Monday, November 21, 2005

பட்டியல் போடுவோமா?

பட்டியல் போடுவோமா?

நட்சத்திர வாரம் தொடங்கியாச்சு. மொத நாள் எல்லாரையும் போல அறிமுகம் போட்டாச்சு. வேறென்ன போடலாம்? ஒரு பட்டியல்? அதுவும் இந்த வாரம் என்னென்ன போடலாமுன்னு ஒரு பட்டியல் போட்டா எல்லாருக்கும் வசதியா இருக்குமில்லையா! ஹோட்டல்ல மெனு குடுக்குற மாதிரி. நமக்கு ஏதாவது பிடிச்ச மாதிரி இருந்தா அன்னைக்கு மட்டும் பிளாக் வந்து படிச்சிக்கலாம். இல்லையா!

சரி. பட்டியலைப் பாப்போமா!

திங்கள் - 21 நவம்பர் - என்னைத் தெரியுமா போட்டாச்சு. பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கோம். அதுனால இன்னைக்கு இதுக்கு மேல ஒங்கள தொந்தரவு செய்யல.

செவ்வாய் - 22 நவம்பர் - ஒரு நகைச்சுவைக் கதை. படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னு உங்களுக்கு ஆத்திரம் வரக்கூடாது. கொஞ்சம் கேணத்தனமா இருக்கும். ஒருவேளை ஒங்களுக்குப் பிடிச்சுப் போனா, புதுமையா இருந்ததுன்னு சொல்லீரலாம். சரியா?

புதன் - 23 நவம்பர் - ஒரு கதை. இதுவும் கற்பனைக் கதைதான். காலைல கதை. மாலைல கவிதை. இரண்டு கவிதைகள். இரண்டும் நான் ஏற்கனவே எழுதியவை. இருந்தாலும் அத இன்னைக்குப் போடனுமுன்னு ஒரு ஆசை. கவிதைக்குக் கீழ, அந்தக் கவிதையை எப்போ எதுக்கு எழுதினேன்னு ஒரு சின்ன குறிப்பு குடுத்திரலாம்.

வியாழன் - 24 நவம்பர் - ஒரு கதை. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டாமுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு இந்தக் கதை போதும்.

வெள்ளி - 25 நவம்பர் - பெங்களூரில் ஒரு நாள். பெங்களூருக்கு நான் வந்தப்ப நடந்த ஒரு அனுபவம். அப்புறம் மாலையில் தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டு ஒரு நாளுக்கும் வித்தியாசம் எக்கச்சக்கம்.

சனி - 26 நவம்பர் - கனவுகளே! ஆயிரம் கனவுகளே! எனக்கு வந்த கனவுகளைப் பத்தி ஒரு பதிவு. பகல்ல கனவு.

ஞாயிறு - 27 நவம்பர் - ஒரு திரைப்பட விமர்சனம். நான் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்பட விமர்சனம். இந்தப் பதிவைப் போடும் முன்னாடி எந்தப் படமுன்னு சரியா ஊகிச்சா பரிசு காத்திருக்கு. ஊகிங்க ஊகிங்க.

என்ன நண்பர்களே.....பட்டியலைப் பாத்தீங்களா? என்ன நினைக்கிறீங்க பட்டியலைப் பத்தி! எதையாவது மாத்தனுமா? பட்டியல் பற்றிய ஒங்க கருத்துகளை அள்ளி விடுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

26 comments:

said...

என்னடா....பட்டியல் பத்தி யாராவது பின்னூட்டம் போட்டாங்களான்னு பாக்க வந்தா........சிங்கப்பூர்க்காரங்க பின்னூட்டம் போட்டிருக்காங்க. ஒரு வேள சிங்கப்பூர் ரகசியங்கள வெளியிடுற மாதிரி பட்டியல்ல எதுவும் இருக்கோ?

said...

RAGHAVAN,

TRY TO GIVE A REVIEW OF A GOOD BOOK YOU HAVE READ RECENTLY...IT IS A TAMIL BOOK WELL AND GOOD..ALL THE BEST

said...

