Monday, December 03, 2007

காதல் குளிர் - 11

விமானம் வானத்தில் மிதந்தது. அதில் ரம்யாவும் ப்ரகாஷாவும் காதலில் மிதந்தார்கள். வந்த வேலையெல்லாம் (நேர்முகத் தேர்வுக்குத்தானே வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!) முடிந்து பெங்களூர் திரும்பல். ரம்யாவின் சீட் பெல்ட்டாக ப்ரகாஷாவின் கை. முன்பும் இதே நெருக்கத்தில் ப்ரகாஷாவோடு உட்கார்ந்திருக்கிறாள் ரம்யா. ஆனால் இப்போது நிலமையே வேறு.

அவளது ரோஜாக் கைகளை கைக்குள் புதைத்துக் கொண்டு கேட்டான். "ரம்யா....I love you so much. I will love you forever. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சாய்ங்காலா என் லவ்வ ரிஜெக்ட் பண்ணீட்டு.....ராத்ரி எப்படி? ஆறு மணி உளகடே என்னாச்சு?" கைக்குளிருந்த ரோஜாப்பூக்களை முத்தமிட்டான்.

ப்ரகாஷாவின் கைகளை இதழால் நனைத்தாள். "டேய். நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு. நீ என் கூட இருக்கும் போது வர்ர சந்தோஷம்...நீ இல்லாதப்ப வருத்தமாகும்னு புரிஞ்சது. நீ இல்லாமப் போயிருவியோங்குற பயத்துல உங்கிட்ட உறுதிமொழி வாங்கனும்னுதான் தோணுச்சு. அந்த பயத்துலதான் காதலைச் சொல்லத் தோணலை. அதுக்குதான் நானும் கேட்டேன். ஆனா நீயும் சொல்லலை. அப்ப நீ முழிச்சது.......... நான் அழாம இருந்தது பெரிய விஷயம். ஆனாலும் முகத்தை மறைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. உன் பக்கத்துல உக்காந்தா கண்டிப்பா அழுதிருப்பேன். அதுவும் உண்யைக் கட்டிப்புடிச்சிக்கிட்டே. அதுனாலதான் கார்ல முன்னாடி போய் உக்காந்தேன்."

ரம்யாவின் முகத்தில் விழுந்த முடியை விரலால் ஒதுக்கினான். அவ்வளவு மென்மையாக அவன் இதற்கு முன் எதையும் கையாண்டதில்லை. என்ன? நேற்றா? ஹி ஹி. இது மென்மைங்க. மென்மை. "ரம்யா....எனக்கும் அழுகே பந்த்து. தும்ப கஷ்டா பட்டு அழாம இருந்தேன். அது சரி. பிராமிஸ்னு சொன்னியே. நானு குடுக்கலையே? அது எப்பக் கெடைச்சது?"

"தெரியலடா. ஆக்சிடெண்ட் ஆனப்புறம் ரொம்பவே distrubed-ஆ இருந்தேன். அப்ப பயத்துல உங்கிட்டதான் ஓடனும்னு தோணிச்சு. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் ஆட்டோல போறப்போ என்னைப் பாதுகாப்பா வெச்சிருந்தியே....அப்பதான் நீ என்னை கஷ்டப்பட விடமாட்டன்னு தோணிச்சு. உன்னோட நெருக்கம்...உன்னோட வாசம்... உன்னோட சுவாசம்....எல்லாத்தையும் புதுசு புதுசா ரசிச்சேன். நீ எனக்கு வேணும்னு...எப்படியாவது வேணும்னு தோணுச்சு. ஆனா என்னோட கேள்விகளுக்கு இன்னமும் நேரடியான பதில் நீ சொல்லலை. ஆனா பிரச்சனைன்னு வந்தா அது உனக்கு மட்டுமல்ல நம்ம ரெண்டு பேருக்கும்னு காதல் சொல்லுச்சு. ஒங்கம்மா அழுதாங்கன்னா அத எப்படிச் சமாளிக்கிறதுன்னு நம்ம ரெண்டு பேரும் யோசிப்போம். ஒரு வழி கண்டுபிடிப்போம்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்பவே நீ என்னோட ப்ரகாஷாவாயிட்ட.

அப்புறம் எப்படி நீ தனியா தூங்குறது? ஆனா உண்மையச் சொல்றேன்.....உன் கிட்ட எப்படிக் காதலைச் சொல்றதுன்னு தெரியாமதான் முத்தத்தால சொன்னேன். அது...முத்தத்துக்குப் பதில் முத்தம்...அதுக்குப் பதில் முத்தம்னு நடந்து மொத்தமும் நடந்துருச்சு. Well....I liked it. I expressed my love in the best possible way and you reciprocated as a man. I am fine with it. டேய்....உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது."

ரம்யாவின் கன்னத்தை ஒரு கையால் தாங்கிக் கொண்டு கட்டை விரலால் இதழ்களை வருடினான். அட....அதென்ன...அப்படித்தான் பூ பூக்குமா? ரம்யாவின் முகமாற்றத்தைச் சொன்னேன். படக்கென்று ப்ரகாஷாவின் விரலைக் கடித்து விட்டாள்.

"டேய்....இது பிளேன்....எத்தனை பேர் இருக்காங்க. ஒழுங்கா என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. அப்புறம் மிச்சத்த வெச்சுக்கலாம். ஒங்கப்பா கிட்ட சண்ட போட்டுட்டு வந்துருவ. ஒங்கம்மா அழுதா என்னடா செய்வ?" போலி மிரட்டல் விடுத்தாள் ரம்யா.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....சொல்றேன். அம்மா அழுதா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....We are ready to accept them as they are. But why cant they accept us as we are? Just because i love you, I dont deserve to be hated. Certainly I will not be happy to start my life without her blessing. She has to understand me and accept us. If she is not understanding, I will assure her my love and affection to her. Also I will be waiting till she understands me. And I will nurture the confidence in her heart by promising the open doors for her and appa. I want them...but I cant loose you. I will gain you first and then my parents soon after that."

"இத இத இதத்தான் நான் அப்ப எதிர்பார்த்தேன். இப்ப எப்படி உனக்கு பதில் தெரிஞ்சதோ. அதே மாதிரி எனக்கும் தெரிஞ்சது மாமா."

"என்ன மாமாவா?"

"ஆமாண்டா மாமா...." முத்துக் கொட்டிச் சிரித்தாள் ரம்யா.

"மாமா எல்லா பேடா....ப்ரகாஷான்னு கூப்டு. அது போதும்."

"மாமா வேண்டாமா...சரி. பேர் சொல்லியே கூப்புடுறேன். ஆனா...அப்பா அம்மா இருக்குறப்பவும் ப்ரகாஷான்னுதான் கூப்புடுவேன்."

"சரி...சரி....கூப்டா சரிதான்." இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். சிலிர்த்தார்கள். பின்னே...ரம்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தானே.

"Execuse me sir. PDA not allowed inside the flight sir" விமானப் பணிப்பெண் பணிவுப்பெண்ணாகச் சொன்னாள்.

பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. "Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always mischevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?"

"Thatz fine madam."

"Thank you" என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ப்ரகாஷாவின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.

தொடரும்...கதையல்ல. ரம்யா ப்ரகாஷாவின் இனிய வாழ்க்கை.

பின்குறிப்பு

எச்சில் பண்டம் விலக்கு
அதில்
முத்தம் மட்டும் விலக்கு


இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.

அன்புடன்,
கோ.இராகவன்

37 comments:

said...

Sorry ஜிரா. இந்தக் கதைய நல்ல கதைன்னு சொல்லிக்க மனசில்லாம சொல்றேன் "கதை நல்லா இருக்கு"

said...

