மாமாமாமாமாமாமாமான்னா புரியலையா...ஒரு மா ரெண்டு மா....அட எட்டுமா...அட எட்டுமா இப்பிடி இருக்கனும்! அதாங்க தலைப்பு. நம்மளப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனுமாமே. அமெரிக்காவுல கொத்தனார் கூப்டாக....கொல்கத்தாவுல நிர்மலா கூப்டாக....எங்கெரகம்னு அலப்பர செய்யாம ஒத்துக்கிட்டேன். :) இல்லைன்னா கூப்புடாம விட்டுருவாகய்யா! :))))) சரி. ஒவ்வொன்னாப் பாப்பமா?
1. பொறப்பு: இப்பல்லாம் பிள்ளைக ஆசுப்பித்திரியிலதான் பொறக்காங்க. எங்க சமயத்துல அட...80க்கு முன்னாடி இருந்துச்சே அந்த எழுவதுலதாங்க. பொறந்தது ஆசுப்பித்திரியா வீடாங்குற கேள்வி ரொம்ப சகஜம். சிலரு வீடும்பாங்க. சிலரு டாக்டரு ஆசுப்பித்திரிலம்மாக. நான் ரெண்டையுஞ் சொல்வேன். ஆமா. பொறந்தது டாக்டரம்மா வீட்டுல்ல. தூத்துக்குடியில கோயில்பிள்ளை டாக்டரம்மான்னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க வீட்டுலதான் நான் பொறந்தேன். ஆனா பாருங்க...அந்த டாக்டரம்மாக்கு ஒரு கை கெடையாது. அதுனால என்ன...திறமைய ஊனமா நிப்பாட்ட முடியும்! இதுல எனக்குப் பெருமைதாங்க.
2. தடுப்பூசி: கொழந்த பொறந்தப்ப...தடுப்பூசி போடுவாங்கள்ள...அது எனக்கும் போட்டாங்க. வழக்கமா எல்லாரும் நொட்டாங்கைல போட்டா...எனக்கு வலக்கைல போட்டாங்க. ஒடனே அழுதிருக்கேன். எங்க பாட்டி...வழக்கமா ஊசி போட்டா தேச்சு விடுவாகள்ளன்னு தேச்சு விட்டுட்டாங்க. அந்த ரெக்கு புண்ணாயிருச்சு. அதுனால பாருங்க. இன்னமும் தழும்பு பெருசா இருக்கும். இங்க நெதர்லாந்து வந்தப்புறம்....காசநோய் பரிசோதனை செய்வாங்க. கண்டிப்பா செய்யனும். அரசாங்க உத்தரவு. அப்ப தடுப்பூசி போட்ட தழும்பக் காட்டுன்னாக. நான் வலது கையக் காட்டுனேன். நொட்டாங்கைல இல்லையேன்னு கேட்டாங்க. அவங்களுக்கும் இந்தக் கதையச் சொல்ல வேண்டியதாப் போச்சு. எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு.
3. நெத்திக்கண்ணும் மச்சமும்: என்னடா நெத்திக்கண்ணுன்னு கேக்கீங்களா? ஆமாங்க. நெத்தியில நடுவுல கண்ணு மாதிரி ஒரு பெரிய மச்சம். பொறந்ததுல இருந்தே இருக்குது. மொகத்தப் பாத்தா தெளிவாத் தெரியும். இருக்கங்குடி...மாசார்பட்டீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? தெரியலையா? அது தூத்துடி மாவட்டமா...விருதுநகர் மாவட்டமான்னு சரியாத் தெரியலை. இருக்கங்குடி விருதுநகர் மாவட்டந்தான். ஆனா மாசார்பட்டி தெரியலை. அங்க பஸ்சுல எறங்கி உள்ள ரெண்டு மூனு கிலோமீட்டரு நடந்தா வரும் கைலாசரம்..அட கைலாசபுரம். சின்னப் பட்டிக்காடு. எங்க இருந்த காடுகரைகளைக் கொஞ்ச வருசம் என்னோட தாத்தா பாட்டி பாத்துக்கிட்டிருந்தாக. அப்ப ஒரு வருசம் அந்தூருத் திருவிழா. எங்கக் குடும்பமே போயிருந்தோம். அப்ப திண்ணைல உக்காந்திருந்தப்பா வந்தாரு ஒரு கிளி சோசியரு. என்னவோ என்னையப் பிடிச்சு இழுத்து உக்கார வெச்சிட்டாக. அவரு என்ன சொன்னாரு நெனவில்லை. ஆனா என்னோட வலது தோள்பட்டைல மச்சமிருக்கனும்னு சொன்னாரு. என்னை வளத்தது எங்க அத்தை. அவங்க இல்லைன்னு சாதிக்காங்க. சொசியக்காரரும் சாதிக்காரு. சிட்டைல எழுதீருக்குன்னு காட்டுறாரு. சட்டையக் கழத்துன்னு பாத்தா உண்மையிலேயே மச்சம். சோசியத்த நான் நம்ப மாட்டேன். ஆனா இந்த நிகழ்ச்சி அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு.
4. இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் தமிழ்ப் பாட்டுக ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடிச்ச பாடகி இசையரசி பி.சுசீலான்னு எல்லாருக்கும் தெரியும். அதான் வலைப்பூவே இருக்கே. அது மாதிரி பிடிச்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கும் ஒரு வலைப்பூ தொடங்கனும். மொதல்ல இசையரசி வலைப்பூவை நிலைநிறுத்திக்கிருவோம். இசைஞானியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இசைப்புயலும்தான். ஒருமுறை படிக்கையில் சென்னை வந்திருந்தேன். விடுமுறைக்காலம். ஏதோ ஒரு படம்....ஹா...ராஜபார்ட் ரங்கதுரை. அந்தப் படம் வீட்டுல எல்லாரும் பாத்துக்கிட்டிருந்தோம். அதுல ஒரு பாட்டு. மதனமாளிகைன்னு தொடங்கும். அதுல பாருங்க. நாயகரு மேடையில பாடுவாரு. அதக் கேட்டுக் கதாநாயகி அப்படியே கனவுல போயிரனும். டி.எம்.எஸ் மொதல்ல மதன மாளிகையில் மந்திரமாலைகளால்...அப்படீன்னு நாடக பாணியில் இழுவையாப் பாடுவாரு....ஒடனே..அன்பே அன்பே அன்பேன்னு நாயகி கற்பனைக்குப் போயிருவாங்க. அது இசையரசி குரல்ல. அந்தப் பாட்டு என்னவோ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மெல்லிசை மன்னரைப் பாத்தாத்தான் ஆச்சுன்னு அடம் பிடிச்சு...டைரக்டரியில அவரு நம்பரத் தேடிப் பிடிச்சு...வீட்டுல இருந்த பொடிசுகளாப் போய் சாந்தோம்ல இருக்குற அவரு வீட்டுல பாத்துட்டு வந்தோம். அப்ப ஏது கேமரா கீமரால்லாம். அவர் கிட்ட என்ன கேக்குறதுன்னு கூடத் தெரியலை. பாக்கனும்னு வந்தோம்னு சொல்லீட்டு...ரெண்டு வார்த்த பேசீட்டு வந்துட்டோம். ம்ம்ம்...இப்பன்னா கூட ரெண்டு கேள்வி கேட்டிருப்பேன்.
5. மொதமொதல் மெயில் ஐடி ஹாட்மெயில்தான். அதுதான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருந்தேன். திடீர்னு பாத்தா யாஹூவுக்கு மாறியிருந்தேன். அதுல ரெண்டு மூனு ஐடி வேற. நாளாக ஆக...ஹாட்மெயில் ஐடி காணாமப் போயிருச்சு. அக்கவுண்ட் தானா மூடிக்கிச்சு. அந்த ஐடி இப்ப இல்லவேயில்லை. திடீர்னு பாருங்க நண்பி ஒருத்தி..டேய்...ஒனக்கு இன்விடேஷன் அனுப்புறேன்னு சொன்னா...ஏய். ஒனக்குதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே..திரும்பவும் எதுக்கு இன்விடேஷன்னு கேட்டேன். "டேய்"னு சாமியாடீட்டு..புதுசா ஜிமெயில்னு ஒன்னு வந்திருக்கு. ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னா. என்னடா கருமம்...ஏற்கனவே ஒன்னு இருக்கே...இன்னொரு ஐடியான்னு நெனச்சேன். சரி இருக்கட்டும்னு தொறந்து வெச்சா...இப்ப ஜிமெயில்தான். யாஹூ மறந்தே போச்சு.....ம்ம்ம்...இப்போதைக்கு ஜிமெயில். நாளைக்கு என்ன மெயிலோ!
6. புத்தகங்கள் நெறைய படிப்பேன். தமிழும் ஆங்கிலமும். வேற மொழிகள் எழுதப் படிக்கத் தெரியாதே. ஹாரி பாட்டர் கதை ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி லார்டு ஆஃப் தி ரிங்ஸ். நாலஞ்சு வாட்டி புத்தகத்தப் படிச்சாச்சு. இன்னமும் ஒவ்வொரு வாட்டி படிக்கும் போதும்..ஒவ்வொன்னு புதுசாயிருக்குது. படத்தை ஏழெட்டு தடவைக்கு மேலப் பாத்தாச்சு. இன்னமும் ஆவல் தீரலை. காவியம்யா காவியம். அதுல பேசுறதுக்கு ஒரு புது மொழியையே உருவாக்கீருக்காருய்யா ஜே.ஆர்.ஆர்.டோல்கியன். என்ன எழுத்து! என்ன கற்பனை! அடடா!
