் துளிகள் தான் வருகிறது,
எத்தனை பாசம் காட்டி தன் பெண்ணை வளர்த்திருப்பார்கள், கணவுகளோடு 'அமெரிக்க' மாப்பிள்ளைக்கு மணமுடித்திருப்பார்கள்................இன்று இந்த நிலையில் பெண்ணை பார்க்கும் போது, சே நினக்கவே கஷ்டமாக இருக்கிறது.

நன்றாக படித்து, நல்ல வேலையில் , அயல் நாட்டில் இருக்கும் ஒருவனுக்கே இப்படி வரதட்சனை ஆசை [ பேராசை] இருக்குமானால், பாமர மக்களிடம் எப்படி வரதட்சனை கொடுமையை ஒழிப்போம் என்று குரல் கொடுப்பது,

வெளிநாட்டிற்கு மணமுடித்து செல்லும் பெண்கள், தங்கள் பாதுகாப்பிற்கு அந்த அந்த நாட்டில் என்ன அமைப்புகள் இருக்கின்றன என்றும் தெரிந்து கொள்ளுதல் நல்லது.

இப்படி சித்திரவதைகளை [ abuse ] செய்யும் கயவர்களை இத்தனை தூரம் வளரவிட்டிருக்கவே கூடாது, ஜெனிட்டா மாதிரியான அவல நிலையில் இருக்கும் பெண்கள் தங்கள் நிலையை வெளியரங்கமாக்க துணிய வேண்டும்!

Sundar Padmanaban said...

ராகவன்

நேற்று செய்தித்தாளில் படித்தபோது கொதிப்பை ஏற்படுத்தியது. இன்று கணவர் தரப்பில் தரப்பட்ட விவரங்களில் 'காசு பிடுங்குவதற்காக இப்படி நாடகமாடுகிறார்கள்' என்று சொல்லப்பட்டதையும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை.

வேதனையாக இருக்கிறது. ஆத்திரமாக இருக்கிறது.

"வெளிநாட்டு மாப்பிள்ளை" என்ற விளக்கில் விழுந்து அனுதினமும் மாண்டுகொண்டிருக்கும் விட்டில் பூச்சிகளைப் பற்றிப் படிக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. இப்படிப் பாதிக்கப்படும் பெண்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் என்பது கொடுமை - எப்படித்தான் சரிவர விசாரிக்காது ஏமாந்து போகிறார்களோ என்று வேதனை கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

ஜெனிட்டா மாதிரியான பாதிக்கப்பட்ட பெண்களை அந்தப் பெரிய கடவுள்தான் காக்க வேண்டும்.


இந்த ஒளிக்கோப்பின் உரையாடலின் இறுதியில் அவர்கள் பேசிக்கொண்டது.

"You are a Pakistani Origin. Jeneta is an Indian. Did that factor play any role at all?"

"No Sir. In the United States, or at least I should speak for myself, in our heart, there was no origin, there was no culture, there was no religion. I must say that my most closest friends - they are all Indians. They are all Hindus. I love them, just like I love my family!" - என்று அந்த மருத்துவர் Sardar M Imanullah, என்ற பாக்கிஸ்தானிய அன்பர் சொன்னபோது கடவுள் பேசுகிறமாதிரி தோன்றியது. அழுதுவிடக்கூடாது என்று முகத்தைக் கணிணித் திரையிலிருந்து திருப்பிக்கொண்டேன்.

Anonymous said...

இவனுகளையெல்லாம் இழுத்து வைச்சு அறுக்கணும். அதைவிட கேவலம், பாகிஸ்தானியா இருந்து எப்பட்டி காப்பாத்தினீங்கண்ணு கேக்கற anchor! எந்த ஊருலய்யா இருக்காங்க இவங்கல்லாம்.