ஜிரா,

அவ்வளவு தானா?????? ரம்யா சொல்லுற ரீசன் சரியா தப்பா'ன்னே தெரியலை.... தப்பு நடந்துருச்சேன்னுதான் அதை ஒத்துக்கவே வேண்டியதா போச்சோ'னு குழம்புறாளோ???

said...

:-D
I loved this story! :-)

said...

ஜிரா வாழ்க! :-)
காதலை வெற்றி பெறச் செய்த "காதல் காப்பாளர்" ஜிரா வாழ்க!
இனி எல்லாரும் அண்ணன் ஜிராவை, கா.கா ஜிரா என்றே அன்புடன் அழைக்கவும்!

said...

இயல்பான குறுகுறு காதல் வசனங்கள் பிடிச்சிருந்தது ஜிரா!
பிரகாஷாவின் கவிதையும் தான்!

வசனங்கள் சரி! கதை?
அடப் போங்க ஜிரா!
கள்ளியிலும் பால் வித்தகர் ஓங்களுக்கே தெரியாதா?
சரி, நானும் சொல்கிறேன்!
I really loved and enjoyed this story! :-)

said...

// ILA(a)இளா said...
Sorry ஜிரா. இந்தக் கதைய நல்ல கதைன்னு சொல்லிக்க மனசில்லாம சொல்றேன் "கதை நல்லா இருக்கு" //

என்ன இளா இது....நீங்க பிடிக்கலைன்னா நேரடியாச் சொல்லலாமே! நீங்க இப்பிடிச் சொன்னதுதான் எனக்கு வருத்தமாயிருக்கு :(

// இராம்/Raam said...
ஜிரா,

அவ்வளவு தானா?????? ரம்யா சொல்லுற ரீசன் சரியா தப்பா'ன்னே தெரியலை.... தப்பு நடந்துருச்சேன்னுதான் அதை ஒத்துக்கவே வேண்டியதா போச்சோ'னு குழம்புறாளோ??? //

:) ரம்யாவோ ப்ரகாஷாவோ கொழப்பத்துல இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை. அது சரி...தப்பு தப்புன்னு சொல்றியே...எதச் சொல்ற?

said...

ஏம்ப்பா.......மத்தவங்க முன்னாலே கொஞ்சம் 'அடக்கமா' இருந்துருக்கலாமோ?

கண்ணு ஒண்ணே போதுமேப்பா காதலை வெளிப்படுத்த:-)))))

நல்லா இருக்கு.

said...

// துளசி கோபால் said...
ஏம்ப்பா.......மத்தவங்க முன்னாலே கொஞ்சம் 'அடக்கமா' இருந்துருக்கலாமோ? //

என்ன டீச்சர்...எல்லாந் தெரிஞ்ச நீங்களே இப்பிடிச் சொல்லலாமா?

நாலு பேருக்கு முன்னாடி கடவுள் மேல பக்தியக் காட்டுறோம். மத்தவங்க மேல ஆத்திரத்தக் காட்டுறோம். எரிச்சலைக் காட்டுறோம். சந்தோசத்தக் காட்டுறோம். ஏதோ சின்னப்புள்ளைங்க காதலைக் காட்டுறாங்க. இருந்துட்டுப் போகட்டுமே.

// கண்ணு ஒண்ணே போதுமேப்பா காதலை வெளிப்படுத்த:-))))) //

அதென்னவோ உண்மைதான். அப்படிப் பாத்தா உள்ளம் ஒன்னு மட்டுமே போதுமே ;) கண்ணு மட்டும் போதுமுன்னு பாத்துக்கிட்டே இருக்க முடியுமா? ஹி ஹி...கருப்பட்டி மிட்டாயப் பாத்துக்கிட்டு மட்டும் எப்படி டீச்சர் இருக்குறது?

// நல்லா இருக்கு. //

நன்றி டீச்சர். :)

said...

என்ன சப்புன்னு முடிச்சுட்டீங்க...

said...

காதல் ததும்பும் உரையாடல்கள் அருமை! பாராட்டுக்கள் ராகவன்!!!

\\நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு\\

அந்த பயம், 'எல்லாம்' முடுந்ததும் போய்விட்டதா??

உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து, அவசரபட்டுவிட்ட ரம்யாவின் கதாபாத்திரம்,
'எல்லாம்' முடிந்தால் பெண் வேறுவழியின்றி காதலித்துவிடுவாள்/ காதலை ஒத்துக்கொள்வாள் என்பது போல் சித்தரித்துள்ளீர்கள்!

பெண் என்பவள் உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒரு பெலவீனபாண்டம் என்பது போல் ரம்யா கதாபாத்திரம் உணர்த்துகிறது!

காதலை ஒப்புக்கொள்ளாமல், தான் எதிர்ப்பார்க்கும் நம்பிக்கை தரும் பதில் கிடைக்காமல், தன்னை காதலிப்பவனிடம் தன்னை முழுமையாக ஒரு பெண் கொடுப்பாள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

said...

கா.கா ஜிரா

மொத்தத்தையும் இப்பத்தான் ஒரே மூச்சுல படிச்சுட்டு வரேன் தல..எப்பவும் போல கலக்கல் தொடர் :))

ஆனா ஆரம்ப அத்தியாயங்கள்ல இருந்த சுவாரசியமும் கதை சொன்ன ஸ்டைலும் கடைசி சில அத்தியாயங்கள்ல மிஸ் ஆகற ஃபீலிங்கு.. :D

said...

//இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.///

:))))) கன்ஸிடர் பண்ணிடலாம் :))))

said...

ம்ம்ம்ம்...என்னமோ ஒன்னு குறையுது...
இருந்தாலும் நல்லாயிருக்கு ;)

சுபமாக முடிச்சிட்டிங்க ;)

said...

கொடுத்த வாக்க காப்பாத்திட்டீங்க நன்றி :-)

நல்ல வாசிப்பனுபவம்!!!!!!!

said...

காகா ஜிரா வாழ்க.ஹிஹி
நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா.நாந்தான் நீங்க ரொம்ப கெட்டவருன்னு தப்பா நினைச்சுட்டேன்.கடைசியில ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சுடீங்க.நன்றி அண்ணா.

said...

//காதலை ஒப்புக்கொள்ளாமல், தான் எதிர்ப்பார்க்கும் நம்பிக்கை தரும் பதில் கிடைக்காமல், தன்னை காதலிப்பவனிடம் தன்னை முழுமையாக ஒரு பெண் கொடுப்பாள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.//

EXACTLY....கதையை ஆரம்பத்தில் ரொம்ப அழக கொண்டு போய்டு இருந்தீங்க..ஆனா கடைசி இரண்டு வாரமா நீங்க ஜனரஞ்சக கதை எழுத முயற்சி பண்ணின மாதிரி இருந்துது..
ரம்யாவோட கதாபாத்திரம் integrity இல்லாம போய்டுச்சு...

said...

சுபம் போட்டு முடிச்சதுக்கு நண்பனாய் என் நன்றி.

ஆனா வழக்கமா ஜி.ராவின் கதைகளைப் படிக்கும் ஒரு வாசகனாய் இந்தக் கதையில் முழு திருப்தி கிடைக்கவில்லை என்பதை வருத்தமுடன் பதிவு செய்கிறேன்.

said...

ரொம்ப அழகா இருக்கு ஜி.ரா :)))

said...

// Divya said...

காதல் ததும்பும் உரையாடல்கள் அருமை! பாராட்டுக்கள் ராகவன்!!!

\\நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு\\

அந்த பயம், 'எல்லாம்' முடுந்ததும் போய்விட்டதா??

உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து, அவசரபட்டுவிட்ட ரம்யாவின் கதாபாத்திரம்,
'எல்லாம்' முடிந்தால் பெண் வேறுவழியின்றி காதலித்துவிடுவாள்/ காதலை ஒத்துக்கொள்வாள் என்பது போல் சித்தரித்துள்ளீர்கள்!

பெண் என்பவள் உணர்ச்சிகளுக்கு அடிமையான ஒரு பெலவீனபாண்டம் என்பது போல் ரம்யா கதாபாத்திரம் உணர்த்துகிறது!

காதலை ஒப்புக்கொள்ளாமல், தான் எதிர்ப்பார்க்கும் நம்பிக்கை தரும் பதில் கிடைக்காமல், தன்னை காதலிப்பவனிடம் தன்னை முழுமையாக ஒரு பெண் கொடுப்பாள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

//

நீங்க இப்படி யோசிச்சு பாருங்க திவ்யா. அந்த பொண்ணு மனசுலயும் காதல் இருக்கு. அவன்கிட்ட சில விஷயங்கள் எதிர்பாக்கறா. அது கிடைக்காம போகும்போது ஏமாற்றமாகி வெளிப்படுத்தலை. ஆனா ரொம்ப பயந்த மனநிலமைல இருக்கும்போது எந்த ஒரு பொண்ணும் மனசுக்கு பிடிச்சவங்க கைல பாதுகாப்பா இருக்கதான் நினைப்பா. அப்படி இருக்கும்போது அவளுக்கு கோபமோ ஏமாற்றமோ எந்த ஒரு எண்ணமும் வராது. அந்த இடத்துல அவளுக்குள்ள இருக்கற காதல் மட்டும்தான் வெளில வரும். அதுக்காக அவளையே கொடுத்தது சரினு நான் சொல்ல வரலை. ஆனா அதுக்கு வாய்ப்பு உண்டு. சொல்லணும்னு நினைச்சு நினைச்சு போகும்போது வெளிப்படாத காதல் இந்த மாதிரி நேரங்கள்ல ஐ மீன் பயந்த மனநிலமைல ரொம்ப இயல்பா வெளில வரும் :)))

said...

/ரம்யாவோ ப்ரகாஷாவோ கொழப்பத்துல இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை. அது சரி...தப்பு தப்புன்னு சொல்றியே...எதச் சொல்ற?//

ஜிரா,

தப்புன்னு தானே அதெல்லாம் நம்ம சினிமா'விலே காட்டுறாங்க...

BTW.. நான் சொல்லவந்தது ரம்யா தன்னோட காதலை வெளிப்படுத்த ஏற்படுத்திக்கிட்ட நேரத்திலே அந்த தப்பு நடந்துருச்சு, அது ரெண்டு பக்கமும் நடந்ததுதான்.

அந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி வரைக்கும் பிரகாசா தன்னோட அம்மாக்கிட்டே இதெ சொல்லி அவங்க அழுதா என்ன பண்ணுவே'னு கேட்ட ரம்யா'க்கு பதில் சொல்லமுடியாமே திணறியவன் இப்போ நானே பேசி சாமளிக்கிறேன்னு சொன்னான்னா அப்போ அவன் சூழ்நிலை கைதியா மாறிட்டான்னுதானே அர்த்தம்? அந்த நிலைமையை தங்களுக்குள்ளே ஏற்படுத்திக்கிற கட்டாயம் அவனுக்கு ஏன் வந்துச்சு?

இவங்க ரெண்டு பேரோட காதல் உள்ளார்ந்த அன்பிலே தான் வந்ததுன்னு நீங்க சொல்லலைன்னு எனக்கு தோணுது, சந்தர்ப்பத்திலே ரெண்டு பேரும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி இப்போ ரெண்டு பேரும் அதை காதலாக ஒத்துக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு உந்தப்பட்டு இருக்காங்கன்னு தான் கதையோட முடிவு உணர்த்துக்கிறது.

இந்தமாதிரியெல்லாம் நான் think பண்ணலேன்னு சொல்லிறாதீங்க, முதற்பாகத்திலே இருந்து இந்த கடைசி பாகம் வரைக்கும் படிச்சிட்டு தீடீரென்னு சப்'ன்னு ஒரு முடிவை ஏத்துக்கமுடியலை ஜிரா.... :(

said...

முடிவுக்கு அவசரப்பட்டமாதிரி இருக்கிறது...


//விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ப்ரகாஷாவின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.//
தாங்க முடியல்ல...

//தொடரும்...கதையல்ல. ரம்யா ப்ரகாஷாவின் இனிய வாழ்க்கை.//
சுபம் போட்டு கதைய முடிச்சதுக்கு நன்றி...

"காதல் குளிர்" - செமகுளிர்...
வாழ்த்துக்கள்...!

said...

// இராம்/Raam said...
/ரம்யாவோ ப்ரகாஷாவோ கொழப்பத்துல இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை. அது சரி...தப்பு தப்புன்னு சொல்றியே...எதச் சொல்ற?//

ஜிரா,

தப்புன்னு தானே அதெல்லாம் நம்ம சினிமா'விலே காட்டுறாங்க...//

சினிமால காட்டுறதெல்லாம் கணக்கா? சினிமால தப்புன்னு சொல்லீட்டா அது தப்பாயிருமா? என்னப்பா இது.

// BTW.. நான் சொல்லவந்தது ரம்யா தன்னோட காதலை வெளிப்படுத்த ஏற்படுத்திக்கிட்ட நேரத்திலே அந்த தப்பு நடந்துருச்சு, அது ரெண்டு பக்கமும் நடந்ததுதான். //

அத ஏம்ப்பா திரும்பத் திரும்பத் தப்புன்னு சொல்ற....அப்படி நடந்துக்கனும் ரெண்டு பேருக்குமே முன்னாசை இருக்கலை. அப்படியிருந்ததா நானும் சொல்லலை. அவ கொஞ்சம் பயந்து எளகியிருக்குறப்ப இவன் பாத்துக்கிறுவான்னு ஒரு நம்பிக்கை வருது. கொழந்தைங்க கூட முத்தம் குடுக்குதுப்பா....அதத்தான் அவளும் செஞ்சா...ரொம்பவே விரும்புறவங்க முத்தம்னா அப்படி இப்பிடின்னு போக வாய்ப்பு நெறையவே இருக்கு.

// அந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி வரைக்கும் பிரகாசா தன்னோட அம்மாக்கிட்டே இதெ சொல்லி அவங்க அழுதா என்ன பண்ணுவே'னு கேட்ட ரம்யா'க்கு பதில் சொல்லமுடியாமே திணறியவன் இப்போ நானே பேசி சாமளிக்கிறேன்னு சொன்னான்னா அப்போ அவன் சூழ்நிலை கைதியா மாறிட்டான்னுதானே அர்த்தம்? அந்த நிலைமையை தங்களுக்குள்ளே ஏற்படுத்திக்கிற கட்டாயம் அவனுக்கு ஏன் வந்துச்சு? //

அப்படி நான் நினைக்கலை. இந்தக் கதைய நேத்தே போட்டாச்சு. நேத்து கொஞ்சம் சொல்லீட்டு...இன்னைக்குத்தானே இந்தக் கேள்வியக் கேக்குற? அப்ப நீ சூழ்நிலைக்கைதியா என்ன? அதப் பத்தி யோசிக்கிறப்போ இந்தக் கேள்வி வந்துருச்சு. அது மாதிரி...நேத்து அவனுக்குப் பட்டுன்னு தோணலை. அப்புறந்தான் ஆறு மணி நேரமிருந்திருக்கே. அதுக்குள்ள யோசிச்சிருக்கான். ஏதோ தோணியிருக்கு. அதத்தான் அவ திரும்பக் கேட்டதும் சொல்லீருக்கான். அந்நேரத்துக்கு அவன் யோசிச்சுச் சொல்லலையே.

