ஐயா...பாத்துக் கட்டுங்க...இதுக்குப் பேரு life jacket. ஒரு முடிச்சுக்கு ரெண்டு முடிச்சு வேணும்னாலும் கூடப் போட்டுக்கோங்க.
இத இறுக்கிப் பிடிச்சிக்கிரட்டுங்களா? தெரியாத்தனமா எதையாவது இழுத்துட்டேன்னா? என்னது கடல்ல எறங்கீருமா? ஜெல்லி ஃபிஷ் இருக்கும்னீங்களே! அது வெசம்னீங்களே!போட்டு ஓடும் போது உள்ள இழுக்குமா? நானும் கூடவே ஓடனுமா? சரி...எதுக்கும் இத நல்லா பிடிச்சிக்கிறேன்.
ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ...........
ஐயா...கைய விட்டுட்டுக் கூட என்னால பறக்க முடியுதே! நான் பறக்கிறேனே மம்மி!
அன்புடன்,
கோ.இராகவன்
45 comments:
ஆகா சூப்பர்..
கலக்கிடீங்க..
ennathu ithu... enga parantheenga?
அட! எங்கே இது?
// சிவபாலன் வெ said...
ஆகா சூப்பர்..
கலக்கிடீங்க.. //
நன்றி சிவபாலன். ரொம்பவே நல்லாருந்துச்சு. மலைகளுக்கும் கடலுக்கும் மேல பறக்குறது.
மலேசியா
// ஜி said...
ennathu ithu... enga parantheenga? //
ஜி, எனக்குப் பின்னாடி எழுத்துப் பலகைகள் தெரியுது பாருங்க. அத வெச்சுக் கண்டுபிடிங்க பாக்கலாம்.
// நாமக்கல் சிபி said...
அட! எங்கே இது? //
ஜி கிட்ட சொன்னதுதான் உங்களுக்கும். கண்டுபிடிங்க பாக்கலாம்.
// நாமக்கல் சிபி said...
மலேசியா //
சரி. மலேசியாவுல எங்க? அதையும் கண்டுபிடிங்க பாக்கலாம்.
இதுக்கு பேர்தான் படங்காட்றது...இருக்கட்டும் இருக்கட்டும்
வயித்தெரிச்சல்....ம்ம்ம்ம்(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
கொக்கு பற பற!
குருவி பற பற!!
ஜிரா பற பற!!!
(இப்படித்தான இருந்திருக்கனும் தலைப்பு?)
இராகவன்,
வாழ்த்துக்கள். இராகவன், நேரம் கிடைக்கும் போது இந்த அனுபவத்தை உங்களின் இனிய தமிழில் ஒரு பதிவாகப் போடுங்களேன்.
super...
பெங்களூர்லையும் இந்த மாதிரி Para-flying இருக்குதுனு நினைக்கிறேன்...
சீக்கிரம் வறேன் :-)
MENERA PENYELAMAT PANTAL 991
(MALAYSIAN CIVIL DEFENCE)
// பங்காளி... said...
இதுக்கு பேர்தான் படங்காட்றது...இருக்கட்டும் இருக்கட்டும்
வயித்தெரிச்சல்....ம்ம்ம்ம்(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) //
பங்காளி இதுக்குக் கோவிச்சக்கறப்ப்படாது...நீங்க மதுரக்காரவிக...நாங்க தூத்துடி...அச்சஸ்சு செஞ்சிக்கிருவோமய்யா...வகுத்தெரிச்சலோ நெஞ்செரிச்சலோ ஆளுக்குப் பப்பாதி.
// அருட்பெருங்கோ said...
கொக்கு பற பற!
குருவி பற பற!!
ஜிரா பற பற!!!
(இப்படித்தான இருந்திருக்கனும் தலைப்பு?) //
கோ, சொல்லும் போதே பல்ல நறநறன்னு அரைக்கிறாப்புலத் தெரியுது? ஒருவேளை "அது" வந்துருச்சோ?
// வெற்றி said...
இராகவன்,
வாழ்த்துக்கள். இராகவன், நேரம் கிடைக்கும் போது இந்த அனுபவத்தை உங்களின் இனிய தமிழில் ஒரு பதிவாகப் போடுங்களேன். //
சொல்ல நிறைய இருக்கிறது வெற்றி. எக்கச்சக்கமாக. நேரம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. முடிந்த வரை எழுதுகிறேன்.
// வெட்டிப்பயல் said...
super... //
நன்றி
// பெங்களூர்லையும் இந்த மாதிரி Para-flying இருக்குதுனு நினைக்கிறேன்... //
பெங்களூர்லயா? எங்கயிருக்குது? தெரியலையே? முந்தி ஒரு வாட்டி விளம்பரம் வந்தது. ஜீப்புல கட்டி மொட்டக் காட்டுல இழுக்குறாங்கன்னு. நான் போகலை. நான் போனது para-sailing. மலைகளுக்கும் கடலுக்கும் மேல போறது. ரொம்ப நல்லா இருந்தது.
