Tuesday, June 19, 2007

எம்.ஆர்.ராதா பாடிய தேவாரம்

எம்.ஆர்.ராதா எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அருமையான குணச்சித்திர நடிகர். நகைச்சுவை..எதிர்மறை...அட...என்ன படங்க அது...பார் மகளே பார்...அதுல நட்டுவாங்கனாரா வருவாரே....சூப்பருங்க அது.

அவரு வயசானப்புறம் முருகன் படத்துல நடிச்சாலும் அருமையான நடிப்பு. அப்ப வந்த ஒரு படந்தான் பஞ்சபூதம். அஞ்சு வில்லன்கள்ள அவரும் ஒருத்தர்.

அந்தப் படத்துல இவரு பாடுற தேவராந்தான் சூப்பர் காமெடி. இந்தப் படத்துக்கு இசை சங்கர் கணேஷ்னாலும்...எம்.ஆர்.ராதா எம்.ஆர்.ராதாதான்...பரமேஷ்வரா...பரமேஷ்வரா.... :)

நீங்களும் கேட்டு ரசிங்க. சிரிங்க. :-)))))அன்புடன்,
கோ.இராகவன்

25 comments:

said...

கேட்டேன் ரசித்தேன்!!

நல்ல பதிவு

said...

This song has been featured in SOTD in dhool.com
Have you moved to NL once and for all?

said...

உத்தியோகத்துல இருக்கிறவங்களுக்கெல்லாம் சொல்றேன். டிபார்மென்டை கவனிக்காதீங்க. சதா கடவுளையே நினைச்சுக்கிட்டு இருங்க... :-) எம்.ஆர்.இராதா டச். :-)

said...

// குட்டிபிசாசு said...
கேட்டேன் ரசித்தேன்!!

நல்ல பதிவு //

நன்றி குட்டிப் பிசாசு. :) இன்னைக்கு என்னோட வலைப்பூவுக்குக் குட்டிப் பிசாசு வந்தாச்சேஏஏஏஏஏஏஏஏஏஏய்.

// Anonymous said...
This song has been featured in SOTD in dhool.com
Have you moved to NL once and for all? //

வாங்க நண்பரே. நீங்க யாருன்ன்னு தெரியலை. ஆனாலும் சொல்றேன். ஒரேடியா நெதர்லாந்துக்கே போயிர்ரதா.....அதப் பத்தி இன்னும் யோசிக்கலைங்க.

தூள்.காம்லயும் இந்தப் பாட்டை நான் கேட்டிருக்கேன். ரொம்ப நாளைக்கு முன்னாடி போட்டிருந்தாங்க. அந்தப் பதிவைத் திரும்பப் போய்ப் பாத்திருந்தா படம் தொடர்பான தகவல்கல் கெடைச்சிருக்கும். அதையும் சேத்திருக்கலாம்.

said...

// குமரன் (Kumaran) said...
உத்தியோகத்துல இருக்கிறவங்களுக்கெல்லாம் சொல்றேன். டிபார்மென்டை கவனிக்காதீங்க. சதா கடவுளையே நினைச்சுக்கிட்டு இருங்க... :-) எம்.ஆர்.இராதா டச். :-) //

ஆகா குமரன். வாங்க வாங்க. எங்க இருக்கீங்க?

உண்மைதாங்க...யாரை நினைக்கேனே...கேணே.... :)))) விழுந்து விழுந்து சிரிக்க வெச்சிட்டாருங்க.

said...

சதா கடவுளையே நினைச்சுக்கிட்டு இருங்க... :-)

Oh I see, is GR such a great fan
of actress Sadha (சதா) to think of her as God :).

said...

ராகவன்,

இந்திய பண்பாட்டை உயர்த்தி பிடித்த நடிகர்களில் எம்.ஆர் ராதா குறிப்பிட தகுந்தவர்.இந்திய பெண்களின் பெருமையை சொல்ல ரத்தகண்ணீர் படத்தை போன்ற இன்னொரு படத்தை வேறு யாரும் எடுக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் சிலப்பதிகாரத்தை ஒத்த கதை அது.ரங்கோன் ராதா கூட அது போன்றதுதான்.

அவரது நகைச்சுவையும், கிண்டலும், நையாண்டியும் அனைவர் மனதையும் கவர்ந்தவை.அவரைப்போல் ஒருவர் இனி நமக்கு கிடைப்பது மிக அரிது.

said...

