Monday, May 23, 2005

பீகாரும் குதிரை வியாபாரமும்

பீகாரில் குதிரை வியாபாரம் நடக்கிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆளாளுக்கு கத்தல். எப்படியோவது லல்லு பதிவிக்கு வரவேண்டுமென்று செஞ்சட்டையர்கள் விரும்புகிறார்கள். அதனால் வேறு யாரும் பதவிக்கு வரக்கூடாது. அல்ல....அல்ல....பிஜேபி ஆதரவோடு நிதீஷ் பதவிக்கு வரக்கூடாது. அதனால் லல்லு வரலாம். அடக் கொடுமையே!

பிஜேபியின் கொள்கைகளில் ஏற்பு மறுப்பு என்பது வேறு. தேர்தல் முடிவுகள் என்பது வேறு. இந்த இழுபறி நிலையில் நிதீஷ் முதல்வராக பதவி ஏற்பதில் என்ன தவறு? அவரது ஆட்சி எப்படியிருக்கும் என்று இப்பொழுதே சொல்ல முடியாது. நாள்படத்தான் தெரியும். இழுபறி நிலை நீடிக்கக் கூடாது என்று எல்லாரும் விரும்புகிறார்கள். நிதீஷுக்கு குதிரை வியாபாரத்தில் லாபம் கிடைக்கக் கூடாது என்பது காங்கிரசின் ஆசை. அதற்காக குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்கிறது. மீண்டும் தேர்தல் வந்தால் ஏதாவது தேராதா என்ற ஏக்கம்.

முஸ்லிம்தாம் முதல்வராக வேண்டும் என்று பாஸ்வான் குரல். யார் வேண்டாம் என்றார்கள்? எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் யாரும் வரலாமே. அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் என்ன? மதத்தை முதலமைச்சர் பதவிக்குத் தகுதியாக்குவதெல்லாம் ஓட்டுக்குத்தான். இவருக்கு இரண்டு மனைவியராம். ஒருவர் தாழ்த்தப் பட்ட சமூகம் (அப்படிச் சொல்வதே பாவம்) சேர்ந்தவராம். அவர் பட்டிக்காட்டில் சாணி தட்டிக் கொண்டுதான் இருக்கிறாராம். மற்றொரு மனைவி உயர் சமூகத்தைச் சேர்ந்தவராம் (குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்). அவர்தான் டில்லியில எல்லா வசதிகளோடும் இருப்பவராம். ம்ம்ம்ம்ம்ம். அரசியல் வியாதிகள்.

ஆனது ஆகிவிட்டது. நிதிஷ் வரட்டும். என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். சரியோ சரியில்லையோ...பீகார் மக்கள் தீர்மானிக்கட்டும். லாலுவின் கைகளிலிருந்து பீகார் தப்பித்தே ஆகவேண்டும்.

3 comments:

Muthu said...

வாங்க வாங்க ராகவன் அவர்களே,
வலைப்பூவுலகுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

திரும்பவும் தேர்தல் வைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வழிசெய்திருக்கலாம். பார்க்கலாம். எல்லாம் நன்மைக்கே.

Anonymous said...

\\லாலுவின் கைகளிலிருந்து பீகார் தப்பித்தே ஆகவேண்டும்//.

தப்பிக்கவே முடியாது!!. மீண்டும் தேர்தல் வரும்., மாற்றம் வருமா? வராது என்பதே என் அவதனிப்பு

G.Ragavan said...

கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் முத்து,மூர்த்தி அப்படிப்போடு ஆகியோருக்கு நன்றி.

நேற்றுதான் இதைப் போட்டேன். இன்று காலையில் பீகாரில் ஆட்சிக் கலைப்பு. என்ன சொல்வது....அரசியல் ஆதாயம்தானே அரசியல்வாதிகள் விருப்பம்.

ஆனால் மீண்டும் மாற்றம் வரும் என்றே நான் நம்புகிறேன். நடப்பவை எல்லாம் இறைவன் கையில்.

அன்புடன்,
கோ.இராகவன்