Thursday, June 07, 2007

ஜெயலலிதாவை இன்னமுமா கைது செய்யலை?

சமீபத்துல எல்லாரும் இதத்தானய்யா பேசுறாங்க. அந்தம்மா தப்பு செஞ்சாங்கன்னு இவரு சொல்றாரு. தப்புன்னா தேர்தல்ல நிக்க முடியாமப் போறது மட்டுந்தான் தண்டனையா? சட்டத்தை ஏமாத்துனதுக்கு வழக்குப் போட மாட்டாங்களா? சிபிஐ விசாரணைதான் இப்ப வெக்குறாங்களே. அத வெச்சுட்டா போதுமாமே. சட்டம் தன் கடமையைச் செய்யுமே. அதுக்கப்புறம் யாரும் அதைப் பத்திப் பேச வேண்டாம். ஏன்னா சிபிஐ விசாரணை வெச்சா...என்ன நடக்குதுன்னு பொருத்திருந்துதான் பாக்கனும்.

ஜெயலலிதா கொடநாட்டுல மட்டுமா அரமனை வெச்சிருக்கப் போறாரு. உண்மையிலே தூண்டித் துருவுனா எல்லா ஊர்லயும் இருக்கும். ஆனாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில அவரைக் கைது செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. ஏன்னா...அதை வெச்சு எப்படி அனுதாப அலை உருவாக்கனும்னு ஜெயலலிதாவுக்குத் தெரியும்னு கருணாநிதிக்கும் தெரியும். அதுனால அந்த முடிவை எடுப்பாங்கன்னு நெனைக்கலை. எடுத்தாலும் தப்பில்லைங்குறதுதான் என்னோட கருத்து.

தேர்தல்ல நிக்க விடாமச் செய்றது ஒரு விதத்துல ஜெக்கு பயங்கர அடிதான். ஆனா அதுதான் அவருக்கு ஒரு விதத்துல வசதியும் கூட. ஏற்கனவே ஒரு நிழல் முதல்வர வெச்சி அவங்க அரசாட்சி செஞ்சாச்சு. எதுன்னாலும் பழியை அவர் மேல போட்டுட்டு இவங்க நிம்மதியா இருக்கலாம். இவங்கள என்னதான் செய்றது? என்ன தண்டனை குடுத்தாலும் அத அவங்களுக்கு வாகா வளைச்சுக்கிறாங்களே!

ஆனா இன்னொரு பிரச்சனை இருக்கு. ஏற்கனவே இந்தம்மாவுக்கு எப்ப எதச் சொல்லனும்னு தெரியாது. செய்யனும்னும் தெரியாது. தப்பித்தவறி இந்தக் கைது அவங்களுக்கு ஒரு அனுதாப அலைய உருவாக்கீச்சிருச்சுன்னு வெச்சுக்குங்க...அடுத்து அவங்கதான் முதல்வர். நம்ம மக்களைப் பத்தி நமக்கு நல்லாத் தெரியுமே. உடனே சும்மாயிருப்பாங்களா? ஏற்கனவே சபதம் செஞ்சிருக்காங்களே...ஒடனே பழிக்குப் பழி. அதை எப்படிப் பயன்படுத்திக்கனும்னு கருணாநிதிக்கும் தெரியும். இப்பிடி எல்லாமே சங்கிலித் தொடராவே போய்க்கிட்டிருக்குமோ!

அடப்போங்கப்பா....அரசியல்வாதிகளே இப்படித்தான். என்னவோ பொலம்பனும்னு தோணிச்சு. எங்க போய்ப் பொலம்புறது. உங்க கிட்டதான வந்து உரிமையோட பொலம்ப முடியும்!

18 comments:

said...

கைது செய்வது வெறும் டிராமா ராகவன். ஒரே நாள் ஜெயிலில் இருந்தாலே 10 பேர் தீக்குளிப்பார்கள். 10 பஸ் எரியும். இரண்டாவது நாளில் ஜாமீனில் எடுப்பார்கள். நீதி கேட்டு தமிழ்நாடெங்கும் ஊர்வலம் போவார்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்..பாட்டு ஏனோ ஞாபகத்துக்கு வருகிறது

said...

ஒரு வயசுக்கப்பறம் எல்லா அரசியல்வாதிகளும் கட்டாய ஓய்வு எடுத்துக்கணும்னு சட்டம் வந்தா நல்லா இருக்கும். (உங்க புது போட்டோல நல்லா இருக்கீங்க)

said...

ஜீரா,

இந்த கைது வெளையாட்டெல்லாம் நமக்கு எந்தக்காலத்துலயும் புரியாது! அப்படி ஆனா என்ன நடக்கும்னு செல்வன் சரியாச்சொல்லி இருக்காரு பாருங்க! அதனால ரொம்பக் கவலைப்பட்டு உடம்பக் கெடுத்துக்காதீங்க!

// உங்க புது போட்டோல நல்லா இருக்கீங்க// அந்த ஜெர்கின்ல இருக்கற கலருகளைப் பார்த்துத்தான்யா கேட்டேன். கேப்டன் மாதிரி ஏதேனும் புதுக்கட்சி ஆரம்பிக்கப்போறீரான்னு.. :))

said...

ச்சின்ன அம்மிணி சொன்னதுக்கு ரிப்பீட்டு.

ஆனா வயசு வரம்பு பத்துக்குள்ளேதான். அதுக்குமேலே
போனா தேர்தலில் 'நிக்க' முடியாது.:-)))

அது எப்படிங்க மனசாட்சி இருக்கறவங்க யாரும் அரசியல்வாதியா வர்றதே இல்லை? (-:

said...