7. சொரியாசிஸ் (psoriasis) அப்படீங்குற நோயைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்த நோய் எனக்கு உண்டு.
8. விமானப் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலில் நான் விமான நிலையத்திற்குள் நுழைந்தது பெங்களூரில்தான். வேலைக்கு வந்த பிறகு டெல்லிக்கு ஒரு பயிற்சிக்காக சென்ற பொழுதுதான் முதல் விமானப் பயணம். பிறகு பலமுறை விமானம் ஏறியாச்சு. ஆனாலும் ரொம்பவும் ரசிச்ச விமானப் பயணம் பிரசில்ஸ்ல இருந்து ரோம் போனதுதான். ஸ்விஸ் வழியா போச்சு. வேணுக்குமுன்னே வண்டிய ஆல்ப்ஸ் மலை மேல கூடி ஓட்டுனாங்க. ஜன்னல் வழியா பாக்கனுமே...அடடடா! அட்டடடடா! ஸ்விஸ் போகனுமப்போய். அனேகமா ஆகஸ்ட் மாசம். முருகன் சொன்னாப் போகலாம். எல்லாம் அவன் விருப்பம். அதே மாதிரி கிரீஸ், இத்தாலி, எகிப்து, ஆஸ்த்திரியா, பின்லாந்து, நார்வே...அட பல ஊருக இருக்குங்க. அங்கெல்லாம் போகனும்.
எட்டு போட்டாச்சுங்க. அடுத்து எட்டு பேரைக் கூப்புடுனமாமே.
1. சிவிஆர்
2. பக்காத்தமிழன் கோப்ஸ்
3. மை ஃபிரண்டு
4. யோகன் ஐயா
5. ஜோசப் சார்
6. குமரன்
7. காபி
8. மலேசிய மாரியாத்தா
அன்புடன்,
கோ.இராகவன்
Saturday, June 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
படிக்கறதுக்கு சுவையா இருந்துச்சு அண்ணாத்த!!
எல்லோரும் தன்னை பற்றி பெருமையான விஷயங்கள் பத்தி சொன்னாங்க,அதனால் நான் இந்த டேக் எழுத முடியாதுன்னு நெனைச்சேன் (ஏன்னா என் கிட்ட பெருமைய சொல்லிக்கறா மாதிரி எதுவும் இல்லை)
ஆனா,இந்த பதிவ பாத்த உடனே நாமலும் இது மாதிரி எழுதலாமேன்னு தோன்றி போச்சு!!
ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி!! :-))
உண்மை கண்டறியும் கருவியா இந்த எட்டைப்பயன்படுத்தலாம் போல ;-)
ஆஸ்திரியா போகணும் சரி, ஆஸ்திரேலியா பிடிக்காதா?
சாதனை, சோதனை அப்படின்னு எல்லாம் அலட்டாம அழகா எட்டு போட்டுட்டீங்க. சூப்பரா, இயற்கையா எழுதி இருக்கீங்க. நம்ம பேச்சைக் கேட்டு எழுதினதுக்கு நன்றி.
//அந்த டாக்டரம்மாக்கு ஒரு கை கெடையாது. //
ஒரு கால் அவுங்களுக்கு ஒரு கை இல்லாம இருந்ததாலோ என்னவோ பதிவு போட ரெண்டு கை பத்தலைன்னு சொல்றீங்களா?
//எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு.//
அவுங்களைதான் கூட்டிட்டு வரலை, அவுங்க புகழையாவது கூட்டிட்டு வந்தீங்களே.
//நெத்தியில நடுவுல கண்ணு மாதிரி ஒரு பெரிய மச்சம்.//
பெரிய நக்கீரர் பரம்பரையோ?
//இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். //
அப்போ நம்ம கேங் பிலாக் சுவரத்துல சேர்ந்துரலாமே?
///நோய் எனக்கு உண்டு//
:(
நல்லா இருக்கு, துலீப் அறுவடை காலத்துல உங்க ஊரைச் சுத்தி இருக்கிற கிராமங்களை கார்ல சுத்தி வாங்க. அப்புறம் சொல்லுங்க அந்த மலையா இந்த மடுவான்னு
Psoriosis curable? how bad?
//அனேகமா ஆகஸ்ட் மாசம். முருகன் சொன்னாப் போகலாம். //
முருகன் யாருங்க இமிக்ரேசன் ஆபீசரா? :)
நல்லா எட்டு போட்டு இருக்கீங்க லைசென்ஸ் கண்டிப்பா கிடைக்கும்.
ராகவன்,
பலப் பல திருப்பங்களோட எட்டுப் போட்டுட்டிங்க.
ஜிமெயில் இங்க பாடாப்படுத்துது.