// இவங்க ரெண்டு பேரோட காதல் உள்ளார்ந்த அன்பிலே தான் வந்ததுன்னு நீங்க சொல்லலைன்னு எனக்கு தோணுது, சந்தர்ப்பத்திலே ரெண்டு பேரும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி இப்போ ரெண்டு பேரும் அதை காதலாக ஒத்துக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு உந்தப்பட்டு இருக்காங்கன்னு தான் கதையோட முடிவு உணர்த்துக்கிறது.//

இல்லை. ஏற்கனவே அன்பு இருந்திருக்கு. அவங்க நெருக்கமும் புதுசில்லை. ஆனா அவங்களோட கூடல் மட்டும் புதுசு. அந்தக் கூடலுக்குக் கூட்டீட்டுப் போனது காதல்.

// இந்தமாதிரியெல்லாம் நான் think பண்ணலேன்னு சொல்லிறாதீங்க, முதற்பாகத்திலே இருந்து இந்த கடைசி பாகம் வரைக்கும் படிச்சிட்டு தீடீரென்னு சப்'ன்னு ஒரு முடிவை ஏத்துக்கமுடியலை ஜிரா.... :( //

என்னுடைய எழுத்துல குறை இருக்கலாம். அதுக்கான வாய்ப்பிருக்கு. நான் சொல்ல வந்தத அழுத்தமா சொல்லீருக்கனுமோ என்னவோ.

தருமி சார் பாஷைல சொன்னா...நோட்ஸ் குடுக்கனும் போல. :) ஆனாலும் உன்னுடைய கருத்தை நான் மதிச்சு ஏத்துக்கிறேன். அடுத்த முயற்சிய சுறுசுறுப்பாக்கீறலாம். சரியா? :)

said...

அருமையான நடை ஜி.ரா...

பலர் சொல்ற மாதிரி இதுல இண்டகிரிட்டி மிஸ் எல்லாம் கிடையாது.

அறிவுக்கும் மனசுக்கும் நடக்குற போராட்டத்துல எது ஜெயிக்கும்னு கடைசி வரை தெரியாது. அவள் அறிவுப்பூர்வமாக எவ்வளவு பேசினாலும் மனதளவில் அவனை நேசிக்கவே செய்தாள். அவ்வளவு தான். இதுல தப்பு சரினு எல்லாம் நம்ம எதுவும் சொல்ல முடியாது.

ஆனா துவக்கத்தில் கதையை நீங்கள் கொண்டு சென்ற விதம் "நான் தாண்டா இங்க பெரிய ஆள்" அப்படினு தைரியமா எழுதன மாதிரி, சொல்லி அடிச்ச மாதிரி இருந்துச்சி. அது போக போக மிஸ்ஸிங் :(

said...

@இம்சை அரசி
\\நீங்க இப்படி யோசிச்சு பாருங்க திவ்யா. அந்த பொண்ணு மனசுலயும் காதல் இருக்கு. அவன்கிட்ட சில விஷயங்கள் எதிர்பாக்கறா. அது கிடைக்காம போகும்போது ஏமாற்றமாகி வெளிப்படுத்தலை. ஆனா ரொம்ப பயந்த மனநிலமைல இருக்கும்போது எந்த ஒரு பொண்ணும் மனசுக்கு பிடிச்சவங்க கைல பாதுகாப்பா இருக்கதான் நினைப்பா. அப்படி இருக்கும்போது அவளுக்கு கோபமோ ஏமாற்றமோ எந்த ஒரு எண்ணமும் வராது. அந்த இடத்துல அவளுக்குள்ள இருக்கற காதல் மட்டும்தான் வெளில வரும். அதுக்காக அவளையே கொடுத்தது சரினு நான் சொல்ல வரலை. ஆனா அதுக்கு வாய்ப்பு உண்டு. சொல்லணும்னு நினைச்சு நினைச்சு போகும்போது வெளிப்படாத காதல் இந்த மாதிரி நேரங்கள்ல ஐ மீன் பயந்த மனநிலமைல ரொம்ப இயல்பா வெளில வரும் :)))\\

இம்சை அரசி,

ஒரு பெண் பயந்த மனநிலையில் இருக்கும் நேரத்தில், காதலனின் அரவணைப்பில் பாதுகாப்பாக உணரும் போது, அவள் சொல்ல தடுமாறிய காதல் வெளிப்பட வாய்ப்புகள் அதிகம், ஒத்துக்கொள்கிறேன்.......ஆனால் அந்த காதலை அவள் தன்னையே கொடுத்துதான் வெளிப்படுத்த வேண்டுமா?? என்பதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.

ரம்யாவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் வர்ணிக்கபட்ட விதம் அவள் இப்படி தன் காதலை வெளிப்படுத்துவாள் என நினைக்கவும், நம்பவும் முடியவில்லை!

\\ பகுதி - 6: 'ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ\\

எனக்குள் இருப்பது 'எங்கப்பாம்மாவோட' பொண்ணுன்னு மார்தட்டின பெண்ணா இப்படி ஒரு காரியத்தை பண்ணுவாள்!

said...

பத்திரிகைக்காரர்கள் அவசரப்படுத்தியதால் வேகமாக முடித்த தொடர்கதை கதை போல இருக்கு.

said...

உங்களின் கள்ளி-பால் தொடரும் சரி காதல் குளிர் தொடரும் சரி - பெண் என்னவோ உடலுறவுக்காக ஏதோ சால்சாப்பு சொல்லி ஈடுபடுவது போல உள்ளது. இந்தக்காலப் பெண்கள் (அதுவும் கணினித்துறை பெண்கள் - வந்துட்டாங்கய்யா! - ) இந்தமாதிரி காதலுக்கும் உடலுறவுக்கும் அலைவது (இந்த வார்த்தை கடுமை என்றாலும்) போன்ற தோற்றத்தையே உங்கள் கதைகள் ஏற்படுத்துகிறது. இன்றைய ஐடி துறையினரால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைப் பற்றி பலரும் எழுதி, கிழித்துவிட்டாலும், நடைமுறையில் பல பெண்கள் தற்போது உடலுறவுக்கு அவ்வளவாக கவலையெல்லாம் படுவதில்லை என்பதையே உங்கள் கதையும் தொட்டுக் காட்டுகிறது.

எல்லோரும் சொன்னதுபோல இந்தக் கதை (முடிவு, முடித்தவிதம் அல்லது கடைசி 2 அத்தியாயங்கள்) சரியில்லை.

என்னமோ போங்க. அம்ஸ்டர்டாம் பற்றியாவது நல்ல தொடரா எழுதுங்க (உங்க ஊர்ப்பயண கட்டுரைகள் மாதிரி)

மகேஷ்

said...

