Monday, November 05, 2007

காதல் குளிர் - 7

சென்ற பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே ப்ரகாஷாவுக்குப் புரியவில்லை. ஆத்திரப்படும் அப்பாவை நினைக்க முடிந்தது. ஆனால் அழும் அம்மாவை. வேண்டாம் மகனே என்று சொல்லி அம்மா அழுதால்.... நினைப்பதற்கே அவனுக்கு அசிங்கமாக இருந்தது. அந்த அசிங்க நினைப்பே அவன் வாயையும் மூடி வைத்தது.

"என்னடா அமைதியாயிட்ட?" கேட்ட ரம்யாவைப் பாவமாகப் பார்த்தான் ப்ரகாஷா. முகத்தில் குழப்பமும் கவலையும் கூட்டணி அமைத்திருந்தன.

"பாத்தியாடா....அப்படி ஒரு நெலமை வந்தா என்ன முடிவை நீ எடுப்பன்னு உன்னால யோசிச்சுக்கூடப் பாக்க முடியலை. அதுனாலதான் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குற. சப்யா காதலைச் சொன்னதும் சித்ரா ஒத்துக்கிட்டா. ஏன்? சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."

சப்யாவிற்கும் சித்ராவுக்கும் ரம்யா சொல்ல வருவது புரிந்தது. ஆனால் ப்ரகாஷா ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

ரம்யா அவனது கன்னத்தில் கை வைத்து முகத்தை நிமிர்த்தினாள். அவள் தொட்டது கங்கு கன்னத்தில் பட்டது போல இருந்தது அவனுக்கு. படக்கென்று நிமிர்ந்தான். "டேய். நீ நல்லவன். அதுல எந்தச் சந்தேகமும் எனக்கு இல்ல. உன் மேல உண்மையான அன்பு எனக்கும் இருக்கு. ஆனால் காதல் வரனும்னா...உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் கஷ்டம். ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்?"

"ரம்யா...உனக்கு இப்ப பதில் இல்ல. எனக்குத் தெரியலை. ஆனா நன் ப்ரீத்தி நிஜா. அது நிஜா ஆகுத்தே. இனி இது பகே பேசலை. பேச வேண்டாம்."

தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ. ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?

சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரும் கிளம்பி வெளியே வந்தனர். ரம்யா தாஜ்மகால் பொம்மைகள் வாங்க விரும்பினாள். அழகாக பளிங்குக் கற்களில் செய்திருந்த தாஜ்மகால்கள் ஈர்த்தன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டுமே. ப்ரகாஷாதான் பேரம் பேசினான். யோசித்து யோசித்து ஒன்று..இரண்டு...மூன்று..நான்கு என்று வாங்கினாள். அட்டைப்பெட்டியில் காகிதச்சுருகளை வைத்துக் கட்டிக் குடுத்தார்கள். வாங்கிக் கொண்டு டாக்சியை நோக்கி நடந்தார்கள்.

கே.ஆர்.எஸ் சிரித்துக் கொண்டே வரவேற்றான். "ஆயியே சாப். முடிஞ்சதா? அடுத்து எங்க போகனும்?" மணி நான்குதான் ஆகியிருந்தது. வேறெங்கும் போவார்கள் என்று நினைத்துக் கேட்டான்.

அன்றைய திட்டப்படி பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து விட்டதால் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தான் சப்யா. அதற்கு முன் அலைந்த களைப்பில் முதலில் டீ குடித்தார்கள்.

காரில் ஏறப் போகையில் ரம்யா உள்ளே உட்கார கதவைத் திறந்தான் ப்ரகாஷா. "நான் முன்னாடி உக்கார்ரேன் ப்ரகாஷா. வரும் போது பேசீட்டே வந்ததால ஊரெல்லாம் பாக்கலை. இப்பப் பாத்தாத்தானே உண்டு. இதுக்காகன்னு எப்ப வரப் போறோம்." சொல்லிக் கொண்டே முன்னால் ஏறினாள் ரம்யா. ஏறியவளைப் பார்த்துச் சிரித்தான் கே.ஆர்.எஸ். அவனைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தாள்.