வணக்கம் ராகவன், நீண்ட நாட்களாக உங்களை டோண்டு,தருமி போன்று வயதானவர் என்றுதான் நினைத்திருந்தேன் (இருவரும் என்னை மன்னிக்கவும், குறியீட்டிற்காகவே உங்களை குறிப்பிட்டேன்), பிறகு உங்கள் படத்தை பார்த்தபின் தான் தெரிந்தது நீங்கள் இளைஞர் என்று... நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

நன்றி

said...

// RAGHAVAN,

TRY TO GIVE A REVIEW OF A GOOD BOOK YOU HAVE READ RECENTLY...IT IS A TAMIL BOOK WELL AND GOOD..ALL THE BEST //

புத்தக விமர்சனமா? முத்து, முதலில் மகரந்தத்தில் புத்தக விமர்சனங்களைப் போட்டேன். யாரும் சீண்டவில்லை. அதிலும் நான் மிகவும் ரசித்த சீக்ரட் கார்டன் பற்றிய விமர்சனம் போட்டேன். :-((( சரி. நீங்கள் விரும்பிக் கேட்டதால், புத்தக விமர்சனமும் முடிந்த வரை போடுகிறேன். இந்த வாரம் வேண்டாம். பிறகு போடுகிறேன். உறுதியாக.

said...

// வணக்கம் ராகவன், நீண்ட நாட்களாக உங்களை டோண்டு,தருமி போன்று வயதானவர் என்றுதான் நினைத்திருந்தேன் (இருவரும் என்னை மன்னிக்கவும், குறியீட்டிற்காகவே உங்களை குறிப்பிட்டேன்), பிறகு உங்கள் படத்தை பார்த்தபின் தான் தெரிந்தது நீங்கள் இளைஞர் என்று... நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். //

வாழ்த்திற்கு நன்றி குழலி. நிறைய பேர் அப்படித்தான் நினைத்திருந்தார்கள் என நினைக்கிறேன். அதனால் என்ன....இணையத்தில் முகம் தெரியாத பொழுது நமது கற்பனைகள் எழுத்துகளின் துடிப்புகளிலிருந்துதானே தோன்றுகின்றன.

said...

படம் போடலேனா, சிறிசு, பெருசாவும், பெருசு சிறிசாவும் தெரிவாங்க, இதெல்லாம் இணையத்தில்ல சகஜமப்பா! தொடர்ந்து உம்ம ஸ்டையில்ல எழுதுங்க ராசா!

said...

இராகவன் அண்ணா, பட்டியல் அருமை, ஆனால் அதில் ஒரு குறை சமையல் பற்றி ஒன்றுமே இல்லையே.

ஒரு பதிவை சமையலுக்கு ஒதுக்கக்கூடாதா?

- பசியுடன் பரஞ்சோதி

said...

பரஞ்சோதி, தமிழ்ப் பசியைத் தானே சொல்கிறீர்கள்?

இராகவன், மெனு நல்லாத்தான் இருக்கு ஆனா இன்னும் வேணும்ன்னு தோணுதே. நட்சத்திர வாரத்துல உங்கள் தமிழையும் படிக்க வாய்ப்பு குடுப்பீங்கன்னு நினைக்கிறேன்.

//மகரந்தத்தில் புத்தக விமர்சனங்களைப் போட்டேன். யாரும் சீண்டவில்லை. அதிலும் நான் மிகவும் ரசித்த சீக்ரட் கார்டன் பற்றிய விமர்சனம் போட்டேன்//

இராகவன், நான் தமிழ்மணம் வருவதன் முன் நீங்கள் சீக்ரட் கார்டனைப் பற்றி எழுதினீர்கள். நான் உங்களை கண்டுகொண்டவுடன் அந்தப் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்டேன். நீங்கள் தான் கண்டுகொள்ளவே இல்லை :-(

//படம் போடலேனா, சிறிசு, பெருசாவும், பெருசு சிறிசாவும் தெரிவாங்க, இதெல்லாம் இணையத்தில்ல சகஜமப்பா! தொடர்ந்து உம்ம ஸ்டையில்ல எழுதுங்க ராசா!//

உதயகுமார் சொன்னது மிக்க சரி. அதனாலதான் முதல் வேலையா என் படத்தைப் போட்டேன். :-)

said...