உங்களை நான் எட்டுக்கு அழைக்க எண்ணிப் பதிவும் போட்டு விட்டேன்.அதனாலென்ன. பரவாயில்லை.நெதர்லாண்டுல வீடெல்லம் மிதக்குமாமே...அப்படியா..
தோழரே,
உங்கள் அனுபவங்களை ரசித்தேன்!! வாழ்த்துக்கள்!!
மன்னிக்கவும், நான் உங்களுக்கு முதல்ல எட்டு போட்டுட்டேன்.
// CVR said...
படிக்கறதுக்கு சுவையா இருந்துச்சு அண்ணாத்த!!
எல்லோரும் தன்னை பற்றி பெருமையான விஷயங்கள் பத்தி சொன்னாங்க,அதனால் நான் இந்த டேக் எழுத முடியாதுன்னு நெனைச்சேன் (ஏன்னா என் கிட்ட பெருமைய சொல்லிக்கறா மாதிரி எதுவும் இல்லை)
ஆனா,இந்த பதிவ பாத்த உடனே நாமலும் இது மாதிரி எழுதலாமேன்னு தோன்றி போச்சு!!
ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி!! :-)) //
தம்பி, நானும் எதாவது பெருமையா எழுதலாமான்னு யோசிச்சேன். ஆனா பாரு யோசிச்சா நம்மளப் பத்திப் பெருமையா எதுவுமே தெரியலை. அந்த லச்சணத்துல இருக்கோம். சரி. தகவல்கள்தானன்னு இப்பிடி ஒரு எட்டு பதிவு போட்டாச். :) உன்னோட எட்டு பதிவையும் படிச்சேன். நல்லாயிருக்கு.
// கானா பிரபா said...
உண்மை கண்டறியும் கருவியா இந்த எட்டைப்பயன்படுத்தலாம் போல ;-)
ஆஸ்திரியா போகணும் சரி, ஆஸ்திரேலியா பிடிக்காதா? //
ஆஸ்திரேலியாவும் பாக்கனும். கிட்னி..சேச்சே சிட்னியெல்லாம் இன்னும் பாக்கலையே. :) jokes apart. பாக்க விரும்பும் பட்டியல் ரொம்ப இருக்குதுங்க. எல்லாத்தையும் பாக்க ஆண்டவந்தான் மனசு வைக்கனும்.
/// இலவசக்கொத்தனார் said...
சாதனை, சோதனை அப்படின்னு எல்லாம் அலட்டாம அழகா எட்டு போட்டுட்டீங்க. சூப்பரா, இயற்கையா எழுதி இருக்கீங்க. நம்ம பேச்சைக் கேட்டு எழுதினதுக்கு நன்றி //
அட சாதனைன்னு யோசிச்சுப் பாத்தா ஒன்னுமேயில்லை. சோதனைன்னு பாத்தா வாழ்க்கையே அப்படித்தான் இருக்கு. இதுல இதுக ரெண்டையும் வெச்சு எப்படிப் பதிவு போடுறது. :)))))) அதான் இப்பிடி. அழைப்புக்கு ரொம்ப நன்றிங்க. ஒங்களப் போல பெரியவங்க ஆதரவு எப்பவும் தேவை. :)
// ILA(a)இளா said...
//அந்த டாக்டரம்மாக்கு ஒரு கை கெடையாது. //
ஒரு கால் அவுங்களுக்கு ஒரு கை இல்லாம இருந்ததாலோ என்னவோ பதிவு போட ரெண்டு கை பத்தலைன்னு சொல்றீங்களா? //
ஷ்ஷ்ஹ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் தாங்க முடியலையே இளா.
////எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு.//
அவுங்களைதான் கூட்டிட்டு வரலை, அவுங்க புகழையாவது கூட்டிட்டு வந்தீங்களே.//
அதென்னவோ உண்மைதான். அவங்க இங்க வந்து பாத்திருந்தா..அவ்ளோதான்.
////நெத்தியில நடுவுல கண்ணு மாதிரி ஒரு பெரிய மச்சம்.//
பெரிய நக்கீரர் பரம்பரையோ? //
தெரியாதுங்கோ. சிவபெருமான் பரம்பரையா இருக்கும். ஏன்னா நெத்திக்கண்ணு சிவருக்குத்தான. ;)
////இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். //
அப்போ நம்ம கேங் பிலாக் சுவரத்துல சேர்ந்துரலாமே? //
கேங்கு பிலாக்கா? இசைக்கும் உங்க கேங்கு பிலாகுக்கும் என்ன தொடர்பு? புரியலையேங்க. விவரமாச் சொல்லுங்க.