சப்யாவும் சித்ராவும் பின்னாடி ப்ரகாஷாவோடு உட்கார்ந்து கொண்டார்கள். ரம்யா ப்ரகாஷா விஷயத்தைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். வேறொரு நல்ல சமயமாகப் பார்த்துப் பேசி முடிவுக்கு வர விரும்பினார்கள்.

தன்னோடு உட்காராமல் முன்னாடி சென்று ரம்யா உட்கார்ந்தது ப்ரகாஷாவுக்கு வலித்தது. என்னென்ன அவன் மனதில் ஓடின என்பதே அவனுக்குப் புரியாத அளவுக்கு வேகமான சிந்தனைகள். வீடு வர இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகும். அதுவரை இப்படித்தான் சிந்தித்துக் கொண்டே இருக்கப் போகிறானா? அதற்கு அப்புறமும் சிந்திக்காமலா இருக்கப் போகிறான்?

ஆனால் ஒன்று. நடந்த நிகழ்ச்சி அவனுக்குள் எதையோ மாற்றி விட்டது. அது என்னவென்று அவனுக்கும் புரியவில்லை. பழைய ப்ரகாஷா இல்லை அவன். காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை. அவர் மட்டும் கண்ணில் பட்டால் அவரைச் சப்பாத்தி மாவு பிசைந்திருப்பான். என்ன செய்வது..கடவுள் எல்லாருக்கும் எப்பொழுதும் கண்ணில் தெரிவதில்லையே. ஏதோ அவருக்கு நல்ல நேரம்.

ரம்யாவின் மனதிற்குள் வேறு விதமான சிந்தனைகள். சற்று அதிகமாகவே பேசி விட்டோமோ என்றும் கூட யோசித்தாள். ஆனாலும் அவளது கேள்விக்கு விடை கிடைக்காதது ஏமாற்றமாகவே இருந்தது. "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ஆனால் சொல்லவில்லை என்ற அப்பட்டமான உண்மை கசந்தது.

இப்படி ஒவ்வொரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்கையில் கார் நொய்டாவை நோக்கி விரைந்தது. அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா.

தொடரும்

17 comments:

said...

Prakasha yosikkama love propose pannitaannu thonudhu!

avanga appa amma enna solvaanga,eppadi tackle pannalaamnu ellam yosicchu paathuttu solli irukkanum!!that too to a person like ramya.

illana ,ippodhaikku en kittta ella questions-kum answer illa,aana nee en kooda irundha endha prachana irundhaalum naama onna samaalicharalaamnu dhairiyum irukku appadidinnu solra thelivaavadhu venum! adhuvum illa!
kashtam thaan!!
Lovela Ramya praksha kitta reassurance edhir paakaradhu natural,but he is too confused and hurt by love to give it to her!!
aana adhuve ramya avana love panraannu if he is sure,dhil-la dialogue viduvaan!! the confusion in love is what is weakening him the most!

Ramya-vum really love panna ,"Prakasha,I love you and we shall face all problems together and will make this happen"-nu sollalaame???
if she is as brave and intelligent as some people think she is!then that is the response i would expect from her.(assuming that she is in love with him!)

// "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ////
yen??
avala love panradha irundha ammava vittu vandhu dhaan prove panna mudiyuma????
unnai love panrean ,adhe samayam namma love-oda strengthnaala en parents-aiyum convince pannuveannu Prakasha nenaikka koodadha??
ennai love panna parents pagaichikkanumnu ramya yen edhir paakanum???

Damn!!
i didnt realise that the comment would go so long when i started!!

Great narration boss!Rock on!! :-)

said...

சீவீஆர்.
அடுத்த முறை தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்டா உமக்கு மண்டகப்படிதான் ஜாக்கிரதை.

யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீங்க. ஏற்கனவே ரவி வில்லன் அப்படின்னு வேற சொல்லி இருக்கீங்க....

said...