நம்ம ஊருல தான் இருக்கேன் இராகவன்.

said...

நல்லா இருந்தது ராகவன்.
பாவமன்னிப்பு படத்தில கூட பொன்னார்மெனியனேனு நல்லாப் பாடி இருப்பாரு.
என்ன மத்திரம் கவனினு ஒரு டயலாக் வேற.:)))

said...

ரசித்தேன் ராகவன்.

உங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன். தொடரவும். நன்றி.

siva
sivaramang.wordpress.com

said...

நல்லாத்தேன் பாடி இருக்காரு!!

said...

ராகவா!
எனக்கும் அவர் நடிப்புமிகப் பிடிக்கும்; " நீயே உனக்கு என்றும் நிகரானவன்" - பலே பாண்டியா என நினைக்கிறேன். பிரமாதமாக இருக்கும்.
அருமையாகவும் பாடியிருக்கிறார்.

said...

ஹிஹி...இதுவே நான் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.சரி நீங்க எல்லாம் பாவம் என்று நான் விட்டுறேன் :D
இந்த பாட்டை கேட்டு ரசிச்சு சிரிச்சேன் அண்ணா.

said...

I believe this is from பாவமன்னிப்பு as vaali simhan says. he sings in a temple with body full of holy ash

said...

3 நாட்களுக்கு முன் விஜய் டிவியில் ரத்தக்கண்ணீர் மீண்டுமொரு முறை பார்த்தேன் .சான்ஸே இல்லீங்க.. எம்.ஆர்.ராதா தி கிரேட்.

said...

///இன்னைக்கு என்னோட வலைப்பூவுக்குக் குட்டிப் பிசாசு வந்தாச்சேஏஏஏஏஏஏஏஏஏஏய்.///

முதல்லயே வருவேங்க!! ஆன பின்னூட்டம் போட்டது இல்ல! நீங்க இந்த அளவுக்கு சந்தோசம் படுவீங்கனு தெரிஞ்சி இருந்தா போட்டு இருப்பேன்.

said...

// Anonymous said...
சதா கடவுளையே நினைச்சுக்கிட்டு இருங்க... :-)

Oh I see, is GR such a great fan
of actress Sadha (சதா) to think of her as God :). //

ஹே ஹே...நம்ம சதா சதாவ நெனச்சு என்ன புண்ணியம்....சதா சிவனையே நெனச்சிக்கிட்டிருந்தா...என்ன பண்றது! :)

// செல்வன் said...
ராகவன்,

இந்திய பண்பாட்டை உயர்த்தி பிடித்த நடிகர்களில் எம்.ஆர் ராதா குறிப்பிட தகுந்தவர்.இந்திய பெண்களின் பெருமையை சொல்ல ரத்தகண்ணீர் படத்தை போன்ற இன்னொரு படத்தை வேறு யாரும் எடுக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் சிலப்பதிகாரத்தை ஒத்த கதை அது.ரங்கோன் ராதா கூட அது போன்றதுதான்.

அவரது நகைச்சுவையும், கிண்டலும், நையாண்டியும் அனைவர் மனதையும் கவர்ந்தவை.அவரைப்போல் ஒருவர் இனி நமக்கு கிடைப்பது மிக அரிது. //

உண்மை உண்மை. மறுக்க முடியாத உண்மை. ஒத்துக்கொள்கிறேன் செல்வன்.

said...

// வல்லிசிம்ஹன் said...
நல்லா இருந்தது ராகவன்.
பாவமன்னிப்பு படத்தில கூட பொன்னார்மெனியனேனு நல்லாப் பாடி இருப்பாரு.
என்ன மத்திரம் கவனினு ஒரு டயலாக் வேற.:))) //

ஆமாங்க. ஆனா அது முழுப்பாட்டா வராது. இது முழுப்பாட்டாவே வந்திருக்கு.

// siva said...
ரசித்தேன் ராகவன்.

உங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன். தொடரவும். நன்றி.

siva
sivaramang.wordpress.com //

வாங்க சிவா. ஆகா..நீங்களும் இழுத்துட்டீங்களே...சரி..வந்திருவோம்.

said...