@ Divya

// ஒரு பெண் பயந்த மனநிலையில் இருக்கும் நேரத்தில், காதலனின் அரவணைப்பில் பாதுகாப்பாக உணரும் போது, அவள் சொல்ல தடுமாறிய காதல் வெளிப்பட வாய்ப்புகள் அதிகம், ஒத்துக்கொள்கிறேன்.......ஆனால் அந்த காதலை அவள் தன்னையே கொடுத்துதான் வெளிப்படுத்த வேண்டுமா?? என்பதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.
//

அவ அவளோட காதலை வெளிப்படுத்தறதுக்காக தன்னை கொடுக்கலை. இது மாதிரி விஷயங்கள்ல ஒருத்தருக்கு(எல்லாருக்குமே) மனசு ஒண்ணு சொல்லும். அறிவு ஒண்ணு சொல்லும். இதுக்கு முன்னாடி வரைக்கும் அவ மனசு வேணும்னு நினைச்சாலும் அறிவு சொல்றது படி நடந்துட்டு இருக்கா. உணர்ச்சிவசப்பட்ட நிலைல அவ மனசு அறிவ ஜெயிச்சிருக்கு. தட்ஸ் ஆல். தன்னையே கொடுத்தது சரியா தப்பானு நான் பேச வரலை. ஆனா இது ரொம்ப யதார்த்தமான ஒரு விஷயம். நீங்க அறிவ மட்டுமே வச்சு பாக்கறீங்க... :)))

// ரம்யாவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் வர்ணிக்கபட்ட விதம் அவள் இப்படி தன் காதலை வெளிப்படுத்துவாள் என நினைக்கவும், நம்பவும் முடியவில்லை!

எனக்குள் இருப்பது 'எங்கப்பாம்மாவோட' பொண்ணுன்னு மார்தட்டின பெண்ணா இப்படி ஒரு காரியத்தை பண்ணுவாள்!
//

என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஒரே விஷயம்தான். காதல்ன்ற விஷயத்துல நான் யாரையும் எப்பவுமே நம்ப மாட்டென். இவ இப்படி பண்ண மாட்டானு நாம கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ற அளவுக்கு இருக்கவங்களும் பண்ணுவாங்க. இவ கண்டிப்பா இப்படி பண்ணுவானு நாம நினைக்கறவங்க பண்ணாம இருப்பாங்க. காதல் பத்தி திட்டிட்டு இருக்கறவங்க கூட காதல்ல விழுவாங்க. யாருக்கு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.

மனிதன் என்பவன் உணர்ச்சிகளால் ஆனவன். உணர்ச்சிகளுக்கு அடிமையாகற தருணங்கள்ல இது ஒண்ணு. நான் முன்னாடி சொன்னதேதான். நீங்க அறிவ மட்டும் வச்சு பாக்கறீங்க... :)))

said...

// இவங்க ரெண்டு பேரோட காதல் உள்ளார்ந்த அன்பிலே தான் வந்ததுன்னு நீங்க சொல்லலைன்னு எனக்கு தோணுது, சந்தர்ப்பத்திலே ரெண்டு பேரும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி இப்போ ரெண்டு பேரும் அதை காதலாக ஒத்துக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு உந்தப்பட்டு இருக்காங்கன்னு தான் கதையோட முடிவு உணர்த்துக்கிறது.
//

ராம் மொதல்ல நீங்க கதைய தெளிவாப் படிச்சிட்டு வாங்க :)))

மொதல்ல இருந்தே அவங்க ரெண்டு பேருக்குமே காதல் இருந்திருக்கு. சோ சந்தர்ப்பத்திலே ரெண்டு பேரும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி இப்போ ரெண்டு பேரும் அதை காதலாக ஒத்துக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு உந்தப்பட்டு இருக்காங்கன்னு கண்டிப்பா சொல்ல முடியாது. இது கட்டாயத்துல வந்த காதல் இல்ல. ஏற்கனவே இருந்த காதல் வெளிப்பட்டு இருக்கு. அவ்ளோதான்.

இன்னொண்ணூ தெரிஞ்சிக்கங்க. அவளுக்குள்ள காதல் இல்லைனா அவ கண்டிப்பா அந்த மாதிரி தப்ப பண்ணியிருக்க மாட்டா. அடுத்தவங்ககிட்ட அந்த மாதிரி நினைப்பு என்னைக்குமே ஒரு பொண்ணுக்கு வராது :)))

said...

/அத ஏம்ப்பா திரும்பத் திரும்பத் தப்புன்னு சொல்ற....அப்படி நடந்துக்கனும் ரெண்டு பேருக்குமே முன்னாசை இருக்கலை. அப்படியிருந்ததா நானும் சொல்லலை. அவ கொஞ்சம் பயந்து எளகியிருக்குறப்ப இவன் பாத்துக்கிறுவான்னு ஒரு நம்பிக்கை வருது. கொழந்தைங்க கூட முத்தம் குடுக்குதுப்பா....அதத்தான் அவளும் செஞ்சா...ரொம்பவே விரும்புறவங்க முத்தம்னா அப்படி இப்பிடின்னு போக வாய்ப்பு நெறையவே இருக்கு.//

விவாதங்களிலே வார்த்தைகள் உறுத்தாமே இருக்கனுமின்னு தான் உடலுறவு'னு சொல்லாமே தப்பு'னு சொல்லியிருக்கேன்.... :) முத்தம் கொடுத்ததோட முடிச்சுட்டு அந்த உறவுக்கு முன்னாடியே அவங்க தங்களோட உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருந்தா அதை ஏத்துக்கலாம். உண்மையான காதல்'கிறதே அங்க வைச்சிதானே நம்மாளே உறுதிப்படுத்திக்க முடியும். இவங்களோட காதல் வாழ்க்கை கல்யாணத்திலே முடியுறப்போ அவங்களுக்குள்ளே அடுத்து பரஸ்பர பரிமாற்ற அன்பிற்கு என்னதான் கொடுத்துக்க போறாங்க??? கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாமே முடிச்சி போச்சுன்னா அதுக்கபுறம் என்னாத்துக்கு கல்யாணமின்னு குரங்கு மனசு சிந்திக்க தோணுமில்லை? :) நான் எந்த இடத்திலேயும் அவங்களுக்கு அதுதான் Indension'ஆ இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே? ரம்யா'கிற கதாபாத்திரம் தெளிவா சிந்தித்து நடைமுறை வாழ்க்கையின் படி அமைத்து கொள்ள போறதா முன் பாகங்கள் வரை சித்தரித்திட்டு இப்போ அந்த உறவுக்கு பிறகு பலவினமடைந்த மாதிரி தோணுச்சு.

//அப்படி நான் நினைக்கலை. இந்தக் கதைய நேத்தே போட்டாச்சு. நேத்து கொஞ்சம் சொல்லீட்டு...இன்னைக்குத்தானே இந்தக் கேள்வியக் கேக்குற? அப்ப நீ சூழ்நிலைக்கைதியா என்ன? அதப் பத்தி யோசிக்கிறப்போ இந்தக் கேள்வி வந்துருச்சு. அது மாதிரி...நேத்து அவனுக்குப் பட்டுன்னு தோணலை. அப்புறந்தான் ஆறு மணி நேரமிருந்திருக்கே. அதுக்குள்ள யோசிச்சிருக்கான். ஏதோ தோணியிருக்கு. அதத்தான் அவ திரும்பக் கேட்டதும் சொல்லீருக்கான். அந்நேரத்துக்கு அவன் யோசிச்சுச் சொல்லலையே.//

நீங்க கதை பப்ளிஷ் டைம் நைட் 12.40'க்கு மேலே? அரை தூக்கத்திலே என்னத்தை பேசுறது? அப்போயிருந்து நான் சொல்லவர்ற பாயிண்ட் என்னான்னா நீங்க ஆரம்பத்திலே இருந்து ரம்யா'வோட Character boldness இப்போ கொஞ்சமா மாறிடுச்சுன்னுதான். உடலுறவுக்கு அப்புறந்தான் அவங்களோட காதல் பலப்பட்டுருச்சுன்னா நீங்க சொல்லியிருக்க மாட்டிங்கன்னு நிச்சயமா நான் நம்புறேன்... :)