// சீக்கிரம் வறேன் :-) //
எங்க?
// நாமக்கல் சிபி said...
MENERA PENYELAMAT PANTAL 991
(MALAYSIAN CIVIL DEFENCE) //
இதக் காப்பி செஞ்சு போட்டீங்க. எந்ந ஊருன்னு சொல்லலையே ஐயா?
நல்லா இருக்குது இராகவன். பாக்குறதுக்கே. பறக்குறதுக்கு இன்னும் நல்லா இருந்திருக்கும். :-)
// குமரன் (Kumaran) said...
நல்லா இருக்குது இராகவன். பாக்குறதுக்கே. பறக்குறதுக்கு இன்னும் நல்லா இருந்திருக்கும். :-) //
உண்மை குமரன். அந்த உயரத்தில் காற்று நம்மை மோத மோத கீழே குனிந்து பார்த்தால் காலடியில் மலைகளும் கடலும். பசிய மலைகள். தெள்ளிய கடல். கடலுக்குள் இருக்கும் ஜெல்லி மீனைக் கூட அந்த உயரத்திலிருந்து பார்க்க முடிந்தது என்றால் தண்ணீரின் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள். கொடிய நஞ்சுள்ள மீனாம் அது.
பாராட்டுக்கள்!ஒரு வீடியோ எடுத்து இணைத்திருக்கலாம் :(
//// பெங்களூர்லையும் இந்த மாதிரி Para-flying இருக்குதுனு நினைக்கிறேன்... //
பெங்களூர்லயா? எங்கயிருக்குது? தெரியலையே? முந்தி ஒரு வாட்டி விளம்பரம் வந்தது. ஜீப்புல கட்டி மொட்டக் காட்டுல இழுக்குறாங்கன்னு. நான் போகலை. நான் போனது para-sailing. மலைகளுக்கும் கடலுக்கும் மேல போறது. ரொம்ப நல்லா இருந்தது.//
Para-flying, Para-sailing ரெண்டுக்குமே விளம்பரம் பார்த்தேன்...
பயமா இல்லையா???
எனக்கு இந்த மாதிரி பயப்படறதே ரொம்ப பிடிக்கும் :-)
//// சீக்கிரம் வறேன் :-) //
எங்க?//
பெங்களூருக்கு தான்...
எப்படா வரலாம்னு தான் இருக்கேன்... பார்க்கலாம் :-)
ஆஹா...
கலக்குறிங்க...
பறக்கத் தெரிந்த மனமே உனக்கு..
(நீங்களே கம்ப்ளீட் செய்யுங்க.)
:)
மஜா இன் சிங்கையா?
ஜமாய் ராஜா ஜமாய் :-)
// கோபிநாத் said...
ஆஹா...
கலக்குறிங்க... //
நன்றி கோபி.
// சிறில் அலெக்ஸ் said...
பறக்கத் தெரிந்த மனமே உனக்கு..
(நீங்களே கம்ப்ளீட் செய்யுங்க.)
:) //
பறக்கத் தெரிந்த மனமே உனக்கு
இறங்கத் தெரியாதா.....அதான நீங்க கேக்குறது. என்ன செய்றது சிறில்..படம் எடுத்தவங்க விட்டுட்டாங்களே.....
// துளசி கோபால் said...
மஜா இன் சிங்கையா?
ஜமாய் ராஜா ஜமாய் :-) //
இல்ல டீச்சர். சிங்கை இல்ல. மலேசியா. ஆனா எந்த ஊருன்னு கண்டுபிடிக்கச் சொன்னா மாட்டேங்குறாங்க. :-( நீங்களாவது அந்தப் படத்துல இருக்குற குறிப்புகளை வெச்சுக் கண்டுபிடியுங்களேன்.
அவன் பறந்து போனான்..... :))
கொக்கு பற பற...
மைனா பற..பற..
ஜி.ரா. பற பற....
இது பாய்ஞ்சு பறக்குற திட்டம்
அடுத்து என்னக் கட்டம்?
:-) என்சாய்...
எப்ப திரும்பி ஊருக்கு வரீங்க?
மலாக்கா
எம்பது ரிங்கெட்டுக்கு 15 நிமிஷ பாராசெய்லிங் இருந்துச்சு.
// இலவசக்கொத்தனார் said...
அவன் பறந்து போனான்..... :)) //
போன மச்சான் திரும்பி வந்தார் கோமணத்தோடேன்னு கூடப் பாடுவீங்க போல? ஆமா...நீங்களும் இதே மாதிரி அமெரிக்காவுல பறந்தீங்களாமே? உண்மையா?
ஹூம்.. குடுத்து வச்ச ஆளுய்யா:(
// தேவ் | Dev said...