பொலம்பறதுக்குன்னே ஒரு "பூ" வெச்சு,
பொலம்பறதுயே தொழிலா அதுல வெச்சு
பொலம்பியே ஒரு பதிவும் போட்டு
பொலம்பியிருக்கற உங்களுக்கு.....

ஒரு பொலம்பல் வாழ்த்து!

said...

தமிழ்மணமும் G.ராகவனும் செய்த தவறுகள் அம்பலம்!!!

said...

அந்த அம்மா அதான் சாக்குன்னு

பெண்னென்றும் பாராமல் கருணாநிதி கைது செய்தார், கொடுஞ்சிறையில் அடைத்தார் என்று அனுதாப சுனாமியை ஏற்படுத்த முயலும்.

அந்த அம்மாவுக்கு தான் மட்டுமே பெண் என்று நினைப்பு.!

இந்த அம்மாவால் பழிவாங்கப்பாட்ட பெண்களின் பட்டியல்...மதுரை செரீனா.....பட்டியல் ரொம்ப நீளம் சார்.
:)

said...

ஜிரா,
செல்வன் சொல்லி இருக்குற மாதிரி திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

said...

//இப்பிடி எல்லாமே சங்கிலித் தொடராவே போய்க்கிட்டிருக்குமோ//

அதேதான் நடக்குது நாமளும் வேடிக்கை பார்த்துட்டுதான் இருக்கோம் வேற வழி ?

said...

பதிவப் பத்தி எதுவும் சொல்றதுக்கு நமக்கு அரசியல் ஞானம் எல்லாம் கிடையாதுங்க. ஆட்டோல பிரயாணியா போய்த்தான் பழக்கம். ஆட்டோல வந்து பிரியாணி பண்ணுவாங்கலாம்ல... நமக்கு எதுக்கு பொல்லாப்பு.

உங்க போட்டோ பத்தி ஒன்னும் சொல்லலன்னா நாங்கல்லாம் உங்க பதிவு படிக்கிறோம்னு அத்தாட்சி இல்லாம போயிரும்ல. ஹ்ம்ம்... நல்லா வேகமாத்தான் உங்களுக்கு முடி வளருது :-))))

அது என்னங்க வயசு 251-ன்னு சொல்லுது உங்க profile?

அடுத்த வருஷம் 2511-ஆ? :-))

said...

இப்போ அந்தம்மா என்ன தவறு செய்துட்டாங்கன்னு இப்படி புலம்பல்ஸ் ?

said...

//இப்போ அந்தம்மா என்ன தவறு செய்துட்டாங்கன்னு இப்படி புலம்பல்ஸ் ?//

அதானே? :-))))




ஜிரா, நீங்க நடுநிலைவாதி தான்னு நடுநிலை இல்லாத வாதிகள் ஒத்துக்கறோம் :-)

said...

//
ஜிரா, நீங்க நடுநிலைவாதி தான்னு நடுநிலை இல்லாத வாதிகள் ஒத்துக்கறோம் :-)
//

ஆமாம் ஜீ.ரா, நானும் ஒத்துக்கறேன்...சத்தியமா நீங்க ஓரு நடுநிலைவாதி...!!!

said...

251 வயசிலேயும் அயராமல் பணிபுரியும் ஜிராவுக்கு வாழ்த்துக்கள்.

எல்லோரும் பாயிண்ட் சொல்லிட்டாங்க.
அதனால நாம அதை ஆமோதிக்கிறோம்.

said...

//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...//

ஏங்க இதெல்லாம் நடக்கிற காரியமா?

நானும் சொல்லிடுறேன். அந்தக் கலர்புல் போட்டோ நல்லாயிருக்கு...ஆனாலும் ஏதோ ஒரு கலர் துண்டு போட்டுக்கிட்டது மாதிரியும் தெரியுது.

said...

Arresting jayalalithaa is not a tactical move. It is wasting public money. Arrest will result in looting and arson by her followers. Let law abiding citizens
lead peaceful life at least for the time being.

said...

ராகவன்,

ஜெ தன்னை கைது செய்தால் தனக்கு அனுதாபம் கிடைக்கும் என்றுதானே இப்படி தொடர்ந்து மு.கவை உசுப்பி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்?

இன்னொன்னு பாத்தீங்களா? சாதாரணமா மு.க நிருபர்களோட கேள்விங்களுக்கு ஒன்னு, இல்லன்னா ரெண்டு வார்த்தைலதான் பதில் சொல்வார். அத தங்களோட கேள்வியோட சேர்த்து அவரே சொன்னா மாதிரி போட்டுடறது இந்த பத்திரிகைகளோட வேலை..

அந்தமாதிரிதான் இந்த கொடநாடு பங்களா விஷயமும். அதுக்காக ஜெ வை தேர்தல்ல நிக்க விடாம செஞ்சா என்னன்னு மு.க பதில் சொன்னாமாதிரி வந்த செய்தியும்.

இதுல விகடன்ல ஒரு கட்டுரை வந்துதே. திமுகவுக்கும் சின்னாம்மா லிக்கர் கம்பெனிக்கும் இடையில ஏதோ ரகசிய ஒப்பந்தம் இருக்குன்னு...

எல்லாம் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் போலத்தான்.

said...

ஏன் ஜிரா,
இப்பதான் இந்த அரசியல்வாதிகளைப் பற்றி தெரியுதா, இது கணகாலமா நடக்குதே.எங்க கிட்டதானே புலம்புரீங்க புலம்புங்க, இந்தியா திருப்ப உத்தேசமில்லியா?அதேன்ன புதுசா துண்டு அரசியலில் சேரபோரிங்களா?