ராகவன்,
இதான் சொல்லி அடிக்கிறதா?

பட்டியல் நல்லா இருக்கு. லிஸ்ட்ல இனியது கேட்கின் காணோமே..

said...

மெனு போட்டதுக்கு நன்றி ராகவன்.

புதன்கிழமை காலைக்கு மட்டும் எனக்கு அட்டெண்டன்ஸ் போடுங்க.

மாலை நான் லீவு. வரமாட்டேன்.
அது நம்ம விருப்பபாடம் இல்லீங்க:-)

said...

இராகவன்,

நானும் குழலி சொன்னது போல உங்களை வயதானவர் என்றுதான் நினைத்திருந்தேன்.

படத்தை பார்த்தவுடன் ஆச்சரியம் தான்.

said...

பட்டியல் பரவசமூட்டுகிறது..
படைப்புகளும்... நிச்சயமாக !?!
எதிர்பார்ப்புகளுடன்...

said...

வணக்கம்(மக்கா..)..ராகவன்

அப்படியே மக்ரோன்,முத்துக் குளிக்கிறது..பாஞ்சாலங்குறிச்சி,போன்ற விஷயங்களையும்..எடுத்து விடுங்க..
நமக்கு சொந்த ஊரு பெருங்குளம் ஆனாலும்..பள்ளிப் படிப்பு எல்லாம் திருமந்திரநகர்(தூத்துக்குடி) தான்..

வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

said...

அன்பிற்கினிய இராகவன்,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக உங்களுக்கு பிடித்தமானதை பதிவு செய்யாமல் இருக்க வேண்டாம். கண்டுகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பதிவுகள் செய்யும் குழுவில் உங்களது பெயர் இடம் பெற வேண்டாமே..
நட்சத்திர வாரத்தில் அனைவரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.

said...

அன்பின் ராகவன்,

ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் குணங்கள் ரசனைகள் உண்டு. நீங்கள் உங்கள் ஸ்டைலில் கலக்குங்கள். நாங்கள் எங்கள் ஸ்டைலில் படிக்கிறோம்.

said...

ஆச்சரியமோ ஆச்சரியம்.
1) உங்கள் புகைப்படம்
2) குழலியின் பின்னூட்டம்
3) அதற்கான உங்கள் பதில்
4) சுரேஷின் பின்னூட்டம்
:-)

உங்கள் எழுத்தில் உள்ள முதிர்ச்சி அப்படி. பாராட்டுக்கள்.

இன்னும் ஒருவாரத்திற்கு கதை, கவிதையென எல்லா வகை / சுவைகளிலும் பந்தியா... கலக்குங்க

ஜேகே

said...

எஸ்.ஜே.சூர்யா மாதிரி கைதய சொல்லிட்டு படத்த ஓட்டப் பார்க்கிறிங்க?!. சரி கதையில ஒரு கதை நிச்சயம் வரலாற்றுக் கதை சரியா?.

//படம் போடலேனா, சிறிசு, பெருசாவும், பெருசு சிறிசாவும் தெரிவாங்க, இதெல்லாம் இணையத்தில்ல சகஜமப்பா! //
குமரன்., அப்படியா?!

said...

புத்தகங்களை பற்றி பதிவை யாரும் கண்டுக்கலை என்று வருத்தப்படவேண்டாம். உங்க கடமையை செய்ங்க்.அங்கீகாரம் தானா வரும்.நீங்க நிறைய புத்தகங்களை பற்றி எழுதுங்க.அதை விரும்பி வருபவர்கள் வருவார்கள்.