@இலவசகொத்தனார்
ஆபீஸ்ல கலப்பை இல்ல கொத்தனாரே , online transliterator தொறக்கறதுக்குள்ள ஆபீசு பி.சி தொங்குது!!
அதான் இப்படி!!
மன்னிச்சுக்கோங்க!
ஆரம்பிக்கும் சின்னதாதான் பின்னூட்டம் போடலாம்னு நெனைச்சேன்,ஆனா எழுத ஆரம்பிச்ச அப்புறம் நிறுத்தவே முடியல! :-)
ரொம்ப கஷ்டமா இருந்தா விட்டுருங்க!
:-)

said...

:((((((

G.Ra.. down down...

said...

இந்த பகுதியில் கொஞ்சம் புரியுது கொஞ்சம் குழம்புது..

\\சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."\\

சரி ஓகே ரம்யா சொல்றது நியாம் தான்.

\\ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?\\

இங்க கொஞ்சம் குழப்பமாக இருக்கு...ப்ரகாஷக்கு இன்னும் காதல் வரலியா? அவனுக்கு காதல் வந்தால் தானே இம்புட்டு பிரச்சனை.!

said...

அடப்பாவமே.....

said...

கண்டனம் 1 – பிராகாஷாவை “"யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று ரம்யாவிடம் சொல்லவிடாமல் செய்ததற்கு.
கண்டனம் 2 – இப்படி சஸ்பென்சாக நிறுத்தியதற்கு!!!

அடுத்த பகுதியில் கண்டனங்கள் வராத மாதிரி எழுதவும் ;-)

said...

முடிவில் அவர்கள் ஒன்றுசேராவிடில்,
குறிபார்த்து குண்டுவீசும் இலங்கை விமானப்படையை அனுப்பி, உங்கள் விசைப்பலகை மீது குண்டு போடப்படும்
:)

said...

இது தான் ஜி.ரா டச்.. சீக்கிரம் அடுத்தப் பாகம் போடுங்க

said...

ஹ்ம்ம்.... அம்மணி ரொம்ப தெளிவாதான் இருக்காங்க... :)

said...

அருமையான பகுதி இதுதாங்க..

நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க..

//சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."
//

நச்!!

//உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் //

நகைச்சுவை கலந்த நல்ல விளக்கம்! ஒத்துக்கொள்ளக் கூடியதும் கூட!


//தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ.//

அடடா.. இடம், பொருள், ஏவல் நல்லாப் பொருந்தி இருக்குதே! :)


//இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? //

அருமையான கேள்வி! நீங்க தான் பதில் சொல்லணும் சாரே!

//காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை//

சூப்பர்.. அப்படிக் கேளுங்க! நீங்க என்ன சொல்றீங்க ஜிரா?

நல்ல இடத்தில் நிறுத்தி இருக்கீங்க...

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்க்க்க்....

said...

ஜிரா

கதையைக் கதை அல்ல, நிஜம் என்கிற லெவலுக்குக் கொண்டு வந்துட்டீங்க! இது வரை வந்த தொடர்களில் இந்தத் தொடரை மட்டும் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்; அவ்வளவு கச்சிதமான டயலாக்!

ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு ஏக்கம், ஒவ்வொரு எதிர்பார்ப்பு!
அது அடுத்த மனத்துடன் கூடி வரும் போது தான் காதலும் மலர்கிறது. இதுவும் ஒரு வகை சுயநலம் போலத் தெரியலாம்.
ஆனா அது சுயநலம் இல்லை! பாதுகாப்பு தான்! ஒன்னுமே தெரியாத குழந்தைக்குக் கூட பாதுகாப்பு உணர்ச்சி இருக்கும் போது, ரம்யாவிடம் அது இருப்பதில் வியப்பும் இல்லை; தவறும் இல்லை!

ரம்யாவும், பிரகாஷாவும் ஆரம்ப நிலைக் காதல்-ல இருக்காங்க போல! காதல் இன்னும் கெட்டிப்படலை!
காதல் கெட்டிப்பட்டிருந்தா ரம்யா பிரகாஷாவை வேறு மாதிரி எதிர் கொண்டு இருப்பாள்! அவனும் அவளை வேறு மாதிரி எதிர் கொண்டு இருப்பான்.

//ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்//

இப்படியா ரம்யா கேட்டிருக்க வேணாம்!