// நல்லா இருக்கு, துலீப் அறுவடை காலத்துல உங்க ஊரைச் சுத்தி இருக்கிற கிராமங்களை கார்ல சுத்தி வாங்க. அப்புறம் சொல்லுங்க அந்த மலையா இந்த மடுவான்னு //
துலீப் இல்லாத பொழுதுகள்ளயே இங்க பிரமாதமா இருக்கு. துலீப் காலத்தச் சொல்லனுமா என்ன!
// SurveySan said...
Psoriosis curable? how bad? //
இல்லைன்னுதான் இன்னைக்கு வரைக்குமுள்ள மருத்துவம் சொல்லுது.
// delphine said...
வழக்கமா ஊசி போட்டா தேச்சு விடுவாகள்ளன்னு தேச்சு விட்டுட்டாங்க. அந்த ரெக்கு புண்ணாயிருச்சு. ///
நல்ல எட்டுப் போட்டிருக்கீங்க ராக்.. //
நன்றிங்க :) எல்லாம் நீங்க குடுக்குற ஊக்கந்தான்.
ரசித்துப் படத்தேன் ஜீரா.
Honesty is the best policy என்பது தான் எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் ஆங்கில பழமொழி என்று உங்களுக்குத் தெரியும் தானே??
//ஆமா. பொறந்தது டாக்டரம்மா வீட்டுல்ல//
எங்க அண்ணன் / அக்கா எல்லாரும் வீட்டுலதான் பிறந்தார்கள். நாந்தான் எங்க குடும்பத்துல முத ஆஸ்பத்திரி பிள்ளை.
//ஆனா இந்த நிகழ்ச்சி அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு.//
இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் கேட்டும் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இவை எல்லாம் ஏதாவது தந்திரங்களாகத்தான் இருக்கின்றன. அதுதான் உண்மை.
நெஞ்சம மறப்பதில்லை பாட்டில் சுசிலாம்மா பாடும் ஒரு ஹம்மிங்... அப்படியே மனசை உருக வைத்துவிடும். எனக்கு பிடித்த இன்னொரு மாயக்குரலோன் ஜேசுதாஸ்.
மிக நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுடைய எழுத்தோடு பெரும்பான்மையோர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதுதான் உங்களுடைய வெற்றி.
வாழ்த்துக்கள் பல!
//திறமைய ஊனமா நிப்பாட்ட முடியும்! இதுல எனக்குப் பெருமைதாங்க.
//
pudhusa ketkuren... திறமைய ஊனமா நிப்பாட்ட முடியும்!
//எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு.//
gud gud.... summa va solli irukaaaanga.. delhi ku raaaja naaalum paati sollai thatadhey nu :)
யப்ப யப்ப "எட்ட"ப்பா..
8 நானும் போட்டுட்டேனப்பா..
இங்க வந்து பாருப்பா..
8 ரொம்ப அழகுதானப்பா..
;-)
http://engineer2207.blogspot.com/2007/06/181.html
அண்ணே, என்னையும் மறக்காமல் நெனச்சு டேக் பண்ணியிருக்கீங்க.. ஆன கொஞ்சம் அட்வான்ஸா நேத்தே நான் 8 போட்டு காட்டிட்டேன்..
லைசன்ஸ் கிடைக்குமா?
பார்த்து சொல்லவும். ;-)
//ஆனா இந்த நிகழ்ச்சி அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு.//
adhu sare enga ippo unga mugathula andha matchathai kaanom? profile photo sollundhunga...
//இப்பன்னா கூட ரெண்டு கேள்வி கேட்டிருப்பேன்.//
ennanu kettu irupeeeenga.. sollungalen...
//யாஹூ மறந்தே போச்சு.....ம்ம்ம்...இப்போதைக்கு ஜிமெயில். நாளைக்கு என்ன மெயிலோ//
namakku hotmail'um pudikaadhu, gmail um pudikaadhu... he he yahoo thaanga best..
அண்ணே, நீங்க 8ல பெயிலு! :-P
ஆனா, செண்டிமெண்டலா எழுதுனதுக்கு ஏதோ பாஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணிடலாமா? ;-)
//புத்தகங்கள் நெறைய படிப்பேன். தமிழும் ஆங்கிலமும்//
repeatu..... aaaana once thaan padipen.....
/அட பல ஊருக இருக்குங்க. அங்கெல்லாம் போகனும்//
kandipaaa poveeenganu, patchi solludhunga..... all the best... pona sollitu ponga.. ok va...
appadi ippadi ennaium 8 game la ulla vuttuteeeenga.. 2 days la potren... ok va brother..
// வல்லிசிம்ஹன் said...
ராகவன்,
பலப் பல திருப்பங்களோட எட்டுப் போட்டுட்டிங்க.
ஜிமெயில் இங்க பாடாப்படுத்துது.