கொக்கு பற பற...
மைனா பற..பற..
ஜி.ரா. பற பற....
இது பாய்ஞ்சு பறக்குற திட்டம்
அடுத்து என்னக் கட்டம்? //
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன் :-)
// மனதின் ஓசை said...
:-) என்சாய்...
எப்ப திரும்பி ஊருக்கு வரீங்க? //
வந்தாச்சுங்க. ஜனவரி எட்டாந் தேதியே. இது புத்தாண்டுல பறந்தது.
சிபி, நீங்க பெங்களூர் வந்தா அடுத்த வாரமே உங்களை பறக்க விடுறதா திட்டம்...:)))))))))))
//நீங்களும் இதே மாதிரி அமெரிக்காவுல பறந்தீங்களாமே? //
அது வேற ஒரு விஷயத்துக்கு ஆலா பறந்தது!! நோ கன்பியூஷன் ப்ளீஸ். :))
இத பார்க்கும் போது ஒரு எண்ணம்:
"உயர உயர பறந்தாலும் ஜீரா, புறாவக முடியாது. தளமிரங்கி பதிவு பதிஞ்சி தானகனும்."
மலேசியாவில் கோலாலம்பூரில் பாராசெய்லிங் எத்தன தடவ (கனவுல :))போயிருப்பேன் ரொம்ப நல்லா இருக்கும்.
// செந்தழல் ரவி said...
சிபி, நீங்க பெங்களூர் வந்தா அடுத்த வாரமே உங்களை பறக்க விடுறதா திட்டம்...:))))))))))) //
அதான் விட்டோமே ரவி. அவரு எங்கன்னு தேடித் தேடி பதிவெல்லாம் போட்டு :-)))))))))))))))
// இலவசக்கொத்தனார் said...
//நீங்களும் இதே மாதிரி அமெரிக்காவுல பறந்தீங்களாமே? //
அது வேற ஒரு விஷயத்துக்கு ஆலா பறந்தது!! நோ கன்பியூஷன் ப்ளீஸ். :)) //
ஓ அதுலதான அந்த ஜில்பா ஜிஞ்சினுக்கா! :-)
// சிவமுருகன் said...
இத பார்க்கும் போது ஒரு எண்ணம்:
"உயர உயர பறந்தாலும் ஜீரா, புறாவக முடியாது. தளமிரங்கி பதிவு பதிஞ்சி தானகனும்." //
அதென்னவோ உண்மைதான். ரொம்பச் சரியாச் சொன்னீங்க. ஆனா மேல பறக்கும் போது இந்தப் பதிவு போடனும்னெல்லாம் நெனைக்கலை. போட்டாக்களைப் பாக்குறப்போ..தோணுச்சு. போட்டாச்சு.
// மலேசியாவில் கோலாலம்பூரில் பாராசெய்லிங் எத்தன தடவ (கனவுல :))போயிருப்பேன் ரொம்ப நல்லா இருக்கும். //
கோலாலம்பூரில் வேற இருக்குதா? நான் போனது லங்காவியில.
//கோலாலம்பூரில் வேற இருக்குதா? நான் போனது லங்காவியில.//
யாருகண்டா, போனோமா டைவிங்பண்ணோமா வந்தோமான்னுதான் இருக்கும்! கனவுல இதுவெல்லாம் விளக்கமா பார்க்கவா முடியுமா?
கோலாலம்பூரில் ஒரு ராட்சத ராடினம் இருக்குது முடிஞ்சா போகனும், ஒரு வினாடியில 25அடி உயரம் போகும் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் வாய்க்குள்ள வந்தது போலிருக்கும். பாஸ்போர்ட் மட்டும் வந்துரட்டும் போகலாம்ன்னு இருக்கேன். :). மற்றவை எல்லாம் கேள்வி ஞானமும், கனவு ஞானமும் தான்.
ஓவியா said...
ராகவரே, படம் நல்லா இருக்கு.
மலேசியாவா, அந்தநாடு உங்களுக்கு பிடிச்சி இருக்கா??
அங்கே லன்காவியிலே ஒரு பெரிய பருந்து சிலை இக்குமாமே, பார்தீங்களா? கேல்ல 2 கோபுரமெல்லாம் இருக்குமாமே, உலகித்திலே ஒசரமான முருகன் செலகூட கடிட்டங்களாமே, சாப்பாடு எல்லாம் வக வகயா இருக்குமாமே!!! ஆமாவா?? எனக்கும் அங்கே போகனும்னு தான் ஆசை, பார்ப்போம் வாய்ப்பு கிடச்சா உடனே மூட்ட முடிச்சுதான்.
அவன் பறந்து போனானே!
விண்ணில் மிதந்து போனானே!
நாம் பார்க்கும்போது
புன்னகை ஒன்றை பகிர்ந்து போனானே!!!
:-)
Post a Comment