இங்க அடுத்தவங்களை நக்கல் அடிச்சி வாழுறவங்களுக்குத்தான் அதிக பின்னூட்டம் வரும்.ஆனா அதை பற்றி வருத்தப்படறது வேஸ்ட்.வேடிக்கை பாக்கிற மனோபாவத்தை நாம தடுக்க முடியாது.

said...

அடடா! உங்கள் அனைவரின் ஆர்வத்தையும் ரொம்பவே தூண்டி விட்டு விட்டேன் என்று நினைக்கின்றேன். அந்த ஆர்வத்திற்குக் கண்டிப்பாக தீனி போட முயல்கிறேன். வாழ்த்திக் கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

// ஒரு பதிவை சமையலுக்கு ஒதுக்கக்கூடாதா?

- பசியுடன் பரஞ்சோதி //
முதலில் அப்படி ஒன்றும் இருந்தது பரஞ்சோதி. பிறகு அதை பட்டியலில் இருந்து நீக்கி விட்டேன். அது நட்சத்திர வாரம் முடிந்ததும் தனிப்பதிப்பாகவே வரும்.

// இராகவன், நான் தமிழ்மணம் வருவதன் முன் நீங்கள் சீக்ரட் கார்டனைப் பற்றி எழுதினீர்கள். நான் உங்களை கண்டுகொண்டவுடன் அந்தப் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்டேன். நீங்கள் தான் கண்டுகொள்ளவே இல்லை :-( //
மன்னிச்சுக்குங்க குமரன். பழைய பதிவுகளில் பின்னூட்டங்கள் பொழுதுகளில் கவனிக்கப்படாமலேயே போய் விடுகிறது. என்ன செய்வது! இனிமேல் கொஞ்சம் கவனமாக பார்க்கிறேன்.

said...

// ராகவன்,
இதான் சொல்லி அடிக்கிறதா? //
தெரியலையே. தோணிச்சு. போட்டுட்டேன்.

// பட்டியல் நல்லா இருக்கு. லிஸ்ட்ல இனியது கேட்கின் காணோமே..//
இனியது கேட்கின் கண்டிப்பா வரும் இராமநாதன். வழக்கம் போல.

// அப்படியே மக்ரோன்,முத்துக் குளிக்கிறது..பாஞ்சாலங்குறிச்சி,போன்ற விஷயங்களையும்..எடுத்து விடுங்க.. //
கண்டிப்பா கிருஷ்ணன். தூத்துக்குடியில் ஒரு நாள் இருக்கே!

// சரி கதையில ஒரு கதை நிச்சயம் வரலாற்றுக் கதை சரியா?. //
ம்ம்ம்ம். இப்பச் சொல்ல மாட்டேனேஏஏஏஏ!

// கண்டுகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பதிவுகள் செய்யும் குழுவில் உங்களது பெயர் இடம் பெற வேண்டாமே.. //
நிச்சயமாக முருகா! முருகன் பேச்சுக்கு மறுப்பேது! முருகனை அன்றி நமக்குப் பொறுப்பேது!

// உங்க கடமையை செய்ங்க்.அங்கீகாரம் தானா வரும்.நீங்க நிறைய புத்தகங்களை பற்றி எழுதுங்க.அதை விரும்பி வருபவர்கள் வருவார்கள். //
தங்கத்தில் முத்துப் பதித்தாற்போல் பதித்திருக்கின்றீர்கள். நிச்சயம் செய்கிறேன் முத்து.

// மாலை நான் லீவு. வரமாட்டேன்.
அது நம்ம விருப்பபாடம் இல்லீங்க:-) //
உங்கள் விருப்பம் டீச்சர். இங்கே வற்புறுத்தலுக்கு இடமே இல்லை டீச்சர்.

மேலும் வாழ்த்திய வெளிகண்ட நாதருக்கும் சுரேஷிற்கும் நன்றி.

said...

