Monday, November 28, 2005

நான் நன்றி சொல்வேன்

நான் நன்றி சொல்வேன்

ஆச்சு. ஒரு வாரம் போச்சு. நட்சத்திர வாரம். தெரிஞ்சத எழுதிப் போட்டாச்சு. அதுக்கு நெறைய பின்னூட்டங்களும் பாத்தாச்சு.

சரி. நட்சத்திர வாரம் எப்படிப் போச்சுன்னு நான் சொல்ல வேண்டாமா? சொல்றேன். சொல்றேன்.

ரொம்ப நல்லபடியாவே போச்சு. மொதல் ரெண்டு நாளும் கொஞ்சம் சோர்வா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன். உண்மைதான். டெலிபோன எடுத்தப்புறந்தான ராங் நம்பருன்னு தெரியுது.

எல்லாருக்கும் இருந்த சந்தேகம், நான் சுஜாதா போல எழுதுறேனான்னு. உண்மை அது இல்லை. மொதல்ல வந்த வாடைக் கதை ஒரு ஜாலி கலந்துரையாடலா ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது. அத எங்கயும் போடாம வெச்சிருந்தேன். நட்சத்திர வாரத்துல சரியா போட்டாச்சு.

ரெண்டாவது கதைல ஒரு புதுமையப் புகுத்தப் பாத்தேன். அது சரியில்லாமப் போயிருச்சு. அத யாருமே கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கதை சோர்வாப் போயிருச்சு. அதனால நானே சொல்லீர்ரேன். கதாபாத்திரமே இல்லாம கதை எழுத முடியுமான்னு முயற்சி செஞ்சதுதான் அந்தக் கதை. நிலா நிலா ஓடி வா. ஆனா கட்டுரை மாதிரி ஆயிருச்சி. அடுத்த வாட்டி சிறப்பா செஞ்சிக்கலாம்.

கவிதைகள் ரெண்டையும் மக்கள் ரசிச்சிருக்காங்கன்னு தெரியுது. ஆனா திருச்செந்தூரின் கடலோரத்தில் கதைக்கு இருந்த வரவேற்பே தனிதான். மொதல் மொதலா ஐம்பது பின்னூட்டம் விழுந்த என்னுடைய பதிப்பு அதுதான்னு நினைக்கிறேன். முருகக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ரசித்துப் படித்துப் பாராட்டியிருந்தார்கள். அவர்களின் நல்ல பண்பிற்கு மிக்க நன்றி.
இதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை. கருத்து வேறுபாடு கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு. கருத்து வேறுபாடு வேறு நட்புணர்வு வேறு என்ற நடுநிலைமையை உணர்ந்தால் நாம் மற்றவர்களை மதிக்கின்றவர்களாவோம். அருட்பெருங்கோ உங்களுக்கு எனது நன்றி பல.

இந்த வலைத்தளத்தில் ஊடாடுகின்றவர்கள் அனைவருமே படித்தவர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாமே உணர்ச்சியின் வசப்பட்டு தனிநபர், மத, மொழி, இனத் தாக்குதல்களில் ஈடுபட்டால் நம்மளவுக்குக் கல்வியறிவு கிடைக்காதவர்களை என்ன சொல்வது? தவறு நேர்வது இயல்பு. ஆனால் அதை நீக்க நேர்மையான வழிமுறைகளைக் கையாளுங்கள். உங்களால் முடியாயது இல்லை. இந்த வேண்டுகோளை நான் இந்த பொழுதில் உங்களுக்கு வைக்கிறேன். குழலி இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறார். குழலி உங்களுக்கும் எனது நன்றி பல.

அடுத்து பெங்களூரில் ஒரு நாள். தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டுமே இரண்டு விதங்களில் மக்களுக்குப் பிடித்திருந்தன என்றே சொல்ல வேண்டும். அந்தச் சூழலில் தங்களைப் பொருத்திப் பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அடுத்தது கனவுகள் பற்றிய பதிவு. இதற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது. வாரயிறுதி வேறு. ஞாயிறு போட வேண்டிய பதிவைத் திங்கள் அன்று காலையில் போட்டேன். அதற்கும் பின்னூட்டங்கள் விழுந்தன என்றால் பாருங்களேன். நன்றி மக்களே.

மொத்தத்தில் அன்போடும் பரிவோடும் என்னை ஆதரித்து, எனது பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இட்ட தமிழ்மண நண்பர்களுக்கு எனது நன்றி. வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

21 comments:

said...

வாழ்த்துகள் ராகவன்....