உங்களை நான் எட்டுக்கு அழைக்க எண்ணிப் பதிவும் போட்டு விட்டேன்.அதனாலென்ன. பரவாயில்லை.நெதர்லாண்டுல வீடெல்லம் மிதக்குமாமே...அப்படியா.. //
ஆமாங்க. நெறைய வீடுங்க மெதக்கும். நெலத்துல வீடு கட்ட எடமில்லாம படகு வீடாக் கட்டிக்கிருவாங்க. பழைய ஆம்ஸ்டர்டாம்ல போனா நெறைய பாக்கலாம்.
// குட்டிபிசாசு said...
தோழரே,
உங்கள் அனுபவங்களை ரசித்தேன்!! வாழ்த்துக்கள்!!
மன்னிக்கவும், நான் உங்களுக்கு முதல்ல எட்டு போட்டுட்டேன். //
நன்றி குட்டிப் பிசாசு. நீங்க ஏற்கனவே எட்டு போட்டு பாஸ் மார்க் வாங்கி லைசென்ஸ் வாங்கீட்டதால ஒங்களுக்குப் பதிலா மலேசிய மாரியாத்தாவைக் கூப்பிடுறேன். ஒங்களுக்கு ஆட்சேபனை இருக்காதுன்னு நம்புறேன்.
// அனுசுயா said...
//அனேகமா ஆகஸ்ட் மாசம். முருகன் சொன்னாப் போகலாம். //
முருகன் யாருங்க இமிக்ரேசன் ஆபீசரா? :)
நல்லா எட்டு போட்டு இருக்கீங்க லைசென்ஸ் கண்டிப்பா கிடைக்கும். //
ஆகா..அனுசுயா ஒங்களுக்குத் தெரியாதா. இந்த ஒலகத்துக்கே உள்ள வரப் போக பாஸ்போர்ட்ல ஸ்டாம்பு குத்துறவருதான் முருகன். :)
// சுதர்சன்.கோபால் said...
ரசித்துப் படத்தேன் ஜீரா.
Honesty is the best policy என்பது தான் எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் ஆங்கில பழமொழி என்று உங்களுக்குத் தெரியும் தானே?? //
தெரியும். தெரியும். அதுனாலதானே ஒங்களக் கூப்புடுறது. பெரியவங்க வந்து பதிவைப் போடுங்க. அப்படியே அள்ளிக்கிட்டு போகும். :) படம் பிரமாதமா இருக்கு ;)
// Sridhar Venkat said...
எங்க அண்ணன் / அக்கா எல்லாரும் வீட்டுலதான் பிறந்தார்கள். நாந்தான் எங்க குடும்பத்துல முத ஆஸ்பத்திரி பிள்ளை. //
வாங்க ஸ்ரீதர். ஆக..ஒங்க குடும்பத்துலயே ஒங்களுக்குப் பிறகும் சரி..முன்னாடியும் சரி...இந்த வாய்ப்பு யாருக்கும் இல்லை. சூப்பருங்க.
// இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் கேட்டும் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இவை எல்லாம் ஏதாவது தந்திரங்களாகத்தான் இருக்கின்றன. அதுதான் உண்மை. //
இருக்கலாம். கண்டிப்பாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவைகளை நான் நம்புவதில்லை.
// நெஞ்சம மறப்பதில்லை பாட்டில் சுசிலாம்மா பாடும் ஒரு ஹம்மிங்... அப்படியே மனசை உருக வைத்துவிடும். எனக்கு பிடித்த இன்னொரு மாயக்குரலோன் ஜேசுதாஸ். //
யேசுதாஸ் குரலில் இடைவெளியே கிடையாது. அது முழுமையான குரல்களில் அதுவும் ஒன்று. அந்த அடிக்குரலில் பாடுகையில் அப்படியே மகுடிச் சத்தம் கேட்கிறது :) எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ என்று ஒரு பாடல். ஜானகி கூட இளையராஜா இசையில. அதுல "வெண்பனி போல் அவள் தேகம்" அப்படீன்னு வரி வரும். அதக் கேக்கும் போது...ஆகா....பொதுவா பாடும் போது சாயல் தெரியாமப் பாடுவேன். ஆனா அந்த வரியில ஜேசுதாச இமிடேட் பண்ணுவேன். :)
// மிக நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுடைய எழுத்தோடு பெரும்பான்மையோர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதுதான் உங்களுடைய வெற்றி.
வாழ்த்துக்கள் பல! //
நன்றி ஸ்ரீதர். இப்படி வந்து ஊக்கப் படுத்தும் போது தானா எழுத்து வருது.
//// .:: மை ஃபிரண்ட் ::. said...
யப்ப யப்ப "எட்ட"ப்பா..
8 நானும் போட்டுட்டேனப்பா..
இங்க வந்து பாருப்பா..
8 ரொம்ப அழகுதானப்பா..
;-)
http://engineer2207.blogspot.com/2007/06/181.html //
வாங்க வாங்க. பதிவைப் பாத்தேன். நல்லாவே எட்டு போட்டிருக்கீங்க.
