Tuesday, August 30, 2005

எனக்குதான் புரியும்

காற்றுப் பல்லாக்கு
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை

நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை

வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை

மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

என்ன ராகவன் லவ் ஃபெயிலியரா...... ??

said...

ஐயோ....அதெல்லாம் இல்லை.

பக்கத்துல பக்கம் படுத்திருக்காங்க....லவ் பெயிலியரான்னு கேக்குறீங்களே?

said...

ம்ம்ம் என்னவோ எனக்கு சரியாப் படல

said...

அப்போ ஏதாவது குட்டி சண்டையா இருக்கும்??!! இது நல்ல ஐடியாவா இருக்கே.. கவிதை எழுதி சமாதானப்படுத்துவது... 'இதேல்லாம் ஒரு கவிதையா?' ன்னு சண்டை பெரிசாயிடப் போகுது..ஜாக்கிரதை!! :-)

said...

இந்த கவிதை எழுதப்பட்ட சூழ்நிலையை கற்பனை பண்ணா எனக்கு தப்பு தப்பா தோணுதே!

உண்மையிலேயே அப்போ எழுதினதுதானா?

said...

ஐயோ ரம்யா........இந்தக் கவிதைக்கும் எனக்கும் தொடர்பே இல்லைங்க. விட்டுருங்க.....எழுதுனது என்னவோ நாந்தான்.

ரமேஷ், நீங்க வேற. அந்த சமயத்துக் கவிதைதான். ஒரு முதிய தம்பதியருக்குள் பிறக்கும் கவிதை இது.

தாத்தா பாட்டியைப் பார்த்துச் சொல்வதாகவோ, பாட்டி தாத்தாவைப் பார்த்துச் சொல்வதாகவோ நினைத்துப் பாருங்கள். புரியும்.