அது கிடக்கட்டும், இதே விசயத்தை, கர்நாடகாவில (க)மலம் கவுந்து போச்சுன்னு உக்காந்திருக்கிற இந்துத்துவ குஞ்சுகள் கும்பல் எப்படி எழுதி பவர்பாயிண்ட் பிக்சர் ஓட்டும் தெரியுமா?

மிசி நரிகளின் போதனையில் மனந்தடுமாறிய அல்லேலூயாக்களின் வரதட்சிணைக் கொடுமை.

இந்த குஞ்சுகள், தாய்க்கோழிகள் கொடுமை இதுக்கும் மேல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா
மிகவும் கொடுமையான காட்சி!
கொஞ்ச நேரம் மனசு வலித்து அப்படியே அமர்ந்து விட்டேன்!
வீடியோ அல்லாத ஆங்கிலச் சுட்டி இதோ:
http://in.news.yahoo.com/071120/211/6nhqz.html


////இந்தக் கூத்துல அவனப் பெத்தவன்னு ஒரு பொண்ணு இருப்பாள்ள...அந்த அம்மாளும் ஒடந்தை. கேடு கெட்ட கூட்டம்//

பேராசையின் உச்சத்தில் ஆண்/பெண் பேதமே இல்லீங்களா?
சரி நிகர் சமானத்தை எல்லாம் விடுங்க!
பார்த்துக் கொண்டு அந்தத் தாய் என்கிற பெண் எப்படித் தான் இருந்திருப்பாளோ?
23 வயதுப் பெண்! ஏழு மாத கர்ப்பம்!
மருத்துவமனையில் அடிபட்டு கிடக்கும் அபலையைப் பார்க்க ஒருவர் கூட வரவில்லை!

எனக்கு இதைப் படித்து பல நினைவுகளில் ஒரு மாதிரி ஆகி விட்டது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தியப் பண்பாட்டுக்கு எதிரியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டு டாக்டர் தான் சந்தேகப்பட்டு இத்தனை உதவியும் செய்துள்ளார்!

படித்த குடும்பம்! வேலை பார்ப்பதோ ஒரு பெரும் பன்னாட்டு் இந்திய நிறுவனம்! முற்போக்கான வளர்ப்புச் சூழல்!
ஓடும் காரில் இருந்து தள்ளி விடுவது எல்லாம் தீவிரவாதிகள் வெறிச் செயல்!! இது எப்படி குடும்பம் ஆகும்?

cheena (சீனா) said...

வரதட்சனைக் கொடுமைகள் படித்தவர்களினால் தான் நடக்கிறதா ?? ஏன் இந்தக் கொடுமை ?? திருமணம் என்பது இரு மனம் இணைய வேண்டிய ஒன்று - பணம் எங்கிருந்து வருகிறது இதில். நாட் திருந்தவே திருந்தாது.அயல் நாட்டு மாப்பிளைகள் பார்க்கும் போது தீர விசாரிக்க வேண்டும்.

ம்ம்ம் - அனுதாபங்கள்

ஜோ/Joe said...

சே! என்ன மனிதர்கள் இவர்கள் ? வெறும் ஏட்டுக்கல்வி கற்ற மிருகங்கள் .

அந்த பாகிஸ்தானி மருத்துவரைப் பார்த்தீர்களா ? எத்துணை இனிமையான மனிதர்.

துளசி கோபால் said...

இந்த செய்தி ரெண்டு நாளைக்கு முன்னே தினமலரில் வந்துருந்தது.

பாவம் அந்தப்பொண்ணு.

சிகிச்சை செய்த அந்த பாக்கிஸ்தான் டாக்டருக்கு நம்ம பாராட்டுகளையும்
சொல்லணும்.

கடைசியில் என்ன அழகாச் சொன்னார் பாருங்க. அவர் நண்பர்களில் அநேகர் இந்தியர்கள் & அவர்களைத் தன் குடும்பத்தினர் போலவே சிநேகிக்கிறார்னு.

அவர் மனுஷர்.