// .:: மை ஃபிரண்ட் ::. said...
அண்ணே, என்னையும் மறக்காமல் நெனச்சு டேக் பண்ணியிருக்கீங்க.. ஆன கொஞ்சம் அட்வான்ஸா நேத்தே நான் 8 போட்டு காட்டிட்டேன்..
லைசன்ஸ் கிடைக்குமா? //
லைசன்ஸ் குடுத்தாச்சே. இன்னமுமா ஆக்சிடெண்ட் பண்ணலை :))))))))))
// .:: மை ஃபிரண்ட் ::. said...
அண்ணே, நீங்க 8ல பெயிலு! :-P
ஆனா, செண்டிமெண்டலா எழுதுனதுக்கு ஏதோ பாஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணிடலாமா? ;-) //
ஆகா உங்க கருணையே கருணை. ஒங்களப் போல உள்ளவங்களால்தான் இந்த ஒலகத்துல மழை பெய்யுது. வெயிலடிக்குது. புயல் வருது. சுனாமி வருது. :)
// My days(Gops) said...
adhu sare enga ippo unga mugathula andha matchathai kaanom? profile photo sollundhunga... //
அது படம் சரியில்ல. அடுத்த மாசம். மூஞ்சிய மட்டும் படம் தரச் சொல்லி திருஷ்டிக் கடைல கேட்டிருக்காங்க. அத அனுப்புறேன். அதுல தெளிவாத் தெரியும் :)
////இப்பன்னா கூட ரெண்டு கேள்வி கேட்டிருப்பேன்.//
ennanu kettu irupeeeenga.. sollungalen...//
ஹி ஹி...இப்பிடிக் கேட்டா எப்பிடி? ஹி ஹி...ஒங்களுக்கு ஆர்மோனியம் வாசிக்கத் தெரியுமா? பாட்டுப் பாட வருமா? என்னோட கவிதைக்கு இசையமைக்க முடியுமா? இப்பிடி எத்தனையோ கேட்டிருப்பேன். ஹி ஹி
////யாஹூ மறந்தே போச்சு.....ம்ம்ம்...இப்போதைக்கு ஜிமெயில். நாளைக்கு என்ன மெயிலோ//
namakku hotmail'um pudikaadhu, gmail um pudikaadhu... he he yahoo thaanga best.. //
அப்படியா...ஆனா வாய்ஸ் சரியா இருக்கிறதில்லையே. வீடியோ கூட ரொம்ப ஸ்லோ.
// My days(Gops) said...
//புத்தகங்கள் நெறைய படிப்பேன். தமிழும் ஆங்கிலமும்//
repeatu..... aaaana once thaan padipen.....//
அது புத்தகத்தப் பொருத்து. நல்லாயிருந்தா ரிப்பீட்டேய்
///அட பல ஊருக இருக்குங்க. அங்கெல்லாம் போகனும்//
kandipaaa poveeenganu, patchi solludhunga..... all the best... pona sollitu ponga.. ok va...//
ஆகா..கண்டிப்பா. முருகனே உத்தரவு குடுத்தாப்புல இருக்கு. :)
// appadi ippadi ennaium 8 game la ulla vuttuteeeenga.. 2 days la potren... ok va brother.. //
ஓக்கேய். ரெண்டு நாள் ஓக்கேய்.
ஜீரா,
கலக்கல் எட்டு போட்டிருக்கீர் ஓய்! :) படிக்க நிறைவாக இருந்தது.
எட்டப்பா...... இது அருமையான எட்டப்பா.
பாட்டியின் புகழ் நெதர்லாண்டு வரை போயிருச்சா? :-)))))
// இளவஞ்சி said...
ஜீரா,
கலக்கல் எட்டு போட்டிருக்கீர் ஓய்! :) படிக்க நிறைவாக இருந்தது. //
நன்றி இளவஞ்சி. நீங்களும் இந்த விளையாட்டில் மாட்டிக்கொண்டு சிறப்பாகப் பதிவு போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஹி ஹி
// துளசி கோபால் said...
எட்டப்பா...... இது அருமையான எட்டப்பா.
பாட்டியின் புகழ் நெதர்லாண்டு வரை போயிருச்சா? :-))))) //
பின்னே விடுவமா டீச்சர்? இப்பிடித்தான் வெள்ளிக்கெழமை நெத்தியில என்ன வெச்சிருக்கீங்க? இது கல்யாணம் ஆனவங்கதான் வெப்பாங்களாமே!!!!! இதுல என்னென்ன கலர்ல கிடைக்கும்? இப்பிடியெல்லாம் ஒரு அக்கா இங்க் தூண்டித் துருவிக் கேட்டுக்கிட்டிருந்தாங்க. இப்ப இன்னும் பல புகழ்களை இங்க கொண்டாந்தாச்சு. :)
போட்ருலாம் ..இன்னைக்குள்ள
அழைப்புக்கு மிக்க நன்றி ராகவன்.