அவங்க ரெண்டு பேருக்கும் காதல் "வேணும்" ங்கிற எண்ணம் இருப்பது போல, காதலைக் "கொடுக்கணும்" ங்கிற எண்ணம் பலமா இல்லை!

அப்படி இருந்திருந்தா ரம்யா வேறு மாதிரி சொல்லி இருப்பாள்;
டேய் பிரகாஷா, இப்ப லவ்-வுன்னு வாயால சொல்ல வேணாம்!
உன் பிரச்சனை வீடு/குடும்பம் ங்கிறதால, அத எப்படி நல்லபடியா Tackle பண்ணலாம்-னு ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம். மத்ததை அப்பறம் பாத்துக்கலாம் ன்னு சொல்லி இருந்தா....
பிரகாஷா அவளை அப்படியே தாங்கி இருப்பான்; அவள் எதிர்பார்த்த பாதுகாப்பும் அவளுக்குக் கெடச்சிருக்கும்!

பிரகாஷாவும் மவுனம் சாதிக்காம, ஏதாச்சும் பேசி இருக்கலாம்! நீ எதிர்பார்க்கும் நம்பிக்கைய என்னால நிச்சயம் கொடுக்க முடியும் ரம்யா; ஆனா இப்ப இருக்குற குழப்பத்துல வாயால சொல்ல முடியலடா கண்ணா!
ஹெல்ப் மீ ப்ளீஸ்!
உனக்கு நம்பிக்கை கொடுக்க எனக்கு ஹெல்ப் மீ ப்ளீஸ்-டா-ன்னு
சொல்லி இருக்கலாம்!

ஹூம்!
அதிரசம் சுடும் பாகு போலத் தான்!
பாகு சரியா வந்த பிறகு தான், அதிரசம் சரியா வரும்!

காதலில் இவங்க ரெண்டு பேரும்
"கொடுக்கலில்" ஈடுபடத் துவங்கினால்,
"வாங்கலில்" ரெண்டு பேருக்கும் அவர்கள் எதிர்ப்பார்ப்பது கிடைக்கும்!

ரம்யா, பிரகாஷா...
ஒங்க காதலை வெற்றி ஆக்குங்க ப்ளீஸ்! :-)

said...

//யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீங்க. ஏற்கனவே ரவி வில்லன் அப்படின்னு வேற சொல்லி இருக்கீங்க....//

யப்பா கொத்தனாரே! ரவி வில்லன் இல்லப்பா...ஜிரா தான் கதையில ஒரு பேரு கொடுத்திருக்காரே! அந்தப் பாத்திரம் தான்-பா வில்லன்! நீரே ஜிராவை இன்னும் ஏத்தி விடுவீரு போலக் கீதே! :-)

//அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா//

ஐயோ! ஏன்????
காதல் டயலாக்கு வீசனதுல,கடைசில மக்கள் இத யாரும் கண்டுக்கவே இல்லியே!

said...

//ennai love panna parents pagaichikkanumnu ramya yen edhir paakanum???
Damn!!
i didnt realise that the comment would go so long when i started!!//

ரம்யா அப்படி எதிர்ப்பார்க்கலை-ன்னு தான் நினைக்கிறேன் சீவீஆர்.
பிரகாஷாவுக்கு அவங்க அம்மாவை ஞாபகப்படுத்தறதே அவ தானே!
அவளோட எதிர்பார்ப்பு அவங்கள விட்டுட்டு வந்துடணும்-னு இல்ல!
தன்னை விட்டுட்டுப் போயிடக் கூடாது-ன்னு தான் இருக்கு! அத யோசிச்சி யோசிச்சு....அந்த நினைப்பே இப்படி மாறி, இனிமையாக ஆயிடிச்சி போல! :-)

இதுக்குத் தான் காதல்-னு வந்திட்டா, யோசிக்கறதுக்கு ஒரு லிமிட் போட்டுக்கணும் போல! :-)

போச்சு...நானும் லிமிட் போட்டுக்காம...
பின்னூட்டம் இத்தினி பெருசா வளர்ந்திடிச்சு, உங்க பின்னூட்டத்தைப் போலவே! :-)

said...