// இலவசக்கொத்தனார் said...
நல்லாத்தேன் பாடி இருக்காரு!! //

வாங்க கொத்ஸ். இந்தப் பாட்டுல அவர் வெளிப்படுத்தியிருக்கும் நுண்ணிசை நுணுக்கங்கள் உங்களுக்கு நன்றாகப் புரியும் என்று நினைக்கிறேன். நன்றாகப் பாடியிருக்கிறார்.

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
எனக்கும் அவர் நடிப்புமிகப் பிடிக்கும்; " நீயே உனக்கு என்றும் நிகரானவன்" - பலே பாண்டியா என நினைக்கிறேன். பிரமாதமாக இருக்கும்.
அருமையாகவும் பாடியிருக்கிறார். //

ஆமா ஐயா. பலே பாண்டியாதான். மிக அருமையான பாடல். மிக நன்றாகச் செய்திருப்பார். :)

said...

// துர்கா|†hµrgåh said...
ஹிஹி...இதுவே நான் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.சரி நீங்க எல்லாம் பாவம் என்று நான் விட்டுறேன் :D
இந்த பாட்டை கேட்டு ரசிச்சு சிரிச்சேன் அண்ணா. //

மகமாயி....கொஞ்சம் கருணை காட்டு தாயே!

// Anonymous said...
I believe this is from பாவமன்னிப்பு as vaali simhan says. he sings in a temple with body full of holy ash //

வல்லியம்மா சொல்றதும் சரிதான். ஆனால் அது பாட்டா வராது. இந்தப் பாட்டு பஞ்சபூதம் படத்துல வர்ரது.

said...

புதிய செய்தி...எனக்கு அம்மாவின் புகழ்பாடிய 'தேவரம்' தான் தெரியும்.
:))

said...

//சதா கடவுளையே நினைச்சுக்கிட்டு இருங்க... :-)
எம்.ஆர்.இராதா டச். :-) //

பகல் பூரா அவனையே நினைச்சுக்கிட்டு இருங்க...
ராத்திரி கொஞ்ச நேரம் மட்டும்...மத்த நேரத்துல பாத்துக்கலாம்! :-)))

இது தான் நடிகவேளின் உண்மையான டச்சோ டச்! :-)))
இந்தக் காலத்து பஞ்ச் டயலாக் எல்லாம் அவரு கிட்ட பிச்சை வாங்கணும்!

ஜிரா...
ரொம்ப நேரம் சிரிச்சாலும்...ஒன்னு மட்டும் சிந்திச்சேன்!
நடிகவேளுக்கு இருக்கும் கட்டைக் குரலில் (கணீர் குரலும் கூட), தமிழிசை, தேவாரங்கள் எல்லாம் பாடி இருந்தால் - குழைவு குறைந்து கம்பீரம் எஞ்சியிருக்கும்!
சான்ஸை நாம மிஸ் பண்ணிட்டமா இல்லை ராதா மிஸ் பண்ணிட்டாரா?
:-)

said...

http://nirmalaa.blogspot.com/2007/06/blog-post.html

ஒரு அழைப்பு விடுத்திருக்கிறேன் ஜி.ரா. குறிப்பிட்டதில் ஆட்சேபனை இருக்காது என்று நம்புகிறேன். நன்றி.

said...

// கோவி.கண்ணன் said...
புதிய செய்தி...எனக்கு அம்மாவின் புகழ்பாடிய 'தேவரம்' தான் தெரியும்.
:)) //

தேவாரமே புகழ் பாடுறதுதான். ஆனா இறைவன் புகழை. நீங்க சொன்னது வேற மாதிரி. :)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
'ஜிரா...
ரொம்ப நேரம் சிரிச்சாலும்...ஒன்னு மட்டும் சிந்திச்சேன்!
நடிகவேளுக்கு இருக்கும் கட்டைக் குரலில் (கணீர் குரலும் கூட), தமிழிசை, தேவாரங்கள் எல்லாம் பாடி இருந்தால் - குழைவு குறைந்து கம்பீரம் எஞ்சியிருக்கும்!
சான்ஸை நாம மிஸ் பண்ணிட்டமா இல்லை ராதா மிஸ் பண்ணிட்டாரா?
:-) //

நம்மதான் மிஸ் பண்ணீட்டோம். அவரு பாடகராயிருந்தா நல்லாவே இருந்திருக்கும் என்பதில் எந்த மறுப்பும் கெடையாது.