Appearance is deceptive.பக்தி மார்க்கமான உங்க எழுத்து நடை உங்களைக் கொஞ்சம் வயதானவராக மற்ற்வர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டதோ?

பட்டியல் போட்டிருப்பதைப் பார்த்தால் பள்ளிக்கூட வாசனைதான் தெரியுது!!! பரீட்சைக்குப் படிப்பது போல் முன்னேற்பாடு!!

said...

\\*//படம் போடலேனா, சிறிசு, பெருசாவும், பெருசு சிறிசாவும் தெரிவாங்க, இதெல்லாம் இணையத்தில்ல சகஜமப்பா! //
குமரன்., அப்படியா?!*\\

அப்டிபோடு அக்கா, என்னை எதுக்குங்க வம்புக்கு இழுக்கிறீங்க?

ஆமாங்க...அது உண்மைதான். என் பதிவுகளில் வரும் பின்னூட்டங்களைப் பாருங்கள் தெரியும். உங்களை மாதிரி Sweet 16 எல்லாம் என் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில்லை. என் படம் போட்ட பிறகு ஏதோ போகட்டும் என்று சிலர் பின்னூட்டம் போடுகிறார்கள்.

said...

"உங்களை டோண்டு,தருமி போன்று வயதானவர் என்றுதான் நினைத்திருந்தேன் (இருவரும் என்னை மன்னிக்கவும்" // - முடியவே முடியாது, குழலி. நாங்க இரண்டு பேரும் வயதானவர்கள் ஒன்றும் அல்ல; உங்களையெல்லாம் விட மூத்தவர்கள்; அவ்வளவே!

"படம் போடலேனா, சிறிசு, பெருசாவும், பெருசு சிறிசாவும் தெரிவாங்க"//- வெளிகண்ட நாதரே, சந்தடி சாக்கில் என்னமோ சொல்லிட்டு போய்ட்டீங்க!!

என்ன டோண்டு, உங்களுக்கும் சேர்த்து சொல்லிட்டேன்ல..சரிதானே?

பட்டியல் போட்டாலென்ன, போடாவிட்டால் என்ன..நல்ல மகரந்த எழுத்துக்கு தேனீக்கள் எப்போதும்போலவே வரும்...

said...

// பட்டியல் போட்டிருப்பதைப் பார்த்தால் பள்ளிக்கூட வாசனைதான் தெரியுது!!! பரீட்சைக்குப் படிப்பது போல் முன்னேற்பாடு!! //

என்ன செய்ய தாணு? எனக்கு இவ்வளவுதான் தெரியும். இதுக்கு மேல எதிர் பாக்காதீங்கன்னு பட்டியல் போட்டேன். ஆனா பாருங்க....அதுவே எதிர்பார்ப்பைக் கூட்டீருச்சு.
அதுவுமில்லாம வாழ்க்கையே ஒரு பள்ளிக்கூடம்தானே. அதுல படிச்சுக்கிட்டேஏஏஏஏஏஏ தான இருக்கனும்.

// பட்டியல் போட்டாலென்ன, போடாவிட்டால் என்ன..நல்ல மகரந்த எழுத்துக்கு தேனீக்கள் எப்போதும்போலவே வரும்... //
மிக்க நன்றி தருமி. அப்பாடி! என்னோட மானத்தைக் காப்பாத்தீட்டீங்க.

said...

பட்டியலும் பெரிசு, பின்னூட்டமும் அதிகம். பட்டியலை யாரும் எதிர்க்கலை ராகவன், உங்களைக் கிண்டி பார்க்கிறதுதான்.

said...

// பட்டியலும் பெரிசு, பின்னூட்டமும் அதிகம். பட்டியலை யாரும் எதிர்க்கலை ராகவன், உங்களைக் கிண்டி பார்க்கிறதுதான். //

ஓ கிண்டிப் பாக்குறதா! நல்ல வேள தாணு. அல்வாவைக் கிண்டனும். நீங்களும் அல்வா மாதிரின்னு சொல்லாம விட்டீங்களே..... ஹி ஹி ஹி