//இல்லை. ஏற்கனவே அன்பு இருந்திருக்கு. அவங்க நெருக்கமும் புதுசில்லை. ஆனா அவங்களோட கூடல் மட்டும் புதுசு. அந்தக் கூடலுக்குக் கூட்டீட்டுப் போனது காதல்.//

இதை நான் 100% எத்துக்கிறேன், ஆனா கூடலுக்கு கூட்டிட்டு போனது அவங்க காதல்தான்னு சொல்லவந்ததே தவிர்த்து... :)



//என்னுடைய எழுத்துல குறை இருக்கலாம். அதுக்கான வாய்ப்பிருக்கு. நான் சொல்ல வந்தத அழுத்தமா சொல்லீருக்கனுமோ என்னவோ.//

ஜிரா, நீங்க என்ன சொல்லவர்றீகிறதிலே அழுத்தத்தை குறைச்சி முடிவு நெருங்கிருச்சேன்னு அவசரப்பட்டு முடிச்சமாதிரி தெரியுது... :)

//தருமி சார் பாஷைல சொன்னா...நோட்ஸ் குடுக்கனும் போல. :) ஆனாலும் உன்னுடைய கருத்தை நான் மதிச்சு ஏத்துக்கிறேன். அடுத்த முயற்சிய சுறுசுறுப்பாக்கீறலாம். சரியா? :)///

அழகான கருத்து பரிமாற்றத்துக்கு இடம் கொடுத்த உங்க மேலே தான் எனக்கு பெரிய மரியாதை வருது. சிலர் நான் எழுதுனது தான் சரி, நான் என்ன சொல்லவந்தேனோ அதை சொல்லிட்டேன்'னு ஓடி போயிறப்போ படிக்கிற வாசகர்களோட கருத்தை ஏத்துக்கிற உங்களின் பெரிய மனசு வாழ்க! வாழ்க!!!

said...

/
ராம் மொதல்ல நீங்க கதைய தெளிவாப் படிச்சிட்டு வாங்க :)))//

அக்கா உங்களின் பரிந்துரைக்கு மிக்க நன்றி.... :)

said...

//இவங்களோட காதல் வாழ்க்கை கல்யாணத்திலே முடியுறப்போ அவங்களுக்குள்ளே அடுத்து பரஸ்பர பரிமாற்ற அன்பிற்கு என்னதான் கொடுத்துக்க போறாங்க??? கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாமே முடிச்சி போச்சுன்னா அதுக்கபுறம் என்னாத்துக்கு கல்யாணமின்னு குரங்கு மனசு சிந்திக்க தோணுமில்லை? :)//

கல்யாணம்னா இது மட்டும் தான்னு நினைச்சிட்டீங்களா ராமண்ணா???

இது தாம்பத்யத்தோட ஒரு பகுதி மட்டும் தான்...

said...

// கப்பி பய said...
கா.கா ஜிரா

மொத்தத்தையும் இப்பத்தான் ஒரே மூச்சுல படிச்சுட்டு வரேன் தல..எப்பவும் போல கலக்கல் தொடர் :))

ஆனா ஆரம்ப அத்தியாயங்கள்ல இருந்த சுவாரசியமும் கதை சொன்ன ஸ்டைலும் கடைசி சில அத்தியாயங்கள்ல மிஸ் ஆகற ஃபீலிங்கு.. :D //

வாங்க கப்பி. பலரும் சொன்ன கருத்து அதுதான். குறிப்பா கடைசி இரண்டு அத்தியாயங்கள்ள...கதை படபடன்னு ஓடிட்டதால சொல்ல வந்தது சரியாச் சொல்லப்படலைன்னு நெறைய பேர் சொன்னாங்க. உங்க கருத்தையும் ஏத்துக்கிறேன்.

// ஜி said...
//இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.///

:))))) கன்ஸிடர் பண்ணிடலாம் :)))) //

அது....சூப்பர். :)

// கோபிநாத் said...
ம்ம்ம்ம்...என்னமோ ஒன்னு குறையுது...
இருந்தாலும் நல்லாயிருக்கு ;)

சுபமாக முடிச்சிட்டிங்க ;) //

அடுத்த கதைல கூட்டி வெச்சி சரி செஞ்சுருவோம் கோபி. சரிதானா? :)

// அருட்பெருங்கோ said...
கொடுத்த வாக்க காப்பாத்திட்டீங்க நன்றி :-)

நல்ல வாசிப்பனுபவம்!!!!!!! //

காதற் கவிஞரே வந்து கதை படிச்சது பெரிய மகிழ்ச்சி. தொடர்ந்து இந்தப் பக்கம் வரனும்னு கேட்டுக்கிறேன்.

// துர்கா|thurgah said...
காகா ஜிரா வாழ்க.ஹிஹி
நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா.நாந்தான் நீங்க ரொம்ப கெட்டவருன்னு தப்பா நினைச்சுட்டேன்.கடைசியில ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சுடீங்க.நன்றி அண்ணா. //

:) அவங்க சந்தோசத்துக்குக் குறுக்க நிக்க மனசு ஒப்பலையே. அதான் சேத்து வெச்சாச்சு.

said...

// இராம்/Raam said...
விவாதங்களிலே வார்த்தைகள் உறுத்தாமே இருக்கனுமின்னு தான் உடலுறவு'னு சொல்லாமே தப்பு'னு சொல்லியிருக்கேன்.... :) //

கூடல்னு சொல்லலாமே. ஒங்கூருக்கு மட்டுந்தான் அந்தப் பேரா? ;)

// முத்தம் கொடுத்ததோட முடிச்சுட்டு அந்த உறவுக்கு முன்னாடியே அவங்க தங்களோட உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருந்தா அதை ஏத்துக்கலாம். உண்மையான காதல்'கிறதே அங்க வைச்சிதானே நம்மாளே உறுதிப்படுத்திக்க முடியும். //

என்னத்தக் கட்டுப்படுத்துறது? அவங்க என்ன புத்தரா? அந்தச் சூழ்நிலைல சாஃப்ட்வேர்னு இல்லை....யாராகயிருந்தாலும் தவறு நடக்க வாய்ப்பிருக்கு. நடந்தே தீரும்னு சொல்லலை. ஆனா வாய்ப்பிருக்குங்குறதுதான் உண்மை.

// இவங்களோட காதல் வாழ்க்கை கல்யாணத்திலே முடியுறப்போ அவங்களுக்குள்ளே அடுத்து பரஸ்பர பரிமாற்ற அன்பிற்கு என்னதான் கொடுத்துக்க போறாங்க??? கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாமே முடிச்சி போச்சுன்னா அதுக்கபுறம் என்னாத்துக்கு கல்யாணமின்னு குரங்கு மனசு சிந்திக்க தோணுமில்லை? :) //

கல்யாணம்னு எதச் சொல்ற? தாலி கெட்டுறதையா? சரி. கல்யாணம் பண்ணிக்கிறதே அதுக்குத்தான்னு நீ சொன்னீன்னா..இங்க உன்னையப் பலர் கும்மீருவாங்க. கல்யாணத்துல அதுவும் ஒன்னாமே. பாரதிதாசன் கவிதைகள் படிச்சிருக்கியா? ;) படிச்சுப் பாரு. காதலர்களைப் பற்றி எவ்வளவு அழகாச் சொல்வாருன்னு. அவரு பாவேந்தர்னு புகழ்றோம்ல.