உங்களிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறேன். அதே போல உங்கள் பரிட்சார்த்த முயற்சிகளையும் வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் யாருடைய எழுத்துச் சாயலும் வந்துவிடாமல் கவனமாக இருங்கள்.
உங்கள் நிலா நிலா ஓடி வா வை விமர்சிக்கும் போது எனக்கு சிறிது தயக்கமாகத்தான் இருந்தது. முகத்தலிடித்தார் போல் எப்படி சொல்வதன்று. ஆனாலும் நல்ல படைப்பாளி விமர்சனத்தின் தன்மையை பிரிந்து கொள்வான் என நம்பினேன். அப்படியே நடந்தது. மற்றபடி ஒரு நவரச கலவையாகத்தான் நட்சத்திர வார படைப்புகள் இருந்தன. சுவை பற்றி நேரில் பார்க்கும் போதோ இல்லை யாஹு தூதுவனில் பேசிக் கொள்ளலாம்...

said...

கடந்த ஒரு வாரம்,மௌனமான வழிப்போக்கன் போல் உங்கள் பதிவுக்கு வந்து சென்றேன்.வித்தியாசமான களங்களில் கலக்கி இருந்தீர்கள்.வாழ்த்துக்கள்.

தங்கள் ஆரம்ப காலப்பதிவுகளில் செந்தமிழும்,ஆன்மீகமும் கலந்து உறவாடியதில்,நீங்கள் வயதில் முதிர்ந்தவர் என்ற எனது எண்ணம் தங்களது படத்தைப் பார்த்ததும் நீங்கியது.

தொடர்ந்து கலக்கவும்.

said...

இராகவன்,
உங்களின் நட்சத்திரவாரம் நன்றாக இருந்தது. பின்னூட்டம் இடவில்லை என்றாலும் நான் இரசித்துப் படித்தேன்.

said...

கடந்த வாரப் பதிவுகள் சிறப்பாக இருந்தன. அதேபோல் தொடர வாழ்த்துக்கள்.

said...

நட்சத்திர வாரம்தான் முடிஞ்சுதேன்னு, முழு நிலா மாதிரி மாசம் ஒரு தரம் எழுதாமல் தொடர்ந்து எழுதுங்கள்

said...

இராகவன்,

'நான் யார் தெரியுமா'வில் ஆரம்பித்து 'நான் நன்றி சொல்வேன்' வரை ஒரு வாரம் எல்லா சுவைகளிலும் நல்ல பதிவுகள் தந்தீர்கள். அடுத்த முறை (!) இன்னும் நன்றாய் செய்வீர்கள் என்று எண்ணுகிறேன். :-)

//ரெண்டாவது கதைல ஒரு புதுமையப் புகுத்தப் பாத்தேன். அது சரியில்லாமப் போயிருச்சு. அத யாருமே கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கதை சோர்வாப் போயிருச்சு. அதனால நானே சொல்லீர்ரேன். கதாபாத்திரமே இல்லாம கதை எழுத முடியுமான்னு முயற்சி செஞ்சதுதான் அந்தக் கதை. நிலா நிலா ஓடி வா. ஆனா கட்டுரை மாதிரி ஆயிருச்சி. அடுத்த வாட்டி சிறப்பா செஞ்சிக்கலாம்.//

உண்மைதான். அதை கவனிக்கவேயில்லை.

said...

ராகவன்,

உங்க 'வாரம்' நல்லாவே போச்சு.

நாமா ஏதோ எழுதறதுலே இருக்கற
ஒரு இது( எது?) இந்தமாதிரி ஒரு வாரத்துலே கட்டாயமா எழுதறப்போ இருக்கறதில்லே. இதை நான் பலருடைய நட்சத்திரப்பதிவுகளிலே பார்த்திருக்கேன்.

நிர்பந்தம்னு வர்றபோது கொஞ்சம் 'இது'வாயிருது, இல்லே?

அடுத்தமுறை கட்டாயம் 'இன்னும்' நல்லா செய்யணுமுன்னுதான் எல்லோருக்கும் தோணியிருக்கும்.

சரி சரி, வகுப்பு ஒழுங்காவர்ர வழியைப் பாருங்க :-)

said...

நல்ல வாரம் இராகவன்,

ஆனால், துளசியக்கா சொன்னது போல என்னவோ மிஸ்ஸிங்.


--digression---
ஒரு நண்பர் சொன்னது போல இராம நாராயணன், பாபு கணேஷ்களின் மத்தியில் வித்தியாசமான பதிவுகள்! :))))

said...