பாக்கிஸ்தானோ, இந்தியனோ மக்கள் எல்லாம் ஒண்ணுதான், அரசாங்கமும், அரசியல் வியாதிகளும்தான் நம்மைப் பேதம் பார்க்க வைக்குது.

போதாததுக்குப் பொன்னம்மான்னு மதம்வேற நெருப்பை மூட்டிக்குளிர் காயுது(-:

மெளலி (மதுரையம்பதி) said...

ரெண்டு நாள் முன்னாடியே இந்த நியூச படித்தேன்...

கொடுமை....என்னத்த படிச்சு என்னத்த சாதிக்கிறாங்க...தூன்னு துப்பத்தான் தோணுது

இவன் அடுத்தவன் காசுக்கு (வரதட்சணைங்கர பேருல) ஆசைப்படுவதால, அந்த பெண்ணைச்சேர்ந்தவங்களையும் அதே மாதிரி நினைச்சு பேசியிருக்கான் பாருங்க.....

ஆமா, இன்போசிஸ் ஏதானும் ஆக்ஷன் எடுக்குமா இவன் மேல?...வலையுலகத்து மக்கள் ஏதேனும் ஒரு சர்வே/ரெகமண்டேஷன் குடுக்க முடியுமா?.

மாசிலா said...

தமிழச்சி பதிவுகள் உலக அளவில் அதிகமாக பார்க்கப்படுகிறது என்கிற காரணத்தில், இந்த பதிவை அவரது தளத்தில் இடவும் சிபாரிசு செய்திருக்கிறேன்.

விழிப்புணர்வு அவசியம் தேவை. அது எந்த வடிவிலும் இருக்கலாம்.

நன்றி.

ஓவியா said...

மிகவும் துயரமான ஒரு சம்பவம். என் வருத்தங்கள்.

வரதட்சனை வாங்கும் பழக்கம் (இங்கும், எங்கும், உள்/வெளிநாட்டிலும்) இன்மும் தலைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்ய!!!

அந்த கருணை டாக்டரின் கண்களுக்கு ஜெனிட்டாவின் நிலை புரிந்து இன்று அது அம்பலத்திற்க்கு வந்துள்ளது. ஆனாலும் இன்னும் இதுபோல் ஆயிரமாயிரமான அபலை பெண்களின் துயர நிலை நம் கண்களுக்குத் தென்படவில்லைதான்.

பதிவிற்க்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி கோ.ராகவன் சார்.

Anonymous said...

1. இன்ஃபோஸிஸ் இதில் செய்வதற்கு ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்த தொலைக்காட்சி இன்ஃபோஸிஸ்-ஐ இழுத்திருக்க வேண்டியதில்லை.
2. அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான பாக்கிஸ்தானியர்கள் இனிமையானவர்கள்தான். அவர்கள் நல்லமுறையில் கல்வி கற்று வெளிநாட்டில் கெளரவமாக வாழ்பவர்கள்.
3. CNN IBN ஆங்கர் கடைசியாகக் கேட்டது ஒரு முட்டாள்தனமான கேள்வி. அது அவர்களுடைய அரசியல் என்று விட்டுத்தள்ளவேண்டியதுதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா

பதிவர் பத்மா அர்விந்த் அவர்கள், சில மாதங்களுக்கு முன், ஒரு பதிவில் சில நல்ல குறிப்புகள் கொடுத்திருந்தார்.
புதிதாய்க் கல்யாணம் ஆகி, கணவருடன் அமெரிக்கா வரும் இளம் பெண்களுக்கு ஒரு Travel Advisory/Ready Reckoner போல!

நல்ல கணவராக இருந்தாலும், பெண்களுக்குச் சில அடிப்படைக் குறிப்புகள் (check list) உள்ள பதிவு!
இதோ சுட்டி! பதிவிலும் இத்டு விடுங்களேன்! பலருக்கும் பயன்படும்!