// இலவசக்கொத்தனார் said...
சீவீஆர்.
அடுத்த முறை தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்டா உமக்கு மண்டகப்படிதான் ஜாக்கிரதை. //

பையன் பயந்து போய்ட்டாங்க. கொத்ஸ் மாமா அடிப்பாரா அடிப்பாரான்னு கேட்டுக்கிட்டேயிருக்கான். மிட்டாய் வாங்கிக் குடுத்துச் சமாதானப் படுத்துங்க.

// யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீங்க. ஏற்கனவே ரவி வில்லன் அப்படின்னு வேற சொல்லி இருக்கீங்க.... //

என்னங்க இது...நான் என்னவோ ரம்யாவைக் கத்தச் சொன்ன மாதிரி. அந்தப் பொண்ணை நான் ஒன்னும் பண்ணலைங்க. கே.ஆர்.எஸ்தான் முன்னாடி சீட்டுல உக்காந்திருக்காரு. அவர் கிட்ட கேளுங்க.

அப்படியே கீழ ரவி என்ன சொல்லீருக்காருன்னும் பாருங்க. :)

// ஜி said...
:((((((

G.Ra.. down down... //

அட...என்னஜி...டவுண் டவுண்னு சொல்றீங்க. திருநவேலி டவுணா? சரி..ஏனிந்தக் கோவம்? ஆத்திரம்.

said...

// கோபிநாத் said...

இங்க கொஞ்சம் குழப்பமாக இருக்கு...ப்ரகாஷக்கு இன்னும் காதல் வரலியா? அவனுக்கு காதல் வந்தால் தானே இம்புட்டு பிரச்சனை.! //

அப்படியா சொல்றீங்க? அப்ப ப்ரகாஷாவுக்குக் காதல் வரலைன்னா ப்ரச்சனை வந்திருக்காதா?

// துளசி கோபால் said...
அடப்பாவமே..... //

ஏன் டீச்சர்? யாரு பாவம்? ப்ரகாஷாவா ரம்யாவா?

// அருட்பெருங்கோ said...
கண்டனம் 1 – பிராகாஷாவை “"யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று ரம்யாவிடம் சொல்லவிடாமல் செய்ததற்கு.
கண்டனம் 2 – இப்படி சஸ்பென்சாக நிறுத்தியதற்கு!!!

அடுத்த பகுதியில் கண்டனங்கள் வராத மாதிரி எழுதவும் ;-) //

கவலையே படாத...அடுத்த பகுதியில கும்முதல்களையும் கண்டனங்களையும் வாங்க ஏற்கனவே ஒருத்தர ஏற்பாடு செஞ்சாச்சு. அவரு வாங்கிக்குவாரு.

said...

// NiMaL said...
முடிவில் அவர்கள் ஒன்றுசேராவிடில்,
குறிபார்த்து குண்டுவீசும் இலங்கை விமானப்படையை அனுப்பி, உங்கள் விசைப்பலகை மீது குண்டு போடப்படும்
:) //

நிமல் ஒங்க பின்னூட்டத்த என்ன சொல்றதுன்னு தெரியலை. நீங்க நகைச்சுவையுணர்வோட சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா எல்லாருக்கும் அப்படியிருக்குமான்னு தெரியாது. ஆகையால இது போன்ற சென்சிடிவ் விஷயங்களைக் கொஞ்சம் தவிர்த்திருங்க.

கதையப் படிச்சிப் பாராட்டுறதுக்கு நன்றி. தொடர்ந்து படிச்சுக் கருத்து சொல்லுங்க.

// தேவ் | Dev said...
இது தான் ஜி.ரா டச்.. சீக்கிரம் அடுத்தப் பாகம் போடுங்க //

நான் யாரையும் டச் பண்ணலைய்யா..விட்டா என்னாலதான் ரம்யா கத்துனாங்கன்னு சொல்லீருவீங்க போல.

// இராம்/Raam said...
ஹ்ம்ம்.... அம்மணி ரொம்ப தெளிவாதான் இருக்காங்க... :) //

ஏம்ப்பு..இதே மாதிரி வேற எங்கயும் யார்கிட்டயும் நேருல கேட்டிருக்கியா? ;)