// உங்கள் நிலா நிலா ஓடி வா வை விமர்சிக்கும் போது எனக்கு சிறிது தயக்கமாகத்தான் இருந்தது. முகத்தலிடித்தார் போல் எப்படி சொல்வதன்று. ஆனாலும் நல்ல படைப்பாளி விமர்சனத்தின் தன்மையை பிரிந்து கொள்வான் என நம்பினேன். அப்படியே நடந்தது. மற்றபடி ஒரு நவரச கலவையாகத்தான் நட்சத்திர வார படைப்புகள் இருந்தன. //

நன்றி முத்துக்குமரன். என்னுடைய எழுத்துகளில் கருத்துகளில் குற்றம் இருக்குமானால் அதை நேர்மையாகவும் சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்வதிலும் பரிசீலிப்பதிலும் பிரச்சனையில்லை. உங்கள் கருத்துகளை அன்போடும் நட்போடும் தயக்கமின்றி எடுத்து வைக்கலாம். :-)

said...

// கடந்த ஒரு வாரம்,மௌனமான வழிப்போக்கன் போல் உங்கள் பதிவுக்கு வந்து சென்றேன்.வித்தியாசமான களங்களில் கலக்கி இருந்தீர்கள்.வாழ்த்துக்கள். //

நன்றி சுதர்சன் கோபால். இன்னும் சிறப்பாகச் செய்ய முயல்கிறேன்.

// இராகவன்,
உங்களின் நட்சத்திரவாரம் நன்றாக இருந்தது. பின்னூட்டம் இடவில்லை என்றாலும் நான் இரசித்துப் படித்தேன். //
நன்றி கல்வெட்டு. அதான் இங்கு பின்னூட்டம் இட்டு விட்டீர்களே. :-)

// கடந்த வாரப் பதிவுகள் சிறப்பாக இருந்தன. அதேபோல் தொடர வாழ்த்துக்கள். //
நன்றி மணியன்.

// நட்சத்திர வாரம்தான் முடிஞ்சுதேன்னு, முழு நிலா மாதிரி மாசம் ஒரு தரம் எழுதாமல் தொடர்ந்து எழுதுங்கள் //
கண்டிப்பாக தாணு. முடிந்த வரையில் தொடர்ந்து பதிவுகளை இடுகிறேன்.

said...

// அடுத்த முறை (!) இன்னும் நன்றாய் செய்வீர்கள் என்று எண்ணுகிறேன். :-) //

கண்டிப்பாக குமரன். நிச்சயமாக.

// நிர்பந்தம்னு வர்றபோது கொஞ்சம் 'இது'வாயிருது, இல்லே?

அடுத்தமுறை கட்டாயம் 'இன்னும்' நல்லா செய்யணுமுன்னுதான் எல்லோருக்கும் தோணியிருக்கும். //
உண்மைதான் டீச்சர். நாமாப் போடும் பொழுது நாம தேர்ந்தெடுத்துப் போடுவோம். நட்சத்திர வாரத்தில் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும். இருந்தாலும் தமிழ்மணத்தில் நம்மை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு என்ற வகையில் மகிழ்ச்சிதான்.

// சரி சரி, வகுப்பு ஒழுங்காவர்ர வழியைப் பாருங்க :-) //
சரி டீச்சர்.

said...

வாழ்த்துகள்.

நட்சத்திர வாரத்தில் அனைத்தும் சுவையான பதிவுகள் படித்தேன், மகிழ்ந்தேன்.

said...

தொடர் இணைய இணைப்பு இல்லாததால் உங்களின் பல பதிவுகளில் பின்னூட்ட முடியவில்லை, உங்களின் நட்சத்திர வாரம் நன்றாக இருந்தது.

அதேபோல் உங்கள் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என நம்புகின்றேன்

நன்றி

said...

நன்றியை நாங்களும் கொஞ்சம் சொல்லிக்கறோம் ராகவன்!

திருச்செந்தூரையும் கிழவி பாட்டையும் குடுத்ததுக்கு! :)

said...

என்ன ராகவன் ஒரு மாதிரி சோர்வா எழுதிட்டீங்க.

உங்க ஸ்டார் வாரத்துல வந்திருந்த எல்லா பதிவுகளும் தரமானவையாத்தான் இருந்தன.

I enjoyed it fully.

You can be proud of your Posts whether you received responses or not!!

தொடர்ந்து எழுதுங்க.

said...

இராகவன்!

உங்கள் நட்சத்திர வாரப்பதிவுகள் அனைத்தையும் படித்தேன்...

என்னைப் போல புதிய வலைப்பதிவர்களின் பின்னூட்டங்கள் , தம்முடையப் பதிவுக்கான விளம்பரம் எனக் கருதப்பட்டு விடுமோ என எண்ணியே பின்னூட்டமிடுவதை தவிர்த்து வந்தேன்....

