இசையின்பம் வலைப்பூவுல 3 இன் 1 மூன்று ஸ்வரங்களுக்குள் அப்படீன்னு ஒரு பதிவு போட்டிருந்தாங்க நம்ம ஜீவா. அதுல மகதிங்குற ராகத்தை இளையராஜா பயன்படுத்திப் பாட்டுப் போட்டுருந்ததைச் சொல்லியிருந்தாங்க. ரொம்ப நல்ல பாட்டு. நானும் கேட்டேன். ஷ்ரேயா கோஷல் நல்லாப் பாடுறாங்க.
ஆனா பாருங்க. இந்த ராகத்தை முதன்முறையா திரைப்படத்துல பயன்படுத்துனது மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுதான். அபூர்வ ராகங்கள் படத்துல வரும் "அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம்...அபூர்வ ராகம்". ஆமா. ஏசுதாஸ் பாடிய கண்ணதாசனின் பாட்டேதான்.
அபூர்வ ராகங்கள்னு படத்துக்குப் பேரு வெச்சாச்சே...பாட்டும் அபூர்வராகங்கள்ள போட்டா நல்லாயிருக்குமேன்னு மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணா கிட்ட கேட்டாராம். அப்பத்தான் இந்த மகதி ராகத்தைப் பயன்படுத்தினாராம்.
இந்த யூடியூபைப் பாருங்க. அபூர்வ ராகங்கள் படத்துல சில காட்சிகள் வருது. அதிசய ராகம் பாட்டு வரும் போது அதுல மெல்லிசை மன்னர் எப்படி இந்த ராகத்தைப் பயன்படுத்தினாருன்னும் சொல்றாரு. நல்லாக் கேளுங்க. ஏழெட்டு நிமிட வீடியோதான்.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
எனக்கு மிகவும் விருப்பமான பாடல்!!
"வசந்த காலத்தில்......" என தொடங்கி தொடர்ந்து வரும் அடி மிக அற்புதமாக இருக்கும்!!
அதுவும் நம்ம யேசுதாஸ் பாடின பாட்டாச்சே!! கேக்கனுமா? :-)
இப்போ அலுவலகத்தில் இருக்கிறேன்,வீட்டிற்கு சென்று நிகழ்படத்தை பார்க்கிறேன்!! :-)
நல்லது. நன்று, வியந்தோம், அறிந்தோம்
// Collapse comments
CVR said...
எனக்கு மிகவும் விருப்பமான பாடல்!!
"வசந்த காலத்தில்......" என தொடங்கி தொடர்ந்து வரும் அடி மிக அற்புதமாக இருக்கும்!!
அதுவும் நம்ம யேசுதாஸ் பாடின பாட்டாச்சே!! கேக்கனுமா? :-) //
ஆமா. நல்ல பாட்டு. கண்டிப்பா கேக்க வேண்டிய பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு.
// இப்போ அலுவலகத்தில் இருக்கிறேன்,வீட்டிற்கு சென்று நிகழ்படத்தை பார்க்கிறேன்!! :-) //
நிச்சயமாப் பாக்கனும் சிவிஆர்.
// ILA(a)இளா said...
நல்லது. நன்று, வியந்தோம், அறிந்தோம் //
இதான் வெவசாயக் கிண்டலா? ;) குசும்பு கொஞ்ச நஞ்சமில்லைங்க ஒங்களுக்கு.
நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!!
ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி..
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி...
அட..அட..என்ன அற்புதமான வரிகள்...
பதிவுக்கு நன்றிங்ணா....
ஆஹா... நான் அது இளையராஜா பாட்டுனு இல்லை நினைச்சிட்டேன்...
அற்புதமான பாட்டு. எனக்கு ரொம்ப பிடிச்சது...
சொற்சுவை நிறைந்த பாடல் அது!
பதிவுக்கு பதிவு மெருகு
பதிவில் அபூர்வ அழுகு
பதிவுக்கு மிக்க நன்றி ராகவன்!
நல்ல பாட்டு!
ஆஹா...இவ்வளவு விஷயம் இருக்கா !!!!
தகவலுக்கு நன்றி ;)
// குட்டிபிசாசு said...
நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!! //
வாங்க குட்டிப்பிசாசு. கூட எதுவும் குரளியக் கூட்டீட்டு வந்திருக்கீங்களா? :)
// சுதர்சன்.கோபால் said...
ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி..
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி...
அட..அட..என்ன அற்புதமான வரிகள்...
பதிவுக்கு நன்றிங்ணா.... //
ஆமா..ஆமா...கவியரசராச்சே. கவியரசர்னா கண்ணதாசன் மட்டுந்தான். அதுல என்ன சந்தேகம்!
// வெட்டிப்பயல் said...
ஆஹா... நான் அது இளையராஜா பாட்டுனு இல்லை நினைச்சிட்டேன்... //
வெட்டிகாரு, இப்பிடி எத்தன பேரு கெளம்பீருக்கீங்க? இதெல்லாம் சரியில்ல...சொல்லீட்டேன். :))))))))))
// அற்புதமான பாட்டு. எனக்கு ரொம்ப பிடிச்சது... //
ஆமா வெட்டி. எல்லாருக்கும் பிடிச்ச பாட்டு.
// ஜீவா (Jeeva Venkataraman) said...
சொற்சுவை நிறைந்த பாடல் அது!
பதிவுக்கு பதிவு மெருகு
பதிவில் அபூர்வ அழுகு
பதிவுக்கு மிக்க நன்றி ராகவன்! //
வாங்க ஜீவா. இந்தப் பதிவு போடவே நீங்கதான காரணம். :) இல்லைன்னா இந்தப் பதிவு போட்டிருப்பேனா..இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வந்திருக்குமா. ஒங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும்.
// Dreamzz said...
நல்ல பாட்டு! //
ஆமாங்க. ரொம்பவுமே நல்ல பாட்டு.
// கோபிநாத் said...
ஆஹா...இவ்வளவு விஷயம் இருக்கா !!!!
தகவலுக்கு நன்றி ;) //
ஆமா. பின்னே இல்லையா. இதையெல்லாம் வெளிய மெல்லிசை மன்னர் எடுத்துச் சொல்லலை. ஆனா நம்ம விட்டுற முடியுமா?
நமக்கு ராகங்களைப் பத்தியெல்லாம் தெரியாதுங்க..
ஆனா பாடலை ரசிக்க தெரியும். மிகவும் அருமையான பாடல்..
எங்க ஆஃபீஸ் பேண்ட்விட்த் கம்மி போலருக்கு... வீடியோ லோடே ஆகலை :-(
// tbr.joseph said...
நமக்கு ராகங்களைப் பத்தியெல்லாம் தெரியாதுங்க.. //
ஜோசப் சார். எனக்குத் தெரிஞ்ச ஒரே ராகம் புஷ்பராகம். அதுக்கு மேல நானும் தந்தனந்த்தந்தனாதான். :)
// ஆனா பாடலை ரசிக்க தெரியும். மிகவும் அருமையான பாடல்.. //
இதுதான் சரி. ராகம் தெரிய்யலைன்னா பாட்டு ரசிக்க முடியாமலா இருக்கும். எவ்வளவு நல்லாயிருக்கு.
// எங்க ஆஃபீஸ் பேண்ட்விட்த் கம்மி போலருக்கு... வீடியோ லோடே ஆகலை :-( //
ஆகா. நல்ல பாட்டு. முடிஞ்சப்போ கேளுங்க.
Post a Comment