வெளியூர் செல்ல வேண்டியுள்ளதால் அடுத்த வாரம் இடுகிறேன்..
நல்லா இருக்கு ராகவன்,
// நாளைக்கு என்ன மெயிலோ!//
புதுசா Zapak மெயில் வந்திருக்கு.. தலைவர் வேற டீ வி ல வந்து Zapak மெயிலுக்கு தாவுங்கோ nu கொரல் உடுறாரு.. ட்ரை பன்னுங்கொ... :)
வீ எம்
kalakkal thala!
// கார்த்திக் பிரபு said...
போட்ருலாம் ..இன்னைக்குள்ள //
ஆகா...காத்திருக்கோம்.
// tbr.joseph said...
அழைப்புக்கு மிக்க நன்றி ராகவன்.
வெளியூர் செல்ல வேண்டியுள்ளதால் அடுத்த வாரம் இடுகிறேன்.. //
கண்டிப்பா சார். பதிவு போட்டுட்டு ஒரு குரல் குடுங்க. படக்குன்னு ஓடியாந்துர்ரேன். :)
// வீ. எம் said...
நல்லா இருக்கு ராகவன்,
// நாளைக்கு என்ன மெயிலோ!//
புதுசா Zapak மெயில் வந்திருக்கு.. தலைவர் வேற டீ வி ல வந்து Zapak மெயிலுக்கு தாவுங்கோ nu கொரல் உடுறாரு.. ட்ரை பன்னுங்கொ... :)
வீ எம் //
zapak mail போய்ப் பாத்தேன். இன்னமும் ஐடி போடலை. இந்தியர்கள் உருவாக்குனது போல. அது சரி...நீங்க சொல்ற தலைவர் யாரு?
// கப்பி பய said...
kalakkal thala! //
நன்றி நன்றி. கப்பி பாராட்டுனதுல மனசு சந்தோஷத்துல உப்பிப் போயிருச்சு. :)
//இந்தக் கதையச் சொல்ல வேண்டியதாப் போச்சு. எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு//
பேரன் பாட்டிக் காற்றும் நன்றி-நேராய் நெதர்லாந்து கூட்டிச் செலல்! :-)
//நெத்தியில நடுவுல கண்ணு மாதிரி ஒரு பெரிய மச்சம்//
ஆகா...ஜிரா-வுக்கு நெற்றிக் கண் என்றால், நக்கீரர் யாரோ? :-)
//அதே மாதிரி லார்டு ஆஃப் தி ரிங்ஸ். நாலஞ்சு வாட்டி புத்தகத்தப் படிச்சாச்சு. இன்னமும் ஒவ்வொரு வாட்டி படிக்கும் போதும்..ஒவ்வொன்னு புதுசாயிருக்குது//
லார்டு ஆஃப் தி ரிங்ஸ் பற்றி ஒரு கூட்டு வலைப்பூ தொடங்க ரொம்ப நாள் ஆசை...இப்ப வசமா மாட்டிக்கிட்டீரு ஜிரா! எல்லாம் வல்ல எட்டுக்கு நன்றி!
ராகவன்,
எட்டுப் போட உங்களை அழைக்கலாமென்றுதான் காலையில் எட்டிப் பார்த்தேன். பார்த்தால் ஏற்கனவே உங்கள் எட்டு முடிந்திருக்கிறது...:)
ஆசுப்பத்திரிக்காரங்க வீட்ல பொறந்தவர்னு சொல்லுங்க!!! இசை எல்லோருக்குமே பிடிச்சதுதான். இசையரசி பதிவுல இன்னும் நல்ல பாடல்கள ஒலியேற்றுங்க...
நானும் ஆரம்பத்துல பயன்படுத்துன ஈமெயில் ஐடி இப்போ பயன்படுத்துறதே இல்ல... ஜிமெயில் தான்.
நீங்க லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ரசிகர்னு எனக்குதான் தெரியுமே...
மொத்தத்துல உங்க எட்டு சிம்பிள் + பெஸ்ட்டு :)
சரி நெதர்லாந்தெல்லாம் எப்படியிருக்கு...
:)) எட்டில் ஒவ்வொன்றும் அருமை...
மன்னிக்கவும் உங்களிடம் நிறைய சமாச்சாரம் இருக்கறதா கேள்வி.. அதனால மறுபடியும் ஒரு அழைப்பு எம்மூலமா விட்டிருக்கேன். இன்னோரு 8 போடுங்களேன்...போச்சாது....
ஓ! இதுல நம்மளப்பத்திய விவரங்களதான் சொல்லணுமா?
நா என்னத்தையெல்லாமோ சொல்லிருக்கேனே...
இங்க
Post a Comment