27/10: அமெரிக்காவில் வாழும் ஆதரவற்ற பெண்களுக்காக

திருமணமாகி அமெரிக்கா வரும் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் கணவர், உங்களுடைய சோஷியல் செச்யூரிடி எண்ணை அறிந்து கொள்வதுதான். எல்லாம் அவரே பார்த்து பார்த்து செய்துவிட்டார் என்று எண்ணி பெருமை படாதீர்கள். எனக்கு தெரிந்து ஒரு பெண்ணும் அவர் கணவரும் ஒரே வங்கி கடனட்டை வைத்திருந்தனர். இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான்.....................
இப்படித் தொடர்கிறது இந்தக் கட்டுரை!

ILA (a) இளா said...

ஜி.ரா, இது வரதட்சணை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. அதுதான் உண்மை. இப்போ நான் சொல்றதை நம்ப மாட்டீங்க. உண்மை தெரிஞ்சா அப்புறம் சொல்லுங்க. காத்திருக்கேன்..

Unknown said...

உண்மையிலேயே இது வரதட்சிணை சம்பந்தப்பட்டது என்றால், மிகவும் வருத்தத்துக்குரிய, வெட்கப்படவேண்டிய நிகழ்ச்சி.

ஆனால், உண்மையிலேயே ஓடும் காரில் இருந்து அவர் தள்ளிவிடப் பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது கேள்விக்குரியது.

அமெரிக்க மோகத்தில், அமெரிக்க மாப்பிள்ளை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு பெண்ணைக் கொடுப்பது என்பது பெரும்பாலும் ஆபத்திலேயே முடியும். அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.

அமெரிக்காவில், இந்த மாதிரி இந்தியப் பெண்கள் துன்புறுத்துவதைத் தடுக்க ஒரு அமைப்பு கூட இருப்பதாக கேள்விப் பட்டேன்.

என்னதான் இருந்தாலும், கட்டிய மனைவி உயிருக்குப் போராடும்போது, வந்து பாக்காதவன், கணவன் இல்லை..இல்லை மனிதனே அல்லன்.

விரைவில் ஜெனிட்டா குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.

Anonymous said...

//1. இன்ஃபோஸிஸ் இதில் செய்வதற்கு ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்த தொலைக்காட்சி இன்ஃபோஸிஸ்-ஐ இழுத்திருக்க வேண்டியதில்லை.
2. அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான பாக்கிஸ்தானியர்கள் இனிமையானவர்கள்தான். அவர்கள் நல்லமுறையில் கல்வி கற்று வெளிநாட்டில் கெளரவமாக வாழ்பவர்கள்.
3. CNN IBN ஆங்கர் கடைசியாகக் கேட்டது ஒரு முட்டாள்தனமான கேள்வி. அது அவர்களுடைய அரசியல் என்று விட்டுத்தள்ளவேண்டியதுதான்.
//
2 & 3ஆவது பாயிண்ட் உண்மை, ஏற்கிறேன்.

முதல் பாயிண்ட் ஏற்க இயலவில்லை. கார்போரேட் ரெஸ்பான்ஸிபிலிடி அப்படிங்கறது சுதா மூர்த்தி இங்கையிம் அங்கயும் போறது, அத பேப்ப்ர்ல போடறதும், தீராத பெங்களுர் டிராபிக்-க்கு 4 ஜீப் வாங்கி கொடுப்பதும் மட்டுமல்ல.

ஒரு எம்பிளாயி-யை தண்டிப்பதன் முலம், இந்த இண்டஸ்டீரிக்கே ஒரு முன் மாதிரியா ஏன் இருக்க கூடாது.
பேர் மினிமம், ஒரு பயமாவது வருமல்லவா மக்களுக்கு?

Anonymous said...

மனிதர்களை நேசியுங்கள்.

வெறுப்பையே உமிழும் உண்மையடியானுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ஆகட்டும் !

கதிரவன்.

Dreamzz said...

mm! enna solla! ippadiyum silar!