ஆனால் திருச்செந்தூரில்.... பதிவு உண்மையிலேயே ரசிக்க வைத்தப் பதிவு...

எல்லாப் பதிவுகளுக்கும் சேர்த்து மொத்தமாய்ப் பாராட்டுகிறேன்..இங்கே.

said...

நல்ல வாரம் இராகவன். எல்லா பதிவுகளையும் உடனுக்குடன் இல்லாவிட்டாலும் சேர்த்து படித்தேன்.

said...

// நட்சத்திர வாரத்தில் அனைத்தும் சுவையான பதிவுகள் படித்தேன், மகிழ்ந்தேன். //

நன்றி பரஞ்சோதி.

// தொடர் இணைய இணைப்பு இல்லாததால் உங்களின் பல பதிவுகளில் பின்னூட்ட முடியவில்லை, உங்களின் நட்சத்திர வாரம் நன்றாக இருந்தது. //
பரவாயில்லை குழலி. சமயங்களில் இப்படி ஆகிவிடுவது உண்டு. ஒருவார காலம் நான் இண்டெர் நெட் வசதி இருந்தும் யுனிகோடு வசதியில்லாத பிரவுசிங் செண்டரில் வலைப்பூ பக்கமே வரமுடியாமல் இருந்தேன். நீங்கள் படித்தீர்கள் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.

// அதேபோல் உங்கள் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என நம்புகின்றேன்//
நன்றி குழலி.

// நன்றியை நாங்களும் கொஞ்சம் சொல்லிக்கறோம் ராகவன்!

திருச்செந்தூரையும் கிழவி பாட்டையும் குடுத்ததுக்கு! :) // :-) இளவஞ்சி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ரொம்ப மகிழ்ச்சி.

said...

// என்ன ராகவன் ஒரு மாதிரி சோர்வா எழுதிட்டீங்க.//
சோர்வு இல்லை ஜோசப் சார். வேலைதான். இருந்த கொஞ்ச நேர அவகாசத்தில் அவசர அவசரமாக எழுதியது. அதான்.

// உங்க ஸ்டார் வாரத்துல வந்திருந்த எல்லா பதிவுகளும் தரமானவையாத்தான் இருந்தன.

I enjoyed it fully.

You can be proud of your Posts whether you received responses or not!!

தொடர்ந்து எழுதுங்க. //

நன்றி ஜோசப் சார். யாரையும் தாக்கியும், யாருடைய மனமும் புண்படாமலும் எழுதியிருக்கிறேன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே. உங்களைப் போன்றோர் பாராட்டும் ஊக்கமும் இருக்கும் பொழுது சோர்வு வருமா ஜோசப் சார்.

said...

// உங்கள் நட்சத்திர வாரப்பதிவுகள் அனைத்தையும் படித்தேன்...

என்னைப் போல புதிய வலைப்பதிவர்களின் பின்னூட்டங்கள் , தம்முடையப் பதிவுக்கான விளம்பரம் எனக் கருதப்பட்டு விடுமோ என எண்ணியே பின்னூட்டமிடுவதை தவிர்த்து வந்தேன்.... //

இல்லை. இல்லை. அருட்பெருங்கோ. எல்லாருமே பின்னூட்டங்களில்தான் தொடங்குகின்றார்கள். நீங்கள் எங்கெல்லாம் விரும்புகின்றீர்களோ அங்கெல்லாம் பின்னூட்டம் இடலாம். யாரும் தவறாகக் கருத மாட்டார்கள். பிறகு எப்படி ஒருவரையொருவர் தெரிந்து கொள்வதாம்.

// ஆனால் திருச்செந்தூரில்.... பதிவு உண்மையிலேயே ரசிக்க வைத்தப் பதிவு... //
அந்தக் கதை அனைவருக்குமே பிடித்திருந்திருக்கிறது அருட்பெருங்கோ. நான் நட்சத்திரவாரத்திற்காக எழுதாத பதிவு அது. முதலில் எழுதி வைத்திருந்தேன். சரியாக நட்சத்திர வாரம் வந்தது இட்டு விட்டேன்.

// எல்லாப் பதிவுகளுக்கும் சேர்த்து மொத்தமாய்ப் பாராட்டுகிறேன்..இங்கே. //
நன்றி அருட்பெருங்கோ.

said...

// நல்ல வாரம் இராகவன். எல்லா பதிவுகளையும் உடனுக்குடன் இல்லாவிட்டாலும் சேர்த்து படித்தேன். //

நன்றி தேன்துளி. தேன் ஒருதுளியாயினும் இனிப்பே. உங்கள் பின்னூட்டமும்தான்.