Friday, December 14, 2007

கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்

ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா. வாணி ஜெயராமின் மிருதுவான குரல் பாவமும் தவறில்லாத தெலுங்கு உச்சரிப்பும் மிகமிக அருமை.




மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.



கொலுவை உன்னாடே -- தஞ்சை சரபோஜி மகாராஜா மணிபவழத் தெலுங்கில் எழுதிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் இசையரசியும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். பானுப்பிரியாவின் நடனம் மிக அழகு. இதைக் கண்டிப்பாகப் பாருங்கள். இதுவும் ஸ்வர்ண கமலம் படம்தான்.


நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே - ஒரு அருமையான பாடல் ஜெயச்சந்திரனால் அழகாகப் பாடப்பட்டுள்ளது. பனி தீராத வீடு என்பது படம். மெல்லிசை மன்னரின் இசையோடு இயக்கியுள்ளார் சேதுமாதவன். மலையாளிகள் எப்பொழுதும் மறக்காத...மறக்க முடியாத பாடல் இது.



நீராட நேரம் நல்ல நேரம் - துள்ளலிசை எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகவும் பொருத்தமான பாடல். ஆனால் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அவருடை தமிழ்த் திரையிசைப் பயணத்தின் துவக்கத்தில் வந்த ஒரு பாடலிது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வைரநெஞ்சம் படத்திற்காக. படக்காட்சியமைப்பினை விட்டுவிட்டு பாடலைக் கேட்டு ரசியுங்கள். மிகவும் அருமை.



நல்லா நல்லானி கள்ளு பில்லா - காதல், விளையாட்டு எல்லாம் கலந்தடிச்ச பாட்டு இது. சை அப்படீங்குற தெலுங்கு படத்துக்காக நிதினும் ஜெனீலியாவும் நடிச்ச பாட்டு. கீரவாணி (மரகதமணி) இசைன்னு நெனைக்கிறேன். கேளுங்க...கேட்டுக்கிட்டேயிருப்பீங்க. பாருங்க. பாத்துக்கிட்டேயிருப்பீங்க.



கர் சே நிக்கல் தேஹி - இந்திப் பாட்டுகள் அவ்வளவு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாப்பா கெஹத்தா ஹே என்ற படத்திற்காக உதித் நாராயண் பாடியது. அருமையோ அருமை.



அன்புடன்,
கோ.இராகவன் (ஜிரா)

3 comments:

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

எல்லாமே வித விதமான முத்துக்கள். தனி வீடியோ பிளாக் செய்யக்கூடிய அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு ;-)

ஸ்வர்ண கமலம் பாடல்களை இன்று தான் கேட்/பார்க்கிறேன். பனி தீராத வீடு பாடல் தான் ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருதைக் கொடுத்தது என்று நினைவில் இருக்கு.

Dreamzz said...

thala ippothaiku attendance appala vandhu paatu ketkuren ok a?

G.Ragavan said...

// Comments - Show Original Post
Collapse comments

கானா பிரபா said...
வணக்கம் ராகவன்

எல்லாமே வித விதமான முத்துக்கள். தனி வீடியோ பிளாக் செய்யக்கூடிய அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு ;-) //

ஆகா....வேண்டாங்க. வீடியோஸ்பதி நீங்கதான். உங்களுக்குப் போட்டியா நான்!!!!! இது சும்மா கேட்ட பாட்டுகளோட தொகுப்பு. நாளைக்குத் திரும்பிப் பாத்தா கேக்கலாம்ல. அதுக்கு.

// ஸ்வர்ண கமலம் பாடல்களை இன்று தான் கேட்/பார்க்கிறேன்.//

நல்ல பாட்டுகள் படத்துல. படமும் நல்லாயிருக்கும். பானுப்பிரியாவின் நடனமும், வெங்கடேஷின் நடிப்பும், தேவிலலிதாவின் நடிப்பும் மிக அருமையாக இருக்கும்.

// பனி தீராத வீடு பாடல் தான் ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருதைக் கொடுத்தது என்று நினைவில் இருக்கு. //

இந்தப் பாடல் ஜெயச்சந்திரனை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது என்றால் மிகையில்லை. அந்த அளவிற்குப் பிரபலமான பாடல். அவரும் மிக அழகாகப் பாடியிருக்கிறார்.