// நான் எந்த இடத்திலேயும் அவங்களுக்கு அதுதான் Indension'ஆ இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே? ரம்யா'கிற கதாபாத்திரம் தெளிவா சிந்தித்து நடைமுறை வாழ்க்கையின் படி அமைத்து கொள்ள போறதா முன் பாகங்கள் வரை சித்தரித்திட்டு இப்போ அந்த உறவுக்கு பிறகு பலவினமடைந்த மாதிரி தோணுச்சு. //

:) அவ மொதல்ல என்ன கேட்டா? ஒங்காமா அழுதா என்ன செய்வ? அப்படித்தானே? அவன் அப்பவே விட்டுட்டு வந்துருவேன்னு சொல்லீருந்தா? ;) அட..அப்படி எதையாவது சொல்வான்னு அவ எதிர்பாத்தான்னும் அப்பவே சொல்லியாச்சு. அவன் கூடயிருப்பாங்குற உறுதிதான் அவ எதிர்பாத்தது. அந்த நம்பிக்கை வந்துருச்சு. காந்தர்வ மணம்...அட புராணங்கள் புனிதமாச் சொல்லுதப்பா..முடிஞ்சிருச்சு.

// நீங்க கதை பப்ளிஷ் டைம் நைட் 12.40'க்கு மேலே? அரை தூக்கத்திலே என்னத்தை பேசுறது? அப்போயிருந்து நான் சொல்லவர்ற பாயிண்ட் என்னான்னா நீங்க ஆரம்பத்திலே இருந்து ரம்யா'வோட Character boldness இப்போ கொஞ்சமா மாறிடுச்சுன்னுதான். உடலுறவுக்கு அப்புறந்தான் அவங்களோட காதல் பலப்பட்டுருச்சுன்னா நீங்க சொல்லியிருக்க மாட்டிங்கன்னு நிச்சயமா நான் நம்புறேன்... :) //

இல்லை. காதல் பரிமாற்றத்துக்கு அப்புறம்தான் கூடற்பரிமாற்றம்.

//இதை நான் 100% எத்துக்கிறேன், ஆனா கூடலுக்கு கூட்டிட்டு போனது அவங்க காதல்தான்னு சொல்லவந்ததே தவிர்த்து... :)//

எழுதுன நான் அப்படி நெனைச்சி எழுதலை. அது எழுத்துல வரலைன்னா...அது என்னுடைய தோல்விதான்.

//ஜிரா, நீங்க என்ன சொல்லவர்றீகிறதிலே அழுத்தத்தை குறைச்சி முடிவு நெருங்கிருச்சேன்னு அவசரப்பட்டு முடிச்சமாதிரி தெரியுது... :) //

ஒன்னு சொல்றேன் கேளு...ரம்யா பிரகாஷா உண்மையிலேயே என்ன பேசிக்கிட்டாங்கன்னு ஒரு அத்தியாயம் போட்டிருந்தா கதை எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவ்வளவு விளக்கமா எழுதாம இப்பிடி எழுதுனா புரிஞ்சுக்குவீங்கன்னு நெனச்சேன். எங்கையோ தப்பு செஞ்சிருக்கேன்.

said...

//கல்யாணம்னா இது மட்டும் தான்னு நினைச்சிட்டீங்களா ராமண்ணா???

இது தாம்பத்யத்தோட ஒரு பகுதி மட்டும் தான்...//

பாலாஜி,


கதாபாத்திரங்கள் பத்தி பேசிட்டு இருக்கிறப்போ சில வார்த்தைகளை மட்டும் எடுத்து பொது வாழ்க்கை பற்றி கேள்வி கேட்கிற ஒன்னோட சமர்த்தியம் நல்லா இருக்கு... :)

கீப் இட் அப்.. :)

said...

//என்னத்தக் கட்டுப்படுத்துறது? அவங்க என்ன புத்தரா? அந்தச் சூழ்நிலைல சாஃப்ட்வேர்னு இல்லை....யாராகயிருந்தாலும் தவறு நடக்க வாய்ப்பிருக்கு. நடந்தே தீரும்னு சொல்லலை. ஆனா வாய்ப்பிருக்குங்குறதுதான் உண்மை.//

ஜிரா,

என்னோட வாதமே அங்கதான் இருக்கு! இவ்வளவு திடமான அல்லது தெளிவா முடிவு எடுத்த ரம்யா உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கிற சாதாரண பெண்ணா நீங்க கடைசி பாகங்களிலே சித்தரித்தது தான். நீங்க சொன்ன கூடலை அவ நினைச்சிருந்தா தவிர்த்து இருந்தா இன்னும் அவ மேலே மரியாதை வந்திருந்துருக்கும்.


//கல்யாணம்னு எதச் சொல்ற? தாலி கெட்டுறதையா? சரி. கல்யாணம் பண்ணிக்கிறதே அதுக்குத்தான்னு நீ சொன்னீன்னா..இங்க உன்னையப் பலர் கும்மீருவாங்க. கல்யாணத்துல அதுவும் ஒன்னாமே.//

நான் எங்கயும் அதை சொல்லவே இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாமே முடிஞ்சு போச்சுன்னா என்னா இருக்க போகுது புதுசா அன்பு பரிமாற்றத்துக்கு?'ன்னு தான் கேட்டேன்....!

//பாரதிதாசன் கவிதைகள் படிச்சிருக்கியா? ;) படிச்சுப் பாரு. காதலர்களைப் பற்றி எவ்வளவு அழகாச் சொல்வாருன்னு. அவரு பாவேந்தர்னு புகழ்றோம்ல.//

படிச்சிருக்கேன், நீங்க எதை சொல்லுறீங்கன்னு தெரிஞ்சா அதை திரும்ப படிச்சி பார்க்கலாம்... :)


//அவ மொதல்ல என்ன கேட்டா? ஒங்காமா அழுதா என்ன செய்வ? அப்படித்தானே? அவன் அப்பவே விட்டுட்டு வந்துருவேன்னு சொல்லீருந்தா? ;) அட..அப்படி எதையாவது சொல்வான்னு அவ எதிர்பாத்தான்னும் அப்பவே சொல்லியாச்சு. அவன் கூடயிருப்பாங்குற உறுதிதான் அவ எதிர்பாத்தது. அந்த நம்பிக்கை வந்துருச்சு. //

நீங்க எழுதுறப்போ என்ன நினைச்சு எழுதுனீங்கன்னு எனக்கு தெரியாது, ரம்யா கேட்ட அந்த கேள்விக்கு பிரகாசா திணறினப்போ நான் அவ தாயுள்ளத்தோடு தான் அந்த கேள்விய கேட்டா'ன்னு நினைச்சிக்கிட்டேன்... (அம்மா அழுதா பிள்ளை என்ன சொல்லமுடியும்) இப்போ நீங்க சொல்லுறது'லே கொஞ்சம் குழப்பமா ஆகுதே.... :(

//காந்தர்வ மணம்...அட புராணங்கள் புனிதமாச் சொல்லுதப்பா..முடிஞ்சிருச்சு.//

அது சரி..... அங்க போயி இதுக்கு நியாயம் கொண்டாந்தாச்சா? :)


//ஒன்னு சொல்றேன் கேளு...ரம்யா பிரகாஷா உண்மையிலேயே என்ன பேசிக்கிட்டாங்கன்னு ஒரு அத்தியாயம் போட்டிருந்தா கதை எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவ்வளவு விளக்கமா எழுதாம இப்பிடி எழுதுனா புரிஞ்சுக்குவீங்கன்னு நெனச்சேன். எங்கையோ தப்பு செஞ்சிருக்கேன்.//


ஜிரா,

முடிவு இதுதான்னு நீங்க எழுத வந்து அதை கொஞ்சம் அழுத்தம் கம்மியாக்கி அதுவும் ரம்யா character boldness குறைஞ்சு போனமாதிரி ஆனதுதான் இப்போதைக்கு விவாதமே.... :)

கடைசி இரண்டு பாகங்கள் தவிர்த்து தொடர்கதை அட்டகாசம்.. 10'ம் பாகம் சுமார், கடைசி பாகம் முடிவு ஏத்துக்கமுடியலை... :)

said...

// இராம்/Raam said...
//ஜிரா,

என்னோட வாதமே அங்கதான் இருக்கு! இவ்வளவு திடமான அல்லது தெளிவா முடிவு எடுத்த ரம்யா உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கிற சாதாரண பெண்ணா நீங்க கடைசி பாகங்களிலே சித்தரித்தது தான். நீங்க சொன்ன கூடலை அவ நினைச்சிருந்தா தவிர்த்து இருந்தா இன்னும் அவ மேலே மரியாதை வந்திருந்துருக்கும்.////

அதாவது எல்லாம் சரிதான். அவங் கூட படுத்து எந்திரிச்சதுதான் தப்புன்னு சொல்ற. ம்ம்ம்ம்... இதுக்கு என்ன பதில் சொல்றது? எல்லாத்தையும் தெளிவா யோசிச்ச ரம்யா இத மட்டும் யோசிக்காமலா செஞ்சிருப்பா? அப்படியும் நான் வாதாடலாம். ஆனா மாட்டேன்.

மலரினும் மெல்லிது காமம்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. அது அந்தச் சூழ்நிலைல இருக்குறவங்களுக்கு மட்டுமே புரியும். தெரியும். முன்னமே சொன்ன மாதிரி....ஸ்விட்ச் எங்கயிருக்குன்னு தெரியாத லைட்டு அது. தெரிஞ்சு தொட்டாலும்..தெரியாமத் தொட்டாலும் எரிஞ்சிரும். அப்புறம் அணைக்கிறதுதான் வழி. அதுக்கும் அணைக்கிறதுதான் வழி.


////கல்யாணம்னு எதச் சொல்ற? தாலி கெட்டுறதையா? சரி. கல்யாணம் பண்ணிக்கிறதே அதுக்குத்தான்னு நீ சொன்னீன்னா..இங்க உன்னையப் பலர் கும்மீருவாங்க. கல்யாணத்துல அதுவும் ஒன்னாமே.//

நான் எங்கயும் அதை சொல்லவே இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாமே முடிஞ்சு போச்சுன்னா என்னா இருக்க போகுது புதுசா அன்பு பரிமாற்றத்துக்கு?'ன்னு தான் கேட்டேன்....! //

அட... இதென்ன ஒருவாட்டி முடிஞ்சதும்..அப்புறம் அந்த ஆசையே வராதா? அன்பு பரிமாற உடல் மட்டுந்தான் வேணுமான்னும் நான் கேக்கலாம். மேல டீச்சர் சொல்லீருக்காங்க பாரு. கண்ணே போதுமின்னு. அதுக்கெல்லாம் நூறு வழிமுறைகள் இருக்கு. பரிமாறவும் எக்கச்சக்கமா இருக்கு. எடுக்கக் குறையாத அமுதசுரபி அது.

////பாரதிதாசன் கவிதைகள் படிச்சிருக்கியா? ;) படிச்சுப் பாரு. காதலர்களைப் பற்றி எவ்வளவு அழகாச் சொல்வாருன்னு. அவரு பாவேந்தர்னு புகழ்றோம்ல.//

படிச்சிருக்கேன், நீங்க எதை சொல்லுறீங்கன்னு தெரிஞ்சா அதை திரும்ப படிச்சி பார்க்கலாம்... :) //

இத நம்ம தனியா சாட்டிங்குல பேசிக்கலாம் :)

////நீங்க எழுதுறப்போ என்ன நினைச்சு எழுதுனீங்கன்னு எனக்கு தெரியாது, ரம்யா கேட்ட அந்த கேள்விக்கு பிரகாசா திணறினப்போ நான் அவ தாயுள்ளத்தோடு தான் அந்த கேள்விய கேட்டா'ன்னு நினைச்சிக்கிட்டேன்... (அம்மா அழுதா பிள்ளை என்ன சொல்லமுடியும்) இப்போ நீங்க சொல்லுறது'லே கொஞ்சம் குழப்பமா ஆகுதே.... :( //

குழப்பமே தேவையில்லை. பிரச்சனைகள் எல்லாக் காதல்லயும் உண்டு. அப்படிப் பிரச்சனை வந்தா என்ன செய்றது? விட்டுட்டு ஓடுறதா? இல்ல எதிர்த்து வெற்றி பெறுவதா? இதுல ப்ரகாஷா எந்த வகைன்னு ரம்யா அப்படிக் கேட்டா. ஒருவேளை அப்பவே ப்ரகாஷா....ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிப்போம்னோ..இல்ல...எந்தச் சூழ்நிலையிலயும் உன்னை விட்டு இன்னொருத்தியைக் கட்டிக்க மாட்டேன்னோ சொல்லீருந்தா ரம்யா அப்பவே முத்தத்தக் குடுத்திருப்பா. என்ன..பொது இடம். அது முத்தத்தோட முடிஞ்சிருக்கும்.

////காந்தர்வ மணம்...அட புராணங்கள் புனிதமாச் சொல்லுதப்பா..முடிஞ்சிருச்சு.//

அது சரி..... அங்க போயி இதுக்கு நியாயம் கொண்டாந்தாச்சா? :) //

இந்த நியாயத்த (புராணத்துக்கு இல்ல)...காதலர் இருவர் கருத்தொருமித்து கூடுறத பாரதிதாசனும் ஒத்துக்கிறாரு. நியாயத்தை நான் என்ன கொண்டு வர்ரது. உடம்பால சேர்ந்தது மட்டும் நியாயமில்லைன்னு நீ சொல்றதுதான் தப்பு. தீண்டல் என்பது ரொம்பவே மென்மையான விஷயம்.

////ஜிரா,

முடிவு இதுதான்னு நீங்க எழுத வந்து அதை கொஞ்சம் அழுத்தம் கம்மியாக்கி அதுவும் ரம்யா character boldness குறைஞ்சு போனமாதிரி ஆனதுதான் இப்போதைக்கு விவாதமே.... :) //

இல்லை. கடைசியிலயும் ரம்யா BOLD ஆன முடிவைத்தான் எடுத்தா. ;)

// கடைசி இரண்டு பாகங்கள் தவிர்த்து தொடர்கதை அட்டகாசம்.. 10'ம் பாகம் சுமார், கடைசி பாகம் முடிவு ஏத்துக்கமுடியலை... :)//

இது ஏற்றுக்கொள்ளக்கூடியது. நான் சொல்ல வந்தத ஒழுங்காச் சொல்லாம விட்டிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தா ரம்யா-ப்ரகாஷா செஞ்சது தப்பாத் தெரிஞ்சிருக்காது.

said...

உங்க கதையை மக்கள் துவைச்சு அலசி காயப் போட்டுட்டாங்க இராகவன். இப்படி ஒரு நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கீங்க.

கதை கடைசி ரெண்டு அத்தியாயத்திலே ரொம்ப வேகமா முடிஞ்சமாதிரி தான் தோணுது. ஆனா கதையோட முடிவு சரியா? ரம்யாவோட இன்டக்ரிடி போயிடுச்சா? என்ற கேள்விகளை எல்லாம் கேட்கத் தோணலை. பறவைகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம் - இந்த பாடல் வரிகளின் பொருளை பல இடங்களில் பார்த்தாச்சு; சொந்த வாழ்க்கையிலும் நானே நடந்து கொள்வதையும் பார்த்தாச்சு.